வைஷ்வானர ஆத்மா . – 2.

வாழ்க்கையும் சத்தியமும்.. –  நங்கநல்லூர்   ஜே. கே. சிவன்

 
வைஷ்வானர ஆத்மா . – 2.
 
முதல் பதிவு ஞாபகம் இருக்காது என்று எனக்கு நன்றாக தெரியும். 
இன்று  ”வைஷ்வானர” ஆத்மா  பற்றி சொல்கிறேன்.  பேரைக் கேட்கும்போதே  எழுந்து போகவேண்டாம். நீங்கள் போகும்போதே உங்களுக்குள் இருக்கும் அதுவும் உங்களோடு போகும் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமே.? என்ன சொல்கிறான் இந்த சிவன்? வழக்கம்போல புரியாத எதையோ எங்கேயோ படித்துவிட்டு உளறுவான்… என்று நினைத்தாலும் இந்த குப்பையில் நல் முத்து மணி ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்களேன். எனக்கு காசு கொடுக்கவேண்டாம்.
விஸ்வம்  ; இந்த உலகம், பிரபஞ்சம்.  நரன் ; மனிதன். உயிருள்ள ஜீவன். வைஷ்வானரன்.இந்த உலகம் பூரா உள்ள ஜீவன்கள் அனைத்திலும் உள்ள பரமாத்மா. 

வாழ்க்கையை  ஏன்  யாராலும்  ஒரே மாதிரியாக  விளக்க முடியவில்லை? தலை கீழாக நின்றாலும்  ஒருவர் போல் மற்றவர் சொல்வதில்லையே ஏன்? ஒரே காரணம் தான். ஒருவர் மற்றவர் போல் கிடையாது.. வாழ்க்கை ஒஒவ்வொருவருக்கும் வேறே வேறே. இது ப்ரம்ம ரஹஸ்யம். எப்படி ஒருவர் போல் மற்றவர் இல்லையோ அது போலவே  அவரவர் வாழ்க்கையும்.

பொதுவாக சில  ஒற்றுமை வேற்றுமைகள்  இருப்பதை பல வேத நூல்கள், உபநிஷத்த்துக்கள் விளக்கி இருக்கின்றன . இதோ உதாரணமாக  சாந்தோக்ய உபநிஷத் என்ன சொல்கிறது பாருங்கள்.

प्राणो वा आशाया भूयान्। यथा वा अरा नाभौ समर्पिताः, एवमस्मिन् प्राणे सर्वं समर्पितम्।  प्राणः प्राणेन याति।  प्राणः प्राणं ददाति।  प्राणाय ददाति।  प्राणो ह पिता।
प्राणो माता।  प्राणो भ्राता।  प्राणः स्वसा।  प्राण आचार्यः।  प्राणो ब्राह्मणः.

Prano vava asaya bhuyan, yatha va ara nabhau samarpitah, evam asmin prane sarvam samarpitam, pranah pranena yati, pranah pranam dadati, pranaya dadati, prano ha pita, prano mata, prano bhrata, pranah svasa, prana acaryah, prano brahmanah.

வாழ்க்கை என்பது நம்மைப் போலவே. எப்போது என்ன சொல்வோம், செய்வோம் என்பது நமக்கே தெரியாது. இது தான் வாழ்க்கை.  எல்லையற்ற மனோபாவம். பரமாத்மாவோடு ஜீவாத்மா சேரும்போது,யத்தனிக்கும்போது ஏற்படும் மாறுதல்கள். நிலையானதாக இருப்பதில்லை.  வைராக்கியம் இல்லாத முயற்சிகள். லக்ஷியம், நோக்கம், குறிக்கோள், இல்லாத போக்கு.

‘இது தான் என் அப்பா, அம்மா, சித்தி, தங்கை, அண்ணா, தம்பி….. ஏதோ ஒரு உருவத்தை பார்த்து இப்படி சொல்கிறோமே தவிர அந்த உருவம் அந்த பெயர் கொண்ட அடையாளம், உண்மையில் அவர்களோ, அல்லது அப்படி காண்கிற நாமோ அல்ல. இந்த உறவு உடலைப் பொறுத்ததா? இல்லை,  உடல் தான்  நாமா?  இல்லவே இல்லை.  அனைத்திலும்  உள்ளடங்கிய கண்ணுக்குத் தெரியாத ஆத்மா தான் நாம்..அழிவற்றது.அது….என்கிறது உபநிஷத்.

