
கொடிமரம் -த்வஜ ஸ்தம்பம் – நங்கநல்லூர் J K SIVAN
நமது அன்றாட வாழ்வில் அநேக விஷயங்கள் ஏன் , எதற்கு, எப்படி, எதனால் என்று ஒன்றுமே தெரியாம லேயே சில காரியங்கள் செயகிறோம். உதராணமாக கோவிலுக்கு போகிறோம். சாமி கும்பிடுகிறோம், பிரசாதம் கிடைக்குமா என்பதிலேயே மனம் அலைகிறது. பெரிய கோவில்களாக இருந்தால் எப்படியா வது யாரையாவது பிடித்து பொது வரிசையில் போகாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்காமல் உள்ளே போய் தரிசனம் செய்ய வழியுண்டா என்று கண்கள் தேடுகிறது. மனம் அலைகிறது. இதில் கோவிலுக்கு செல்வதில் முக்கியமான பக்தி இருக்கிறதோ??
கோவில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து விடுகிறோம். கோவிலுக்கு போனதினால் சில நிமிஷங்களுக்கோ, சில மணி நேரத்துக்கோ, கொஞ்சம் புரிபடாத நிம்மதி மனதில் தங்குகிறது.
ஆனால் உண்மையில் பலப்பல ரஹஸ்யங்கள் கோவிலைப் பற்றி இருக்கிறது. பொறுமையாக, நம்பிக்கையோடு தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கிறது. தேடி அப்படித்த்தான் சில விஷயங்கள் அறிந்து கொண்டேன். அதே வேகத்தில் அதை உங்களிடம் சொல்லாவிட்டால் தலை வெடித்து விடும்போல் இருக்கிறது.
இப்போதைக்கு கொடி மரம் மட்டும் பற்றி சொல்கிறேன்.
ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஒரு பெரிய கொடிமரம், த்வஜஸ்தம்பம் இருக்கிறதே அதே பல விஷயங்
கள் சொல்கிறது.
கோவிலுக்குள் சென்றால் முதலில் கண்ணில் படுவது கொடிமரம் எனப்படும் த்வஜ ஸ்தம்பம். சும்மா ஒரு கொடி கம்பம் இல்லை. அது தான் ஆலயத்தின் உயிரோட்டம். தெய்வ ஸாந்நித்யம் ஆகியவற்றை வெளிப்படுத் துவது. கோவிலில் முகப்பு அது. வாசலுக்கும் மூலவரின் சந்நிதிக்கும் நடுவே இருக்கும் ஒரு உயரமான கொடி கட்டும் தூண். முதலில் கோவில் கோபுரம், உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம், நந்தி, அப்புறம் தான் மூலவர் சந்நிதி என்பது சிவாலய ஆகம முறை.
கொடிமரத்துக்கு பாதம், பீடம், அதன் மேல் ஸ்தம்பம், தூண், இலுப்பையிலோ, தேக்கு மரத்திலோ, அல்லது உலோகத்தாலானதோ ஒரு தூண். பல கோவில்களில் அதற்கு செம்பு, பித்தளை கவசம் உண்டு. பணக் கார கோவில்களில் தங்கப் பாளங்கள், பிளேட்கள்,தங்கமுலாம் பூசியவையாக இருக்கும்.அதில் உருவங்கள் சின்னங்கள் செதுக்கப்பட்டி ருக்கும். உச்சியில் கலசம். பூமி ஆகாயம், விண்ணையும் மண்ணையும், இணைப்பதாக ஐதீகம். மனிதனின் ஆத்மா உயரவேண்டும் என்ற தத்வம் போதிக்க உண்டானது..
கொடிமரம் ஒரு மனித உடல் போல். குண்டலினி சக்தி தத்வ அடிப்படையில் அமைந்தது. அடிப்பாகம். மூலாதார சக்ரம். நடு மற்ற குண்டலினி சக்ரங்கள்.மேலே உள்ள கலசம். ஸஹஸ்ராரம் .
கோவிலில் திருவிழா, உத்சவம் என்றால் முதலில் த்வஜாரோஹணம். கொடியேற்றம். ஊர்க்காரர்கள் ஊரை விட்டு வெளியேறமாட்டார்கள். உத்ஸவம், விழா முடிவில் கொடி இறக்கம்.ஆகம விதிப்படி கொடிமரத்தின் உயரம், திசை, எந்த பொருளால் ஆனது, பிரதிஷ்டை மந்திரங்கள் எல்லாம் நிறைய இருக்கிறது. பூமி பூஜை, யாகம், ஹோமம், மந்த்ர உச்சாடனம், கலச பூஜை, பிராண பிரதிஷ்டை ஆன பிறகு தான் கொடி மரத்தில் கோடி ஏற்றுவார்கள். தாளம் வேதம் எல்லாம் உண்டு.
