
அட கலிகாலமே! – நங்கநல்லூர் J K SIVAN
अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागाति पुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21
atha tesham bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv akhila-dasyusu
இங்கு அங்கு என்று இல்லாமல் எங்குமே எல்லா தேசங்களிலும், உயர் பதவியில் நாட்டை ஆளும் அதிகாரம் சில கெட்ட ஆசாமிகள் கையில் இருந்து அவர்களுக்கு எதிர்ப்பு அவர்களது சக்தியை விட குறைந்ததாக இருக்கும் பக்ஷத்தில் அவர்களை எவராலும் ஒன்றும் பண்ணமுடியாது. அவர்களை மாற்ற முடியாது. அவர்களை சாதி திட்டத்தாலும், பெரும் படையாலும் மற்ற எதிரிகள் கொன்றால் தான் யுத்தம் வருகிறது. மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நாம் அதை இப்போது அனுபவித்துக் கொண்டு வருகிறோம். ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் இந்த இந்நிலையை யோசித்தவர் சுக ப்ரம்ம ரிஷி. அவர் என்ன சொல்கிறார்;
எல்லா ராஜ்யங்களிலும் மோசமான நிர்வாகிகள், அதிகாரிகள், உயர் பதவியில் இருக்கும் தீயவர்களைக் கொன்றபின் அந்த ராஜ்யங்கள் ஊழல் பேர்வழிகள் இல்லாமல் கமகமவென மணக்கும். ஜனங்கள் சந்தோஷம் அடைவார்கள். எங்கும் இனிய தென்றல் வீசும்.
तेषां प्रजाविसर्गश्च स्थविष्ठ: सम्भविष्यति । वासुदेवे भगवति सत्त्वमूर्तौ हृदि स्थिते ॥ २२ ॥ SB 12.2.22
tesam praja-visargas casthavisthah sambhavisyati vasudeve bhagavati sattva-murtau hrdi sthite
மக்கள் சுபிக்ஷத்தோடு வாழ்வார்கள். எல்லாம் அந்த வாசுதேவன் கருணை. இப்போது நமக்கு வாசுதேவன் எந்த ரூபத்தில் வருவானோ? கல்கி வரும் வரை நாம் காத்திருக்கப்போவதில்லை. மறைந்துவிடுவோம்.
यदावतीर्णो भगवान् कल्किर्धर्मपतिर्हरि: ।कृतं भविष्यति तदा प्रजासूतिश्च सात्त्विकी ॥ २३ ॥ SB 12.2.23
yadavatirno bhagavan kalkir dharma-patir harih krtam bhavisyati tada praja-sutis ca sattviki
யுகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எப்போதும் ஏதோ ஒரு வேகத்தில், கால கதியில், திரும்ப வரும். இப்போது நாம் அனுபவிக்கும் கலியுகம் கடைசி. இது என்றோ ஒருநாள் முடிவுற்ற பின் மீண்டும் சத்ய யுகம் உதய மாகும். நல்ல ஜீவர்கள் அநேகர் தோன்றுவார்கள். நிச்சயம் இப்போதைக்கு அல்ல, பல லக்ஷ வருஷம் ஆகலாம். அப்போது நாம் என்னவாக இருப்போம், அல்லது இருக்கவே மாட்டோமா என்று யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
यदा चन्द्रश्च सूर्यश्च तथा तिष्यबृहस्पती । येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: ।ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥
एकराशौ समेष्यन्ति भविष्यति तदा कृतम् ॥ २४ ॥ SB 12.2.24
yada candras ca suryas ca tatha tisya-brhaspati eka-rasau samesyanti bhavisyati tada krtam
சந்திரன், சூர்யன் வியாழன் எனும் குரு எனும் சக்தி மிக்க கிரஹங்கள் கடக ராசியில் ஒன்று சேர்வார்கள். பூச நக்ஷத்திரத்தில் இவை சேர்வது தான் மீண்டும் க்ருத யுகம் எனப்படும் சத்ய யுகத்தின் ஆரம்பமாக
திகழும். இதை எழுதும்போது இன்றைய அரசியலில் நிகழும் திடீர் திடீர் செயதிகளில் ஒன்று காதில் விழுகிறது. ஈரான், சீனா, ருஷ்யா மூன்று வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து மேற்கு ஆசிய,, மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் போர் பயங்கரத்தை பூதாகாரமாக்கும் என்று தெரிகிறது. அமெரிக்க ஐக்கிய வல்லரசும் இஸ்ரேல் நாடும் கண்ட கனவு பலிக்காமல் போனாலும் உலகில் மற்ற நாடுகளின் எண்ணெய், பொருளாதார நிலை மோசமாகும் என்று பயம் கேள்விக்குறியாக எதிரே தோன்றுகிறது. எண்ணெய் சிலிண்டர் வாங்க நாம் என்ன படாத பாடு படப்போகிறோமோ தெரியவில்லை.அதற்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்றும் புரிபடவில்லை. எதுவும் நல்ல இனிய சேதியாக காதில் விழவில்லை என்பது நிச்சயம். நிறைய அதிர்ச்சிகள் வாசலில் காத்திருக்கிறதோ என்று தெரியவில்லை.
