
அதிவீர ராம பாண்டியன் – நங்கநல்லூர் J K SIVAN
வெற்றிவேற்கை (நறுந்தொகை )
தமிழர்களுக்கு தமிழ் தெரியாத நிலையை உண்டாக்கியது நமது கல்வி திட்டம் அல்ல. நமது பண மோகம். ஆங்கிலத்தில் தான் கல்வி, ஆங்கிலம் தான் படிக்கவேண்டும், பேசவேண்டும், எழுதவேண்டும் என்று குழந்திகளை தமிழ் தெரியாமல் வளர்த்து ஆளாக்கி, அமெரிக்க அனுப்பி, அவர்களை முற்றிலும் இழக்கும் சமுதாயம் தனிமையில் வயதான காலத்தில் ஏங்கி என்ன லாபம்? நாங்கள் படித்த காலத்தில் பள்ளியில் முதலில் கற்றது ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை ஆகியவை. இன்னும் மறக்கவில்லை. வெற்றி வேற்கை என்கிற பெயர் ஞாபகம் இருக்கிறதா?
ஆயிரமாயிரம் வருஷங்களாக தஞ்சாவூர் ஜில்லா எல்லையில் கடலோ ரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர் பெயர் அதிராம்பட்டினம். அதன் உண்மை பெயர் அதை ஆண்ட ஒரு ராஜா தான் அதிவீர ராம பாண்டியன் பெயர் கொண்ட அதிவீரராம பட்டினம். ராஜா சிறந்த கல்விமான். பிரபலமான எழுத்தாளனாக இருக்கிறான். கொஞ்சம் பலான விஷயங்கள் பற்றியும் ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். ஆகவே கெட்ட சமாசாரம் வேறே இன்னொரு அ .வீ.ரா. பாண்டிய னுடையதாக போகட்டுமே.
நான் சொல்கிற ராஜா முதலாம் அதிவீர ராமன் எனும் பிற்கால பாண்டிய மன்னன். (1564-1606) என செப்பேடுகள் நிறைய சொல்கிறது. இலக்கியப் பணியோடு கோவில் திருப்பணிகளும் செய்தவன். தென்காசியில் உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது அழகான கோவில் சென்று பார்த்தேன். ஏதோ ஒரு பாக்கியம்பாடல் : ஸமஸ்க்ரிதம் அறிந்தவன். ஹர்ஷன் எழுதிய நைஷதம் தமிழில் இந்த ராஜா இயற்றிய நைடதம் ஆகும்.
பாண்டியனின் வெற்றி வேற்கை எனும் நறுந்தொகையில் சில அளிக்கிறேன்;
1. ”எழுத்தறி வித்தவன் இறைவ னாகும். ”நமக்கு கல்வி கற்பிக்கும் வாத்யார், கையைப் பிடித்து முதன் முதலில் ”அ, ஆ” எழுத சொல்லிக்கொடுத்த டீச்சர் தான் முதல் தெய்வம் ”
2. ”கல்விக் கழகு கசடற மொழிதல்” – ஏதோ கற்றுக்கொண்டோம் என்று தப்பும் தவறுமாக எல்லாம் தெரிந்தமாதிரி பேசுவது கல்விக்கு நாம் கொடுக்கும் அவமரியாதை.
3. ”செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்”– ஒரு தனவான், பணக்காரன், பிரபு, தான் மட்டும் தனது மனைவி மக்களோடு சுகமாக வாழ்வதைத் தவிர்த்து தனது சுற்றத்தார் அனைவருக்கும் உதவுவதே அவனுக்கு அழகு, பெருமை .
4. ”வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்” – வேதத்தைக் கற்பிப்பதை தொழிலாக கொண்டு வாழும் வேதியர்கள் தாங்கள் முதலில் வேதம் சொல்வதை பின்பற்றி, அது சொல்வதை கடைப்பிடித்து உதாரணர்களாக வாழ வேண்டும்”
5. ”மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை” ராஜாவாக இருப்பவன் நீதி நெறி தர்மம் நியாயம் தவறாது முறையோடு ஆட்சி அரசு செய்வதே அரசர்க்கு அழகு.
6. ”வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்” தொட்டதெல்லாம் பொன் என்ற பெயர் எடுக்கும்படி தேர்ந்தெடுத்து பொருள்களில் வியாபாரம் செய்து குன்றாத குறையாத செல்வத்தை மேலும் பெருகவைக்கும் நேர்மை, நியாய திறன் கொண்டவர்களாக வணிகர்கள் இருக்க வேண்டும்”
7. ”உழவர்க் கழகு ஏர் உழுதூண் விரும்பல்” தக்க காலத்தை அனுசரித்து, வானிலை அறிந்து, மண்ணை திருத்தி நன்றாக பயிர் விளைந்து பல போகங்கள் சாகுபடி செய்யும்படி விவசாயம் செய்து உண்பதே உழவர்கள் விவசாயிகளுக்கு அழகு, பெருமை.
8 ”மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்” ஒரு ராஜாவுக்கு மந்திரியாக இருப்பவன் நன்றாக ஆலோசித்து, கவனமாக கணித்து, வரப்போவதனைத்தையும் முன்கூட்டியே ஆராய்ந்து தக்க நேரத்தில் ராஜாவுக்கு எடுத்துரைப்பவன் தான் சித்தாந்த மந்திரி. அது தான் அவனுக்கு பெருமை”
9. ”தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை” அதே போல ஒரு சேனைத் தளபதியானவன் நெஞ்சிலே துளியும் பயம் இல்லாத, தைர்யவானாக, வீரனாக தன்னுடைய வீரர்களை அதேபோல் பழக்கி சேனையைப் பலப்படுத்துவது தான் அவனுக்கு பெருமை, அழகு.
10. ”உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்”. மற்றவர்களுக்கு விருந்தளிப்பவர்கள் தமது விருந்தினரோடு, மகிழ்ந்து சரி சமமாக, சம பந்தியில் உண்பது தான் அவர்களுக்கு அழகு. பெருமை.
இது ஒரு சாம்பிள். இன்னும் நிறைய இருக்கிறது. அப்பப்போ சொல்கிறேன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



