

சித்தார்த்தன். நங்கநல்லூர் J K SIVAN
இன்று ஒரு புத்தகம் படித்தேன். ஜெர்மன் காரர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதியதின் ஆங்கில வடிவம். 1877ல் பிறந்தவர்இந்த கதையில் புத்தர் வருகிறார். கோவிந்தன், வருகிறான். சித்தர்த்தனும் வருகிறான். இந்த கதையில் சித்தர்த்தனும் கௌதம புத்தரும் வேறே வேறே மனிதர்கள்.. நாம் படித்த சரித்தர புத்தகத்தில் மட்டும் தான் ஒருவரே.
எனக்கும் கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது. தசாவதாரத்தில் சில இடங்களில் கிருஷ்ணனுக்கு முன்பு பலராமன் என்றும் அது புத்தர் என்றும் ஏன் வருகிறது? ஜெயதேவர் கீத கோவிந்தம் பாடும்போதும் ”தசாவதாரத்தில் புத்த சரீரே” என்று படுகிறார், பலராம சரீரே என்று பாடவில்லையே? ஒருவேளை கிருஷ்ணனின் சகோதரன் பலராமன் என்று நாம் படிப்பது, கேட்பது புத்தரைத்தானோ? அதைத்தான் இந்த வெள்ளைக்காரர் சொல்கிறாரோ?
சித்தார்த்தன் ஒரு ப்ராமண பையன். அவன் நண்பன் கோவிந்தன். நதிக்கரையில் சித்தார்த்தன் நித்யகர்மானுஷ்டங்களை செய்து கொண்டிருக்கிறான். ரெண்டு பேரும் ஆத்ம விசாரம், தியானம் செய்வார்கள். திடகாத்ரன், லக்ஷணமான உருவம், நிச்சயம் என் மகன் ஒரு வேத ஆசார்யன் ஆகிவிடுவான் என்று அவன் அப்பா அம்மாவுக்கு கனவு. திருப்தி, ஆனந்தம். கோவிந்தனுக்கு சித்தார்த்தன் மேல் அளவற்ற பாசம், நட்பு. கோவிந்தனுக்குத் தெரியும் சித்தார்த்தன் மற்ற பிராமணர்கள் போல் இல்லை. ஆழ்ந்து சிந்திப்பவன் என்று. சித்தார்த்தனுக்கு உள்ளூர பிராமணீய பழக்கவழக்கங்களில் மனம் செல்லவில்லை. உற்றார் உறவு, பெற்றோர் நட்பு எல்லாம் திருப்தியளிக்காத உறவுகள். வேதங்கள் உபநிஷத்துகள் கற்றது, யாகங்கள் ஹோமங்கள் மந்திரங்கள் உச்சாடனம் இதெல்லாம் சந்தோஷமே தரவில்லை. இவையெல்லாம் தவிர வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அது எது? என்று மனது தேடிக்கொண்டே இருந்தது அவனுக்கு. இந்த பிரபஞ்சத்தை ப்ரம்மா படைக்கவில்லையே, ஆத்மா தானே படைத்தது. அதையல்லவோ தேடி அடையவேண்டும்….எங்கே? எப்படி? எலும்போ சதையோ இல்லையே அது, உருவமற்ற அதைப் பிடிக்க வேண்டும்..வேதத்துக்கு, உபநிஷததுக்கு எல்லாம் தெரியும்… ஆனால் அது சொல்லும், அடையும் வழி, தான் சுலபமில்லை…பிராமணர்களுக்கு ஆத்மா பற்றி தெரிந்தும் அதை அடையாமல் நிம்மதி இன்றி இருக்கிறார்களே….எப்படி அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவார்கள்??