பஞ்சாங்கத்தில் உள்ளதே நடைமுறையில் நடக்கும்போது பாகவதம் சொல்வது அப்படியே நிறைவேறாதா? மஹான்கள் ரிஷிகளின் தீர்க்க தரிசனத்தால் உண்டானவை இந்த கிரந்தங்கள்.
येऽतीता वर्तमाना ये भविष्यन्ति च पार्थिवा: । ते त उद्देशत: प्रोक्ता वंशीया: सोमसूर्ययो: ॥ २५ ॥SB 12.2.25
ye ’tita vartamana ye bhavisyanti ca parthivah te ta uddesatah prokta vamsiyah soma-suryayoh
சூர்ய சந்திர வம்ச ராஜாக்கள் SUN, MOON, குடும்பம் தான் சூரிய வம்சம் என்று தமிழில் எடுத்துக் கொள்ளலாமா?தோன்றுவார்களா , தோன்றிவிட்டார்களா?
.
आरभ्य भवतो जन्म यावन्नन्दाभिषेचनम् । एतद् वर्षसहस्रं तु शतं पञ्चदशोत्तरम् ॥ २६ ॥ SB 12.2.26
arabhya bhavato janma yavan nandabhisecanam etad varsa-sahasram tu satam pancadasottaram
சுகப்பிரம்ம ரிஷி ஆயிரத்து நூற்றைம்பது வருஷங்கள் ஆளும் ராஜ பரம்பரை லிஸ்ட் சொல்கிறார். அவர் சொன்ன வரிசையில் சில ராஜாக்கள் பெயர் முன்னுக்கும் பின்னுக்குமாக இருக்கலாம்.
सप्तर्षीणां तु यौ पूर्वौ दृश्येते उदितौ दिवि । तयोस्तु मध्ये नक्षत्रं दृश्यते यत् समं निशि ॥ २७ ॥ तेनैव ऋषयो युक्तास्तिष्ठन्त्यब्दशतं नृणाम् ।
ते त्वदीये द्विजा: काल अधुना चाश्रिता मघा: ॥ २८ ॥ SB 12.2.27-28
saptarsinam tu yau purvau drsyete uditau divi tayos tu madhye naksatram drsyate yat samam nisi
tenaiva rsayo yuktas tisthanty abda-satam nrnam te tvadiye dvijah kala adhuna casrita maghah
ஏழு ரிஷிகள் சப்த ரிஷி மண்டலமாக விண்ணிலே ஒளிபடைத்தார்கள். அவர்களில் முதல் ரெண்டு ரிஷிகள் புலஹர், க்ரது, முதலில் இருட்டில் ஒளி வீசுபவர்கள். வடக்கு தெற்காக ஒரு கோடு போட்டு இணைத்தால் எந்த மண்டலத்தில் நடு மத்தியில் இணைக்கிறதோ அங்கே ரிஷிகள் கூடி இருப்பார்கள். அவர்கள் இருக்கும் காலம் அங்கே நூறு வருஷம். மக நக்ஷத்திரத்தில் அவர்கள் கூடி இருப்பது விசேஷம்.
