
சாந்தோக்ய உபநிஷத். நங்கநல்லூர் J K SIVAN
உஷ்ணம்.
உபநிஷதங்கள் வேதங்களின் சாரம்.பழரசம். நூற்றுக்கணக்கான உபநிஷதங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் யாரோ ஒரு ரிஷியோ பல ரிஷிகளோ, அவர்களின் கடின தவத்தாலும், இடைவிடா முயற்சி, தேடலால், தியாகத்தால், கண்டறியப்பட்ட மகத்தான உயர்ந்த தத்வங்கள்.
சாந்தோக்ய உபநிஷத் அதில் ஒன்று. சாமவேதம், இசை மரபு. சாமகானம் என்றாலே தெரியும். ராவணன் கைலாசநாதனைப் பாடி அவன் அருள் பெற்றது. சாமகானம் செய்பவன் ‘சாந்தோக்’ எனப்படுவான்.
இந்த உபநிஷத்தில் 8 அத்யாயங்கள். இந்த உபநிஷத் மந்திரங்கள் தான் பெரும்பாலும் ப்ரம்ம சூத்ரம் ஆகும். ஒரு ரிஷியால் ஆனது இல்லை இது. பல ரிஷிகளின் அற்புத தத்துவங்களின் கலவை. இதை ஏற்கனவே சொல்லியுள்ளேன்.
பஞ்ச பூதங்களில் ஆகாசம் ஸ்ரேஷ்டமானது. ‘ஆ’; எங்கும் என்று அர்த்தம். ‘காசம்’ ; பிரகாசிப்பது, ஒளிர்வது, எங்கும் எப்போதும் பிரகாசிப்பது ப்ரம்மம். ஆத்மாவில் உள்ள உன்னத பரமாத்மா. இனிப்பது. சூர்யன் அப்படி எல்லோருக்கும் வாழ்வு தந்து இனிப்பவன், பிரகாசிப்பவன்.
அமாவாசை தர்ப்பணம் பண்ணும்போது கூட ஒரு மந்திரம் உச்சரிக்கிறோமே , இருக்கிறதா?
मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः ।माध्वीर्नः सन्त्वोषधीः ॥
Madhu vaathaa ruthaayathe madhu ksharanthi sindhavah | Maadhweer na santhwoshadheeh ||
காற்று இனிக்கிறது. காவிரி கங்கை யமுனை போன்ற புண்ய நீர் இனிக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது. எத்தனையோ மூலிகைகள் நம்மை காத்து ரக்ஷிக்கிறது. இனிக்கிறது. அப்படி இனியவர்கள் நமது முன்னோர், பித்ருக்கள்.
ஒரு ரிஷி சூரியனை தியானித்து மேலே சொன்ன மந்திரத்தை கண்டுபிடித்தவர். பூமிக்கு சூரியன் கிடைத்துள்ளான் . ப்ரம்ம லோகத்தில் சூர்யன் இல்லை. அவன் இல்லாமலேயே பல கோடி சூரிய ப்ரகாசத்தோடு, ஒளியோடு, ப்ரம்மம் அங்கே சதா ஒளிர்கிறது. ஆத்ம ஞானத்தால் தான் அதை உணரலாம்.
ஒன்று தெரிந்து கொள்வோம். கங்கையை போல் புனித நீரில்லை, கோவிந்தன், கிருஷ்ணன் போல் வேறு தெய்வமில்லை, காயத்ரி போல் வேறே சக்திவாய்ந்த மந்த்ரமும் எதுவுமில்லை.
நமது தேகத்தின் சாதாரண உஷ்ணம் 98.4டிக்ரீ F என்று பள்ளிக்கூடத்த்தில் படித்திருக்கிறோம். அதற்கு மேல் போனால் ஜுரம். குறைந்தால் ஜன்னி. ரெண்டுமே ஆபத்து. இந்த உஷ்ணம் ப்ரம்மத்தால் நமது தேகத்துக்குள் கடைசி வரை இருக்கிறது. இந்த உஷ்ணம் தான் அக்னி. நாம் உண்ணும் ஆகாரத்தை ஜீரணிக்கும் உஷ்ணம் தான் ஜாடராக்னி. தியானத்தால் அறியாமை, அஞ்ஞானம் எரிந்து, ஞானம் உண்டாவது ஞானாக்னி.
உள்ளங்கால் முதல் உச்சி மண்டை வரை உஷ்ணம் உள்ளே பல ரத்தநாளங்கள் மூலம் பரவி நம்மை செயல் படுத்துகிறது. அந்த ஞானாக்னியின் வெளிப்பாடு தான் ‘தேஜஸ்’. ஆஹா அவர் முகத்தில் என்ன தேஜஸ் என்று ஞானிகளைப் பார்த்து சொல்கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அல்லவா?
