
வியாழன் வேங்கடவன் நேத்ர தர்சனம். நங்கநல்லூர் JK SIVAN
நண்பர்கள் வெங்கட்ரமணன் தம்பதியர் ஒரு சில மாதங்களுக்கு முன்பே என்னை கூப்பிட்டு ”சார் எங்களோடு திருப்பதி வருகிறீர்களா, காலை புறப்பட்டு இரவுக்குள் வீடு வந்து சேரலாம்” என்றபோது ”பாலாஜி யை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத வர்கள் யாராவது ”வேண்டாம், நாம் வரவில் லை” என்று சொல்வார்களா? அதுவும் புஷ்பம் மாதிரி உங்களை வீட்டுக்கே வந்து அலாக்காக தூக்கி சௌகர்யமாக காரில் அமர்த் தி, ஒரு இடத்திலும் நிற்காமல், அலுங் காமல் அரைமணி நேரத்தில் தரிசனம் செய்விக்கி றோம் என்று வேறு ஆசை காட்டினால் விடுவேனா? அது நேற்று நிறைவேறியது. 4.12.25 அன்று ஸ்ரீனிவாச னை தரிசிக்க நாள் குறித்து ஏற்பாடுகள் நடந்தது. மழை பற்றிய பயமுறுத்தல் தொடர்ந்து கொண்டே இருந்தது. வானிலை அறிவிப்பாளர் சொல்வது அத்தனையும் இயற்கை பின்பற்றுவதில்லையே. ஆகவே 4.12.25 காலை மழை இல்லவே இல்லை.
23.11.25 வேலூர் தங்க ஆலயம் புனித யாத்ரை போனபோது எனது வலது கால் முட்டியில் பிசகு TWISTED KNEE ஏற்பட்டு அன்று முதல் வலியோடு தான் நடந்தேன். மறுநாள் விஜயா ஆஸ்பத்திரி எனக்கு எலும்பு முறிவு இல்லை என்று சொல்லை ஆயிரக்கணக்கில்வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ரெண்டு மாத்திரையோடு அனுப்பியது. ஆகவே தான் விந்தி விந்தி மெதுவாக நடந்து சென்று நேற்று 4.12.25 காலை 6 மணிக்கு காரில் உட்கார்ந்தேன். வெங்கட்ரமணன் தம்பதியுடன் அவர்கள் சம்பந்தி ஸ்ரீனிவாசன் தம்பதி, நான் என் மனைவி ஆகிய 6 பேர். ஸ்ரீ ராம் என்ற அன்பர் திருப்பதி தரிசனம் செய்து வைப்பதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட அற்புத மனிதர். அதற்கென்றே ஒரு வசதியான கார் வைத்திருப்பவர். திருமலையில் ஒவ்வொரு சந்து பொந்தும் அத்துபடி. வேங்கடேசன் ஆலயத்தில் அநேகரை தெரிந்து வைத்திருப்பவர். அவர் ஜாக்கிரதையாக அதே சமயம் சீக்கிரமாகவே எங்களை காரில் அழைத்துச் சென்றார்.
கும்மிடி பூண்டி ஊத்துக்கோட்டை வழியாக சென்றோம். புழல் தாண்டி, பெரியபாளையம் வழியாக ஊத்துக்கோட்டை செல்லும் வழியெல்லாம் அநேக இடங்களில் ஏரிகள் பள்ளங்கள் நீர் நிரம்பி சாலையில் குறுக்கே ஓடியது. PS4 அநேக இடங்களில் சுவையாக உணவளிக்கிறார்கள். 10.30மணிக்கு திருச்சானூரில் ஸ்ரீ அலமேலுமங்காவை அற்புதமாக தரிசனம் செய்ய பாக்யம் கிடைத்தது. கோவிலுக்கு அருகிலேயே காரை நிறுத்த இடங்கள் தெரிந்து வைத்திருக்கிறார் ஸ்ரீராம். 200 ரூபாய் டிக்கெட் வாங்கியதால் எனக்கு நடக்க அதிக நேரம் ஆகவில்லை. பதினைந்து நிமிஷங்களில் தாயார் தரிசனம் ஆனந்தமாக கிடைக்கச்செய்தார். திருச்சானூரில் அம்பாள் குங்குமம் வாங்கிக்கொண்டு திருமலைக்கு பயணம் கிளம்பினோம். .