विष्णोर्भगवतो भानु: कृष्णाख्योऽसौ दिवं गत: । तदाविशत् कलिर्लोकं पापे यद् रमते जन: ॥ २९ ॥ SB 12.2.29
visnor bhagavato bhanuh krsnakhyo ’sau divam gatah tadavisat kalir lokam pape yad ramate janah
எல்லோருக்கும் தெரிந்தது விஷ்ணு தான் கிருஷ்ணன் என்பது. துவாபர யுகம் முடிந்து கிருஷ்ணன் பூலோகத் திலிருந்து வைகுண்டம் ஏகியபோது கலி புருஷன் பூலோகத்தை ஆக்கிரமித்தான். கலியுகம் தொடங்கியது.
यावत् स पादपद्माभ्यां स्पृशनास्ते रमापति: ।तावत् कलिर्वै पृथिवीं पराक्रन्तुं न चाशकत् ॥ ३० ॥SB 12.2.30
yavat sa pada-padmabhyam sprsan aste rama-patih tavat kalir vai prthivim parakrantum na casakat
மஹா லக்ஷ்மி பதி, ஸ்ரீயப்பதி, மஹா விஷ்ணு பூலோகத்தில் கிருஷ்ணனாக காலடி பதித்தலிருந்து அவர் வைகுண்டம் திரும்பும் வரை கலியின் சக்தி எடுபடவில்லை. அடக்கி வாசித்தான்.
यदा देवर्षय: सप्त मघासु विचरन्ति हि ।तदा प्रवृत्तस्तु कलिर्द्वादशाब्दशतात्मक: ॥ ३१ ॥ SB 12.2.31
yada devarsayah sapta maghasu vicaranti hi tada pravrttas tu kalir dvadasabda-satatmakah
கலியுகத்தில் சப்த ரிஷிகள் சந்திரமண்டலத்தில் மக நக்ஷத் ரத்தில் கூடும்போது கலியுகம் பிறந்தது. தேவர்களின் கணக்கில் இது 1200 வருஷம் இருக்கும். நம் கணக்கில் பல லக்ஷ வருஷங்கள்.பல பாதங்கள் கொண்டது. நாம் முதல் பாதத்தில் இருக்கிறோம்….
यदा मघाभ्यो यास्यन्ति पूर्वाषाढां महर्षय: । तदा नन्दात् प्रभृत्येष कलिर्वृद्धिं गमिष्यति ॥ ३२ ॥ SB 12.2.32
yada maghabhyo yasyanti purvasadham maharsayah tada nandat prabhrty esa kalir vrddhim gamisyati
சுருக்கமாக சொல்லப்போனால், சப்தரிஷிகள் மக நக்ஷத் திலிருந்து பூராடம் நக்ஷத்ரத்துக்கு நகரும்போது கலி புருஷன் தனது முழு சக்தியை காட்ட ஆரம்பித்தான். அப்போது பூமியில் நந்த ராஜா வம்சம் ஆண்டு
கொண்டிருந்தது.
यस्मिन् कृष्णो दिवं यातस्तस्मिन्नेव तदाहनि । प्रतिपन्नं कलियुगमिति प्राहु: पुराविद: ॥ ३३ ॥ SB 12.2.33
yasmin krsno divam yatas tasminn eva tadahani pratipannam kali-yugam iti prahuh pura-vidah
ஸயன்ஸ்காரர்கள் போடும் கணக்குப்படி பார்த்தால் கிருஷ்ணன் என்று மறைந்தாரோ அன்று தான் பூமியில் கலியின் முழு சக்தியும் வெளிப்பட ஆரம்பித்தது.