பஞ்ச பிராணன் எனப்படும் ஐந்து வித வாயுக்கள் தான் நம்மை சீரான உஷ்ணத்தோடு செயல்படுத்துகிறது. அதில் முக்கியமானது பிராணவாயு. oxygen. நமது மூச்சுக் காற்று.
.சாப்பிடும்போது கூட முதலில் உணவை உள்ளே உள்ள ஐந்து வாயுக்களுக்கும் யஞமாக , யாகமாக அர்ப்பணித்து, அளித்து பிறகு உண்கிறோம். அதற்கு தான் இலையை சுத்தம் செய்யவோ, சாதத்தின் மேல் பருப்பு ஆகியவற்றை சுத்திகரிக்கவும், நெய் தேவைப்படுகிறது. நெய்யில்லாமல் எப்படி ஹோமம் நடக்கும்? எப்படி யாகாக்னி, ஹோமத்தீ, கொழுந்து விட்டு எரியும்? அப்படிதான் நாம் உண்ணும் உணவை பஞ்ச ப்ராணனுக்கு யாகமாக அளித்து உண்பது தான் பரிசேஷணம். அன்ன சுத்தி, ப்ராணாஹுதி. ” ஓம். ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா, ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் ஸமானாய ஸ்வாஹா,ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா” என்று ஜலத்தால் இலையை, உணவை சுற்றி மந்திரம் சொல்லி ஒவ்வொரு பருக்கையாக உண்பதின் மூலம் அர்ப்பணிப்பது.
சூரியன் உஷ்ணத்தின் பிரதிபலிப்பு. வெளியே உள்ள இருளை போக்குபவன் சூரியன். உள்ளே உள்ள அஞ்ஞான இருளை போக்குபவன் ஞான சூரியன். ப்ரம்மம். ரெண்டுமே பரம்பொருள் அம்சம்.
சாந்தோக்ய உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகத்தில் வரும் சம்பவம் இது;சத்யகாமன் ஒரு பிரம்மச்சாரி சிறுவன். ரிஷியிடம் சென்று கல்வி கற்க செல்லும்போது நீ யார், உன் கோத்ரம் என்ன என்று கேட்கிறார். அவன் தாய் . ஜாபாலா , அவளிடம் சென்று ”அம்மா என் கோத்ரம் என்ன? சொல்? என்கிறான்.
”மகனே, என் யௌவனத்தில், புருஷன் வீட்டில் பல அதிதிகளுக்கு சேவை செய்து, ஆராதித்து, பலவித பணிகளில் ஈடுபடும்போது உன்னைப்பெற நேர்ந்தது. உன்னைக்கரு தரித்தபின் உன் தகப்பனார் இறந்து விட்டார். அனாதையானேன்.உன் கோத்ரம் எனக்கு தெரியாது. என் பெயர் ஜாபாலா, உன் பெயர் சத்யகாமன். இதையே உன் குருவிடம் சொல்லி குகுகுல வாசம் செய். போ ”என்கிறாள்.
சத்யத்திலிருந்து விலகாமல் சத்ய காமன் உண்மையைச் சொன்னதை கேட்டு மகிழ்ந்து ரிஷி அவனுக்கு உபநயனம் செய்விக்கிறார். ஆபஸ்தம்ப ரிஷி சொன்னது ஞாபகம் இருக்கட்டும்; ”எவனுக்கு கோத்ரம், ப்ரவரம் தெரியவில்லையோ, அவனுடைய ஆச்சார்யனின் கோத்ரத்தை அவன் சேர்ந்தவனாகிறான்” யாகம் வளர்க்க மூன்று அக்னிகள் விசேஷம். முத்தீ என்போமே அது. கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி, ஆஹவனீயம். இவை சூரியனில், சந்திரனில்,மின்னலில் அடங்கியவை.
இது போன்று சுவாரஸ்யமான விஷயங்களை மட்டும் எடுத்துச் சொல்வதாக உத்தேசம். முழுஉபநிஷத்தையும் வார்த்தைக்கு வார்த்தை சொன்னால் படிக்கமாட்டீர்கள். நீங்களாக ஒருநாள் விருப்பம் கொண்டு படித்தால் கடகட வென்று இதுவரை புரியாததெல்லாம் புரியும். மகிழ்ச்சி தரும். அது என்னுடைய அனுபவம்..
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



