
மதுரை மீனாக்ஷி – நங்கநல்லூர் J K SIVAN
நமக்கு அலைமகள், கலைமகள், மலைமகள் எப்படி நெருக்கமோ அப்படி காசி விசாலாக்ஷி, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாக்ஷி. இன்று மதுரை மீனாக்ஷி பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
ஒரு காலத்தில் மீனாக்ஷியின் பெயர் தடாதகை (மீனைப்போல் கண்ணுடையாள்) , அங்கயற்கண்ணி, கயல்விழி, மற்றும் காமக்கோட்டம் உடைய திரு ஆலவாய் நாச்சியார். மதுரையின் பெயர்கள்; கடம்பவனம், திருஆலவாய். நான்மாடக்கூடல், வெள்ளியம்பலம்,
மலயத்வஜ பாண்டியன், அவன் மனைவி காஞ்சனமாலை இருவரும் புத்ர பாக்யம் இல்லாமல் வாரிசு வேண்டி ஒரு யாகம் பண்ணினார்கள். யாக குண்டத்திலிருந்து மூன்று வயது பெண் குழந்தை மூன்று மார்பகங்களுடன் தோன்றினாள். சிவன் கனவில் தோன்றி ”பாண்டியா, இந்த பெண்ணை நீ ஆண் வாரிசு என கருதி வளர்த்து வா. மதுரையை ஆள்பவள் இவள். கல்யாண நேரம் நெருங்கும்போது எவன் அவள் கணவனாக தகுந்தவனோ அவன் வரும்போது அவளது மூன்றாவது மார்பகம் மறையும்” என்றார் .
விஷ்ணுவின் சகோதரி மீனாக்ஷி. அவளுக்கும் ஸுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடத்தி கொடுத்தவர் மஹா விஷ்ணு.
மதுரை பாடல் பெற்ற ஸ்தலம். சங்ககாலப் புகழ் கொண்ட பழைய நகரம் மதுரை. சிவன் பெயர் மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரர். பிரதான தெய்வம் மீனாக்ஷி அம்மன். சிவனுக்கு மற்ற பிரபல பெயர்களும் அநேகம் உண்டு. அந்த ஊர் மக்கள் இன்றும் தங்கள் பெயராக வைத்துக் கொள்பவை உங்களுக்குத் தெரிந்த ‘சொக்க லிங்கம், சொக்கநாதன், மீனாட்சிசுந்தரம், சோமசுந்தரம், கல்யாண சுந்தரம், சுந்தரலிங்கம், சுந்தரம், ஷெண்பகநாதன், அடியார்க்கு நல்லான். விளையாடுவான், அழகிய சொக்கன், கடம்பவனம், மதுரேஸ்வரன்’ …,இன்னும் எத்தனையோ.
எப்போது இஸ்லாமிய மத வெறி பிடித்த கொள்ளைக்காரர்கள் பாரதத்தில் கால் வைத்தார்களோ அப்போது பிடித்தது சனி . ஆரம்பித்தது ஹிந்து ஆலய க்ஷீணம், நசிவு. 13ம் நூற்றாண்டில் மத்திய இந்தியா, தெற்கே தமிழகம் வரை கொள்ளை, ஆலய இடிப்பு, விக்ரஹ உடைப்பு, எல்லாம் தொடர்ந்தது. மதுரை சுல்தான் ஆட்சி சிறிது காலமே நீடித்தது. நல்லவேளை விஜயநகர ராயர்கள் பலத்துடன் அவர்களை ஒடுக்கி விரட்டினார்கள்.