दिव्याब्दानां सहस्रान्ते चतुर्थे तु पुन: कृतम् ।भविष्यति तदा नृणां मन आत्मप्रकाशकम् ॥ ३४ ॥SB 12.2.34
divyabdanam sahasrante caturthe tu punah krtam bhavisyati tada nrnam mana atma-prakasakam
இப்போது நாம் கலியின் ஆளுமையில் இருப்பதால் தான் சகிக்க முடியாத சம்பவங்களை, நிகழ்ச்சிகளை, நடைமுறைகளை சகித்துக் கொண்டு அனுபவிக்கிறோம். மொபைலில் வாட்சாப், யூட்யூப் படங்கள், செய்திகள் நம்மை பயமுறுத்துகிறது. கொல்கிறது. சத்ய யுகம் வரும்வரை நாம் இருக்கப்போவ தில்லை. அது எத்தனையோ ஆயிரம் லக்ஷம் வருஷங்களுக்கு அப்புறம் நிகழப்போவது. சத்ய யுகத்தில் மக்கள் மனம் தெளிவாக இருக்கும், ஆத்ம ஒளி எல்லா முகங்களிலும் வீசும். அப்போது நாமும் இருந்தால் ரொம்ப ஸந்தோஷப்படுவோமே .
देवापि: शान्तनोर्भ्राता मरुश्चेक्ष्वाकुवंशज: ।कलापग्राम आसाते महायोगबलान्वितौ ॥ ३७ ॥SB 12.2.37
devapih santanor bhrata marus ceksvaku-vamsa-jah kalapa-grama asate maha-yoga-balanvitau
ஸ்ரீமத் பாகவதம் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. மஹாராஜா சந்தனுவின் சகோதரன் தேவாபி யும் , மாரு எனும் , இக்ஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவனும் மஹா பலசாலிகள். கலபா என்கிற ஊரில் வசிக்கி றார்களாம் .
ताविहैत्य कलेरन्ते वासुदेवानुशिक्षितौ । वर्णाश्रमयुतं धर्मं पूर्ववत् प्रथयिष्यत: ॥ ३८ ॥ SB 12.2.38
tav ihaitya kaler ante vasudevanusiksitau varnasrama-yutam dharmam purva-vat prathayisyatah
கிருஷ்ணன் கட்டளைப்படி, மேலே சொன்ன தேவாபி, மாரு எனும் ரெண்டு ராஜாக்களும் பூமிக்கு மனிதர் களாக வந்து சமூகத்தை சீர்திருத்துவார்களாம். கலியுகம் முடியும் நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்
கள். அதுவரை மஹா விஷ்ணுவை தியானித்துக்கொண்டு காத்திருக்கிறார்களாம்.
कृतं त्रेता द्वापरं च कलिश्चेति चतुर्युगम् ।अनेन क्रमयोगेन भुवि प्राणिषु वर्तते ॥ ३९ ॥ SB 12.2.39
krtam treta dvaparam ca kalis ceti catur-yugam anena krama-yogena bhuvi pranisu vartate
இந்த சதுர் யுகங்கள், சத்ய யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் இந்த நான்குமே அந்தந்த கால கட்டத்தில் அப்போதைய மனிதர்களின் குணாதிசயங்களோடு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
राजन्नेते मया प्रोक्ता नरदेवास्तथापरे । भूमौ ममत्वं कृत्वान्ते हित्वेमां निधनं गता: ॥ ४० ॥SB 12.2.40
rajann ete maya prokta nara-devas tathapare bhumau mamatvam krtvante hitvemam nidhanam gatah
சுகப்பிரம்ம ரிஷி, பரீக்ஷித் மஹாராஜாவுக்கு கிருஷ்ணன் பெருமைகளை மஹிமைகளை சொல்லிக் கொண்டு வரும்போது அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது கலியுகத்தைப் பற்றி நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை சொல்கிறார். ”பரீக்ஷித், நான் சொன்ன ராஜாக்கள் உரிய காலத்தில் வந்து ஆண்டு, முடிந்து போவார்கள்” என்கிறார்.
