
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
17.4.-22.4..2026
வைக்கம் மஹாதேவர்
19/4/26. த்ரிபுணித்துரா பூர்ண த்ரயீஸ்வரர் கோவிலில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் வைக்கம் க்ஷேத்ரம் உள்ளது. கேரளாவில் ஒரு முக்கிய பகுதி கோட்டயம். அந்த பகுதியை சேர்ந்தது.புராதனமான ஸ்ரீ மஹாதேவர் ஆலயம்
மூன்று சக்தி வாய்ந்த சிவாலயங்களில் இது ஒன்று. மற்ற ரெண்டில் ஒன்று ஏட்டுமானூறிலும் மற்றது கடுத்துருத்தி க்ஷேத்ரங்களிலும் உள்ளவை. ஒரே வேளையில் உச்சி கால பூஜைக்குள் இந்த மூன்று மஹாதேவர்களையும் தரிசித்தால் பக்தர்கள் மனோபீஷ்டம் பூர்த்தியாகும் என்று நம்பிக்கை. எனக்கு அந்த கிடைத்தாலும் என் மனோபீஷ்டம் இன்னும் நிறைய சிவ வைஷ்ணவாலயங்களை வாழ்நாளில் தரிசிக்கவேண்டும் என்பது தான். வைக்கத்தப்பன் என்று அழைக்கப்படும் சிவன் லிங்க ஸ்வரூபத்தில் த்ரேதாயுகத்திலிருந்து வழிபடப்படுகிறார்.கரன் எனும் ராக்ஷஸன்,(ராமாயணத்தில் வரும் அதே கரன் தான்) மால்யவானிடம் சைவ வித்யா உபதேசம் பெற்று நமது தமிழ்நாட்டு சிதம்பரம் வந்து தவம் செய்தான். அவன் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் அவனுக்கு வரம் அளித்து, மூன்று சிவலிங்கங்களை தந்தார்.
”கரா , நான் இந்த லிங்கங்களில் எப்போதும் உள்ளவன். இவற்றை பூஜித்து மோக்ஷம் பெறுவாய்” என்று வரமளித்தார் சிவன். ரெண்டு சிவலிங்கங்களை இரு கைகளிலும், ஒன்றை கழுத்தில் கட்டிக்கொண்டும் கரன் புறப்பட்டான். நடந்து நடந்து களைத்து வழியில் ஒரு இடத்தில் கரன் படுத்தான். எழுந்தபோது சிவலிங் கங்களை அவனால் மீண்டும் எடுத்துக் கொண்டு போகமுடியவில்லை. அங்கேயே பதிந்து விட்டன. கரன் அங்கேயே சில காலம் தஙகி மோக்ஷம் அடைந்தான். போகுமுன் அவனை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வியாக்ரபாத மகரிஷியிடம் ”மகரிஷி, நீங்களே இந்த லிங்கங்களை இனி பாதுகாத்து வழிபட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான்.
அவரும் சம்மதிக்க ஒரு விரிச்சிக அஷ்டமி அன்று சிவனும் பார்வதியும் வியாக்கிரபாதர் முன் தோன்றி, அவரை ஆசிர்வதித்து இந்த க்ஷேத்ரம் வியாக்ரபாதபுரம் என்று இனி அழைக்கப்படும் என்றனர். அன்று முதல் ஒவ்வொரு விரிச்சிக அஷ்டமி அன்று வைக்கத்தஷ்டமி கொண்டாடப்படுகிறது.
பரசுராமர் இந்த க்ஷேத்ரம் வந்தபோது நீரில் ஒரு லிங்கம் மூழ்கி இருப்பதை அறிந்தார். ”ஆஹா இது கரன் கொண்டுவந்த ஒரு லிங்கம் அல்லவா?” என்று உணர்ந்து வணங்கினார். வைக்கத்தப்பன் த்தரிசனம் பெறுபவர்கள் நிச்சயம் மோக்ஷம் அடைவார்கள் என லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணி சக்தி வாய்ந்த மந்திரங்களால் உபாசனை செய்தார். பார்வதி பரமேஸ்வரர்கள் ரிஷபாரூடராக வந்து பரசுராமருக்கு தரிசனம் கொடுத்த க்ஷேத்ரம். பரசுராமர் பூஜித்து ஸ்தாபித்த சிவலிங்க க்ஷேத்ரம் இது. தருணா கிராமத்திலிருந்து ஒரு ப்ராமணனை பரசுராமர் நியமித்து கோயில் வழிபாட்டு நெறிமுறைகளை அவனுக்கு கற்பித்து பூஜைகள் தொடரச் செய்தார். இன்றுவரை அது தொடர்ந்து வருகிறது. வைக்கத்தப்பனுக்கு இன்னொரு பெயர் வியாக்ராலயேசன். ஒரு ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா? இங்கே காலை வேளையில் சிவன் தக்ஷிணாமூர்த்தி, உச்சி வேளையில் கிராட மூர்த்தி, மாலையில் சக்தி பஞ்சாக்ஷரி.
கேரள கோவில்களில் கிழக்கு வாசல் வழியாக நுழைந்து வடக்கு வாசல் வழியாக வெளியேற பாதை அமைத்திருக்கிறார்கள்.
பழங்காலத்தில் இந்த ஆலயம் 108 குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த கூட்டம் ரெண்டாக பிரிந்து ஒரு பாதி ராஜாவின் பக்கம். மற்றது பக்தர்கள் பக்கம். அடிக்கடி சண்டை சச்சரவு வரும்.