”கோவிந்தா, நீ என்னோடு வாடா, அதோ அந்த பெரிய ஆல மரத்தடியில் போய் உட்கார்ந்து தியானம் செய்வோம்”காலையில் உட்கார்ந்த சித்தார்த்தன் மாலை வரை அசையாமல் சிலை போல் தியானத்தில் இருந்தான். கோவிந்தன் எழுப்பியும் அசையாதவன் கண் விழித்தான்.”கோவிந்தா, நாளை நாம் தூரத்தில் காட்டில் உள்ள சமணர்களைப் போய் சந்திப்போம்.””வேண்டாம் சித்தார்த், உன் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள்…”என் முடிவு வேறு கோவிந்தா. நாளை விடியற்காலை முதல் நான் ஒரு திகம்பர சமணன்” .
மறுநாள் காலை அவன் அப்பா தியானத்தில் இருந்தார். அருகில் போய் நின்றான். ”என்ன சித்தார்த், சொல்?”நான் சமணனாகப் போகிறேன். உங்கள் அனுமதி வேண்டும். வீட்டை விட்டு சொல்லப்போகிறேன்.””உன்னை திட்டமாட்டேன் மகனே, நீ செய்வது சரியில்லை. நான் கோபப்படக்கூடாது. வேண்டாம். அவ்வளவு தான் சொல்வேன் . ”அப்பா அங்கிருந்து சென்றார். பலமணி நேரம் சென்றும் சித்தார்த்தன் நின்ற இடத்திலேயே நின்றான். ”ஏன் இன்னும் நிற்கிறாய், உடல் ஓய்ந்து போவாய்.”போகட்டும்,”” மணிக்கணக்காக இப்படியே நின்றால் உடல் களைத்து உயிரும் போய்விடும்”.”போகட்டும்”விடியற்காலையில் அப்பா பார்த்தபோது சித்தார்த்தன் அங்கேயே கைகட்டியவாறு சிலை போல் நின்று கொண்டி ருந்தான். உடல் தளர்த்தும் உள்ளம் தளரவில்லை. இனி என் மகன் இங்கே வீட்டில் இருக்கமாட்டான் என்று உறுதியாகிவிட்டது அவருக்கு.”சரி நீ காட்டுக்கு போ.சமணர்களோடு சேர்ந்து தியானம் செய் . ஏதாவது ஞானம் பெற்றால் எனக்கும் வந்து சொல்லிக்கொடு”அப்பாவை வணங்கி சித்தார்த்தன் காடு நோக்கி சென்றான். அவன் பின்னே ஒரு நிழல். திரும்பி பார்த்தால் கோவிந்தன்.” நீயும் வருகிறாயா?””ஆம், நீ எங்கேயோ நானும் அங்கேயே தான்”காட்டில் சமணர்கள் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள். பல நாள் உபவாசம். உடம்பு, முகம், கன்னம் எல்லாம் ஒட்டி உலர்ந்து, சுருங்கியது. தசை சதை எல்லாம் காணோம். எலும்பு துருத்திக்கொண்டிருந்தது. நகங்கள் கூராக வளர்ந்து விட்டன. தாடி மீசை அடையாளம் தெரியவில்லை. ஆடையற்ற வெற்றுடம்பு. சித்தார்த்த னுக்கு ஒரே லக்ஷியம். எல்லாம் என்னை விட்டு விலகவேண்டும். நான் உச்சி முதல் உள்ளங்கால் வரை, உள்ளமும் சேர்த்து தான், காலியாக இருக்கவேண்டும். பசி, தாகம், ஆசை, கனவு, இன்பம் துன்பம் எதுவும் என்னிடம் இல்லாமல் போகவேண்டும்.
மழை சீறி பெய்தது. முள்ளில் மேல் சாய்ந்து அதன் மேலே படுத்தான். முள் உடலை குத்தி ரத்தம் வந்தது அவன் உடல் வலியை அறியவில்லை. அப்படியே சிலையாக கிடந்தான். மேலே நாரை ஒன்று பறந்து வந்தது. அவன் பார்வை அதன் மேல் பட்டது. அதன் ஆத்மா அவனுள் இறங்கியது. அவன் நாரையாக பறந்தான். மரத்தில் அமர்ந்தான். பல ஜீவராசிகளானான்.மீண்டும் சித்தார்த்தன்….
