KARTHIKAI MAHAA DEEPAM J K SIVAN

​கார்த்திகை மஹா தீபம். – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு காலத்தில் திரு அண்ணா நாடு. அங்கே சிவன் மஹாதேவன். பல்லவ கால தொண்டை மண்டலத்தை சேர்ந்தது. எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலை. பின்னர் இந்த மலைக்கு புனித அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரம், சிவலோகம், சோணகிரி, சோணாசலம், சுணசைலம், அருணாத்ரி, அருணகிரி, சோணகிரி, சுதர்சனகிரி, ஜோதி லிங்கம், தேஜோலிங்கம், லிங்கஸ்தானம், என்றெல்லாம் பேர்தானாகவே வந்தது. சிவன் அருணாசலேஸ்வரர்​, அண்ணாமலையார் என்று பாடல் பெற்றவர். வடபெண்ணை தென்பெண்ணைக்கு இடையே இருக்கும் ஸ்தலம் திருவண்ணாமலை.
அகஸ்தியர் தொல்காப்பியர் போன்ற பழம் பெரும் முனிவர்களால் தரிசிக்கப்பட்ட சிவன். இன்னும் கூட எண்ணற்ற யோகிகள்,ரிஷிகள், சித்தர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அங்கே சூக்ஷ்ம சரீரத்தில் வாழ்கிறார்கள். ரமணர், சேஷாத்ரி, விசிறி ஸ்வாமிகள் என பேர் பெற்ற ராம் சுரத்குமார் யோகி போன்றோர் வாழ்ந்த மலை. வேதங்களாலும் புராணங்களாலும் சகல க்ஷேத்திரங்களிலும் உயர்ந்த உன்னதமான அக்னி க்ஷேத்ரமாக போற்றி பாடப்படுவது இந்த திருவண்ணாமலை.ஒருவன் மோக்ஷம் பெற சிதம்பரம் போகவேண்டும், அல்லது திருவாரூரில் பிறக்க வேண்டும், இல்லை யென்றால் காசியில் இறக்கவேண்டும், ஆனால் அவன் சைதாப்பேட்டையில் இருந்தாலும் உட்கார்ந்த இடத்திலேயே அவன் திருவண்ணாமலையை நினைத்தாலே மோக்ஷம் பெறலாம் என்று பேசப்படும் முக்திஸ்தலம். இங்கு என்ன விசேஷம் தெரியுமா? திருவண்ணாமலையும் அண்ணாமலையாரும் வேறல்ல ஒன்றே.
சரித்திர பூர்வமாக பார்த்தால் ஆரியர்கள் வரு முன்பே திராவிட கலாச்சாரம் நாடெங்கும் பரவி மொஹஞ்ச தாரோ ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்ட புதை பொருள் ஆராய்விலே அவர்கள் கண்டெடுத்தது சிவ லிங்கம் ! 5000-6000 வருஷங்களுக்கு முன்பே.
தமிழ்ச் சங்ககால நக்கீரரே கூட ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையை பாடியிருக் கிறார்.
இப்போது எவ்வளவோ குறைந்துவிட்டாலும் 25 ஏக்கருக்கு குறைவில்லாமல் பரவி இருக்கிறது. எத்தனையோ ராஜ வம்சங்களின் ஆட்சி காலத்தை அமைதியாக பார்த்து காலம் கடந்தது திருவண்ணாமலை.
புத்தியும் அகங்காரமும் ஒருமுறை தங்களில் யார் உயர்ந்தவர் என்று ப்ரம்மா விஷ்ணுவாக போட்டியிட்ட போது ஆத்மா இருவருக்கும் தானே மேலானது என்று சிவனாக, ஸ்தாணு லிங்கமாக உணர்த்திய புராண கதை தெரிந்திருக்குமே. தெரியாதவர்களுக்கு சில வரிகளில் சுருக்கமாக கதை சொல்கிறேன். எனக்கு கதை சொல்ல பிடிக்குமே.
