
மனத்தின் ஆசை – நங்கநல்லூர் ஜே. கே. சிவன்
கையில் பணம் இல்லை. பர்ஸ் காலி. பேங்க் லீவு. இன்னிக்கு மட்டும் இல்லை. இன்னும் மூணு நாளைக்கு. கொட்டும் மழையில் காய்கறி விலை எவரெஸ்ட் உயரம் போகுமே…இன்றைய பொழுது ஒட்ட என்ன செய்வது?
ஆபத் பாந்தவனாக ஒரு நண்பன் நூறு ரூபாய் கொடுத்தான்.
‘ பேங்க் லே எடுத்ததும் தரேண்டா.”
”வேண்டாம் சிவா, போனமாசம் நம்ம பாலகுரு கல்யாணத்துக்கு போகும்போது ஐநூறு ரூபாய்க்கு சில்லறை உன்கிட்டே மாத்தினேனே ஞாபகம் இருக்கா? நீ கொடுத்த ஐநூறு நாட்டுக்கு நான் நானூறு ரூபாய் தான் என்கிட்டே இருக்குன்னு கொடுத்தேன். அப்புறம் நீயும் கேட்கலே. நானும் கொடுக்கல். நான் தான் ஏற்கனவே உனக்கு ரூபாய் 100 பாக்கி. அது தான் இது.”
நூறு ரூபாய் கிடைத்ததும் மனசு சந்தோஷபட்டதா? இல்லையே. 1000 ரூபாய்க்கு செலவு வைக்க மனம் கனவு கண்டது. அந்த ஆசை திருப்தியானதும் ஒரு சமயம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று மேற்கொண்டு அலையும். இப்படியே ஆசையானது லட்சத்திலிருந்து கோடிக்கு செல்லும். மனுஷன் அப்புறம் பணத்தை அதிகமாக சம்பாதிக்க கூடிய பதவிக்கு ஆசைப்படுவான். கட்சியில் இருப்பவன் கவுன்சிலர் ஆகி, வீடு கட்டி, கார் வாங்கி அதற்குப்பிறகு எம்.எல்.ஏ பதவியைத் தேடுவான். அப்புறம் மந்திரியாக தவிப்பான்..அமெரிக்கவிலையும் சிங்கப்பூரிலேயும் வேறே எங்கோ ஐரோப்பாவிலும் கொள்ளை கொள்ளையாக சேமிப்பு…. சே ச்சே இந்த ஆசைக்கு ஓர் அளவேது? மனிதன் தோன்றியது முதல் இன்று வரை ஆசைக்கு அடிமை. ஆசை நிறைவேறாததால் நிம்மதி இழக்கிறான்.
மனிதர்களில் பல வகை. போதுமென்ற மனதுடன் தன்னிடத்திலேயே மகிழ்ந்து கொண்டிருப்பவன் ஒருவகை. தன் மேலும், தன்னிடம் இருப்பதிலும், திருப்தி இல்லாதவன் வேறே வகை. வெளியே எவ்வளவு தேடியும் முடிவில்லாத ஆசை. தப்பு வழி சரியான வழி ரெண்டும் ஒன்று தான் அவனுக்கு. ஒரே லக்ஷியம் பணம் பணம் பணம்…
போதும் என்ற மனதினனுக்கு வெளியே எதுவும் தேவை இல்லை. கடலில் கலக்கும் நதி நீரால் கடலுக்கு என்ன பாதிப்பு?
கடலில் கலக்கின்ற நதியால் கடலுக்கு எப்படி ஒரு பயனும் இல்லையோ அது போல வெளியேயுள்ள செல்வத்தால் முதல் வகை மனிதனுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. இரண்டாவது வகையான மனிதனின் மனதை இதே செல்வமானது நிறைக்க முடியாது. அவன் மன அதிருப்தியுடன்தான் கடைசி வரை இருந்து கொண்டிருப்பான். என்றாவது ஒருநாள் அவன் அகட விகட சாமர்த்தியங்கள் கப்பலேறும்… பாவம் அவஸ்தைப்படுவான். நுரை கக்குவான்.
மனநிறைவை அடையவில்லையென்றால் வாழ்க்கையில் எதை அடைந்தாலும் இன்னும் அடையவேண்டும் என்ற ஆசைதான் இருந்து கொண்டேயிருக்கும். எனவே ஆசைகளை விட்டுவிடுவதனால் மனநிறைவும், அமைதியும் கிடைக்கும். வாழ்க்கையில் எதுவும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருந்து விட்டோமானால் அதுவே உயர்ந்த நிலை. எனவே வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொண்டிருக்கலாம், ஆனால் எல்லா நிலைகளிலும் நான் மனநிறைவுடன் இருக்கின்றேன் என்ற எண்ணமும், உலகவிஷயங்களால் இந்த மனநிறைவை அடையமுடியாது என்ற உறுதியான எண்ணமும்தான் நம்முடைய் வெற்றியாகும். எனக்கு ஆசைகள் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆசைகள் மிக மிக குறைவு. அது அதிகமாக பகவான் கிருஷ்ணன் மேலே தான் இருக்கிறது என்பது எனக்கு க்ஷேமம்.
ஆதி சங்கரர் ”மலையை தூக்குகின்ற சக்தி, நெருப்பை விழுங்குகின்ற, சக்தி, கடல்மீது நடக்கின்ற சக்தி ஆகிய சித்திகளை அடைந்தாலும் அவைகளால் மனநிறைவை அடைய முடியவில்லையென்றால் அவைகளை அடைந்து ஒருபயனும் இல்லை. மேலும் பிரம்மலோகத்திற்கோ, விஷ்ணுலோகத்திற்கோ சென்று திரும்பி வந்தாலும், சிவலோகத்தில் சில யுகங்கள் ஆட்சி செய்துவிட்டு வந்திருந்தாலும் மீண்டும் மனக்குறையுடன்தான், மன அதிருப்தியுடன் இருப்போம். நான் இயல்பாகவே மனநிறைவுடன் இருக்கின்ற தன்மையை உடையவன் என்ற அறிவை அடைந்தால் மட்டுமே இந்த மனநிறைவின்மையை போக்கிக் கொள்ள முடியும். இதைத் தவிர்த்து வேறெதையும் அடைந்து மனநிறைவுடன் இருக்க முடியாது.”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



