கடலும்  மனமும்

 
கடலும்  மனமும்  –    நங்கநல்லூர்  ஜே.கே. சிவன் 
 
​ஐயாமாரே, அம்மாமாரே, உங்களுக்கு தெரியாத  எதையும் நான் என் பதிவுகளில் அளிக்க எனக்கு சக்தியில்லை. ஏன் என்றால் எனக்கு எதுவுமே  தெரியாதே . அங்கும் இங்கும் மூக்கை நுழைத்து சில விஷயங்களை பாதிப்  பாதி கேட்டு   அதை  அரை வேக்காடாக அளிக்கமட்டுமே என்னால் முடிகிறது. இன்னும் பக்குவம் அடையவில்லை, எப்போதோ அது?  எந்த ஜென்மத்திலோ? அதுவும் தெரியவில்லை.
​
இன்று  திடீரென்று மனித மனம், சமுத்திரம்  ரெண்டையும் ஒப்பிட ஒரு எண்ணம் தோன்றியது. சுனாமி ரெண்டிலும் வரும். கடலில் எப்போதாவது வந்தாலும் மனதில் அடிக்கடி வருகிறது என்று தெரிகிறது.
 
​மனித மனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அப்பப்பா ,எத்தனை எத்தனை எண்ணங்கள். முடிவில்லாத அலைகளாக மேலே மேலே ஆர்ப்பரிப்பவை. திடீரென்று ஒவ்வொன்றும் எங்கிருந்தோ பொங்கியெழும்பி  ஆளுயர அலையில் ஆழ்த்தி, மூழ்கடித்து திக்கு முக்காட வைக்கிறது.  எரிமலை போல் வெடித்து சிதறுகிறது. இவ்வளவு, அதிர்ச்சிகளை, அதிர்வுகளையும் தாங்கிக்கொண்டு தான் ஒவ்வொரு மனிதனும் நடமாடுகிறான். ஒருவன் அனுபவம் போல் மற்றவன் அனுபவம் போல் இல்லை.  
 
​அமைதியாக அப்படி உட்கார்ந்திருப்பவனை  ”எரிமலையை விழுங்கிவிட்டு உட்கார்ந்திருப்பவன் ” என்கிறோம்.  எரிமலை என்று ஏன் சொல்கிறோம் என்றால் அப்போது எல்லாம் நமக்கு சுனாமியை தெரியாதே.  யுக ஆரம்பத்தில்  நிகழும் ப்ரளயம்  புராணத்தில் தான் உள்ளது. இனி  ‘சுனாமியை  சுமப்பவன்”  என்று வேண்டுமானால் சொல்லலாம்.
​மனித மன சுனாமியும் கடல் சுனாமியும்  ஒன்றே தான். 
​மனம் உணர்ச்சிகளின் ஆழமான அடுக்குகளைக் கொண்டுள்ளது.​   சுனாமி;நீரின் ஆழமான அடுக்குகளைக் கொண்டுள்ளது.​  மனதில்  மேற்பரப்​பு  அமைதியாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் கொந்தளிப்புகள் ​ஜாஸ்தி.   சுனாமி;  கடலின் மேற்பரப்பு அமைதியாக இருந்தாலும் அதன் ஆழத்தில் பெரும் ஆற்றல்​ ஒளிந்து கொண்டிருக்கும்.   மனதில் திடீரென  ஏற்படும் உணர்ச்சித் தாக்கங்கள் வெடித்துக் கிளம்பலாம்.
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் திடீரெனப் பேரலைகளை ​ சுனாமியாக  கட்டுப்படுத்த முடியாதபடி  உருவாக்குகிற​து. மன அதிர்ச்சிகள் சிந்திக்கும் திறனை நிலைகுலையச் செய்யலாம்.​  கடலில் பேரலைகள் நிலப்பரப்பை மூழ்கடித்து நிலை​ குலையச் செய்யலாம்.​  ரெண்டுமே பரந்த, வலிமையான, கணிக்கக் கடினமான ​அதிர்வுகள். மனிதனின் உணர்ச்சிகரமான வாழ்க்கையிலும் சுனாமி போன்ற பேரலைகள் ஏற்படலாம்.

தாங்கிக்கொள்ள முடியாத துயரம்​,திடீரென வெடித்துக் கிளம்பும் கோபம்​, வேகமாகப் பரவும் பயம்.
​எதிர்பாராத  அளவிலா மகிழ்ச்சி​ எல்லாமே சுனாமி தான்.