ப்ரம்மாவுக்கு பஞ்சபூதங்களை, சகல ஜீவராசிகளை , ஸ்ரிஷ்டிப்பவர் என்று பெருமை. நீ படைத்த அனைத் துமே என் ரக்ஷிப்பில் தானே, என் சங்கல்ப மில்லாமல் படைப்புகள் எப்படி வாழமுடியும் என்று பிரம்மாவை அடக்கி நானல்லவோ உன்னை விட உயர்ந்தவன் என சிரித்தார் விஷ்ணு.
பரமசிவன் இதை அறிந்து இருவருக்கும் உண்மையை உணர்த்த ஒரு முடிவெடுத்து அவர்கள் இருவரின் இடையே ஒரு ஒளிக்கம்பம் கண்ணை கூசும் பிரகாச மாக அக்னி ஸ்தம்பமாக தோன்றியது. கூடவே ஒரு அசரீரி ”இந்த அக்னி ஸ்வரூப ஒளி ஸ்தாணுவின் அடியையோ முடியையோ எவரால் காண இயலுமோ அவரே உயர்ந்தவர் என்று ஏற்றுக் கொள்ளலாமே” என்று உபாயம் சொல்லியது.
ப்ரம்மா ஒரு அன்னமாக மேலே பறந்தார். உயர உயர சென்றபோதும் முடி தென்படவில்லை. விஷ்ணு ஒரு வராகமாக பாதாளமெல்லாம் குடைந்து தேடியும் இன்னும் ஆழமாக எங்கோ ஒளி சென்றுகொண்டே இருந்தது. நாற்பது ஆயிரம் வருஷங்களுக்கு மேலே தேடிக்கொண்டே சென்றார்கள். இது ஏதோ சாதாரண அக்னி ஒளி அல்ல, ஸாக்ஷாத் பரமசிவன் என்று புரிந்து கொண்டு கடைசியில் ” என்னால் இயலவில்லை” என்று விஷ்ணு ஒப்புக்கொண்ட போதும் ப்ரம்மா இன்னும் முயன்று பார்த்தார். ஒரு நிலையில் ”சரி நம்மால் முடியவில்லை என்று கீழே அன்னமாக இறங்கிவரும் வழியில் ஒரு தாழம்பூ அவரைப் பார்த்தது.
”நீ எங்கே இங்கே வந்தாய்.?’
”பிரம்ம தேவா, அதை ஏன் கேட்கிறாய். நான் அந்த ஒளிப்பிழம்பின் தலை முடியை பார்த்துவிட்டு இப்போது தான் கீழே வந்து கொண்டிருக்கிறேன்” என்றது தாழம் பூ.
பிரம்மாவுக்கு ஒரு யோஜனை தோன்றியது .”விநாச காலே விபரீத புத்தி ”என்று தெரியாமலா சொல்லி இருக்கிறார்கள்.
‘ஹே தாழம்பூவே, நானும் உன்னோடு இந்த ஒளிப்பி ழம்பின் உச்சாணி முடியை பார்த்ததாக சொல்கிறா யா?” என்றார் ப்ரம்மா.
”ஆஹா, அப்படியே, இதில் எனக்கென்ன கஷ்டமா, நஷ்டமா?” என்றது தாழம்பூ. விஷ்ணுவிடம் சென்று ”உன்னால் அடியைக் காண முடியவில்லை, நான் பார் முடியைக் கண்டுவிட்டேன். இதோ இந்த தாழம்பூவும் என்னோடு பார்த்தது. அதுவே சாக்ஷி. அதையே கேள்” என்கிறார் ப்ரம்மா. அவருக்கு தானே பெரியவன் என்று நிரூபித்ததாக எண்ணம்.
சிவனுக்கு புரிந்துவிட்டது.
”என்ன இது உண்மையா ப்ரம்மா?
