
23.11.25 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் ஆன்மீக சுற்றுலா4வது ஆலயம் — திருப்பாற்கடல்
யாரிடமாவது திருப்பாற்கடல் வருகிறீர்களா போகலாமா என்றால் ஓடிவிடுவார்கள்? உலகத்தை விட்டு வேறெங்கோ போவது என்று புரிந்து கொள்வார்கள். அதற்கு யாரும் தயாரில்லை. துக்காராம் என்னோடு யாரெல்லாம் வைகுண்டம் வருகிறீர்கள், கருடன் வந்து அழைத்து போகப்போகிறார் என்று சொன்னபோது எவரும் தயாராக இல்லை. ஒரே ஒரு வேலைக்கார கிழவி மட்டுமே அவரோடு ஜீவன் முக்தராக வைகுண்டம் சென்றாள் . நான் எல்லோரையும் திருப்பாற்கடல் அழைத்துப் போகிறேன் என்று சொன்னபோது எவரும் பயப்படவில்லை சந்தோஷமாக சேர்ந்துகொண்டார். ஏனென்றால் நான் 4வது ஆலயமாக திருப்புட்குழியிலிருந்து அடுத்து காலை 10.30 மணிக்கு அழைத்து சென்றது அருகே இருந்த இன்னொரு க்ஷேத்ர கிராமத்துக்கு. ஆதிசேஷன் மேல் மஹா விஷ்ணு படுத்துக் கொண்டிருக்கும், பரம பதத்துக்கு, க்ஷீர சாகரத்துக்கு அல்ல. கருடன் மேல் பிரயாணம் இல்லை. எங்கள் மினி பஸ் மூலம் தான்.
நாங்கள் சென்ற க்ஷேத்ரத்தில் பெருமாள் பெயர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள். சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பாக்கத்திலிருந்து 2.5 கிமீ தொலை வில் உள்ளது. சென்னையிலிருந்து 99 கிமீ. தூரம். ரொம்ப தொன்மை வாய்ந்த க்ஷேத்ரம். ரொம்ப அபூர்வ கோயில். ஏனென்றால் இங்கே சிவனின் ஆவுடையார் மீது லிங்கத்துக்கு பதிலாக பெருமாள் நிற்கிறார். இது சைவ வைணவ கலவை. ம். சிவனும் விஷ்ணுவும் சமம்,ஒன்றே எனக் குறிப்பது. பழைய கால பெயர் கரம்பு . இப்போதும் கூட பசுமை யான இயற்கைச் சூழலுடன் கூடியது. இங்கு இரண்டு சிவன் ஆலயங்களும் இரண்டு விஷ்ணு கோவில்களும் உள்ளன. இங்கு மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்ந்து மூன்று வாசல்கள் உள்ளன. இதனால் வைகுண்ட ஏகாதசி சமயத்தில் சொர்க்கவாசல் திறக்கும்போது நேரடியாக மூலவரையே தரிசிக்கலாம். ஒரு புராண கதை குட்டியாக சொல்கிறேன்.
காஞ்சிக்கு வந்த புண்டரீக மகரிஷி விஷ்ணு பக்தர். அந்த பக்கத்தில் இருந்த பல்வேறு பெருமாள் கோயில்களில் தரிசித் த போது யாரோ ஒருவர் இங்கே பக்கத்தில் திருப் பாற் கடல் என்ற ஊரில் அற்புதமான ஒரு பெருமாள் கோயில் இருக்கிறது” என்று சொன்னதால் இங்கே வந்தார். சொன்னவருக்கு புண்டரீகர் விஷ்ணு கோயில் மட்டுமே செல்பவர் என்று தெரியாதே.
