LEAD KINDLY LIGHT J K SIVAN

வழி காட்டு,  ஒளி காட்டு.  நங்கநல்லூர்  J K  SIVAN

1833ல்   கார்டினல்  ஜான்  ஹென்றி நியூமன்  என்ற இளம் பாதிரியார்  ஒரு பாட்டை எழுதி  அதை உலகத்தில் பல பேர் பாடும்  ஸ்தோத்ர பாடலாகி  பகவானை வேண்டினார்கள்.  காந்திக்கு பிடித்த அந்த பாடல் இன்றும் பல இடங்களில் பாடப்படுறது.  

 இத்தாலிக்கு சென்ற  நியூமனுக்கு  பாலெர்மோவில்  திடீர்  ஜுரம்.   உடல் நலம் குன்றி  படுக்கையில்  எழுந்து  உட்கார கூட முடியவில்லை.  மெதுவாக சுதாரித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.   அழுகை வந்தது.   ஒரு  பணிப்பெண் அவருக்கு உதவியவள்   ”ஏன்  ஐயா அழுகிறீர்கள்?” என  கேட்டாள் .

” நான் எப்படி அம்மா  சொல்வேன் உனக்கு.    இங்கிலாந்தில் ஒரு முக்கிய வேலை .இங்கே  வந்த இடத்தில் இப்படி நோய்வாய் பட்டு தவிக்கிறேன்.  எப்படியாவது இங்கிலாந்தில்  என் வீடு  போய்ச்சேரவேண்டும்.  இங்கிருந்து  இங்கிலாந்து செல்லும்  அடுத்த கப்பல்  இன்னும் 3 வாரங்கள் கழித்து தான் வருமாம்.  என்ன செய்வேன்.  இங்கே  அருகே  இருக்கும் ஒரு  தேவாலயம் சென்று  நல்லபடியாக ஊர் போய்ச்சேர   தொழுகிறேன். வேண்டுகிறேன்.  கொஞ்சம்   மன  நிம்மதி.  தேவாலயத்தில் நடக்கும்  மற்ற  எந்த  பிரசாங்கத்தையும் நான் கேட்பதில்லை. போவேன் வேண்டுவேன் வருவேன். அவ்வளவுதான்”
நாட்கள் ஓடியது.
ஒரு நாள் ஒரு ஆரஞ்சு நிற சிறிய  கப்பல்  வந்தது. நியூமன் அதில் இடம்பிடித்து  பிரான்ஸ்  நாட்டில்  மார்ஸெல்ஸ் நகரம்  போய் சேர்ந்தார்.   போகும் வழியில்  சார்டினியாவுக்கும்   கார்சிகாவுக்கும்  இடையே   போனி பாஸியோ  STRAITS OF BONIFACIO  எனும் ஜல மார்க்கத்தில்   கப்பல் பிரான்ஸ் நோக்கி போகும்போது  நியூமன்ஒரு பாட்டு எழுதினார்

”Lead, Kindly Light, amidst the  encircling gloom,Lead Thou me on!
The night is dark, and I am far from home,Lead Thou me on!
Keep Thou my feet; I do not ask to seeThe distant scene; one step enough for me.
I was not ever thus, nor prayed that Thou  Shouldst lead me on;
I loved to choose and see my path; but now  Lead Thou me on!
I loved the garish day, and,  in spite of fears,Pride ruled my will. Remember not past years!
So long Thy power hath blest me, sure it still  Will lead me on.
O’er moor and fen, o’er crag and torrent, till The night is gone,
And with the morn those angel faces smile,  Which I have loved long since, and lost awhile!
Meantime, along the narrow rugged path,Thyself hast trod,Lead, Saviour, lead me home in childlike faith,Home to my God.To rest forever after earthly strifeIn the calm light of everlasting life.
இங்கிலாந்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிறைய பேர்  அடியில்  புதையுண்டு, பிராணவாயு இன்றி  இறந்தனர். எப்படியோ தெய்வாதீனமாக ஒரு சிலர் மட்டும்  மீட்பு பணியாளர்கள் வந்து காப்பாற்றும் வரை  உயிர் வாழ்ந்தனர். அப்போது அவர்கள்  எங்கோ ஒரு மூலையில் பாறைகளுக்கு இடையில்   அமர்ந்து இந்த பாடலை மனமுருகி பாடி இறைவனை வேண்டினார்கள். மீட்கப்பட்டார்கள்.