”ஆமாம் ஹரா”, என்று தலையை ஆட்டினார் ப்ரம்மா
”பாவம் விஷ்ணுவால் அடியைக் காண முடியவில்லை” என வேறு ப்ரம்மா உசுப்பேத்துகிறார். அதால் என்ன. நீங்கள் இருவருமே மகா சக்தி வாய்ந்தவர்கள், இதில் யார் பெரியவர் யார் சிறியவர். இருந்தாலும் ”ஹே! ப்ரம்மா நீ செய்த தவறு உனக்கு தெரியும். நான் சொல்லவேண்டாம். எனவே உனக்கு ஒரு தண்டனை பாக்கி இருக்கிறது. உண்மையாக பார்க்காமலேயே பார்த்தேன் என்று பொய் உரைத்ததால் இனி உனக்கு பூலோகத் தில் ஆலயங்கள் கிடையாது. பக்தர்கள் உன்னை வழிபட வாய்ப்பில்லை. தாழம்பூவே நீயும் இதற்கு உடந்தை யானதால் இனி உன்னை ஆலயங்க ளில் வழிபாட்டுக்கந்த மலராக ஏற்க மாட்டார்கள் ” என்கிறார்.
அந்த அக்னி ஸ்வரூபம் தான் திருவண்ணாமலை. கார்த்திகை தீபம் சிறப்பாக கொண்டாடப்படும் க்ஷேத்ரம்.
14 கி.மீ தூரமான சுற்றளவு​ள்ள இந்த சித்தர் பூமி எல்லையை வலம் வருவது தான் கிரிவலம். இரவில் நடந்து நான் அனுபவித்த இன்பத்தை எழுத எழுத்துத் திறமை எனக்கில்லை. முடிந்தால் ஒரு புத்தகமே எழுதவும் ஆசை.
இங்கு தான் அருணகிரியாரின் திருப்புகழ் அரங்கேறி யது. ” ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அவர் திருப்புகழில் வரும் ஆதி அண்ணாமலையில் (இப்போது அடி அண்ணாமலை யில்) முருகன் குடி கொண்டிருக்கிறார்.
கிருத யுகத்தில் அக்னியாகவும், திரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், துவாபர யுகத்தில் தங்கமாகவும், கலியுகத்தில் கல்லாகவும் மாறிய மலை அருணாசலம்.. இந்த ஆலயத்தில் பாதாள லிங்கம் தென்மேற்கு மூலையில் இருக்கிறது. அங்கு தான் ரமணர் முதலில் இங்கே குடிபுகுந்தார். இந்த ஆலயத்தில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் தான் அருணகிரி ஸ்வாமிகள் முக்தியடைந்தார்.
கிரிவலம் செல்லும்போது நிறைய லிங்கங்களை தரிசிக்கலாம். இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம்,நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என்று எத்திசை யையும் எண் திசையையும் காக்கும் லிங்கங்களை வழிபடலாம்.
ப்ரம்ம ஞானி சேஷாத்திரி ஸ்வாமிகள் பாதங்கள் இந்த மலை அடிவாரத்தில் பட்டதுமே எங்கோ டாண் டாண் என்று கம்பீரமாக கோவில் மணி எதிரொலித் தது. முதன் முதலாக அருணாசலேஸ்வரரை தரிசித்தார். லிங்கம் மனதை காந்தம் போல் இழுத்தது. ஒரு இடத்தில் நில்லாது புயல் போல் இதுவரை அலைந்த சேஷாத்ரி அடுத்த 40 வருஷங்களுக்கு வேறு எங்கும் செல்லாமல் கடைசி மூச்சு வரை இங்கே ஆணி அடித்தது போல் இருந்தார்.
ஒரு பக்தர் ”ஸ்வாமிகளே, நீங்கள் இந்த ஊரில் வசிப்ப தற்கு ஏதாவது காரணம் உண்டா ” என கேட்டார்.
