

தாமோதர மாதம் – நங்கநல்லூர் ஜே.கே. சிவன்
12. கிருஷ்ண கர்ணாம்ருதம் –
”அடாடா, அந்த கிருஷ்ணன் இருக்கிறானே அவன் ஒரு அழகு பிம்பம். கஷ்கு முஷ்க் பையன். பளபள என்று ஜொலிக்கும் மேனி. எல்லா கோபிகளும் தம்மை மறந்து அவனையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். அவனது சதைப்பற்றுள்ள கன்னம் சற்று வீங்குகிறது. ஏன்? புல்லாங்குழலுக்கு காற்றை ”தம்” பிடித்து அனுப்புகிறான். அவன் இதய, நுரையீரலிலி ருந்து ஜீவ நாதம் குழல் வழியாக வருகிறதே. அந்த சுகானுபவத்தில் அவனது பெரிய நீண்ட அழகிய விழிகள் அரை வாசி மூடி பாதி திறந்து மனம் லயித்து அந்த பிரதேசமே அவன் கானத்தில் கட்டுண்டு பிரமிக்கிறதே. உப்பிய கன்னங்கள் கண்ணாடி போல் மின்னுகிறதே. இந்த கிருஷ்ணனை யாராவது இப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கே இங்கே வேறெங்காவது நகருவார்களா?.
எதையாவது நாம் மிகவும் ஆழ்ந்து ரசிக்கும்போது நமது கண்கள் பாதி மூடி, பாதி திறந்து , இருக்கும். மனது கேட்பதில் முற்றுமாக லயித்திருக்கும்போது இப்படி கண் தானே பாதி மூடிக்கொள்ளும்.
”கிருஷ்ணா, நீயோ பிறவியிலேயே, இயற்கையிலேயே அழகின் உருவம். உன் நீலோத்பல கண்கள், தாமரைக் கண்கள், அரை மூடியிருக்கும் போது உன் அழகு இன்னும் கூடுகிறது, உன் வழ வழ கண்ணாடிக் கன்னங்கள் புல்லாங்குழலை வாயில் வைத்து ஊதும்போது சற்றே உப்பி இன்னும் பளபளக்கையில் நான் என்னை இழந்தேன்”.
”கண்ணனை ஒருமுறை பார்த்தால் கண்ணை அவன் மீதிருந்து மீண்டும் எடுக்க முடியாது. எல்லோரும் தேடும் அவ்வளவு கவர்ச்சியான கம்பீர சிங்கக்குட்டி அவன். ஆஹா என்ன அழகான காந்த சக்தி கொண்ட கருணை ஒளி வீசும் தேனில் தோய்ந்த சந்த்ரோதய தாமரை முகத்தில் விவரிக்க இயலாத அபூர்வ கண்கள். அவன் வைத்திருக்கும் வம்ஸி என்ற புல்லாங்குழல் அவனுக் கேற்றவாறே புகழ் வாய்ந்ததாக இருக்கிறதே. எப்படி தான் அதிலிருந்து நெஞ்சை அள்ளும் கொஞ்சும் இசை யமுதம் ஊற்றாக பெருகுகிறதோ? அதை எப்படி எந்த வார்த்தையால் எழுதுவேன்.? அந்த இன்ப நாதத்தின் ஒரு சொட்டு, ஒரு துளியாவது என் நாவில் விழுந்தால் கொஞ்சம் விவரித்து சொல்ல முயற்சிப்பேன். அல்லது எழுத முயல்வேன். அதற்கு தானே காலமெல்லாம் காத்திருக்கிறேன்.”
”என்னப்பனே, குழந்தைகள் என்றாலே அழகு தெய் வங்கள், தெய்வமே குழந்தையாக வந்தால்? உன் முகத்தில் ஒரு ஆபரணமாக உன்னுடைய புல்லாங்குழல் உன் இதழ்களில் பதிந்திருக்கிறதப்பா. உன் இனிமை, காந்த சக்தி கொண்ட காருண்யம், இசையாக உன் மூச்சின் பிரதிபலிப்பாக உன் புல்லாங்குழலின் கானமாக எங்கும் பரவுகிறதே. அதைக் கேட்டு மயங்காத ஜீவன் எது? என் வார்த்தைகளிலும் அது புகுந்து பரிமளிக்கட்டும்.
உன்னைப்பாட நான் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். நீ தலை அசைக்கும்போது உன் சிரத்தில் நீ அணிந்திருக்கும் மயிர் பீலி தானும் அற்புதமாக ஆடுகி றது. உன் தாமரை முகத்துக்கு இன்னும் அழகை கூட்டு கிறது. உன் பார்வை திரும்பிய இடமெல்லாம் அதை எதிர்கொண்ட வ்ரஜ பூமி கோபியர்கள் தன்னை மறந்து சிலையாகி விடுகிறார்களே.
