MOUNT OF WISDOM J K SIVAN

ஞானமலை – நங்கநல்லூர் J K SIVAN
கடவுள் நம்மை தம்மைப் போல் படைத்தார். நாம் பல கடவுள்களை நமது விருப்பம் போல் உருவம், ஆயுதங் கள், வாகனம், மனைவி மக்கள் குடும்பம் நிறுவி, வணங் குகிறோம். இந்த சுதந்திரம் ஹிந்துக் களுக் கு பல யுகங்களாக இருந்து வருகிறது. இதை நினைவுறுத் தும் பின் புலனாக நமக்கு நிறைய புராணம் ஸ்தல சரித்திரங்கள் வேறு இருக்கிறது.
ஒரு சம்பவம் நினைவு கூறுகிறேன்.
கைலாசம் குளிர்ந்த பரமேஸ்வரன் வாசம் புரியும் பனி மலை. விண்ணைத்தொடும் சிகரம்.. அங்கே முனிவர் கள், ரிஷிகள், சிவகணங்கள் என்று பரமேஸ்வர பக்தர் கள் ஆடி, பாடி, வண்ண மலர்கள் சூட்டி, வாசனை திரவியங்கள் அளித்து ஸ்தோத்ரங்கள் உச்சரித்து வழிபடுகிறார்கள். வசந்த காலம் என்பதால் எல்லோரும் மகிழ்ச்சியோடு காணப்படுகிறார்கள். மரங்கள் புஷ்பக்காடாக நறுமணம் எங்கும் பரப்பி கண்கவர் காட்சி அளிக்கிறது. மயில்கள் தோகை விரித்தாட, மான்கள் குதித்து ஓட விளையாட நந்தி தேவர் ஆனந்தமாக அமர்ந்து சகலத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். வண்டுகளின் தொடர்ந்த ரீங்காரம் செவிக்கு இனிய மந்திர ஓசை ஊட்டுகிறது. தேவர்களின் யாக ஹோம அக்னியில் நெய் மணம் கமழும் புகை எங்கும் அடர்ந்து படர்கிறது. ப்ரம்ம ஞானிகள் ராஜ ரிஷிகள் கற்சிலை போல் அமர்ந்து சமாதி நிலையில் காணப்படுகிறார்கள்.
பார்வதி சந்தோஷ மேலீட்டால் அமர்ந்திருக்கும் பரமேஸ்வரன் பின்னே அவனறியாமல் சென்று அவன் முக்கண்களையும் இரு கரங்களால் மூடுகிறாள். ஒரு சில வினாடிகள் மட்டுமே.
”யார் இது என்று சொல்லுங்கள் ?”
விளையாட்டு கேள்வி. பிரபஞ்ச நாயகனுக்கு தெரியாதா?
ஒரு கண நேரம் தெரியாதது போல் மெளனமாக உள்ளார்.
”உடனே கைகளை எடு தேவி” என உடனே உத்தரவு..
அடுத்த கணமே ப்ரம்மா விஷ்ணு இந்திராதி தேவர் கள் பரமேஸ்வரனை சூழ்ந்து கொள்ள பார்வதி தேவி கைகளை அகற்றுகிறாள். பரமேஸ்வரன் பார்வை எதிரே நிற்பவர்களிடம் செல்கிறது.
”என்ன விஷயம்?” என மெளனமாக கேட்கிறது.
”ப்ரபோ, பல ஆயிரம் வருஷங்களாக பிரபஞ்சம் இருளடைந்து விட்டது. உயிர்கள் மறைந்து விட்டன. சந்திர சூரியர்கள் ஒளி தராமல் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். எண்ணற்ற உற்பாதங்கள் இருளால் சம்பவித்து விட்டன. எதனால் என்று தெரியவில்லை.. .நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்”
ஆம் .பரமேஸ்வரனுக்கு ஒரு வினாடி காலம் பிரபஞ்சத் துக்கு பல ஆயிரம் வருஷங்கள்….ஒரு சில வினாடி நேரம் பரமேஸ்வரன் கண்களை உமை மூடியதால் விளைந்த உற்பாதம், பரமேஸ்வரனுக்கு புரிந்துவிட்டது. அவன் த்ரிநேத்ரங்களை பார்வதி மூடிய ஒரு கண சம்பவத்தால் பிரபஞ்சத்தில் பல ஆயிரம் வருஷங்கள் இவை நடந்துள் ளது.