”இங்கே தான ரெண்டு பேரும் (அண்ணாமலையும் உண்ணாமுலையும்) வா வா என்று கூப்பிட்டு மோக்ஷம் கொடுக்கிறா . வேறே எங்கேயாவது இரு​ந்தா சொல்லு. போறேன்” என பதிலளித்தார்.
”கிருஷ்ணன் ஒருதடவை இங்கே வந்து சுதர்சன சக்ரத் தை கீழே வச்சிட்டு புல்லாங்குழல் எடுத்து வாசிச்ச
போது சிவன் எதிரில் வந்து ஆனந்த கூத்தாடினான். அது உண்மையாகத் தான் இருக்கவேண்டும். அருணா​ சலேஸ்வரர் சந்நிதிக்கு பின் பிராகாரத்தில் போய் வேணுகோபால சுவாமி சந்நிதி​ இருக்கு. போ​ய் தரிசனம் பண்ணு ” என பதில் சொல்வார்.
வெங்கட்ரமணய்யர் மூலம் சேஷாத்ரி திருவண்ணா மலையில் இருப்பதை அறிந்து சித்தப்பா ராமஸ்வாமி ஜோசியரும்​ கல்யாணி சித்தியும் சேஷாத்ரி ஸ்வாமி யின் தம்பி நரசிம்ம ஜோசியரோடு வந்து அவரை​ப் பார்த்தார்கள். ​ ஜடாமுடி, தாடி மீசை, கந்தல் ஆடை, எலும்பான உடம்பு ….. அடையாளம் தெரியவில்லை. ”வா வந்து விடு ”– வழக்கமான கெஞ்சல். அவர்களை போகச் சொல்லிவிட்டார். அவர்கள் போகும்போது அன்னசத்திர மணியக்காரரிடம் ”ஐயா எப்படியாவது என் மகன் சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு தினமும் அன்னம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார்கள். சில காலத்தில் கல்யாணி சித்தியும் காலமானாள் . ராமஸ்வாமி ஜோசியரும் மறைந்தார். அவர்கள் ஈமச்சடங்குகளை நிறைவேற்றி நரசிம்ம ஜோசியரும் பிழைக்க வழி தேடி சென்னை மாநகரம் சென்றார்கள். அவ்வப்போது திருவண்ணா​ மலை வந்து அண்ணா சேஷாத்திரி ஸ்வாமிகளை தூரத்திலிருந்து தரிசனம் செய்வார்……
1890ல் திருவண்ணாமலை எப்படி இருந்தது என்று ​இணைத்துள்ள புகைப்பட​த்தை பாருங்கள். ள்ளேன். ​ ‘ஹே, வெள்ளைக்காரா, உன் காமிராவுக்கு நன்றி அப்பா​, நீ கெட்டவனோ நல்லவனோ, உன் காமிரா ரொம்ப நல்லது. அதற்கு முக்தி நிச்சயம் கிடைத்​து எங்கும் இருள் நீங்கி ஒளிவீசட்டும். அஞ்ஞான​ம், அறியாமை இருள் நீங்கி ஞானஒளி, மதிவொளி வீசட்டும். ​ ‘தமஸோ மாம் ஜ்யோதிர் கமய : இன்று திருவண்ணா
மலை யில் தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
திருவண்ணாமலை கிட்டத்தட்ட 2800 அடி உயரமா னது. இந்த மலையுச்சியில் ஒரு அகண்ட எண்ணெய் கொப்பரை. அதில் தான் திரி போட்டு மஹா தீபம் ஏற்றுகிறார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமை யான ஒரு சம்ப்ரதாயம். குமரன் குடிகொண்ட மலை களில் எல்லாம் தீபம் ஏற்றுவது உண்டு.​ மகாதீபம் ஏற்றும் உரிமை செம்படவர் எனப்படும் மீனவர் இனத்த வருக்கு உரியது. மீனவர் ராஜாவாக இருந்தவன் பர்வதராஜன். அவன் மகள் பார்வதி. மீன் போன்ற அழகிய விழிகளை உடையவள் என்ற அர்த்தம் வாய்ந்த கயல் கண்ணி ​மீனாக்ஷி என்று பெயர் கொண்டவள். திருவிளையாடல் புராணத்தில் பரமேஸ்வரன் மீனவனாக வந்து பார்வதியை மணம் புரியும் கதை வரும். மீனவர்களுக்கு பர்வதர்கள் என்று இதனால் பெயர்.அது காலபோக்கில் மாறி பரதவர், என்று ஆகி விட்டது. அவர்களுக்கு மகாதீபம் ஏற்றும் உரிமை உண்டு. இந்த அகண்ட தீப எண்ணெய் கொப்பரை 1668ம் வருஷம் , வேங்கடபதி என்பவர் செய்தது. காலப்போக்கில் சேதமடைந்து வடிவம் மாறி 1990 ல் இப்போதுள்ள கொப்பரை உருவானது.92 கிலோ செம்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களால் ஆனது. . கொப்ப ரையில் அடிப்பாகம் 27அங்குல விட்டமும் மேற்புறம் 37 அங்குல விட்டமும் உடையது. 57 அங்குலம் உயரம்.
