
மருத மலை மாமணியே ! நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்கள் அநேகருக்கு கோவிலுக்கு போகவேண்டும் என்றால் அதிக விருப்பம் உண்டு. ஆகவே எனக்கும் கோவில் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு மருதமலை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு அதுவும் எனது 87ம் வருஷ ஆரம்ப நாளில் கிடைத்தது என் பாக்யம். முருகனுக்கு அறுபடை வீடு என்று நிறுத்திக் கொள்ள வேண்டாம். அவனே விருப்பப்பட்டு ஏழாவது படைவீடாக ஏற்றது போல் மருதமலை தோன்றுகிறது. அருணகிரியும் அவ்வாறு தான் பாடுகிறார்.
கோயம்புத்தூரில் இருந்து 14 கி.மீ., காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி உண்டு
முருகன் ஆலயம் மலை உச்சியில் இல்லை. நடுவே தான் அமைந்துள்ளது. கார் மேலே போகிறது என்றாலும் குறைந்தது 100 படி ஏறினால் தான் முருகன் கண்ணில் படுவான். புராணங்களில் மருதமால் வரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை மருதாசலம், மருதவரை, என்ற பெயர் உண்டு .ஸ்தல விருக்ஷம் மருத மரம். மலையில் உள்ள ஒரு சுனை தான் தீர்த்தம். பாம்பாட்டி சித்தர் வாழ்ந்த ஸ்தலம் என்பதால் அவருக்கும் சந்நிதி உள்ளது.
தலையில் மாணிக்கம் உடைய ஒரு பாம்பை பிடிக்க சென்ற சித்தர் அதைப் பிடிக்க முயன்றபோது சட்டை முனி சித்தர் அங்கே தோன்றினார்
‘நவரத்ன பாம்பை உனக்குள்ளேயே வைத்துக் கொண் டு வெளியே தேடுகிறாயே ? மிகுந்த உல்லாசத்தைத் தரக்கூடிய ஓர் பாம்பு எல்லோர் உடலிலும் உண்டு, ஆனால் யாரும் அதை அறிவதில்லை. அதனால் வெளி யில் திரியும் இந்தப் பாம்பை தேடுவதை விட்டு விட்டு, இல்லாத பாம்பைத் தேடி ஓடாதே’
”அப்படியா? எனக்கு அந்த பாம்பைக் காட்டி அருள்வீரா? என பாம்பாட்டி சித்தர் கேட்டார்.
” குண்டலினி” என்பது தான் ஒவ்வொருவர் உள்ளேயும் இருக்கும் பாம்பு” என்று சட்டை முனி சித்தர் உபதேசித் தார்.
கூடு விட்டு கூடுபாய்தல், பிராயணமப் பயிற்சிகளை யம் வேறு பாம்பாட்டி சித்தர்க்கு சொல்லி கொடுத்தார். எல்லாவற்றையும் கேட்டு உண்மையை உணர்ந்த பாம் பாட்டியார் சட்டைமுனி சித்தரின் காலில் விழுந்து வணங்கினார். சட
பாம்பாட்டி சித்தருக்கு முருகப்பெருமான் மருத மலை யில் மருத மரத்தடியில் பெருகும் மருத தீர்த்தம் அளித் து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்ககும் வழி இருக்கிறது, அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிக்கிறார் என்கி றார்கள்.
மருதமலையில் மூல ஸ்தான முருகன் சிலை வடித்தவர் பாம்பாட்டி சித்தர் என கேள்வி. ரெண்டு கரங்களோடு,, பழநிஆண்டி போல வலது கையில் தண்டத்துடன், இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்ட பாணியாக நிற்கும் அழகை காலையில் அபிஷேகம் நடக்கும் முன்பே நின்று பார்த்த பாக்கியசாலி நான். தலைக்கு பின்புறம் குடுமியும் காலில் தண்டையும் உள்ளதாம். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக் காப்பு என மூன்றுவித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேஷ நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத் திகை, தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிகி றார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இவரை தண்டா யுத பாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது ஆபரணம், கிரீடம் என எதுவும் இல்லாமல், வேட்டி மட்டும் அணிவிக்கின்றனர். அருண கிரியாரால் பாடப்பெற்றவர் இவர்.
தமிழில் பூமியை நானிலம் என்கிறோம். மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் இந்த ரெண்டும் தனதாக்கிக் கொண்டு காட்சி தருகிறது மருதமலை. முருகன் பிரகாசத்துடன் அருள்பாலிக்கிறான். ‘இருநில மீது எளியனும் வாழ எனது முன் ஓடி வர வேணும்’ என வேண்டுகிறார் அருணகிரி நாதர்.