ஒருநாள் ரெண்டு பிரிவுகளை சேர்ந்த சிலர் வைக்கத்தப்பன் ஆலயம் வந்தார்கள். ஒரு பிரிவின் தலைவன் நிஜலால் நம்பூதிரி கோயிலுக்குள் பாய்ந்து பூஜையை நிறுத்தினான். அப்போதெல்லாம் தெற்கு வாசலில் உள்ள நமஸ்கார மண்டப த்தில் நைவேத்தியம் வைக்கப்படும் வழக்கம். நம்பூதிரி கோபத்தோடு தன்னுடைய மேல் அங்கவஸ்திரத்தை மேற்கு வாசல் கதவின் மேல் போட்டுவிட்டு, நைவேத்தியத்தின் மேல் வாயில் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலை சாறை உமிழ்ந்தான். இதனால் பூஜை நின்றது. நம்பூதிரி தனது அங்கவஸ்திரத்தை கதவின் மேல் இருந்து எடுக்க முயன்றபோது ஒரு விஷ கருநாகம் அவனை தீண்டிவிட்டது. விஷம் உடலில் ஏறி மெதுவாக மேற்கு வாசல் தாண்டி கீழே விழுந்து இறந்தான் நம்பூதிரி. மேற்கு வாசல் கதவு தானாகவே மூடிக்கொண்டது. ”இனி மேற்கு வாசல் கதவு தயாரிக்கப்பட மாட்டாது” என்று உள்ளிருந்து அசரீரி குரல் கேட்டது. இன்றுவரை மேற்கு வாசல் கதவு மூடப்பட்டே இருக்கிறது.
வைக்கம் மஹாதேவர் கோவில் ரொம்ப பெரிசு. எட்டு ஏக்கர் நிலம். ஆற்று மணலை ரொப்பி, அதன்மேல் சுவர் எழுப்பி மதில்கள். நாலு கோபுரம். வழக்கம் போல் உருளை வடிவ செப்பு கூம்பு, ரெட்டை தள, விமானங்
கள். கை தேர்ந்த சிற்பிகளால், ஸ்தபதிகளால், அமைக்கப்பட்ட கோழிமுட்டை வடிவ கர்ப்ப க்ரஹம்.வண்ண ஓவியங்கள் நிரம்பியது. பெருந்தச்சன் என்ற பேர் பெற்ற சிற்பி கட்டியது.
முகமண்டபம் பெரிய மர தூண்களால் , கல் ஸ்தூபங்களால் ஆன மண்டபம். அர்த்த மண்டபம் கல்லாலானது. ஆறு படி ஏறி மூலவரை தரிசிக்க வேண்டும். ஆறு படிகளும் காம க்ரோத லோப, மோஹ மத மாச்சர்யம் தாண்டி அவனை தரிசித்து மோக்ஷம் அடையலாம் என்ற கோட்பாடு கொண்டவை. மலையாளத்தில் ஒரு புகழ் பெற்ற பாட்டு ’நரநாயிங்கனே ஜனிச்சு பூமியில்.” வைக்கத்தில் பக்தர்கள் பாடுவது;
നരനായിങ്ങനെ ജനിച്ചു ഭൂമിയിൽ
നരകവാരിധി നടുവിൽ ഞാൻ
നരകത്തിൽ നിന്നെന്നെ കരകേറ്റീടണം
തിരുവൈക്കം വാഴും ശിവശംഭോ
മരണകാലത്തെ ഭയത്തെ ചിന്തിച്ചാൽ
മതിമറന്നുപോം മനമെല്ലാം
മനതാരിൽ വന്നു വിളയാടീടണം
തിരുവൈക്കം വാഴും ശിവശംഭോ
ശിവ ശിവയെന്നൊന്നു പറയാവതല്ലേ
മഹാമായ തന്റെ പ്രകൃതികൾ
മഹാമായ നീക്കീട്ടരുളേണം നാഥാ
തിരുവൈക്കം വാഴും ശിവശംഭോ
വലിയൊരു കാട്ടിൽ അകപ്പെട്ട ഞാനും
വഴിയും കാണാതെ ഉഴലുമ്പോൾ
വഴിയിൽ നേര്വഴി അരുളേണം നാഥാ
തിരുവൈക്കം വാഴും ശിവശംഭോ
എളുപ്പമായുള്ള വഴിയെ കാണുമ്പോൾ
ഇടക്കിടെ ആറുപടിയുണ്ട്
പടിയാറും കടന്നവിടെ ചെന്നാൽ
ശിവനെ കാണാകും ശിവശംഭോ
Naranāyiṅṅane janichu bhūmiyil
Naraka vāaridhi naduvil njān
Narakathil ninnenne karaketteedānam
Thiruvaikkam vāzhum Shiva Shambho
Marana kālathe bhayathe chinthichāl
Mathi marannupōm manamellām
Manathāril vannu vilayādeedānam
Thiruvaikkam vāzhum Shiva Shambho
Shiva Shiva ennu parayāvathalle
Mahāmāya thante prakruthikal
Mahāmāya neekkeettarulēṇam nādhā
Thiruvaikkam vāzhum Shiva Shambho
Valiyoru kāttil akappetta njānum
Vazhiyum kānāthe uzhalumbōl
Vazhiyil nēr vazhi arulēṇam nādhā
Thiruvaikkam vāzhum Shiva Shambho
Eluppamāyulla vazhiye kāṇumbōl
Idakkide āru padiyundu
Padiyārum kadannavide chennāl
Shivane kāṇākum Shiva Shambh
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