இன்று 26.11. 2023 கார்த்திகை நட்சத்திரம் ஆரம்பம் . முடிவு நேரம் :நவம்பர் 27, 01:35 PM. கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப் படுகிறது. தீபாவளி அன்று துவங்கும். ஒரு மாதகாலம் நீடிக்கும்.
தேவர் குறை நீக்க சிவபெருமான் நெற்றிக்கண் ணி லிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டு சரவணப்
பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக கார்த் திகைப் பெண்களிடம் வளர்கிறது.​ ஆகவே​ கார்த்திகை தீபம் முருகனுக்கும் உகந்த ஒரு பெருநாள்.
தமிழகத்தில் கார்த்திகை தீபம் கார்த்திகை விளக்கு என்ற பெயரிலும், மலையாள தேசத்தில் த்ரிகார்த்திகை என்றும் கொண்டாடப்படுகிறது.​ பரணி தீபம், விஷ்ணு தீபம் என்ற பெயர்களும் உண்டு.
‘அகல்’ ​ விளக்குகள் அலங்காரமாக வீடுகளில் ஒளிவீசும் நாள். கூப்பிய கைகளுடன் கூடிய பெண் வடிவ லக்ஷ்மி தீபம், பாவை விளக்கு.ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு கஜலட்சுமி விளக்கு – யானை விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு தீப ஒளி வீசும்.​ அக்கா தங்கைகள் சகோதரர்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யும் வழக்கம் உண்டு. ஒரு ஆனந்தமான பழக்கம்.
ஆந்திரப் பிரதேசத்தில், கார்த்திகை பௌர்ணமி அன்று பெரிய 365 திரிகள் கொண்ட அகண்ட தீபத்தை ஏற்றி, வணங்கி லோக க்ஷேமத்தை வேண்டிக்கொள்வார்கள்.
திருவண்ணாமலை தீபம் பல கிலோமீட்டர்கள் தூரம் ஒளிவீசி தெரியும்.​ நம் ஒவ்வொருவர் உள்ளேயுமொரு தீபம் மெல்லிசாக எரிந்து ஒளிவீசுகிறது. மனசு அசை வில் லாமல் இருந்தால் அந்த தீப ஒளியை காண முடி யும். ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இருந்தே தீபத்தை தரிசிப்பார் தியானிப்பார்.
​கண்ணீர் ஆறாக பெருகும். ஆனந்த பாஷ்பம். ரமணரின் அக்ஷரமண மாலா ஸ்துதியில் அருணாசலா என்றுதான் ஒவ்வொரு வரியும் முடியும். ஹிந்துக்களின் மனதில் பக்தி ஞான ஒளியாக பிரகாசிக்க ஒரு அடை
யாள மாக விளங்குகிறது மஹா தீபம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;