ஆத்மாவின் ஸ்வரூபங்கள் இவை என்று தெரிந்து கொண்டான். இது அத்தனையும் அவனைப்போலவே அனுஷ்டித்தவன் கோவிந்தன். இருவரும் அடிக்கடி பேசவில்லை. ”கோவிந்தா நாம் அடையவேண்டியதை அடைந்தோமா?””இது வரை தெரிந்தவை போதாது சித்தார்த்தா. நீ ஒருநாள் மகத்தான சமண யோகியாவாய்.. காத்திரு..”இல்லை கோவிந்தா, இதுவரை சமணர்களிடம் கற்றது சுலபமாக ஒரு தாசியின் வீட்டில் கூட சூதாட்டம் ஆடுபவர்களிடமிருந்து கூட கற்க முடிந்தது.என் தேடல் வேறே. ”
எது தியானம்? எது இந்த உடலே அழிந்தாலும் சாஸ்வதமாக நிலைப்பது? நாம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டே வருகிறோம். எவ்வளவு வயதானாலும் நிர்வாணம் (மோக்ஷம்) அடைவது ஒன்றே நமது லக்ஷியம். சமணர்கள் வழியை பின்பற்றி முழுதும் அனுஷ்டித்தும் திருப்தி எல்லை. என் தாகம் அடங்கவில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.. Atmani Eva Abhisamvisati (आत्मानेवाभिसंविशति): “ஆத்மா ஆத்மாவில் மூழ்குகிறது” இதை உபநிஷத் சொல்கிறது… அனுபவத்தில் நாம் என்றாவது இதை காணவேண்டாமா?”
சமணர்களோடு மூன்று வருஷங்களுக்கு மேல் இருந்தாகிவிட்டது சகலமும் பின்பற்றி அறிந்து கொண்டு செயலாற்றியும் திருப்தி இல்லை. எங்கோ கௌதமர் என்ற துறவி இருக்கிறாராம். சுக துக்கங்களை வென்றவராம். ஒரு இடத்தில் தாங்காமல் எங்கும் தெரிந்து கொண்டே இருப்பவராம். புத்தர் , சாக்கிய முனிவர் என்று அவரை அழைக் கிறார்களாம். எல்லாவற்றையும் வென்றவராம். பிராமணர்கள், சமணர்கள் எல்லோரும் அவரை விழுந்து வணங்குகிறார்களாம்.அவரைச் சந்திக்க வேண்டும்”.
மூத்த சமண குருவை வணங்கி விடை பெற்று சித்தார்த்தனும் கோவிந்தனும் மகத நாட்டின் வேறு ஒரு பகுதியை நோக்கி நடந்தார்கள். மௌனமாகவே அவரை கண்ணோடு கண் நோக்கி அவர் மனதை வென்று விட்டான் சித்தார்த்தன்.
இப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள ஷ்ராவஸ்தி தான் அப்போது சவதி. அருகே ஜேதாவன நந்தவனம். அதில் தான் கௌதமர் இருந்தார். அந்த நந்தவனத்தில் ஒரு பெண் உணவளித்தாள் . அதை உண்டு அவளிடம் கௌதமரை புத்தரை நீ பார்த்திருக்கிறாயா என்று கேட்டான் சித்தார்த்தன்.”ஆஹா நிறைய தடவை பார்த்துள்ளேன். மஞ்சள் ஆடை அணிந்து ஊருக்குள் நடப்பார். கையில் உள்ள கப்பரையில் எங்காவது ஒரு வாசலில் நின்று பிக்ஷை ஏற்பார்.
சித்தார்த்தன் கௌதம புத்தரை ஒரு கடவுள் போல் ஆர்வமாக பார்த்தான். கண்கள் சந்தித்தன. ஆயிரம் பேசின.எல்லாம் மௌன பாஷையிலேயே. புத்தர் பிக்ஷைக்கு சென்று கொண்டிருந்தார். சித்தார்த்தன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். சாயந்திரம் வரை அவரை பின் தொடர்ந்தான். புத்தர் சிறிது பிக்ஷை உட்கொண்டார். ஒரு குருவிக்கு கூட அவர் உண்ட உணவு போதாது. மாலையில் புத்தர் மாமரத்தடியில் நிழலில் அமர்ந்தார். ம்ருதுவாக துக்கம், அதன் காரணம், நிவர்த்தி பற்றி எல்லாம் உதாரணங்களோடு சீடர்களுக்கு உபதேசித்தார். கோவிந்தன் அவர் அருகே சென்று அவரோடு சேர்ந்து பௌத்தமதத்தில் ஏற்க வேண்டும் என்று கேட்க அவர் சம்மதித்தார்.