மாலிக் காபூர் தெற்கே பெரும் படையுடன் வந்தவன் சிதம்பரம், ஸ்ரீரங்கம், விருத்தாசலம், ராமேஸ்வரம் ஆலயங்களையும் விட்டு வைக்கவில்லை. தங்கம் வெள்ளி ஆபரணங்கள் சகலமும் கொள்ளையடித்தான். அந்த போறாத காலத்தில் தான் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயம் அறுபது வருஷங்கள் மூடப்பட்டே இருந்தது. (1335–1378). கோரி பாளையம் மசூதிக்கோ திருப்பரங்குன்றம் மலை மீது மசூதி சமாதிக்கோ ஒரு ஆபத்தும் இல்லை.
நமது அர்ச்சகர்கள் மீனாக்ஷி சந்நிதியை மறைத்து சுவர் எழுப்பி சாமர்த்தியமாக அம்பாள் சிலை பின்னமாகாமல் காப்பாற்றினார்கள் . இதே கதை தான் ஸ்ரீரங்கத்திலும் நடந்தது..
மதுரை நகரத்தில் வைகைக் கரையில் பாண்டியன் சடையவர்மன் குணசேகரன் என்ற ராஜா 12ம் நூற்றாண்டு தொடக்கத் தில் கட்டிய சிவாலயம், 1231ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் பெரிதாக கட்டப்பட்டது .1595ல் நாயக்கர்கள் காலத்தில் குமார க்ரிஷ்ணப்பர் ஆட்சியில் புது உருவம் பெற்றது. 14ம் நூற்றாண்டில் திருமலைநாயக்கர் காலத்தில் புனரமைக்கப்பட்டது.
14ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் மாலிக் காபூறார் ஆக்கிரமிப்பால் ஆலயம் சிதிலம் அடைந்தது.
16ம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கர் ஆட்சியில் ஆலயம் புனருத்தாரணம் பெற்றது. ராணி மங்கம்மாள் காலத்தில் சீர் பெற்றது. வெள்ளைக்காரர்கள் ஆண்டபோது கிருஸ்துவ மத பிரச்சாரம் தீவிரமாக இருந்தும் முயற்சி வெற்றி யடைய வில்லை.
இப்போது 14 ஏக்கரா பரப்பில் உள்ள மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு நாலு வாசல். 14 கோபுரங்கள், (4 ஒன்பது நிலை,1 ஏழு நிலை, 5 ஐந்து நிலை, 2 மூன்று நிலை, 2 ஒரு நிலை கோபுரங்கள்), தெற்கு கோபுரம் 170 அடி உயரம். ஆயிரங்கால் மண்டபம் அநேக சிற்பங்கள், அற்புத வேலைப்பாடுகள் கொண்ட சிலைகள், சித்திரங்கள், மனோரம்யமாக காட்சி தருகிறது. மடங்கள், ஆதீனங்கள், பொதுமக்கள் ஆதரவில் 1995ல் கும்பாபிஷேகம். புனருத்தாரணம் நடைபெற்றது.
மதுரை பொற்றாமரைக் குளம் சங்ககாலப்புகழ் பெற்றது. ஆதி தீர்த்தம், சிவகங்கை, உத்தம தீர்த்தம் என்றெல்லாம் கூட பெயர் உண்டு. 165 x 120 அடி நீள அகலமானது.
ஆலயத்தில் அஷ்டசக்தி மண்டபம் ரெண்டு ராணிகளால் கட்டப்பட்டது.கிழக்கு கோபுரம் அருகே உள்ளது. அஷ்டசக்திகள்; கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி , யஞ ரூபிணி, ஷ்யாமளா, மஹேஸ்வரி, மனோன்மணி.