कृमिविड्भस्मसंज्ञान्ते राजनाम्नोऽपि यस्य च । भूतध्रुक् तत्कृते स्वार्थं किं वेद निरयो यत: ॥ ४१ ॥SB 12.2.41
krmi-vid-bhasma-samjnante raja-namno ’pi yasya ca bhuta-dhruk tat-krte svartham kim veda nirayo yatah
பரீக்ஷித், நான் சொல்வதை புரிந்துகொள். என்னதான் ராஜா என்று நான் அடைமொழி கொடுத்து உனக்கு அறிமுகப்படுத்தினாலும் , ராஜா என்ற பட்டம், பதவி, பெயர், கொண்டவன் கடைசியில் ஒரு புழு, சாம்பல். அவன் பெயர் நிலைக்க அவன் செயல் ஒன்று தான் மிச்சம். தனது உடலைப் பாதுக்காக்க மற்ற உடல் களைக் கொள்பவனை என்ன வென்று சொல்வது? நரகத்துக்கு போவதற்கு பெயர் எதற்கு? உடல் இருக்கும்போது பொறாமை, ஹிம்சை, சுயநல செய்கைகளைத் தவிர்க்க வேண்டும். பகவானை மற்ற உயிரினங்களிலும் காண வேண்டும்.
तेजोऽबन्नमयं कायं गृहीत्वात्मतयाबुधा: । महीं ममतया चोभौ हित्वान्तेऽदर्शनं गता: ॥ ४३ ॥ SB 12.2.43
tejo-’b-anna-mayam kayam grhitvatmatayabudhah mahim mamataya cobhau hitvante ’darsanam gatah
பரீக்ஷித், இந்த பஞ்ச பூதங்களால் ஆன தேகத்தை நிஜம் சாஸ்வதம் என நம்பி, அது தான் ”நான்” என கனவு காண்பது தவறு. எல்லாம் மறைந்து போகும். ஒவ்வொரு ஜீவனிலும் ஆத்மா இருக்கிறான். இருந்தாலும் அந்த ஜீவனின் உலக வாழ்க்கை, பெயர், காற்றோடு கலந்து மறைந்து போகிறது .எண்ணற்றவர்கள் நமக்கு முன் வாழ்ந்தவர்களை யார் அறிவார்கள்?
ये ये भूपतयो राजन् भुञ्जते भुवमोजसा ।कालेन ते कृता: सर्वे कथामात्रा: कथासु च ॥ ४४ ॥ SB 12.2.44
ye ye bhu-patayo rajan bhunjate bhuvam ojasa kalena te krtah sarve katha-matrah kathasu ca
பரீக்ஷித், இதுவரை உலகத்தில் அதிக சக்தி, பலம் அதிகாரம் கொண்டு வாழ்ந்த ராஜாக்கள் எங்கே? சரித்திரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு எழுத்தில் கருப்பு கலரில் வெள்ளை பேப்பரில் புள்ளியாக, பெயர்களோடு சரி. அது கூட ஒரு சில நல்ல/கெட்ட காரியங்களால் தம்மை பிரபலப் படுத்திக் கொண்டவர்கள் பேர்கள் தான்.
பரீக்ஷித் ராஜா பாவம். எவ்வளவு துர் பாக்கிய சாலி. நாம் அவனால் பாக்கியசாலிகள். வாழப்போகும் கடைசி ஏழு நாட்களில் அவனது மகத்தான சேவையால் எத்தனையோ விஷயங்களை சுகப்ரம்ம ரிஷியின் ஞான திருஷ்டி மூலம் ஐந்தாயிரம் வருஷம் முன்பாகவே தெரிந்து கொண்டான். ஆஹா எப்படித்தான் இவ்வளவு கன கச்சிதமாக சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே ஆணி அடித்தது மாதிரி சொல்கிறார்! இந்த ருசிகரமான தகவலை தெரிந்துகொள்ளவேண்டாமா? ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டம் 2வது அத்தியாயத்தில் இதெல்லாம் அப்பட்டமாக ஸ்லோகங்கள் மூலமாக நாம் இப்போது அறிகிறோம்.
”பரீக்ஷித் மஹாராஜா , மதம், சத்யம், சுத்தம், பொறுமை, கருணை, இரக்கம், வாழ்வின் அளவு, தேக பலம், , ஞாபக சக்தி எல்லாமே கலியுகத்தில் குறைந்து போகும். அது கலி புருஷனின் சக்தி”. என்று சுகர் சொல்வதோடு நிறுத்தி மேலே அடுத்து தொடர்வோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



