SIVA THATHTHA STORIES J K SIVAN

சிவா தாத்தா கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
குழந்தை தெய்வங்கள்
குழந்தைகளே , நமது ஹிந்து மதத்தில் உங்களைப் போன்ற சின்ன குழந்தைகள் கூட தவம் செய்து, த்யானம் புரிந்தோ அல்லது பூர்வ ஜென்ம புண்யத் தாலோ, தெய்வ தரிசனம் பெற்று புகழடைந்தவர்கள். துருவன், ப்ரஹ்லாதன் நசிகேதஸ், மார்க்கண் டேயன், ஞான சம்பந்தன்,போன்ற பெயர்கள் ஆகவே என்றும் நினைவிலுள்ளவை.
ப்ரஹ்லாதனைப் பற்றி சொல்கிறேன்.
அசுரர்களில் பலம் வாய்ந்த ஒரு ராஜா ஹிரண்யகசிபு. தேவர்களை வாட்டி எடுப்பவன். நாராயண விரோதி. தேவர்களை வென்று விண்ணுலகத்தை கைப்பற்றி ஆளும் சக்தி கொண்டவர்கள். தேவர்கள் தங்கள் குறை தீர்க்க நாராயணனிடம் சென்று அந்த காக்கும் தெய்வ மும் தக்க அவதாரம் எடுத்து, கொடிய ராக்ஷஸர்களை, துஷ்டர்களை வென்று கொன்று, நல்லவர்களை ரக்ஷிப் பது வழக்கம். அப்படி ஒரு அசுரன் ஹிரண்ய கசிபு மூன்று லோக ராஜா.
ஹிரண்யகசிபுவுக்கு ஒரு பிள்ளை. ப்ரஹ்லாதன். சிசு வாக இருந்ததிலிருந்தே நாராயண பக்தன். ஹிரண்ய கசிபு இதை கவனித்து குழந்தை ப்ரஹ்லாதனை நல்வழிப் படுத்த இரு அசுர ஆச்சார்யர்களிடம் அனுப்பினான். சாந்தன், அமர்க்கன் என்பவர்கள் ரொம்ப கண்டிப்பான அசுரர் ஆசிரியர்கள். விஷ்ணு என்ற பேரைக் கூட ப்ரஹ்லாதன் கேட்க விடாதவர்கள். மற்ற அசுர குழந்தைகளோடு ப்ரஹ்லாதனுக்கும் ஹிரண்யகசிபு தான் ஒரே தெய்வம் என்று கற்பித் தார்கள். அசுரர் பாட புத்தகங்கள் இதைத்தான் சொல்லியது. ஆனால் ப்ரஹ்லாதனோ தான் மட்டும் இல்லாமல் மற்ற அசுர பிள்ளைகளுக்கும் நாராயண னே பெரிய தெய்வம் என்று சொல்லி நம்ப வைத்தான்.
இதெல்லாம் கவனித்த அசுர ஆசிரியர்கள் ப்ரஹ்லா தனால் மற்ற அசுர பிள்ளைகளும் கெட்டு விடுகிறார் களே , இது தெரிந்தால் ஹிரண்யகசிபு தண்டிப்பானே என்று ஓடிப்போய் அவனிடம் ‘ மஹாராஜா, உங்கள் பிள்ளை, தான் கெட்டது மட்டும் இல்லாமல் மற்ற பிள்ளை களையும் நாராயணனே நமக்கு கடவுள் எனச் சொல்ல வைத்து கெடுக்கிறான்” என்று முறையிட்டார் கள். உடனே பிரஹலாதன் பள்ளி படிப்பு நின்றது. பிள்ளையை கூப்பிட்டு கண்டித்தான். ”நான் தான் கடவுள் என்னை தான் வழிபடவேண்டும் ” என்று சொல்லி தந்தான். ஆனால் ப்ரஹ்லாதனிடம் எந்த மாற்றமும் இல்லை. ”ஸ்ரீமன் நாராயணனை தவிர வேறு தெய்வம் கிடையாது வழிபடுவதற்கு ” என்று பிடிவாதமாக ப்ரஹ்லாதன் பயமில்லாமல் சொன்னான்.
