
சாந்தி மந்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN
ஐத்ரேய உபநிஷதத்தில் காணப்படும் முதல் மந்திரம் சாந்தி மந்த்ரம். அதன் அர்த்தம் எவ்வளவு அற்புதமாக உள்ளது!.
இப்போது நாம் வாழும் உலகில் அவசியம் தேவைப்படுவது அமைதி. நிம்மதி. ஆணவம் அதிகாரம் இவை அன்பை விரட்டி விட்டு ஆண்டால் , நிம்மதி குலையும், அனர்த்தம் விளையும். அமைதி குன்றும். ஆபத்துக்கள் விளையும். இதை அன்றாடம் அறியும் சேதிகள் நம்மை நிலைகுலைய செய்கிறது
நம் அனைவருக்கும் என்றும் எப்போதும் அவசியம் தேவையானது மன அமைதி. மன அமைதி வெளியு லகத் தை ஆனந்த மயமாக மாற்றக்கூடியது. எங்கும் அன்பை செலுத்தி பன்மடங்கு எல்லா திசைகளிலிருந்து அன்பைப் பெற வைப்பது. இதற்கு மேல் என்ன வேண்டும்?
ஐத்ரேய உபநிஷதத்தில் மகரிஷி ஐத்ரேயர் முதலில் உச்சரிப்பது இந்த சாந்தி மந்திரத்தை தான்.
ॐ वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् ।
आवीरावीर्म एधि । वेदस्य म आनिष्ठः । श्रुतं मे मा प्रहासीः ।
अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि । ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि ।
तन्मामवतु तद्वक्तारमवतु । अवतु माम् अवतु वक्तारम् ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥
oṁ vāṅ me manasi pratiṣṭhitā mano me vāci pratiṣṭhitam |
āvīrāvīr ma edhi | vedasya mā āniṣṭhaḥ |
śrutaṁ me mā prahāsīḥ | anenādhītenāhorātrān sandadhāmi |
ṛtaṁ vadiṣyāmi satyaṁ vadiṣyāmi | tan mām avatu tad vaktāram avatu | avatu mām avatu vaktāram ||
oṁ śāntiḥ śāntiḥ śāntiḥ ||
ஓம் வாங் மே மனஸி பிரதிஷ்டிதா மனோ மே வாசி பிரதிஷ்டிதம் ।
ஆவீராவீர் ம ஏதி । வேதஸ்ய மா ஆனிஷ்டஃ । ஶ்ருதம் மே மா பிரஹாஸீஃ ।
அநேநாதீதேன் அஹோராத்ரான் ஸந்ததாமி ।
தம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி ।
தன் மாம் அவது தத் வக்தாரம் அவது । அவது மாம் அவது வக்தாரம் ॥
ஓம் சாந்திஃ சாந்திஃ சாந்திஃ ॥
எனது தேகத்தில் பல துளைகள் வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது வாசல் வீடு இந்த தேகம். அதில், முகத்தில் உள்ள துளைகளில் ஒன்று வாய். அதில் தான் பேச்சு என்ற சக்தியை பிரம்மம் அளித்துள்ளது. அது தானும் புரிந்து கொண்டு மற்றவருக்கும் புரிய வைக்கும் சக்தி கொண்டது. ஆகவே என் பேச்சு, என் வாக்கு என் மனதில் முதலில் நன்றாக நிலை பெறட்டும்.
என்னிடமிருந்து வெளிப்படும் வாக்கு, சொற்கள், முதலில் என் மனத்தையே பிரதிபலிக்கட்டும். உள்ளொன்று வைத்து வெளியேற வேறு இங்கே கிடையாது.
என் சொற்கள் பொறுப்பற்றவையாக இல்லாமல் அறிவு பூர்வமாக, ஆக்க பூர்வமாக பிரபஞ்சத்துக்கு நன்மை அளிப்பதாக இருக்கட்டும்.
என் அறிவு வேதம் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் இயங்கட்டும். உண்மை சத்யம் ஆகியவற்றின் ஒலிவடைமாக இருக்கட்டும்.
என் பேச்சு நான் அறிந்து கொண்ட, தெரிந்து கொண்ட ஞான வடிவமாக அமையட்டும். இது நாள் வரை நான் கடினமாக உழைத்து கற்றதன் பயனாக என் சொற்கள் இருக்கட்டும்.
என் சொற்கள் ஆகவே ஒரு போதும் தர்மத்தைத் தவிர வேறெதுவுமாக இருக்க கூடாது. சத்தியத்தின் ஒலியாக காற்றில் கலக்கட்டும்.
என் சொற்கள் தெய்வ சாக்ஷி பெற்றவை. ஆகவே பேசும் என்னையும், அதை செவிமடுக்கும் மற்ற என் ஆத்ம பிரதிபலிப்புகளையும் மகிழ்விக்கட்டும். காக்கட்டும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