ஸ்ரீராமுக்கு வெங்கடேசனை விட திருமலை திருப்பதியை ரொம்ப நன்றாக தெரிகிறது. ஆலயத்திற்கு விடாமல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து செல்வதால் அநேகருக்கு அவரைத் தெரிகிறது. முதியோர் தரிசன நுழைவு வாயிலிலேயே எங்களைக் கொண்டு போய் 2மணிக்கே இறக்கிவிட்டார். ஒரு மணிநேரம் அங்கே சௌகர்யமாக நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டோம். வெளியே எங்கும் பனி மூட்டம். சில்லென்று ஆகாயம் முழுதும் AC போட்டது போல் இயற்கை சில்லிட்டது. ஆகவே சுடசுட சாம்பார் சாதம், தயிர் சாதம் தட்டில் கொண்டு வந்து கையில் கொடுத்தபோது அம்ரிதமாக ருசித்தது. மாலை மூன்று மணிக்கு வெங்கடேசன் தரிசனம் செய்ய விசேஷ வழியில் நகர்ந்தோம். அரைமணி நேரத்துக்குள்ளாகவே எங்கும் நடுவில் நிற்காமல் தொடர்ந்து நடந்து வேங்கடேசன் முன்பாக நின்றோம்.
நேற்று வியாழன் என்பதால் வெங்கடேசனின் நேத்ர தர்சனம் அபூர்வமாக எங்களுக்கு கிடைத்தது.அபிஷேகத்திற்கு முன்னதாக பெருமாளின் நாமம் சிறியதாக்கப்படும், இதனால் பக்தர்கள் பூர்ணமாக, சுவாமியின் திவ்யமான கண்களைத் தரிசிக்க முடியும் . காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரைபக்தர்கள் அனைவரும் பெருமாளின் நேத்ர தரிசனத்தைப் பெறலாம். வழக்கமான சர்வாலங்கார ரூபம், கண்ணை மறைத்த பட்டை வெள்ளை நாமம் இல்லாமல் கருப்பாக வெங்கடேசன் விக்ரஹமாக பூணூலோடு நிற்பதைப் பார்ப்பது அபூர்வமில்லையா? முக்கியத்துவம் இதில் என்னவென்றால், நாம் பகவானை நமது கண்களால் தரிசிப்பதைவிட அவன் கண் திறந்து நம்மை பார்த்து அனுக்ரஹிப்பதற்கு நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆலயத்தின் உள்ளே மொபைல் இத்யாதி சாமான்கள் அனுமதிக்கப்படாது என்பதால் கூட்டமாக செல்பவராகில் ஒருவரை ஒருவர் விடாமல் கையைப் பிடித்துக் கொண்டு ஜாக்கிரதையாக சேர்ந்து தரிசனம் பெற்று சேர்ந்தே வெளியே வருவது அதி முக்கியம். லக்ஷக்கணக்கானவர்கள் இடையே எங்காவது யாராவது பிரிந்து போனால் தேடுவது ரொம்ப ரொம்ப கஷ்டம். போனும் கிடையாதே.
வியாழன் அன்று புளியோதரை பிரசாதம் விநியோகம். ரொம்ப ருசியாக இருந்தது. லட்டு பொட்டலங்கள் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். ஸ்ரீராம் காரோடு காத்திருந்தார். கோவில் வாசலுக்கு வெளியே போட்டோ எடுத்துக் கொண்டோம். ஸ்ரீனிவாசன் தம்பதியரும் முதல் தடவையாக சந்தித்தாலும், பல வருட நெருங்கிய ஸ்நேகிதர்களைப் போலவே அன்புடன் பழகினார்கள். நட்பு தான் ஒருவருக்கு சிறந்த சொத்து என்று அடிக்கடி உணர்கிறேன்.
திருச்சானூரில் மறுபடியும் PS4ல் இட்லி பூரி காப்பி சாப்பிட்டு காரில் உட்கார்ந்து பாடிக்கொண்டே பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டுக்குள் வந்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வி. ”மறுபடியும் என்றைக்கு, எப்போது, எந்த, கோவிலுக்கு செல்வோம்?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