”சித்தார்த்தா நீ யும் புத்தரொடு சேர்”சித்தார்த்தன் கோவிந்தனை உற்று பார்த்தான்… ”நண்பா நீ உன் வழி செல். நான் நாளை உன்னைவிட்டு செல்லப்போகிறேன் ..மறுநாள் சித்தார்த்தன் புத்தரை தனிமையில் சந்தித்தான். ”குருவே, என் நண்பன் கோவிந்தன் உங்களை சேர்ந்து விட்டான். நான் என் வழி செல்கிறேன்””போய்வா மகனே”என்று ஜாடையில் பேசாமல் தலையாட்டி விடை கொடுத்தார் புத்தர்.” ஐயா உங்கள் உபதேசங்கள் என்னை கவர்ந்தன. ரொம்ப ஆனந்தமடைந்தேன்’.எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு பதில் வேண்டும். நீங்கள் போதிக்கும் சகலமும் இணைந்த ஒற்றுமையில் மோக்ஷத்துக்கும் அப்பால் உயர வேண்டும் என்கிறீர்களே அது என்ன,எவ்வாறு?”மகனே, என் போதனைகளைக் கேட்டு நன்றாக உள்வாங்கி சிந்திக்கிறாய். எனக்கு மகிழ்ச்சி. எனது ஒரே நோக்கம் எல்லா ஜீவர்களும் துக்கத்திலிருந்து, துன்பத்திலிருந்து, விடுபடவேண்டும். துன்பத்தை துக்கத்தை தெரிந்தால், உணர்ந்தால்,அனுபவிப்பதன் மூலம் தான் விடுபட முடியும்” ”ஐயா உங்கள் போதனையை கேட்பதால் மட்டுமே ஒருவன் துன்பத்திலிருந்து விடுபட முடியுமா, மோக்ஷம் கிட்டுமா? நீங்கள் பெற்ற ஆத்மானந்தம், கோடியில் ஒருவர் பெரும் பரிசு. அந்த பேரானந்தத்தை அனைவரும் பெற முடியுமா? அந்த ஆனந்தத்தை உங்களால் விவரிக்க முடியுமா?”உங்கள் வழியை பின்பற்றினால் அது உங்களுக்கு கிடைத்த பலனைத் தருமா?. அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது ஐயா,. நான் அதைத்தேடிச் செல்கிறேனே தவிர உங்கள் உபதேசங்களை மேல் அனுபவத்துக்கு மேல் வேறெந்த சித்தாந்தமோ, கோட்பாடோ இல்லை என்று உணர்கிறேன்.”
”நீ சிந்திக்கின்றவன். புத்திசாலி, உன் வழி செல். அதி மேதாவித்தனம் ஆபத்து தரும் என்ற உணர்வு இருக்கும். அது உன்னை கட்டுப்படுத்த அனுமதிக்காதே’
சித்ததார்த்தன், தனது இணை பிரியா நண்பன் கோவிந்தனையும், புத்தரையும் விட்டு பிரிந்தான். எனக்கு மனமோ, அதில் ஏதோ ஒரு எண்ணமோ எதுவும் இருக்கவே கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது. நான் தேடுவது அந்த ”ப்ரம்மம்’ என தனக்குள் தீர்மானித்தான்..