பிள்ளை என்றும் பாராமல் ஹிரண்யன் பிரஹலாதனை தண்டித்தான். அவனைக் கொல்ல கட்டளையிட்டான். எந்த ஆயுதங்களாலும் அவனைக் கொல்ல முடியவில் லை. நாராயணனையே சரணடைந்த ப்ரஹ்லாதனை ஹரி காப்பாற்றிக் கொண்டே வந்தான். யானையின் காலடியில் மிதிபட வைத்தும் அவன் மரணமடைய வில்லை. செங்குத்தான மலையுச்சி யிலிருந்து அதல பாதாளத்துக்கு உருட்டி விட்டும் அவன் மேல் எந்த காய மும் இல்லை. விஷம் கொடுத்தாலும் அவன் சாக வில்லை. நெருப்பில் தள்ளினாலும் அது அவனைச் சுடவே இல்லை. கடலுக்கடியில் கல்லைக் கட்டி போட்டாலும் அவன் சுகமாக மேலே மிதந்து வந்தான். கொடிய நாகங்களின் விஷம் அவனுக்கு தீங்கு செய்ய வில்லை. காரணம் ப்ரஹலாதன் மனம் பூரா விஷ்ணு வே இருந்து அவனை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றினார். விஷ்ணுவையே நினைத்து ப்ரஹ்லாதன் தானே விஷ்ணுவாகி விட்டானென்று கூட தாராளமாக சொல்லலாம்.
தனது முயற்சிகளில் தோல்வி கண்ட ஹிரண்யகசிபு ப்ரஹ்லாதனை அழைத்து மீண்டும் சமாதானமாக மாற்ற முயன்றான். அதுவும் தோல்வி. மீண்டும் பள்ளியில் சேர்ந்தபோது மற்ற பிள்ளைகளையும் நாராயணனே பெரும் தெய்வம் அவனை ஸ்மரித்து வழிபட்டால் நன்மை உண்டு என பாடம் புகட்டி அவர்களையும் மாற்றினான்.
இனி ப்ரஹ்லாதனைக் கொன்று பயனில்லை. அவன் வழிபடும் நாராயணனையே தேடிப் பிடித்து கொல்ல வேண்டும் என ஹிரண்யகசிபு முடிவெடுத்தான்.
ஒருநாள் கோபமாக ப்ரஹ்லாதனிடம் ஹிரண்யன் வந்த சமயம் சாயங்காலம், அஸ்தமன நேரம். பிரஹலா தன் நாராயணனைத் துதித்து த்யானத்தில் இருந்தான். ஹிரண்யகசிபு பிள்ளையிடம் பேசினான்
.’ப்ரஹலாதா, கடைசியாக உன்னை எச்சரிக்கிறேன். நீ அந்த நாராய ணனை மறந்து என்னை வழிபட்டால் உனக்கு வாழ்வு உண்டு.’
”அப்பா என் தெய்வம் நாராயணன் ஒருவனே”
‘ப்ரஹ்லாதா, முட்டாளே, இந்த மூன்று லோகத்துக்கு நான் தானேடா சக்ரவர்த்தி, என்னை மீறி ஒரு சக்தியும் கிடையாது. புரிந்து கொள் ‘
”அப்பா நீங்கள் வெறும் மூன்று லோக தெய்வமாகவே இருங்கள். என் தெய்வம் நாராயணன் எங்கும் எப்போ தும் ஸாஸ்வதமாக இருப்பவன். ஆதி அந்தமில்லாத அனாத ரக்ஷகன். அவனே என் தெய்வம், என் உயிர் மூச்சு”.
”ஹாஹா, முட்டாளே, இப்போது காட்டு உன் நாராயண னை.எங்கும் எப்போதும் இருக்கிறான் என்கிறாயே இதோ நாம் நின்று கொண்டிருக்கும் இந்த என் அரண் மனை மண்டபத்தில் இருக்கிறானா உன் நாராயணன்?”
