
ஏழுமலையான் உண்டியல் – நங்கநல்லூர் J K SIVAN
உலகத்துலேயே எங்கும் இல்லாத அதிசயத்தில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உண்டியல்.
தொன்று தொட்டு வழக்கத்தில் இருப்பது. பக்தர்களின் அளவற்ற காணிக்கைகளை கொள்ளும் அளவுக்கு பெரிய பெரிய பாத்திரங்கள் உறைக்குள் போட்டு மேலே இருந்து உள்ளே கை நுழைத்து பக்தர்கள் காணிக்கைகளை செலுத்த அதில் நாலா பக்கமும் இடைவெளி இருக்கும்.
காவல் காரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். சரித்திர, புராண, பக்தி பூர்வ விஷயங்கள் நிறைய இந்த உண்டியல்கள் பற்றி உள்ளது. ராஜாக்கள் அரசாங்கங்கள் எல்லாம் இதை இன்றளவில் நடைமுறையில் வைத்து கணக்கில் வைக்கிறார்கள்.
காசுகள், பண நோட்டுகள், வெள்ளி, தங்க, வைர,நவரத்ன கற்கள்,இவற்றாலான நகைகள், முக்கியமான ஆவணங்கள், வெளிநாட்டு நாணயங்கள், நோட்டுகள் சொத்து விவரமான அசல் தஸ்தாவேஜ்கள், தலைமுடி பொட்டலங்கள், உருவங்கள், ஆனை குதிரை பசு, ஆடு என்று எல்லாம் கூட காணிக்கையாக சேரும். குழந்தைகளை கூட உண்டியலில் போட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். உயிருள்ள ஜீவன்களை காணிக்கையாக அளிப்பதற்கு ‘நேர்ந்து விடுதல்’ என்று பெயர்.
திருப்பதி கோவில் உண்டியல்கள் ஸ்ரீவாரி உண்டியல் எனப்படுபவை. எப்படி இந்த உண்டியல் முறை அமலுக்கு வந்தது என்பதற்கு ஒரு புராண கதை உள்ளது.
ஸ்ரீனிவாசன் ஏழை. வகுளா பாட்டியிடம் வளர்ந்தவன். அவனுக்கும் ஆகாசராஜன் என்ற அரசன் மகள் பத்மாவதிக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீடு சீர் செனத்தி செலவுகளுக்கு பணம் வேண்டுமே. ஸ்ரீனிவாசன் குபேரனிடம் கடன் கேட்டான். அன்றாடம் உனக்காக பணம் சேர்த்து கடனையும் வட்டியையும் செலுத்துகிறேன் என்று வாக்கு கொடுத்தான். அதனால் ஸ்ரீனிவாசன் கோவிலில் உண்டியலில் பக்தர்களிடம் காணிக்கை வாங்கி குபேரன் கடனை அடைத்துக் கொண்டிருக்கிறான். கலியுகம் முடியும் வரையில் கடன் தீராது போல் இருக்கிறது. வட்டி கட்டவே வசூல் போதவில்லையே எனும்போது அசலை என்று தீர்ப்பது. உண்டியல்கள் மட்டும் ரொம்பிக்கொண்டே இருக்கிறது. ஒரு பெரிய கூடத்தில் நாலா பக்கமும் காவலோடு பலர் இரவும் பகலுமாக ரூபாய், காசுகள், இதர பொருள்களை எல்லாம் வகைப்படுத்தி, கையாளும், மெஷின்களாலும் எண்ணி, கட்டுகள் கட்டி வங்கிக்கணக்கில் சேர்க்கிறார்கள். தங்க வைர மற்ற பொருள்களெல்லாம் கணக்கில் ஏறி நிருவாகத்தின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
கிருஷ்ணதேவராயர் போன்ற ராஜாக்கள் கோவிலை புணருத்தாரணம் செய்ததோடு ஆலயத்திற்கு நிறைய காணிக்கைகள் செலுத்தியவர்கள். நிலங்கள், வயல்கள், கிராமங்கள் எல்லாம் மானியமாக அளிக்கப்பட்டுள்ளன. வெங்கடாஜலபதிக்கு எண்ணற்ற ஆபரணங்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறதே.