டிட்டானிக்  எனும்  புது   கப்பல் முதல் பிரயாணத்தில்  அமெரிக்காவை நோக்கி செல்லும்போது மூழ்கியது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிய சமயம் சிலர் இந்த பாடலை கடைசியாக பாடியவாறு இறந்தனர். இன்னும் எத்தனை எத்தனை சந்தர்ப்பங்களில் நமக்கு தெரியாமல் திக்கற்ற நிலையில் வெள்ளையர்கள் இந்த பாடலை பாடி இருக்கிறார்களோ?  அதை தெய்வ பக்தி என்று நாம் எடுத்துக் கொண்டு  அந்த பாட்டை படிப்போமா?

இந்த பாட்டு என் ஞாபகத்தில்  இருக்கக் காரணம், இது  என்  11 ம் வகுப்பில் ஆங்கில வகுப்பில்  எங்களை  மனப்பாடம் செய்ய வைத்ததால்.  என்  ஆங்கில  வாத்தியார்  ஸ்ரீ   T N .சுந்தரம்.   லியோ’  ஸ்   ஆங்கில  நோட்ஸ் போடுவார்.  தமிழில் கோனார் நோட்ஸ்  மாதிரி அது. நல்ல டிமாண்ட்.  ஒவ்வொரு பாடத்தையும், பாடலையும்  ரசித்து  கற்பிப்பார்.
நியூமன் பாட்டு என்ன சொல்கிறது:

”பகவானே,  எனக்கு  வழிகாட்டு, இருளில் ஒளிப்பாதை  காட்டு. எங்கும் இருள் அப்பி பயமாக இருக்கிறது.  என்னை வழிநடத்து.  இவ்வளவு இருட்டாக இருக்கிறதே. நான் செல்லவேண்டிய  என் வீடு எங்கோ வெகு தூரத்தில் உள்ளதே.  எனக்கு கொஞ்சம் வழி காட்டு.   அடி யொற்றி  நடக்கிறேன். உன் பாதத்தை காட்டு. அதை பின் பற்றி நடக்கிறேன். காரிருளில் ஒன்றுமே தெரியவில்லை.  வழி முழுக்க  எனக்கு வெளிச்சம் வேண்டவே வேண்டாம். அடுத்த காலடிக்கு வெளிச்சம் காட்டினாலே போதும்.
நான் இப்படி கெஞ்சியதே  இல்லை  தெய்வமே.  உன்னை  வழிகாட்ட கூப்பிட்டதும் இல்லை.  ஆனால்  இப்போது நீ  தான்  உதவ வேண்டும். உன்னால் தான் நான் கொஞ்சம் ஒளிபெற்று நடக்க முடியும். வழிகாட்டு.  எனக்கு  பட்டப்பகலில்  பளிச்சிடும் சூரிய ஒளி ரொம்ப பிடிக்கும்.  அப்போது  பயம் தலை காட்டாது. ஆனால்   இப்போது  நிலைமை வேறு ?  நடுங்குகிறேன்.  அப்போதெல்லாம் என் கர்வம்  ஆணவம்  என்னை வழி நடத்தியது.  இப்போது அதை நினைக்கவே பிடிக்கவில்லை. மறக்க முயல்கிறேன்.  ஆமாம்.  பகவானே , இந்த கணம் வரை  உன் சக்தியால் தான்   நான் மூச்சு விடுகிறேன். உன்  ஆசி என்னை வாழ வைக்கிறது. என்னை நீ கட்டாயம் வழி நடத்தி செல்வாய்  என்ற உணர்வு, நம்பிக்கை மனது பூரா இருக்கிறது.  வழி பூரா  மேடு பள்ளம்,  காடு  மேடு  முள், சூடு மணல்  சேறு சகதி,  எப்படியாவது இந்த கும்மிருட்டில் இருந்து பொழுது விடிந்து  உன் அருள்முகம்  இனித்த பளிச் முகத்துடன் புன்னகைத்து  என்னை வரவேற்கட்டும். விழி திறக்குமா  எனக்கு வழி கிடைக்குமா என்று பாடுகிறேன்.  அது நிச்சயம் என்பதால்  இந்த  தடுமாற்றம் அதிக நேரம் நீடிக்காது….உன் நிழல் மாதிரி உன் காலடியை ஒட்டி உன் பின்னாலே  குறுகிய  சந்து பொந்துகளில் எல்லாம் தொடர்ந்து வருகிறேன். வழி நடத்தி செல்.  என் வீட்டை காட்டு. குழந்தைமாதிரி வழி தெரியாமல் நிற்கிறேன்  பகவானே, எனக்கு  வீடு பேறு  கிடைக்க வழி காட்டு. இந்த  துன்பத்தை தொடர்ந்து இனி அமைதியான  என்றும் ஒளிமயமான வாழ்வை தர  வேண்டி தொழுகிறேன்.