திருநாவுக்கரசர்  சொல்லும் உறவு இதெல்லாம்  பற்றி இல்லை, அந்த அருவமான உருவத்தை தான்.. பரமேஸ்வரனைத் தான்..
”அப்பன் நீ அம்மை நீ,  ஐயனும் நீ.அன்புடைய மாமனும் மாமியும் நீ,ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ,ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ,இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

2. स यदि पितरं वा मातरं वा भ्रातरं वा स्वसरं वा आचार्यं वा ब्राह्मणं वा किञ्चिद् भ्रशम् इव प्रत्याह,धिक् त्वा इति एव एनम् आहुः।पितृहा वै त्वम् असि।मातृहा वै त्वम् असि।
भ्रातृहा वै त्वम् असि।स्वसृहा वै त्वम् असि।आचार्यहा वै त्वम् असि।ब्राह्मणहा वै त्वम् असि॥

Sa yadi pitaram va mataram va bhrataram va svasaram va acaryam va brahmanam va kimcid-bhrsam iva pratyaha, dhik tvastvity-evainam ahuh, pitrha vai tvam asi, matraha vai tvam asi, bhratrha vai tvam asi, svasrha vai tvam asi, acaryaha vai tvam asi, brahmanaha vai tvam asiti.

வாழ்க்கை  என்று எதை நாம்  நினைக்கிறோமோ, அதைவிட அது உயர்ந்தது. அப்பாவோ அம்மாவோ யாரையோ ஒருவன் தூஷித்து, அவமரியாதையாக பேசும்போது  ”சே  என்ன முட்டாள் மனிதன் இவன், பெற்றவர்களையே, கடவுளுக்கு சமமானவர்களையே,  துச்சமாக பேசுகிறான்”  என்று கோபிக்கிறோம், அருவருப்பு காட்டுகிறோம்….இதிலிருந்தே  நாம் சொல்லும் அந்த உயர்ந்த உறவு இந்த  உடம்புகளை  அல்ல…. அதையும்  தாண்டி… என்று புரியுமே.  அதற்காகத்தான் ஒவ்வொரு உயிரையும் பகவானின் அம்சம் என்று மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்.  மாதா, பிதா, குரு  அப்புறம் அவர்களுள் உள்ள தெய்வம்..

இறந்தவர்கள் எங்கே போய்விட்டார்கள்?  எங்கேயும் போகவில்லை, எங்கே இருந்தார்களோ அங்கேயே தான் இருக்கிறார்கள், நடுவே சில காலம் ஏதோ ஒரு உருவம் பெயர் அவர்களுக்கு கிடைத்து அந்த அடையாளத்தில் நாம் அவர்களை சந்தித்தோம்… அவ்வளவு தான். கோயிலில் தெய்வங்களுக்கும்  எத்தனையோ உருவங்கள், எத்தனையோ பெயர்கள்…. எல்லாம் ஒன்றே தானே.

अथ यदि अप्येनम् उत्क्रान्तप्राणं शूलेन समासं व्यतिसन्दहेत्,  न एव एनं ब्रूयुः पितृहा इति,  न मातृहा इति,  न भ्रातृहा इति,  न स्वसृहा इति,  न आचार्यहा इति,
न ब्राह्मणहा इति॥

Atha yady-apy-enan utkranta-pranan sulena samasam vyatisandahet naivainam bruyuh pitrhasiti, na matrhasiti, na bhratrhasiti, na svasrhasiti, na acaryahcasiti, na brahmanahasiti.

உலகில் இயங்கும் எல்லாமே  ப்ராணன் ஒன்று தான்..கண் காணாத ஜீவ சக்தி.   அடையாளத்துக்காக அதற்கு ஒரு உருவம், ஒரு பெயர். ‘ பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்’ ஒரு பரம சக்தியின் அநித்யமான, தற்காலிக,  உருவ வெளிப்பாடு…. ஆகவே தான் எல்லாவற்றிலும் பகவானைக்  காண்பவன் ஞானி. அத்வைதி.

