
23.11.2025 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் ஆன்மீக சுற்றுலா – நங்கநல்லூர் J K SIVAN
5வது ஆலயம் தாமல் வராஹீஸ்வரர்
6வது ஆலயம் ரத்னகிரி பால முருகன்
திருப்பாற்கடலிலிருந்து வேலூர் போகும் வழியில் உள்ள ஒரு அற்புத க்ஷேத்ரம் தாமல்.
சென்னையிலிருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ள தாமல் என்கிற ஊர் சோழர் காலத்தில் தாமர் என்று பெயர் கொண்டது. DK பட்டம்மாள், சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்றோர் பிறந்த ஊர். சிவன் பெயர் வராஹீஸ்வரர். நரசிங்கீஸ் வரர் என்றும் பெயர். பல்லவர்கள் கட்டிய ஆலயம். அம்பாள்; கௌரி.
7 நிலை ராஜ கோபுரம் .விஜயநகர ராயர் காலத்து மண்டபம். சிற்பக்கலை நிறைந்த க்ஷேத்ரம். ஹிரண்யாக்ஷனை வராகமாக கொன்ற மஹா விஷ்ணுவின் சீற்றத்தை சிவன் தனித்த ஸ்தலம். சிவன் மேல் சங்கு சக்ரம் உள்ளது. கல்வெட்டுகள் நிறைய உள்ளது. எங்கள் துரதிர்ஷ்டம் ஆலயத்துக்கு நாங்கள் சென்றபோது அர்ச்சகர் இல்லை. சந்நிதிகள் காதவு சார்த்தப்பட்டு பூட்டு போட்டிருந்தார்கள்.
அர்ச்சகருக்காக காத்திருந்தால் எங்களது பயணம் தடைபடும் என்ற நிலையில் அங்கிருந்து உடனே புறப்பட வேண்டியாதாயிற்று. 12மணிக்குள் செல்லா விட்டால் ரத்னகிரி பால முருகன் தரிசனம் கிடைக்கா மல் போய்விடுமே.
ரத்னகிரிக்கு பறந்தோம். மலைமேல் கார்கள் தான் செல்லலாம். பஸ் செல்ல முடியாது என்று மறுத்ததால் அங்கிருந்த ஆட்டோ ரிக்ஷாக்களை வாடகை பேசி நாலு நாலு பேராக மலையேறினோம். எங்களுக்காக
காத்திருத்ததுபோல் எங்களுக்கு பிறகு வந்தவர்க ளுக்கு கதவை சாத்தி விட்டார்கள்.
14ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஆலயம் என்று சொல் கிறார்கள். ரத்தினகிரி கோவில் ஒரு மண் மேடாக ஒரு சிலை யோடு இருந்தது. பின்னர் கற் கோவில் உருவானது . 15ஆம் நூற்றாண்டில் முருக பக்தர் அருணகிரிநாதர் வந்து பால முருகனை தரிசித்து திருப்புகழ் பாடி இருக்கிறார். ரத்னகிரி குன்று தோறாடல் எனப்படும் முருகனின் தரிசனம் பெறும் குன்றங்களில் முக்கியமானதாக வணங்கப்படுகிறது. முருகன் இங்கு வள்ளி தேவசேனாவுடனும் காட்சி தருகிறார். பால முருகனாகவும் வழிபடப்படுகிறார்.
இங்கு ஒரு மஹான் வாழ்கிறார். பாலமுருகனடிமை எனப் போற்றப்படும் முருக பக்தர். மௌனகுரு. பூர்வா ஸ் ரமத்தில் நானும் அவரும் M E S எனப்படும் மின் துறையில் பணியாற்றியவர்கள். அவர் வேலூரிலும் நான் மெட்ராஸிலும் பணியில் இருந்தோம். முருகன் அவரைத் தனது பணிக்கு அழைத்துக் கொண்டான். நான் அவனை இன்னும் தேடுகிறேன்.
பாலமுருகனடிமை மஹானால் அந்த ஆலயம் அற்புத மாக உருப்பெற்று எண்ணற்ற முருக பக்தர்க ளுக்கு முருகன் அருள் பாலிக்கிறான்.மஹான் பாலமுருகனடி மையை நேரில் சென்று பக்தர்களில் ஒருவனாக அவரை
தரிசித்திருக்கிறேன். கோவணதாரி. மௌனி. ஸ்லேட் டில் பலப்பத்தில் எழுதி நமது கேள்விக்கு பதில் சொல் வார். ஸ்வாமிகள் எளிமையின் சிகரம், உடல் முழுவதும் விபூதி, தீக்ஷண்யமான ப்ரகாசமிக்க கண்கள், கூர்ந்த பார்வை நம்மை நோக்கும் போது நாம் நெளிவோம். சமாளிக்க முடியாது. நம்முள் நடந்த நடக்கும், நடக்கப் போகும் தப்பு எல்லாம் படம் பிடித்துவிடும் பார்வை. தப்ப முடியாது. இவர் மற்ற துறவிகள் போல் ஒரு ஆசிரமமோ மடமோ , சிஷ்யர்களோ, குருவோ இல்லா தவர். இறைவனைத் தேடி செல்லவில்லை. முருகனே அவரை இழுத்துக் கொண்டான். ரத்னகிரி மலைமேல் தனது உறைவிடத்திற்கு வரைவழைத்து தனது அடிமை யாக அவரை ஆட்கொண்டான். ரத்னகிரி ஒரு அறு படை வீடாக மாறியதற்கு காரணம் ஸ்வாமிகள். திருக்குளம் அறு கோண வடிவம் இன்னொரு சரவணப்பொய்கை. வேறு எங்குமே இல்லாதது. முருகன் சந்நிதியில் பாலமுருகனடிமை கன் சந்நிதி முதல் படியில் உட்கார்ந்திருப்பார். பக்தர்கள் கூட்டமாக வந்து அருளாசி பெறுவார்கள். ஒரே சமயம் பாலமுருக னையும் பாலமுருகனடிமையையும் காண கொடுத் து வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற புண்யம் பண்ணவன். ஆரம்ப காலத்தில் வெறும் கண் பார்வை யோடு தனது கையால் விபூதி பிரசாதம் அளிப்பார். இந்த அற்புத கோயிலை ஸ்வாமிகள் மௌனமாக இருந்து, சைகையாலும், சமிக்ஞைகளாலும் சிறிய குன்றான ரத்னகிரி மேல் அற்புத கோவில் உருவாக் கி யுள்ளார். மணி ஒன்றாகிவிட்டது. ரத்னகிரி ஆலய கதவும் மூடப்பட்டுவிட்டது.
இனி அடுத்தது நாராயணி தங்கக்கோயில் ஒன்றை தான் பார்க்க வேண்டும்
இங்கேயே சாப்பிட்டு விடுவோம். நாங்கள் தான் காலை யிலேயே சாம்பார் சாதமும் தயிர் சாதமும் கொண்டு வந்திருக்கிறோம். அனைவரும் ஒரு சுத்தமான இடம் தேர்ந்தெடுத்து நல்ல பசி வேளையில் கொண்டு வந்தி ருந்த பகல் உணவை உண்டோம். எங்களிடமிருந்து உணவை மற்ற பசியோடு இருப்பவர்களுக்கும் அளித்து மகிழ்ந்தோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