”அப்பா,உங்களுக்கு இதில் என்ன சந்தேகம். எங்கும் இருக்கும் நாராயணன் இங்கேயும் இருக்கிறான். அவனை வழிபடுங்கள்”
”நிறுத்து. உன் தலை துண்டாக விழும் முன் உன் நாராயணனை ரெண்டு துண்டாக்கி உன் முன்னே போடுகிறேன். எங்கும் இருக்கிறான் இங்கே கூட என்று சொல்கிறாயே, உன் நாராயணன் இதோ என் எதிரில் இருக்கும் இரும்பு தூணிலும் கூட இருப்பானா?”
”சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்டகோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன்; இந் நின்றதூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத் தன்மை காணுதி விரைவின்”என்றான்; “நன்று”எனக் கனகன் நக்கான்.”
”அப்பா, தூண் என்ன, சிறிய சாண் , அணு, அதை நூறு கூறாக பிளந்தால், அந்த ஒவ்வொரு கூற்றிலும் உள் பகுதியாக இருப்பது மட்டும் அல்ல, நீ நாராயணன் எங்கிருக்கிறான் என்று கேட்டாயே அந்த உன் சொல்லி லும் கூட என் நாராயணன் இருக்கிறான் அப்பா”
கோபத்தின் உச்சத்தில் இருந்த ஹிரண்யகசிபு எதிரே இருந்த தூணை வாளால் வெட்ட அதில் இருந்து எந்த கணமும் வெளிப்பட தயாராக இருந்த மஹா விஷ்ணு நரசிம்மனாக உருக் கொண்டு,ஹிரண்யனை அவன் கேட்ட வரம் தப்பாமல் மடியிலிட்டு கூரிய நகங்களால் வயிற்றைக் கிழித்து ஒரு சொட்டு ரத்தம் கீழே வீழா மல் அவனைக் கொன்றார் . இதைக் கண்ணால் பார்த்து அதிசயித்த, பயந்து போன, அசுரர்கள் அனைவரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள்.
நரசிம்மன் ஹிரண்யகசிபுவை முடித்து ப்ரஹ்லாதன் பக்கம் திரும்பி
”என் செல்வா, குழந்தை, ப்ரஹ்லாதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் தருகிறேன்” என்கிறார்.
”பிரபு, ஸ்ரீமன் நாராயணா உங்களை இப்படி ஒரு திவ்யா லங்கார உருவில் பார்த்த ஆனந்தத்துக்குப் பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்? ஒன்றுமே வேண்டாம். பகவானே இந்த உலகத்தில் எதையும் நான் விரும்ப எனக்கு ஆசை காட்டாதீர்கள்”
‘இல்லை ப்ரஹ்லாதா, நான் உன் முன் தோன்றினால், நீ ஏதாவது என்னை கேட்டே ஆகவேண்டும். கேள்”
”பிரபு, ஸ்ரீமன் நாராயணா, இந்த உலகத்தில் எல்லோ ரும் எதையெல்லாம் ஆசை ஆசையாக வேண்டுவார் களோ அத்தனை ஆசையோடு நான் கேட்கிறேன். நீங்கள் எப்போதும் என் மனதிலேயே பாசத்தோடு இருக்க வேண்டும். என் பக்தியை பரிபூர்ணமாக ஏற்று என்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் அது தான் எனக்கு வேண்டியது” என்றான்.
”சரியாக கேட்டாய் ப்ரஹ்லாதா, என் உண்மையான பக்தர்கள் இம்மையிலும் மறுமையிலும் எந்த ஆசை யும் இல்லாத வர்கள். இந்த உலகத்தில் உனது காலம் முடியும் வரை பக்தியோடு இரு. பிறவி முடிந்ததும் உனக்கு மறுபிறவி கிடையாது என்பதால் நேராக என்னை வந்து அடைவாய்” என்று அருளினார் மஹா விஷ்ணு நரசிம்மனாக.
பிரஹலாதன் ஹிரண்யனுக்கு பிறகு வெகுகாலம் ராஜாவாக வாழ்ந்து எல்லோரையும் ரக்ஷித்து நாராயண பக்தியோடு வாழ்ந்து நாராயணனையே வைகுண்டத் தில் சென்றடைந்தான்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;