கடைசி தடவையாக ஒருவன் உலகத்தை பார்ப்பது போல் தன்னைச் சுற்றி எங்கும் விழித்தான். அதிசய மானதாக, ரஹஸ்யங்கள் கொண்டதாக, ஆச்சர்ய, அழகான, வண்ண ஓவியமாக உலகம் அது ஒரு கவர்ச்சி வஸ்துவாக தோன்றியது. புத்தரைப் பார்த்து அவர் உபதேசம் கேட்ட சித்தார்த்தன் புது மனிதனாக ஜேதவனத்தை விட்டு வெளியேறினான். காற்றில் பறப்பது போல் உடல் உள்ளம் ரெண்டுமே லேசானது. சொல்லத் தெரியாத திரை ஒன்று அவனை எதாலோ, எப்படியோ முழுவதுமாக மூடியிருப்பது போல் உணர்ந்தான். இயற்கை எழில், மிருகங்கள், பக்ஷிகள் காற்று , மெல்லிய உஷ்ணம், சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள், மலர்கள், மரங்கள், எதுவுமே அவனை பாதிக்கவில்லை. உணர்வின்றி கண் பார்த்துக் கொண்டே வந்தது. ஏன் புத்தருக்கு போதி மரத்தின் அடியில் மட்டும் ஞானம் கிடைத்தது?
வழியில் ஒரு நதி, அதை ஒரு படகுக்காரன் மூலம் கடந்தான். படகு பிரயாணத்துக்கு காசு இல்லை கொடுக்க. படகுக்காரனும் கேட்கவில்லை. கோவிந்தன் கனவில் வந்தான். ”சித்தார்த்தா என்னை ஏன் விட்டு பிரிந் தாய்??’ என கண்ணீருடன் கேட்டான். கனவில் கோவிந்தனை கட்டிப்பிடித்தான் சித்தார்த்தன். கனவு கலைந்தது.
சித்தார்த்தன் நடந்தான். ஏதோ ஒரு குக்கிராமம். அதில் மண் குடிசைகள். ஆடையில்லாத குழந்தைகள் ஓடி விளையாடின. அவனைக் கண்டு மிரண்டு ஓடி ஒளிந்தன . மேலே நடந்தான் ஒரு காட்டுப்பாதை, அதில் ஒரு ஓடை. அதன் கரையில் ஒரு நந்தவனம். அதில் ஒரு பெண். அவனைக்கண்டதும் தலை நிமிர்ந்து சிரித்தாள். தெரு எங்கே போய் பெரும் சாலையில் முடியும் என சைகையில் கேட்டான். அவளும் ஜாடையில் சொன்னாள் . நடந்தான்.மீண்டும் அவளை சந்திக்கிறான். அவள் பெயர் கமலா. ஒரு நாட்டிய மங்கை. சித்தார்த்தனின் மனதில் அவளா? ”நீ எனக்கு குருவாக உபதேசிக்கிறாயா?”
”எந்த சமண சன்யாசியும் என்னிடம் வந்ததில்லை. பணம் உள்ளவன், என்னை ரசிப்பவன் மட்டுமே என்னைத் தேடி வருவான். நான் என்ன அவனுக்கு உபதேசிக்க முடியும்? காட்டில் வாழும் ஜடாமுடி சமணனுக்கு என்ன தெரியவேண்டும் என்னிடமிருந்து?”காதல் என்றால் என்ன அனுபவம் என்று கற்றுக்கொடு? சித்தார்த்தன் ஒரு கவிதை பாடினான். அதை அவள் ரசித்தாள். பரிசாக கமலா அவனை இழுத்து வளைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். அவனும் முத்தமிட்டான்.”இப்படிப் பரிசு பெற உன்னிடம் நிறைய பணம் இருக்கவேண்டும். எனக்கு உன்னைப் பிடித்ததால் நிர்வாண சமணா உனக்கு என் இந்த பரிசு இலவசம்.”அந்த நேரம் ஒருவன் வந்து அவள் காதில் ஏதோ சொன்னான்.”ஏ, சமணா , இங்கிருந்து உடனே போ. என்னைத் தேடி யாரோ பணக்கார தனவான் வந்திருக்கிறான்.”வேலைக்காரன் சித்தார்த்தனை வெளியே வேகமாக அழைத்துச் சென்றான். சித்தார்த்தன் பழைய ஆள் இல்லை இப்போது. மாறிவிட்டான். கமலா அவனை காமசாமி எனும் வியாபாரியிடம் அனுப்புகிறாள்.”உனக்கு என்னிடம் என்ன வேண்டும்/””எதுவும் எனக்கு தேவையில்லை”’சமணர்கள் எதுவுமே தேவையில்லாதவர்கள். பின் எதற்கு என்னிடம் நீ வந்துள்ளாய்?””