प्राणो ह्येवैतानि सर्वाणि भवति। स वा एष एवं पश्यन् एवं मन्वानः एवं विजानन् अतिवादी भवति।तं चेत् ब्रूयुर् अतिवादी असि इति।अतिवादी अस्मि इति ब्रूयात्।
नापह्नुवीत॥
Prano hy-evaitani sarvani bhavati, sa va esa evam pasyan, evam manvanah, evam vijanan atvadi bhavati, tam ced bruyuh ativadyasiti, ativady-asmiti bruyat, napahnuvita.

வாழ்க்கை  என்பது நமது சிற்றறிவுக்கு எட்டாத பேரறிவு. ஞானம்.  ப்ரம்ம ஞானிகள் இதை உணர்ந்தவர்கள். அவர்கள் பேசுவது நமக்கு பெரியாது. சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்றவர்களை பைத்தியம் என்போம். சகலத்தையும் விளக்கும் மொழி மௌனம்.

 
சில கண் பார்வை இல்லாத நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பயணம் போனார்கள்.  வழியில் ஒரு யானைப்பாகன் அவர்களை பார்த்தான்.  உங்களுக்கு  என் யானையை காட்டுகிறேன்.  நான் அருகில் இருப்பதால் அது ஒன்றும் செய்யாது என்றான். தைரியமாக  கண் பார்வை இல்லாதவர்கள் அந்த  யானையைத் தொட்டுப் பார்த்தார்கள்.
 
ஒருவன்  யானையின் தும்பிக்கையைத் தொட்டுவிட்டு,”அட  இது  தன  யானையா? ஏதோ ஒரு பெரிய  ஓரு குழாய்  அது.”  என்றார். யானையின் கால்களைத் தொட்டவன் , ”இல்லை தம்பி . குழாய் எல்லாம் ஒண்ணுமில்லை அது பெரிய தூண்”
யானைக் காதை தொட்டவனுக்கு அவர்கள் சொல்வது புரியவில்லை.  ”அப்படியா  அது ஏதோ ஒரு  பெரிய விசிறி மாதிரி இல்லை  இருக்கு” என்றான்.  தான் அறிந்த  ஒரு பகுதி தான் முழுவதும் என்ற நினைப்பை வெளிப்படுத்தும் கதை போல தான் ரிஷிகள் கண்ட  வைஷ்வானர ஆத்மா.
ராஜா  அவர்களை பார்த்து  ”ரிஷிகளே  நீங்கள் பரம்பொருள் என்று தியானிப்பது  உண்மையில் அதன் ஒரு பகுதி மட்டுமே.
நீங்கள் முழுமையானது என எண்ணுவது உண்மையில் ஒரு பாகம்.”வெளிப்புறமாக ஒருவரைப் பார்த்து அவருடைய ஆன்மிக ஞானத்தின் முழுமையை அறிந்துகொள்ள முடியாது.   நீங்கள் தனித்தனியாகச் செய்யும் தியானங்களால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், ஒரே முழுமையான தியானத்தின் மூலம் கிடைக்க முடியும்.
அந்தத் தியானம்தான் வைஷ்வாநர ஆத்ம தியானம்.

பூமியிலிருந்து சொர்க்கம் வரையிலும், சொர்க்கத்திலிருந்து பூமி வரையிலும், மிக உயர்ந்த நிலையிலிருந்து மிகத் தாழ்ந்த நிலை வரையிலும் உள்ள அனைத்தையும் ஒரே முழுமையாகக் காண வேண்டும்.அதன் எந்தப் பகுதியும் விடுபடக்கூடாது.
முழுப் பிரபஞ்சத்தையும் ஒரே முழுமையான வடிவமாகக் காண்பதே உண்மையான தியானம்.
பிரபஞ்சத்தை உங்களிடமிருந்து வேறுபட்ட ஒன்றாகப் பார்க்காமல், உங்கள் சொந்த ஆத்மாவாகவே உணர வேண்டும்.
வைஷ்வாநர ஆத்மா அனைத்திலும் நிறைந்திருக்கும் பரம்பொருள்.

 
நாம் சாப்பிடுவது, ஜலம்  பருகுவது, ஸ்வாசிப்பது, காரியங்கள் செய்வது இதெல்லாம் உடல் செயல் மட்டுமில்லை. இவற்றுக்கும் இந்த பிரபஞ்ச இயக்கத்துக்கும்  நெருங்கிய ஆழமான தொடர்பு உள்ளது.  எல்லாமே  எல்லோருமே  பிரபஞ்ச உண்மையின் வெளிப்பாடு தான். 
 
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;