‘இனி என் பொறுப்பு நீங்கள் செல்லலாம்” என அபய ஹஸ்தம் காட்டி அவர்களை அனுப்புகிறார்.
‘அம்பா, நீ லோகநாயகி, இப்படி செய்யலாமா? உன் விளையாட்டின் விபரீதத்தை புரிந்து கொண்டாயா சகி?’
என உமையிடம் ஒரு தீர்க்கமான கேள்வி.
அருணகிரி நாதர் சொல்வாரே ”அரை நிமிஷ நேரமட்டும் … என்று ” அதற்குள் நேர்ந்த தீங்குகளை பார்வதி உணர்ந்து தலை குனிகிறாள். பிராயச் சித்த மாக பூலோகம் சென்று தவமிருக்க புறப்படுகிறாள்.
காஞ்சி மாநகரம் வந்தடைந்து கம்பா நதிக்கரையில் மண்ணால் ஒரு சிவலிங்கம் பிடித்து காட்டு புஷ்பங்கள் பறித்து அர்ச்சித்து, பூஜை செய்து தவமிருக்கிறாள். அவளை சோதிக்க கம்பாவில் வெள்ளம் வந்தும் அவள் மணல் லிங்கம் கரையவில்லை.கௌரியின் மணல் லிங்கம் தான் இன்றும் நமக்கு காஞ்சியில் ஏகாம்ப ரேஸ்வர். அவள் தான் தவமிருக்கும் காமாக்ஷி அம்பாள். மஹா பெரியவா அடிக்கடி சென்று தரிசித்து தவமிருந்த தெய்வம்.
தேவாதி தேவர்கள் சிவனோடு காஞ்சி வந்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க பரமேஸ்வரன் ஒரு ஞான மலையாகி உருவெடுத்தார். திருவண்ணாமலை தான் பரமேஸ்வர ஸ்வரூபம், அருணாசலம். அருணகிரி. அருணாத்ரி. ஞானிகள், யோகிகள் சித்தர்கள் அங்கேயே தங்கி தவமிருக்கிறார்கள். இன்றும் அரூபமாக நமக்கு தெரியாமல் உள்ளனர். ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற் கும் அவர்கள் ஆணவம் போட்டி நீங்க ஒளி ஸ்தம்பமாக அடிமுடி காணமுடியாதபடி நின்றவர் அசையா அருணா ச லமாக நிற்கிறார்.கௌரி அருணாச்சலம் வருகிறாள். கௌதம ரிஷி வரவேற்று வணங்குகிறார்.
”அருணாசலத்துக்கு பிரபு என்னை வரவழைத்தார். அதன் மஹிமையை உணர்த்துங்கள்”
என கேட்கிறாள்.
‘அமைதியாக மனதினால் மட்டுமே உணர முடிந்த
தை ஆயிர நா படைத்த ஆதிசேஷனால் கூட அருணா
சல மஹிமையை விவரிக்க முடியாதே தாயே”
என்கிறார் கௌதமர். இது நினைத்தாலே முக்தி தரும் க்ஷேத்ரம் என்கிறார். க்ரித உலகத்தில் அக்னிஸ்வ
ரூபம், மரகத மலையாக த்ரேதா யுகத்தில், தங்க மலையாக த்வாபர யுகத்தில், கருநிற கருங்கல் மலையாக கலியுகத்தில் காணும் ஞான மலை” என்கிறார். அந்த ஞானமலையை தான் கிரிவலம் என்று நாம் இன்றும் சுற்றி வணங்குகிறோம்.
கௌதமர் ஒரு பர்ணசாலை அமைக்கிறார். அதில் அம்பாள் கண்களை மூடி பரமேஸ்வரனை தியானிக்கிறாள். காமாக்ஷி தவமிருப்பதை காஞ்சியில் காண்கிறோம். மாங்காட்டிலும் தவமிருக்கிறாள். அங்கும் அவளை தரிசிக்கிறோம்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;