கடல் அலைக​ள்  எப்படி கடற்கரையின் நில அமைப்பை மாற்றியமை​கிறதோ அதுபோல் மனிதனின் ஆளுமையையும் (Personality) ​ மனதில் எழும் எண்ண சுனாமிகள் மாற்றியமைக்கி​றது.  
பேரழிவுக்குப் பிறகு கடற்கரைகள் மெதுவாக மீண்டும் உருவாவதைப் போல, மனித மனமும் மீண்டெழுகிறது.​  புதிய நரம்பியல் இணைப்புப் பாதைகளை உருவாக்குகிறது.பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக்கொள்கிறது.​ காயங்களிலிருந்து குணமடையும் செயல்முறையின் மூலம் மன​ வலிமை​ யைப் பெறுகிறது.​ அழிவிலும் துன்பத்திலும் கூட வாழ்க்கைக்கான புதிய அர்த்தத்தைக் கண்டறிகிறது.
மீண்டெழும் ஆற்றல் (Resilience) என்பது மனித மனத்தின் இயற்கையான மறுகட்டமைப்புச் செயல்​ முறையாகும்.

மனித மனம் என்பது புலனுணர்வு, நினைவாற்றல், உணர்ச்சிகள், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான ஆளுமை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரபஞ்சமாகும்.

பூமியின் நில அமைப்பையே மாற்றியமைக்கும் புயல் நிறைந்த சுனாமியைப் போலவே, மனித மனமும் ஆழமானது, மர்மமானது; சில நேரங்களில் பெரும் கொந்தளிப்புகளையும் அழிவுத் தன்மையையும் கொண்டது.​  சொல்ல முடியாத ஆற்றல் கொண்ட சக்திகள்​ கொண்டவை என்பதால்  அவற்றால் அழிவையும், மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் ​ உருவாக்க முடியும்.  கெட்டிக்காரன் இந்த ரெண்டையும் புரிந்து கொள்வான். அவன் தான் ஞானி.
 
சுனாமி​  கடலைத் தாண்டி கரையை விழுங்கி அமைப்பையும் அளவையும்  மாற்றி விடும் இயற்கை சக்தி.
​மனமும் அப்படித்தான்  உணர்ச்சிகளை பொங்கவிட்டு  மனிதனின்  சமநிலையை குழைத்து அவனை உருக்குலைத்து பாழாக்கிவிடும் சக்தி கொண்டது. ஒரே  ஒரு  எண்ணம் போதும், வேதனை,  தடுமாற்றம் தர.
உணர்ச்சிகளின் அதிர்வலைகள் உறவுக​ளை  தகர்க்கும் .
 
இரண்டுமே பாதிப்புகளுக்கு உள்ளாகலாம்; அதேபோல் மீண்டும் குணமடைந்து புதுப்பித்துக்கொள்ளும் 
 
புயலுக்குப் பிந்தைய அமைதி​ கடலில் விளைவது (Calm After the Storm)​ போல, உணர்ச்சிப் புயல்களுக்குப் பிறகு மனத் தெளிவும் மன வளர்ச்சியும் ஏற்பட​  வாய்ப்பு உள்ளது. கடினமான அனுபவங்கள் வாழ்க்கை பற்றிய ஆழமான ஞானத்தை உருவாக்கக்கூடும்.​ உணர்ச்சியின் உச்சிக்கு போனவர்கள்  உருமாறி  இருக்கிறார்கள். அடியோடு ஆளை மாற்றி விடும். அருணகிரி பட்டினத்தார்  பர்த்ருஹரி  உதாரணங்களே  போதும்.
 
​கடல் மனம் ரெண்டிலுமே குழப்பத்திற்குப் பிறகு மீண்டும் அமைதி​ திரும்பும்.   கடல், மனம் ரெண்டின்
 தாக்கத்தில்  இருந்து  மீள்வதற்கு  நேரம் காலம், வெளியிலிருந்து உதவி தேவை. கடலில் சுனாமியைப் பொறுத்தவரை இயற்கை மீண்டும்  சாதாரண நிலை பெற உதவுகிறது.  மனித மன எழுச்சி, உணர்ச்சியின் வலிமையை கட்டுப்படுத்த  நல்ல குருமார்கள் உதவுகிறார்கள். கடவுள் பக்தி, தியானம், பெரிதும் கை கொடுக்கும். 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;