நானும் மூன்று வருஷங்களுக்கு மேல் சமணர்களோடு இருந்தவன். எதுவும் இல்லாதவன்.”அப்படியென்றால் மற்றவர்களின் உடைமைகள் உதவியால் வாழ்ந்தாயா?””உங்களை போன்ற வியாபாரிகளும் அப்படித்தானே மற்றவர்களின் பொருளை நம்பி வாழ்கிறீர்கள். கொடுக்கல் வாங்கல் இன்றி வாழ்க்கை ஏது ?””ஒன்றுமே இல்லாத நீ எதை கொடுப்பாய்?”ராணுவ வீரம் தனது பலத்தை, வீரத்தை கொடுக்கிறான். வியாபாரி பொருளாக கொடுக்கிறான். ஆசிரியன் கல்வியை தருகிறான். உழவன் தானியம் தருகிறான்.செம்படவன் மீன் பிடித்து தருகிறான்.”நீ எதை தருவாய்?”..சிந்தனை, பொறுமை, உபவாசம்…அதுவே என்னிடம் உள்ள சரக்கு””உன் உபவாசத்தால் என்ன பிரயோஜனம்?””உபவாசம் இல்லாவிட்டால் ஏதேனும் வேலை தேடி, உங்கள் போன்றவர்களை அணுகி சம்பாதித்து சாப்பிட வேண்டி இருக்கும். பசி அவனை விரட்டி இருக்கும். என் பொறுமை என்னை அலைய செய்யாது. என் சிந்தனை என்னை வழி நடத்தும். நான் சந்தோஷமாக இருப்பவன். எதையும் யாரையும் தேடி செல்லாதவன்”
ஏதோ ஒரு ஒப்பந்த காகிதத்தை காமசாமி நீட்டி ”நீ இதைப் படித்துச் சொல், எழுது” என்கிறான். சித்தார்த்தன் அதை படித்து எழுதியதை பார்த்து காமசாமி வியக்கிறான். உன் சிந்தனை, அறிவு தெளிவாக உள்ளது. நீ என்னுடனே இரு. உன்னுடன் நான் நிறைய பேசவேண்டும். சித்தர்த்தனுக்கு உணவு, உடை, காலணிகள் எல்லாம் தந்தான் காமசாமி. கமலா சொல்லியபடி சித்தார்த்தன் தன்னை காமசாமிக்கு சரி சமானமாக எஜமானனாக நடந்து கொண்டான். பணியாளனாக சிப்பந்தியாகி விடவில்லை. ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் கமலாவையம் அவள் நந்தவனத்த்தில் சந்தித்தான். அவளுக்கு பரிசுகள் வாங்கி அளித்தான். காதலில் அவளை வென்றான். வெல்லப்பட்டான்.
காமசாமி திகைத்தான். இந்த பிராமணன் சித்தார்த்தன் வியாபாரம் அறியாதவன். புரியாதவன். அவன் பிறரை வசீகரிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவன். பொறுமையால், வாக்கால், அமைதியான நடத்தையால் வெல்பவன்” என்று புகழ்ந்தான். ‘
சித்தார்த்தனுக்கு வியாபாரத்தில் பங்கு தந்தான். சித்தார்த்தன் லாபமும் நஷ்டமும் சரிசமமாக ஏற்றுக் கொண்டான். ஒரு ஊருக்கு சென்றான். அரிசி வியாபாரம் நடக்கவில்லை.ஆனாலும் அந்த ஊர் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் நிறைய பரிசளித்தான். அவர்கள் அன்பைப் வென்றான். அவன் மனம் சிந்தனை எதுவும் வியாபாரத்தில் இல்லை. லாப நஷ்டங்கள் அவனை பாதிக்கவில்லை. அவன் மனம் வியாபாரத்தில் இல்லை. ஏதோ விளையாட்டில் ஈடுபடுவது போல் இருந்தது. கமலாவோடு அவன் காதல் வாழ்க்கை ஏதோ ஒரு பாடம் படிப்பதைப் போலவே இருந்ததே தவிர எதிலும் அவனுக்கு உண்மையில் எந்த பிடிப்பும் இல்லை. எல்லாவற் றையும் உலகில் அனுபவித்து ”இது நான் தேடுவது இல்லை ‘ என்று உதறுபவன். எதில் உழன்றாலும் சித்தார்த்தன் ஒரு தாமரை இலைத் தண்ணீர்.