எங்கெல்லாம் அவன் பார்வை படுகிறதோ அங்கெல் லாம் சுபிக்ஷம், யாரெல்லாம் அவன் கடை விழிப் பார்வையில் பட்டார்களோ அவர்கள் எப்போவோ முக்தி அடைந்தாகி விட்டது. சாதாரண சிறுவனாக அந்த சர்வஞன் யமுனை நதிக் கரையில் மற்ற சிறுவர் களோடு மணலில் நீரில் விளையாடினான். கோபியர் வீட்டில் வெண்ணையும் ஏன் அவர்கள் மனதையும் திருடியவன் அல்லவா அவன். அன்றலர்ந்த தாமரை முகத்தோனே, கருநீல வண்ணா, ஒரு சிறு மயிலிறகு சூட்டினாலே உன் அழகு உலகையே கொள்ளை கொள்ளும் அழகா, மன்மதனுக்கே மன்மதா, சுற்றிலும் கோபியர் கூட்டம் தேன்மலரைச் சூழ்ந்த வண்டாக காணப்படுவதில் என்ன ஆச்சர்யம்? ஒரு கடை விழிப் பார்வையில் ஈரேழுலகும் அடிமை கொள்பவனே. உன்னைப் பாடுகிறேன்.
உன்னை ஆசையோடு அன்போடு பாசத்தோடு வாரி இறுக்க கட்டி முத்தமிடும் பெண்களின் முகத்தில் உள்ள சந்தன குங்குமம் எல்லாம் உன் முகத்திலும் கலர் கலராக காணப்படுகிறதடா. புதுசாக தலை தூக்கும் இளம் தளிர் இலைகள் ஒரு விதமான இளம் சிவப்புடன் காணப்படும் அது போல் இருக்கிறது உன் புல்லாங்குழ லின் நிறமும் அதைப் பிடித்துக்கொண்டு நர்த்தன மாடும் உன் பிஞ்சு விரல்களும் கூட.
உன்னிடம் சரணடைந்து விட்டேன் கண்ணா.
அதோ பாருங்கள். அந்த சோலையில், மந்தமாருதம் வீசுகிறது. மலர்கள் வித வித வர்ணங்களில் மணத் தோடு மலர் மழை பொழிகிறது. அந்த மரத்தடியில் தான் வீற்றிருக்கிறான் கிருஷ்ணன். அவனது கரத்தில் மலர்போன்ற விரல்கள் புல்லாங்குழலில் விளையா டுகிறது. அற்புத நாதம் எழுப்புகிறது. பிரபஞ்சமே மயக்கத்தில் தள்ளாடுகிறது. இன்ப மயக்கம். சகல ஜீவன்களும் ஆனந்தமயமான காணப்படுகின்றன. எங்கும் அமைதி. அவனது குழலோசை ஒன்றே எங்கும் பரவி இருக்கிறது. அமைதி என்றால் யாருமில்லாத என்று அர்த்தமில்லை . நிறையவே கோபிகள் சூழ்ந் திருந்தனர். ஆனால் சிலையாக அவன் இசையில் மயங்கி நின்றனர்.
கண்ணன் குழல் மனதை தடவி வசீகரிக்கும் இசை ராகங்களை பொழிந்தது. பிரணவத்தின் அடிநாதத்தை தொட்டு நின்றது. செவி படைத்த அனைத்து ஜீவன் களுக்கும் விருந்து சமர்த்தியாக அங்கே நடந்து கொண்டிருந்தது. தேவலோக அரம்பையர் பூமாரி பொழிவது போல் புஷ்பங்கள் மரங்களிலிருந்து புஷ்பார்ச்சனை புரிந்தன. .கோபியர்கள் நெரிசல். பலருக்கு புடவை முடிச்சு அவிழ்ந்து தொங்குவது கூட தெரியாமல் சரியும் புடவைகளை கைகளில் ஏந்தி நின்றனர். தேவாதி தேவன் பரமமூர்த்தி அல்லவோ அங்கே கானமிசைக்கிறான்.
எப்படி இவ்வளவு கொள்ளை அழகு அவனிடம்? தன்னைப் போல் மற்றொருருவர் இல்லாதவன். பக்தர்களுக்கு சாயுஜ்யம் அளிப்பவன். குழல் ஊதிக்கொண்டே அப்படி ஒரு தினுசாக திரும்பி ஒரு கோணல் பார்வை பார்த்தாலே போதும். அமிர்த மழையில் நனைந்து அந்த கோபியர்கள் அனைவருமே அவன் கண் வீச்சில் மயங்கி திக்கு முக்காடுவார்களே. எங்கெல்லாம் அவன் பார்வை படுகிறதோ அங்கெல் லாம் சுபிக்ஷம், யாரெல்லாம் அவன் கடை விழிப் பார்வையில் பட்டார்களோ அவர்கள் எப்போவோ முக்தி அடைந்தாகி விட்டது. சாதாரண சிறுவனாக அந்த சர்வஞன் யமுனை நதிக் கரையில் மற்ற சிறுவர்க ளோடு மணலில் நீரில் விளையாடினான். கோபியர் வீட்டில் வெண்ணையும் ஏன் அவர்கள் மனதையும் திருடியவன் அல்லவா அவன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