கொடிமர மேல்பாகத்தில் நந்தி இருந்தால் சிவன் கோவில், கருடன் இருந்தால் பெருமாள் கோவில், சிங்கம் இருந்தால் அம்மன் ஆலயம்.
கொடிமரம், மனித வாழ்க்கை யாத்திரையை குறிப்பது. அடியிலே இருந்து மேலே செல்லவேண்டும். இறைவனை அடைய வேண்டும் என்று உணர்த்துவது.
“ॐ ध्वजाय नमः” (Om Dhvajaya Namah) கொடியாக நிற்கும் தெய்வ சக்திக்கு வணக்கம்
“ॐ नमः शिवाय” “त्र्यम्बकं यजामहे…” மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் கொடிமரத்தை வணங்கி சொல்வது.
“ॐ नमो नारायणाय” “गरुड मंत्र” ஓம் நமோ நாராயணாய எனும் கருட மந்த்ரத்தை பெருமாள் கோவிலில் கொடிமரத்தை வணங்கி சொல்வோம்.
“ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे” “दुर्गा सूक्तम्” சாமுண்டா மந்திரம் அம்மன் கோவில் கொடிமரத்துக்கு சொல்வது.
அளவு கூட ஆகமவிதிப்படி சொல்லப்பட்டிருக்கிறது. கொடி மர உயரம் கோபுர உயரத்தின் 1/3 அல்லது பாதி இருக்கவேண்டும். கருவறை விமான உயரத்துடன் தொடர்பு கொண்டது. அடிப்பகுதி : நடுப்பகுதி : மேல் பகுதி 1 : 2 : 1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். கொடிமரம் இலுப்பை, தேக்கு மரம், பித்தளை / செம்பு இதில் செய்யப்படவேண்டும். கிழக்கு வடக்கு திசை நோக்கி இருக்கவேண்டும் என்று விதி உள்ளது. கொடிமரம் பல “கட்டங்கள்” (segments) ஆக பிரிக்கப்படும்: 3 / 5 / 7 / 9 பிரிவுகள்
மனித உடலே கோவில் என்று அற்புதமாக பாடியவர் திருமூலர். ஒரே ஒரு திருமந்திரம் சொல்கிறேன்.
”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே”
நம் உள்ளம் ஒரு பெரிய கோயில், தேகம் தான் ஆலயம். வாய் தான் கோபுர வாசல். உள்ளே ஆன்மா தான் பகவான். மூலவர். திருட்டு கொட்டு ஐந்து புலன்கள் தான் உண்மையில் கோவில் மணி விளக்குகள். அதை ஜாக்கிரதையாக துடைத்து, நல்ல எண்ணங்களை, நல்ல எண்ணெயாக ஊற்றி, ஒளி வீசச் செய்ய வேண்டியது நமது கடமை. இல்லாவிட்டால் ஓடிவிடும்.
ஒவ்வொரு மனிதன் உடலிலும் ஐந்து கோசங்கள், உரைகள் இருக்கிறதோ (அன்னமய, பிராணமய ,மனோமய, விஞ்ஞானமய, ஆனந்த மய பஞ்சகோசங்கள்). கோவிலுக்கு இந்த பஞ்ச கோஸங்கள் தான் ஐந்து ப்ராஹாரங்கள். பஞ்ச அங்கங்கள் என்று கூட வைத்துக்கொள்ளலாம். நமக்கு தலை, கழுத்து, மார்பு, கால்கள் கைகள் போல. மனிதன் உடலுக்கு ஆத்மாவைப் போல் கோவிலுக்கு மூலவர் இருக்கும்கர்பக்ரஹம். சந்நிதி தலை. பகவான் தான் ஆத்மா. விமானம் தான் மூக்கு நுனி.அர்த்தமண்டபம் தான் கழுத்து. மகாமண்டபம் தான் மார்பு. பிரகாரங்கள் ஐம்புலன்கள். பலிபீடம் தான் நாபி கமலம். கொடிமரம் ஜீவாதாரம். கோபுரம் சிரம். கோபுர வாசல் தான் காலடி.