கிளிக்கூண்டு மண்டபம் என்றும் சங்கிலி மண்டபம் என்ற பெயரோடு ஒரு சின்ன மண்டபம் மீனாக்ஷி சந்நிதிக்கு அருகே இருக்கிறது. 1623 ல் முத்து வீரப்ப நாயக்கர் கட்டியது. வீர வசந்த ராய மண்டபம். ஆயிரங்கால் மண்டபத்துக்கு தெற்கே இருக்கிறது. அதுவும் மேலே சொன்ன நாயக்கர் கட்டியது தான். அதில் ஜம்மென்று ஒரு நந்தி சுந்தரேஸ்வரர் சந்நிதியை பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறது. இந்த மண்டபத்துக்கு தெற்கே ஒரு கல்யாண மண்டபம். வருஷாவருஷம் சித்திரை திருவிழாவில் இங்கே சுந்தரேஸ்வரர் மீனாக்ஷி கல்யாணம் நடைபெறும். கிழக்கு வாசலுக்கு வெளியே புது மண்டபம் என்று ஒன்று. அதன் இன்னொரு பெயர் வசந்த மண்டபம். 17ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கர் கட்டியது. 124 தூண் கொண்டது. அற்புத சிற்பங்கள் கொண்டது. என்ன பிரயோஜனம். வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு எதையும் சரியாக பார்க்க முடியவில்லையே. கொலு மண்டபத்தில் வருஷா வருஷம் நவராத்ரி கொலு வைபவம் நடக்கும். 1565ல் சிட்டியப்ப செட்டியார் கட்டியது.
ஆறுகால பூஜை நடக்கும் ஆலயம். ஆயிரங்கால் மண்டபத்தில் (மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்றும் பெயர்) 985 சிற்பங்கள் கொண்ட தூண்கள்.மீதி 15 தூண்கள் ரெண்டு சந்நிதிகளில் அடக்கம். இந்த மண்டபத்தைக் கட்டியவர் அரியநாத முதலியார். விஸ்வநாத நாயக்கரின் மந்திரி. (1559–1600). குதிரை மேல் முதலியார் சிலையை மண்டப முகப்பில் காணலாம். இங்கே விசித்திரமானயாளி உருவம் காணலாம். சிங்க உடம்பு, யானை தலை, கருடன் ரெக்கை, பாம்பு வால். , சப்த ஸ்வர தூண் கல்லடி பட்டு அழியாமல் காக்கப்பட்டுள்ளது. உற்சவ நாயனார் மண்டபம் மற்றும் மகாமண்டபத்தின் முன் உள்ள ஆறு தூண் மண்டபம் எல்லாமே 15ம் நூற்றாண்டில், சுந்தரத்தோளுடைய மாவலி வானதிராயர் கட்டியது. முக்குறுணி விநாயகர் பற்றி ஒரு தனி கட்டுரையே எழுத வேண்டும். பஞ்சசபையில் மதுரை ஆலயம் வெள்ளியம்பலம். கால்மாற்றி ஆடிய ஸ்தலம். வன்னியடி நடராஜர் மண்டபம், அன்னக்குழி மண்டபம் ஆகியவை செல்லப்பன் மாணிக்கத்தால் (ஆணல்ல, ஒரு பெண் பெயர்) 16ம் நூற்றாண்டு உருவானது. மூர்த்தியம்மன் மண்டபம், நந்தி மண்டபம் ஆகியவை கிருஷ்ணப்ப நாயக்கரால் உருவானது. (1564–1572) முதலி பிள்ளை மண்டபம், அல்லது இருட்டு மண்டபம் நீளம் அகலம் ஜாஸ்தியானது. முத்து பிள்ளை 1613ல் கட்டியது .மங்கையர்க்கரசி மண்டபம் புதுசு. இதற்கு தெற்கே போனால் சேர்வைக்காரர் மண்டபம். தெரியும். மருது சகோதரர்கள் கட்டியது 1795ல். ஸுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு எதிரே ‘டம் டம்’ என்று பெரிய சப்தம் கேட்கும் நகரா வாத்ய மண்டபம் இருக்கிறதே அதை கட்டியவர் அச்சய ராயர் எனும் ராணி மங்கம்மாளின் மந்திரி 1635ல். இன்னும் நான் சொல்லாத விஷயங்கள் அநேகம் இருக்கிறது. அப்பப்போ ஞாபகம் வந்தால் சொல்கிறேனே.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