மூன்று பக்கமும் மலை அரண். மேலிருந்து பார்த்தால் சுற்றிலுமுள்ள மலைகளின் இயற்கை வசீகரம் ரம்யமாக மயில் தோகை விரித்த மாதிரி காண்கிறது. மனக்கண் முன் எங்கும் மயில்வாகனனாக முருகன் தோற்றம். முருகன் வள்ளி தேவசேனாபதியாக ஸ்வயம்பு என்கிறார்கள். வள்ளி கொஞ்சம் உயரமாகவும், தெய்வானை சற்று உயரம் குறைந்தும் உள்ளனர்.முருகன் ஆதிமூர்த்தி என்பதால் சந்நிதி “ஆதி மூலஸ்தானம்’.
கி பி 12ம் நூற்றாண்டில் உருவான ஆலயம். கொங்கு நாட்டின் 24 பிரிவுகளுள் ஒன்றான ஆறைநாட்டின் எல்லையாக மருதமலை இருந்தது. பேரூர் புராணம், காஞ்சிப்புராணம், அருணகிரிநாதரின் திருப்புகழ் முதலிய நூல்களில் மருதமலை சொல்லப்படுகிறது. திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி கோயில் கல்வெட்டுகளில், மருதமலை பற்றி சொல்லப்படுகிறது.
மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வேல்கோட்டம் தியான மண்டபம் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆறரை அடி உயர வேல் தான் மூலவர், வேலின் தண்டுப் பகுதியில் பஞ்சபூத சக்கரங்கள் காணலாம். விதானத்தில் ஒரு சிறிய துவாரம் வழியாக சூரிய ஒளி பாயும். முன் மண்டபம் ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும்
வகையில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது. மருத மலை ஏற மொத்தம் 837 படி.இது.
பாம்பாட்டிச் சித்தர் சன்னதியில் ஒரு பாறை நாக வடிவம். இதன் பின்புறம் பீடம் போன்ற அமைப்பில் மூன்று உருவங்கள் இவற்றை சிவன், கணபதி, அம்பிகையாக கருதி பூஜை செய்கிறார்கள். பொதுவாக முருகன் தான் சிவன், அம்பாளுக்கு நடுவில் காட்சி தருவார். இங்கு விநாயகர், பெற்றோருக்கு மத்தியில் காட்சியளிப்பது விசேஷம்.
குமரன் முருகன் மலை வாசி. அவன் வசிக்கும் குன்றுகளில் மருதமலைக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த மலையில், மட்டுமே தேரோட்டம் உண்டு. மற்ற மலைகளில் தங்க ரதம் மட்டுமே வலம் வரும். இங்குள்ள தேர் 20 அடி உயரம், 12 அடி அகலம், 10 டன் எடை! போதுமா?
வைகாசி விசாகம் அன்று முருகனுக்கு 108 பால் குட அபிஷேகம். தைப்பூசத்தை ஒட்டி 10 நாட்கள் ப்ரம்மோத்சவம் பூசத்தன்று காலையில் திருக்கல்யாணம், மாலையில் தேர்த்திருவிழா நடக்கும். அன்று சுவாமி, யானை வாகனத்தில் எழுந்தருள்வார்தினமும் மாலையில் தங்க ரதத்தில் சுவாமி வலம் வருவார். 1966 யில் சாண்டோ சின்னப்ப தேவரால் திருப்பணி நடந்தது.
ஆலயம் ஏழுநிலை இராஜ கோபுரம் கொண்டது. தங்கமுலாம் பூசிய ஏழு கலசங்கள்,அருணகிரியாரின் திருப்புகழ் கீழே அர்த்தத்தோடு தருகிறேன்.
”திரிபுரம் அதனை ஒரு நொடியதனில் எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும் ஆறுமுகம் உடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே!?
த்ரிபுராசுரன் கோட்டையை ஒரு நொடியில் நெற்றிக்கண்ணால் எரித்தவன் மகனே. அசுரர்கள் அஞ்ச மயில்மேல் வேகமாக பறந்து செல்பவனே. மிகப்பெரிய வலுவான கிரெளஞ்சமலையை வேலால் பிளந்தவனே .வள்ளி தேவானை மணாளா. கஜமுகன் விநாயகன் இளவலே. பாம்பணை மேல் உறங்கும் பரமனின் மருகா. அடியார் வினை தீர்த்து, அமரர்கள் துயர் தீர்க்கும் முருக பெருமாளே. அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை எல்லாம் தரிசித்து வெளியே மேடையில் அமர்ந்து மனதார பாடினோம். மீசை வைத்தா, என் மகன் கிருஷ்ணசாமி நான் மூவருமே பாட்டுப் பிரியர்கள். மன நிறைவுக்குப் பின் வயிறு நிறைவதற்கு வடவள்ளியில் தியானபிரஸ்தாவில் மெல்லிய தோசைகள் காத்திருந்தன.
No insights to show
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