ஆரம்ப காலத்தில் அர்ச்சகர்களும் நிர்வாகிகளும் அனைத்து காணிக்கைகளை பெற்றுக் கொண்டிருந் தார்கள். பின்னர் அரசாங்கம் குறுக்கிட்டு வரவு செலவை கண்காணிக்க வரைமுறை அமுலுக்கு கொண்டு வந்தது.தற்போதைய நிர்வாகம் திருப்பதி திருமலை தேவஸ்தானம். வருஷாவருஷம் 1500 கோடி ரூபாய்க்கு குறைவில்லாமல் பக்தர்களின் காணிக்கை பெருகுகிறது என்று நிர்வாகம் சொல்கிறது, சராசரி வருமானம் ஒவ்வொரு நாளும் ஐந்து கோடி ரூபாய்க்கு குறைவில்லையாம். நிர்வாகம் மக்களுக்கு, புகார்களை வேண்டியவசதிகள் செய்து கொடுக்கிறது. இரவு பகல் தங்க, மலை மேல் ஏற , இறங்க, கோவிலைச் சுற்ற என்றெல்லாம் போக்குவரத்துக்கு, அன்ன ஆகாரங்களை ருசியாக வழங்க, குடிநீர் ஏற்பாடு என்று பலவித வசதிகளை சேது கொடுக்கிறது . தேவஸ்தானம் நிறைய கல்வி நிலையங்களை, கலாசாலைகளை , வேத பாடசாலைகள், மருத்துவவிடுதிகள், தங்கும் இடங்கள், எல்லாம் அமைத்துள்ளது. லக்ஷோப லக்ஷோப லக்ஷம் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கிறது.
வெங்கடாஜலபதியை பார்க்க மலை ஏறும் முன்பே அடிவாரத்தில் பலத்த பாதுகாப்பு சோதனை. பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு போகக்கூடாது. மது மாமிசம்,எல்லாம் அனுமதியில்லை. வெங்கடேசனைப் பொறுத்தவரை ஏழை தனவந்தர்கள் எல்லாரும் ஒன்றே. ஏழையின் ஒரு ரூபாய் காசும், பணக்காரர்கள் அளிக்கும் பல கோடிகளும் சமமாகவே ஏற்றுக்கொள்கிறவன். கலியுக வரதனின் அனுக்ரஹமும் அப்படித்
தான்.
எண்ணற்ற பக்தர்கள், குழந்தைகள், முடி காணிக்கை கொடுக்கிறார்கள். அவையே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. தமது சொத்து சுதந்திரங்கள் எல்லாவற்றையுமே காணிக்கையாக்கும் பக்தர்களும் உண்டு. எத்தனையோ நிறுவனங்களில் வெங்கடாஜலபதி பார்ட்னர், பங்குதாரர் என்பது தெரியுமா? வருஷாவருஷம் அவர் பங்கு உண்டியலுக்கு வந்துவிடும்.
கர்ம பலன் தீர காணிக்கை சேர்கிறது.
சிலர் மொபைல் போன் கடிகாரம் இதெல்லாம் கூட உண்டியலில் சேர்த்துவிடுகிறார்கள். அது வெங்கடேசன் சொத்தாகிவிடும் குழந்தையை உயிரோடு உண்டியலில் போட்ட விஷயங்கள் அறிந்து ஆச்சர்யப்படுகிறோம். குழந்தை பெருமாளின் பாதுகாப்பில் வளரும். பெருமாளின் உண்டியலில் காணிக்கையாக சேர்ந்த எதுவும் ஏழுமலையானுக்கே சொந்தம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