வாழ்க்கை  ஒரு சம்சார சாகரம். இதில் கரை சேர, பல  பிறவிப்பிணிகள், துயர்கள் தீர,  ஜென்ம வினை தீர பகவானை வணங்குகிறோம்.  

மேலே  பாடலில் சொன்னதை  வாழ்க்கை துன்பமாக எடுத்துக் கொண்டு படித்தால் அர்த்தம் அற்புதமாக த்வனிக்கும்.   எத்தனையோ இடையூறுகள் வாழ்க்கையிலும் உண்டு. அதெல்லாம்  தாண்டி கரை சேர வேண்டும். அதற்கு பகவான் துணை இன்றி முடியாது.  அவன் வழித்துணைவன்.  வழி காட்டுபவன், அதனால் தான் ஹிந்துக்கள்  நாம்  அவனை  ”மார்க்கபந்து”  மார்க்க சகாயம், வழித்துணை  இறைவன்,  என்போம்.  

அப்பைய தீக்ஷிதர்  எழுதிய  ”மார்க்க பந்து ஸ்தோத்ரம்”  எழுதியிருந்தேனே  பிடிக்கவில்லையா,  படிக்கவில்லையா?. இன்னொரு தரம்  அதை  போஸ்ட் பண்ணட்டுமா?மேலே  பாடலில் சொன்னதை  வாழ்க்கை துன்பமாக எடுத்துக் கொண்டு படித்தால் அர்த்தம் அற்புதமாக த்வனிக்கும்.   எத்தனையோ இடையூறுகள் வாழ்க்கையிலும் உண்டு. அதெல்லாம்  தாண்டி கரை சேர வேண்டும். அதற்கு பகவான் துணை இன்றி முடியாது.  அவன் வழித்துணைவன்.  வழி காட்டுபவன், அதனால் தான் ஹிந்துக்கள்  நாம்  அவனை  ”மார்க்கபந்து”  மார்க்க சகாயம், வழித்துணை  இறைவன்,  என்போம்.  

அப்பைய தீக்ஷிதர்  எழுதிய  ”மார்க்க பந்து ஸ்தோத்ரம்”  எழுதியிருந்தேனே  பிடிக்கவில்லையா, படிக்க வில்லையா?. இன்னொரு தரம்  அதை  போஸ்ட் பண்ணட்டுமா?

அப்பய்ய தீக்ஷிதர் எழுதிய ”மார்க்க பந்து ஸ்தோத்ரம்” எழுதியிருந்தேனே பிடிக்க வில்லையா, படிக்கவில்லையா?. இன்னொரு தரம் அதை போஸ்ட் பண்ணட்டுமா?

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;