

கிருஷ்ணனின் கீதோபதேசத்துக்கு முன்னால் எத்தனையோ லக்ஷம் மக்கள் ஆத்மா என்றால் என்ன?, அது நமக்குள்ளே கடவுளாக இருக்கிறதா என்று எல்லாம் உணராமலேயே உலகை விட்டு மறைந்து விட்டார்கள். கீதோபதேசத்துக்கு பிறகு எத்தனையோ பேர் ஆத்ம ஞானம் பெற்று மானிடப்பிறவியின் பயனை அடைந்த வர்கள்.
இதற்கெல்லாம் காரண கர்த்தாவான கிருஷ்ணன் ஒரு விதத்தில் தாமரை இலைத் தண்ணீர். பேராரவாரம் கொண்ட லக்ஷக்கணக்கான வீரர்களின் கோஷத்தில் கூட, யுத்தகளத்தில் அமைதி, ஞானம், கர்மம், பக்தி, யோகம், ஆத்மா பற்றி பேசுபவன், அமைதியானவன். சூறாவளி காற்றிலும், அணையாது எரியும் தீபம். அஞ்ஞானம் நிறைந்த கோபியரிடையேயும் ஆயர்பாடி கோபர்களிடையேயும் சரிசமானமாக பழகிய ஒரு சாந்தமான, நாத ஸ்வரூப ஞானி.
பாகவதத்தில் நாம் காணும் கிருஷ்ணன் ராஸலீலையில், பக்தர்கள் அன்பில் மகிழ்ந்து, வேணு நாதத்தில் எல்லா உயிருக்கும் ஆனந்தம் தருபவன். ஆனால் பாரதத்தில் அதே கண்ணன் ஒரு கர்ம யோகி, ஞானயோகி, பக்தியோகம் உபதேசிக்கும் ப்ரம்ம ஞானி. தன்னைப்பற்றியே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம்
காட்டுகிறான் கண்ணன். பிருந்தாவன கிருஷ்ணன் வேறு. குருக்ஷேத்திர கிருஷ்ணன் வேறு என உணர்த்து கிறான்.
பசு நேசன் கன்றொடு விளையாடுபவனா, இந்த த்வாரகா ராஜ்ய பாரம் வகிக்கும் சமயோசித ராஜ யோகி, தீர்க்க தரிசி கிருஷ்ணன்? !!
பாகவதத்தில் பாலகனாக ஆயுதம் எதுவுமில்லாமல் தனித்தே பல அசுரர்களை கொன்றவன், பாரதத்தில் பீஷ்மர் துரோணர் கர்ணன் விடும் கொடிய பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரத்திலிருந்து ஆயுதமேதுமில்லாத தேர்ப்பாக னாக பாண்டவர்களைப் பாது காத்து அவர்கள் வைத்தே இந்த பேரரசர்களை, மஹா அதிரதர்களைக் கொன்றவன் .
பாகவதத்தில் பாலகனாக கோபிகைகளின் ஆடைகளை மறைத்து அவர்களை நிர்வாணமாக்கி கெஞ்ச
வைத்தவனா, பாரதத்தில் துரியோதனன் அரசவையில் நிர்வாணமாகப்போகும் திரௌபதைக்கு வஸ்திரம் நீளமாக வளரச் செய்து மானம் காத்தவன் . குணத்தில் எவ்வளவு மாற்றங்கள் காட்டுகிறான் இந்த குணாதீதன்.!
மஹா பாரத யுத்தமே வேண்டாமென்று சமாதான தூது போனவனும் அவனே, யுத்தம் நிகழவேண்டும், அதில் கொடியவர்கள் அனைவரையும் வீழ்த்தவேண்டும் என்று திட்டமிட்டு யுத்தத்தை பாண்டவர்கள் பக்கம் இருந்து வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தவனும் அவனே. கிருஷ்ணன் யுத்த பிரியன் இல்லை. அனைவரும் ஒன்று என நேசிப்பவன். என்னை சரணடைந்தவரை காப்பது என் கடமை என வாழ்ந்தவன். நம்பினோரை கை விடாதவன்.பக்த ப்ரியன். அதனால் தான் அவன் பெயர் பக்தவத்சலன் . பிறர் துன்பத்தை தான் வாங்கிக் கொண்டு ரக்ஷிப்பவன் என்பதால் என்றும் கடவுளாக வழிபடப்படுகிறான்.
என் செல்வம், என் உறவு, பதவி, பந்தம் எல்லாம் என்னை விட்டு விலகியபின் நான் சோர்ந்துபோய், விரக்தியோடு சன்யாசம் கொண்டால் அது ”பற்றற்ற” பற்றை விலக்கிய நிலை இல்லை. எனக்கு சகலமும் தேவைக்கு மேல் இருந்த போதும், எனக்கு பதவி, அந்தஸ்து, சமூக கௌரவம், அதிகாரம், பணம், உறவு, சொத்து சுதந்திரம் எல்லாமே சுபிக்ஷமாக இருக்கும்போது ”இவை சாஸ்வதம் இல்லை” என்று அவற்றை உதறித்த தள்ளிவிட்டு, திரஸ்கரித்து விட்டு, அவற்றினின்றும் விடுபடுபவன் தான் துறவி, சன்யாசி.
எல்லாவித உயிர்களும், வஸ்துக்களும், அஷ்ட ஐஸ்வர்யங்களும், ராஜ போகமும் பேரானந்தமும் அவனைச் சூழ்ந்து இருந்த போதும் ஒரு கணமும் அவற்றால் பாதிக்கப்படாத, பற்றற , ஆனந்த மூர்த்தி கிருஷ்ணன் என்பதால் அவனை என் மானசீக குருவாக, கடவுளாக ஏற்றவன் நான்.
ஆசா பாசங்களிலும், விருப்பிலும், உலக ஈர்ப்புகள், உணர்ச்சிகளில் ஆழ்ந்தவனால், அதனால் துக்கம், துன்பம் அனுபவிப்பவனால் கிருஷ்ணனை புரிந்து கொள்ள முடியாது. குடும்பத்தில் இருந்துகொண்டே, சம்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டே சந்நியாசியாக வாழ்ந்த ஜனகர் போன்ற மனிதன், உலக மாய வாழ்வை தாமரை இலைத் தண்ணீராக பாவிப்பவன். அவனை கிருஷ்ணன் நன்றாக அறிவான். கூடவே இருப்பான்.
”வாழ்க்கையில் எது நிகழ்கிறதோ, எது நம்மைத் தேடி வருகிறதோ, அதை அப்படியே ஏற்றுக்கொள்” என்கிறார் கிருஷ்ணன். அதில் உனது மனதையும் அகந்தையையும் புகுத்தி, தேர்ந்தெடுக்க முயற்சி செய்யாதே” என்கிறார். இது தான் ஏற்பு (Absolute Acceptance). அதாவது, எதையும் மறுத்து ஒதுக்க வேண்டிய அவசியமில்லாத நிலை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


