
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN
சிதம்பர அதிசயமா ரகசியமா?
கற்றுக்கொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ரொம்ப வித்யாசம் இல்லை. தெரிந்து கொண்டதெல்லாம் மறந்து கூட போகும். கற்றுக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி. நமக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியவில்லை. எண்ணற்ற மஹான்கள் சொல்வதிலிருந்தாவது கற்றுக்கொள்வோம். மற்றவர்க்கும் எடுத்துச் சொல்வோம். அது தான் கல்விக்கு அழகு.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள், முனீஸ்வரர்கள், தம்மை த்யானத்தில் யோகத்தில் ஸ்புடம் போட்டு உடல் வருத்தி அறிந்த உண்மைகளை, அவர்கள் அறிந்து, அனுபவித்து, நமக்கு அறிவித்ததை இப்போது, பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.(Centre Point of World’s Magnetic Equator).
எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் ஒரு தம்பிடி காசு செலவில்லாமல் மரத்தடியிலோ கோவில் ப்ராகாரத்திலோ, தனிமையாக இயற்கையாக கண்மூடி அமர்ந்து ரிஷிகள் த்யானத்தில் ஞானத்தில் கண்டுபிடித்த உண்மையை லக்ஷியம் பண்ணுவதில்லை. நாம் எப்போதுமே நம்மிடம் இருக்கும் அற்புத விஷயங்களை அறியாத ஒரு கூட்டம். இங்கிருந்து கெட்டிக்காரர்கள் அவற்றை கவர்ந்து கொண்டு போய் நமக்கு இங்கிலீஷ்ல சொன்னால் அவர்களை வணங்கி கை தட்டி வரவேற்பவர்கள்.
யோகிகள், மஹான்கள்,ரிஷிகள் கண்டுபிடித்து சொன்ன கணக்கற்ற ஞானமுத்துக்களில் ஒன்று தான் இந்த சிதம்பர ரகசியம், அற்புதம், அதிசயம்.
அணுத் துகள் எப்போதுமே அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய யோகிகளின் சாதனை எப்பேற்பட்டது.? அதை இன்னும் நம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லையே.
நமது முன்னோர்கள் எதையுமே ஒரு தெளிவான சிந்தனையோடு தான் செய்பவர்கள். அவர்கள் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான கற்கோவில்கள் சில அற்புதங்களை உள்ளடக்கியவை அல்லவா?
(1) சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World’s Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது. இது தற்போதைய சயன்ஸ் சாஸ்திரங்கள் வியக்கும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(7)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.
(8) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(9) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