அன் று ஏகாதசி. ஏகாதசி முடிவதற்குள் ஏதாவதொரு விஷ்ணு ஆலய ம் சென்றே ஆக வேண்டு மென்று புண்டரீக ரிஷி திருப்பாற்கடலுக்கு விரைந்தார். கோயில் கோபுர வாயிலுக்குச் சென்றவர் கண்ணில் உள்ளே நந்தியின் உருவம் தென்பட்டது. உடனடியாக அங்கிருந்து வெளியேற முயன்றார். அப்போது அவரை எதிர் கொண்ட ஒரு முதியவர் ”ஏன் சுவாமி, கோயிலுக்கு வந்துவிட்டு உள்ளே போகாமல் திரும்புகிறீர் ” என்று கேட்டார். ‘நான் விஷ்ணு ஆலயங்களுக்கு மட்டுமேதான் செல்பவன். இது ஏதோ ஒரு சிவன் கோயிலாக இருப்பதால் திரும்புகிறேன்” என்று பதில் சொன்னார் புண்டரீகர்.
”யார் சுவாமி சொன்னது உங்களுக்கு இது சிவன் கோயில் என்று/? இதுவும் ஒரு பழைய பெருமாள் கோயில் தான். என்னோடு வாருங்கள் உள்ளே ” என்றார் முதியவர்.
இருந்தாலும் புண்டரீகர் தன் கண்களை ஒரு துணியால் கட்டிக்கொண்டு முதியவரின் கையைப் பற்றிக் கொண்டு கோயிலுக்குள் சென்றார். கோயிலின் கருவறையில் சிவலிங்கம் காட்சி தந்தது. கட்டப்பட்ட கண்களோடு கருவறையில் உள்ள முதன்மைத் தெய்வத்தைக் கைகளால் புண்டரீகர் தடவிப்பார்த்தார். சிவனின் உருவத்தை தவறியும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக. தலையில் மகுடம். கைகளில் சங்கு, சக்கரம், கதை. ஒவ்வொன்றையும் தொட்டுணர்ந்த புண்டரீகர் அது திருமால்தான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு, கண்களைத் திறந்து பார்த்தபோது அங்கே சிவலிங்கம் வழக்கமாக உள்ள ஆவுடையார் மீது திருமாலின் உருவம் காணப்பட்டது. அரியையும் அரனையும் ஒருசேரப் பார்த்தபோது அவரது அகக்கண் திறந்தது. தன் தவறை மன்னிக்குமாறு இறைவனை வேண்டினார்” என முடிகிறது இந்த ஸ்வாரஸ்யமான குட்டிக்கதை.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ராஜகோபுரம் ஜீர ணமாகிக் கொண்டு வருகிறது. கொடிமரம், புண்டிரீகா புஷ்கரணி மற்றும் பலிபீடம், ஒரு சிறிய மண்டபம் மற்றும் மகரிஷி கோபுரம் போன்றவை ஆலயத்தில் வரவேற்கின்றன. நுழைவாயிலருகில் தும்பிக்கை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வர் மற்றும் பூதத்தாழ்வார் விக்ரஹங்கள் .
கர்ப்பகிரஹத்தில் ஆவுடையாரின் மீது சிவலிங்கத்தின் மீது, பிரசன்ன வெங்கடேச பெருமாள் அபய ஹஸ்தத்தோடு அருள் பாலிக் கிறார். அரியையும் அரனையும் ஒருசேரப் பார்க்கும் ஒரு அரிய காட்சி நமது பாக்யம். ப்ரஹாரத்தில் கிருஷ்ணதேவராயர், ராணி மங்கம்மாள், தளவாய் நாயக்கர் எல்லோரும் கைகூப்பி நிற்கிறார் கள்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலைத் தவிர, ஒரு சில நிமிஷங்களில் நடந்து செல்லும் தூரத்தில் திருப்பாற் கடலில் ஆதி ரங்கநாதசாமி கோயில் என்று ஒன்றும் உள்ளது. அற்புதமான கோயில். நீண்ட உருவத்தோடு சயன கோயிலில் அனந்த நாராயணன். கண்கொள்ளாக் காட்சி. எல்லோரும் ஆனந்தமாக தரிசனம் பெற்றோம். நிறைய பாடினோம். ஸ்லோகங்கள் சொன்னோம். ஏற்கனவே பயணம் ஆரம்பிக்கும் போது விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டு தானே கிளம்பினோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