ஒருநாள் ஒரு கனவு. கமலாவின் வீட்டில் அவளுடைய ஒரு செல்லக்கிளி தங்க கூண்டில் இருக்கும். அழகாக பேசும் பாடும். அது ஒரு நாள் காலையில் இறந்து கிடந்தது. அதை சித்தார்த் தூக்கி வெளியே எறிகிறான் சே… இது தான் வாழ்வா? இது தான் சுகத்தின் இனிமையின் முடிவா? அவன் எப்போதும் சிந்தனையாளன், பொறுமை கொண்டவன். உபவாசம் இருப்பவன். அவன் கனவில் இறந்த கிளி ஆயிரம் நினைவுகளை அவனுள் கிளப்பி விட்டது. அவன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது வியாபார வாழ்க்கை, காமசாமியின் உலக பண ஆசை வியாபார மாய உலகம். கமலாவின் உடல் சுகமும் மாய உலகம். இதுவா சாஸ்வதம்?. இது வா மோக்ஷ மார்க்கம்?. இதையா நான் தேடினேன்? புத்தரின் உபதேசங்கள் உள்ளே ஒலித்துக் கொண்டே இருந்தது. பொழுது விடிந்தது. சித்தார்த்தன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் அங்கிருந்து நடந்தான். கமலாவுக்கு சித்தார்த்தன் சென்றுவிட்டான் என்ற சேதி அதிர்ச்சி தரவில்லை. அவளுக்கு அவனது மனநிலை தெரிந்தது தானே. நேராக கிளிக்கூண்டுக்கு சென்றாள் . கூட்டை திறந்தாள். கிளியை வெளியே பறக்க விட்டாள் . அது கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தால் . அன்று முதல் அவள் வீட்டுக் கதவு மூடியே இருந்தது. எவருக்கும் இனி அங்கே வரவேற்பு இல்லை.
சித்தார்த்ன் சம்சார சாகரத்தில் மூழ்கி எழுந்துவிட்டான். அந்த அனுபவம் அவன் வேண்டுமென்றே பெற்றது. அதால் துக்கம் அதிகரிக்கும், துன்பம் வளரும் என்று நிதர்சனமாக புரிந்து விட்டது. அனுபவம் புதுமை மட்டும் இல்லை, கண் திறப்பும் கூட.
எதுவும் உண்ணவில்லை. எதையும் பருகவில்லை. சிந்தனையாளனாக சித்தார்த்தன் ஒரு நிழல் தரும் மரத்தின் மேல் சாய்ந்து எதிரே ஓடும் நதியின் ஓட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அது தான் சலனமற்ற வாழ்க்கையா? நதியில் இறங்கி மறைவோமா? இல்லை. இன்னும் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. சித்தார்த்தன் மரத்தடியில் தூங்கினான்.
கண் விழித்த சித்தார்த்தன் முன்பு மஞ்சள் ஆடை அணிந்து மழித்த தலையோடு புத்த பிக்ஷுவாக கோவிந்தன் நின்றான்.”சித்தார்த் நீயா? நீ யார்?””கோவிந்தா, நான் ஒருபராமணன். ஒரு ப்ரம்மவாதி. ஒரு சமண சந்நியாசி, யோகி, புத்தரின் சிஷ்யன். வியாபாரி, காதலன், பணக்காரன். உலக சுக அனுபவஸ்தன். சகலமும் வேண்டாம் என்று உதறி மீண்டும் வட்டத்தின் ஆரம்பத்தில் துவங்கிய இடத்தில் மீண்டும் வந்து நிற்பவன்”.