ஒரு ஆலயத்தின் வளமை, செழுமையை பிரதிபலிப்பது கொடிமரம். கொடிமரத்தின் அடிப்பாகம் சிவன். நடுப்பகுதி ப்ரம்மா . மேல்பகுதி விஷ்ணு. கொடிமரம் உயரமானது. ரொம்ப தூரத்திலேயே பக்தர்கள் கண்ணுக்குப் படுவது. கொடி மரத்தைப் பார்த்தே கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். கொடிமர உச்சியில் பகவானின் வாஹனம் உருவம் தெரியும். உள்ளே இருப்பது சிவனா, விஷ்ணுவா என்பது தூரத்திலேயே கொடி மர உச்சி காட்டிவிடும். கொடிமர உச்சியில் நந்தி. கருடன், சிங்கம்,வேதாளம். சாஸ்தா கோவிலில் குதிரை. சுப்ரமணிய சுவாமி கோவில்களில் மயில். பிள்ளையார் கோவில்களில் மூஷிகம். சரஸ்வதி கோவில் கொடிமரத்தில் அன்னம் தூரத்திலிருந்தே நமக்கு தெரிந்துவிடும்.
கொடிமரத்தின் அடியில் அஷ்டதிக் பாலகர்கள் உருவம் இருக்கும்..
ஒரு கோவிலில் உற்சவம் விழா ஆரம்பத்தில் கொடிமரத்தில் கொடியேற்றி விடுவார்கள். உள்ளூர் காரர்கள் காப்பு கட்டிக் கொள்வார்கள். யாரும் அதற்கப்புறம் ஊரை விட்டு நகர மாட்டார்கள். விழாக் காலங்களை இப்படி தான் அறிவிப்பது வழக்கம். கொடிமரம் விஞ்ஞான பூர்வமாக இடி மின்னல் தாங்கி.
கொடிமரம் கோவிலில் நுழைந்தவுடன் ராஜகோபுரத்துக்கும் மூலவர் சந்நிதிக்கு இடையில் முதலில் இருக்கும்.சகல தீய சக்திகளையும் விரட்டும் மஹிமை கொண்டது கொடிமரம். கொடிமரத்தில் கொடியேற்றினால் வானவர்களும் தேவர்களும் அருள்மாரி பொழிவார்கள். விண்ணையும் மண்ணையும் பக்தியால் ஒருங்கிணைப்பது கொடிமரம். கொடி மரத்தடியில் தான் பக்தர்கள் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். அது தான் பழக்கம். கொடிமரத்தின் அருகே தான் பலி பீடம். நமது அஹம்பாவத்தை , தீய எண்ணங்களை பலி கொடுப்பதற்கு. பலிபீடத்துக்கு நைவேத்யம் வைத்துவிட்டு தான் மற்ற சந்நிதிகளுக்கு நைவேத்தியம். கொடிமரம் முதுகெலும்பு. தாமிர, வெள்ளி பித்தளை கவசங்கள் தான் அங்கங்கள். எலும்புகள்.
கொடிமரத்துக்கு பகவானின் சக்தி உண்டு. கோவிலில் நமஸ்காரம் பண்ணுவதானால் கொடிமரத்துக்கு முன்பாகத்தான் பண்ணவேண்டும். கொடிமரத்துக்கும் மூலவர் சந்நிதிக்கு இடையே உள்ள இடத்தில் பண்ணக்கூடாது. கொடிமரத்துக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு மூலவர் தரிசனம் ஆனபின் ஒன்று, மூன்று ஐந்து என்று முடிந்தவரை ப்ரதக்ஷிணம் (இடமிருந்து வலம்)பண்ணவேண்டும். ப்ரதக்ஷிணம் பண்ண முடியாதபோது கண்ணை மூடிக்கொண்டு ஆத்ம ப்ரதக்ஷிணம் பண்ணுவார்கள். கொடிமரத்தின் உச்சி மூன்று பிரிவுகள் மூலவர் சந்நிதியை நோக்கி இருக்கும். தேவாதி தேவர்களும் எல்லோரும் த்ரிமூர்த்திகளை வணங்குவதாக ஐதீகம். கொடிமர நிழல் கருவறையை மறைக்கக்கூடாது. நேர்கோட்டில் இருக்க வேண்டும். பிரதிஷ்டை மந்திரம் அதன் சக்தி. கோயிலின் “ஆன்டெனா” போல தெய்வ சக்தி வெளிப்படும் இடம் தான் கொடிமரம். மனித ஆன்மாவின் உயர்வு சின்னம்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