கோவிந்தன் பௌத்த பிக்ஷு. வழிப்போக்கன். சென்று விட்டான். சித்தார்த்தன் புரிந்து கொண்டான் ப்ரம்மம் அவனுக்கு கிட்ட வேண்டுமானால் அவன் தொடர்ந்து மௌனம், தியானம், வைராக்கியம், உபவாசம் பொறுமையோடு இருக்கவேண்டும். வேறு எந்த பரிசோதனையும் இனி தேவையில்லை. அவன் மனதில் ஆழத்தில் அவன் வளர்ந்துவந்த ஆத்ம கிளி சாகவில்லை. கனவில் தான் கமலாவின் கிளி மரணமுற்றது.
சித்தார்த்தன் முதலில் நதியை கடக்க உதவிய அதே ஓடக்காரனை மீண்டும் சந்தித்து அவனுடனேயே தங்கி அவன் குடிசையில் தூங்கிவிட்டான். நதி எங்கும் ஒன்றே. ஆரம்பத்தில், நடுவில், பெரிதாக, சிறிதாக, கடலோடு சங்கமமாகும்போது எப்போதும் ஒன்றே தான்… சித்தர்த்தனும் அவ்வாறே…..என்றும் ஆத்ம ப்ரம்ம சிந்தனையோடு…ஓடக்காரன்….அக்கரை சேர்ப்பவன் அல்லவா??வழிகள் பல, முடிவில் சேரும் இடம் ஒன்றே.
இந்த சித்தார்த்தன், கௌதமனோ, புத்தரோ அல்ல. அல்ல அவனே அது. இந்த உலகம் பலவாக தோன்றி னாலும் ஏதோ ஒன்றையே அடிப்படையாக சார்ந்தது. அந்த ஒன்று நான், நீ எல்லாமே. ஓம் என்ற சொல்லில் சகல சப்தங்களும் அடங்கும். துயரக் குரல், துக்கம்,ஆனந்தம், பெருமை,என எல்லா உணர்வுகளும் ஒன்றாக கலந்து இனிதாக மனதில் ஓமென இறங்கும்.
சித்தார்த்தன் தேடிக்கொண்டே இருப்பவன், தேடியதை பல அனுபவங்களுக்குப் பிறகு உணர்ந்தவன். அதுவே பேரானந்தம். எல்லாம் ஒன்றென அவனை உணர்த்திய அனுபவங்கள் பல ரூபங்களில் வந்தன, அவன் காதலித்த கமலா, அவன் தந்தை, சமணர்கள், புத்தர், நண்பன் கோவிந்தன், ஓடக்காரன் வாசுதேவன், அவன் மகன் .. இன்னும் எண்ணற்ற பலர். ஞானம் என்பதை உரைக்க முடியாது,காட்ட முடியாது, ஒவ்வொருவனும் தேடி உணர்ந்து அனுபவிக்கவேண்டியது.
++
இந்த ஜேர்மன் எழுத்தாளர் ஒரு ஞானி. பல காலம் சிந்தித்தவர். அத்வைத தத்வம் உணர்ந்தவர். இது புத்தர் கதை அல்ல. இதில் வரும் சித்தார்த்தன் கௌதமர், புத்தர் இல்லை. கோவிந்தன் கிருஷ்ணன் இல்லை, வாசுதேவன் பரமன் இல்லை. ஆனால் எல்லாம் ஒருவரே என உணரவைக்கும் பாத்திரங்கள். படித்து மகிழ ஒரு சிறந்த புத்தகம். ஒரே ராத்திரியில் இதை படித்து 160 பக்கங்களுக்கு மேலான விஷயங்களை கிரஹித்து சுருக்கமாக இதை எழுத எனக்கு பிடித்தது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




