
மண் மாலை – நங்கநல்லுர் J K SIVAN
புரட்டாசி சனிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். வீட்டு வாசலில் ’கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா ஆ ஆ” என்று ஆணும் பெண்ணுமாக அநேகர் மஞ்சள் ஆடை தரித்து கையில் நாமம் போட்ட மஞ்சள் துணி சுற்றிய பித்தளை சொம்புடன், நெற்றியில், உடலில் நாமங்களோடு திவ்ய கோஷமிடுவார்கள். என்னால் இயன்றதை சொம்பில் போடுவேன்.
சில சமயம் சில தெலுங்கு காரர்கள் கிருஷ்ணன், ராமன், ஆஞ்சநேயர் வேஷமிட்டு வாசலுக்கு வந்து உரத்த குரலில் பாடுவார்கள். அவர்களுக்கும் அவர்கள் போடும் தெய்வ வேஷங்களின் மேல் எனக்குள்ள பக்தியால், மதிப்பால், என்னால் இயன்ற காணிக்கை யை சொம்பில் போடுவேன். சனிக்கிழமை திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குகிற சிறந்த தினம். அதுவும் புரட்டாசி சனிக்கிழமை ரொம்பவே விசேஷம்.
இன்று ரெண்டு ஏழுமலையான் பக்தர்கள் பற்றிய விசேஷம் சொல்கிறேன். திவ்ய ப்ரபந்தம் அவர்களை பற்றி பாடுகிறது. சொல்கிறது.
நமது சென்னை மற்றும் பிற அண்டைய பகுதிகள் எல்லாமே ஒரு காலத்தில் தொண்டமைமண்டலம் எனும் பெரிய ராஜ்யத்தில் அடக்கம். தொண்டைமண்டல ராஜா தொண்டமான் எனும் பட்டப்பெயர் கொண்ட சோழ ராஜாவின் பிரதிநிதி. நான் சொல்கிற தொண்ட மான் என்கிற ராஜா ஒரு சிறந்த ஏழுமலையான் பக்தன். திருப்பதி திருமலை அவன் ராஜ்யத்தில் அடங்கிய க்ஷேத்ரங்கள். முடிந்தவரை குதிரை மேல் திருப்பதிக்கு போவான்.
வேங்கடேசன் இந்த பக்தன் தொண்டமானுக்கு திரு மந்திரம் உபதேசித்தவர். அவன் எதிரிகளிடம் போரிட்டு வெற்றி பெற தன்னுடைய திவ்ய ஆயுதங்களான சங்கு சக்ரம் இரண்டையுமே அளித்தவர் என்பார்கள். பகவா னுக்கு பக்தன் மேல் எவ்வளவு பாசம், நேசம், என்று இது காட்டுகிறது.
இப்படி தன்னுடைய சங்கு சக்ரத்தை தொண்டமானுக்கு கொடுத்துவிட்டு வெறும் கையோடு பெருமாள் வெகுகாலம் நின்றார். அதனால் இது பெருமாள் சிலையா, சைவ கடவுள் வேங்கட சுப்ர
மணியனா? என்று பல பக்தர்களுக்கு சந்தேகம். சர்ச்சை வேறு உருவாகியது.
”பெருமாளே, இந்த சர்ச்சை,சந்தேகம், தீர்வதற்காக நீ தயவு செய்து எங்களுக்காக மீண்டும் சங்கு சக்ரம் தரிக்க வேண்டும் ” என்று ராமானுஜர் வேண்டிக் கொண்டதை ஏற்று, வேங்கடேசன் மீண்டும் சங்கு சக்ரதாரியானான் என்று சொல்வதுண்டு.
தொண்டமான் ஏழுமலையானுக்கு பெரிய கோவில் கோபுரத்தோடு கட்டினான். திருமலை க்ஷேத்ரம் அற்புதமாக உருவாகியது. தெருக்கள் வீடுகள் வசதிகள் காட்டில் உருவாகியது. ராஜா அல்லவா? தொண்டமான் தங்க தாமரைகள் செய்து ஸஹஸ்ரநாம மாலை அணிவித்தான். தனது பக்தியின் அவனுக்கு பெருமிதம். கொஞ்சம் கர்வமும் உண்டானது. பெருமாள் சும்மா இருப்பாரா? தொண்டமானுக்கு ஒரு பாடம் கற்பித்தா ராம். எப்படி தெரியுமா?
ராஜா ஒருநாள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்யும் போது, அவன் தங்கத்தால் செய்து அலங்கரித்த தங்க தாமரை மொட்டுகள் மாலை மேல் மண்ணால் செய்யப் பட்ட களிமண் மலர்கள் கொண்ட மாலை மூடியிருந் தது. ராஜாவுக்கு ஆச்சர்யம். ஏமாற்றம் வேறு.!
”அடாடா, யார், இப்படி அருமையான தங்கத்தாமரை மாலை மேல் களிமண் தாமரை மாலையைப் போட்டு மறைத்தது? எந்த பக்தர் இப்படி செய்தவர்? ”
மனம் உடைந்த தொண்டமான் ஆட்களை அனுப்பி அப்படி செய்தவரை கண்டுபிடிக்க அனுப்பி அவர்கள் எங்கும் தேடியும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. ஆனால் பெருமாளே தொண்டமான் கனவில் வந்தார்.
”அடே, தொண்டமான், இந்த மலைக்கு அருகே குரவை என்ற பெயர் கொண்ட ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அங்கே பீமன் என்ற சட்டி பானை செய்யும் குயவன் ஒருவன் இருக்கிறான். அவனும் உன்னைப்போல் என் பக்தன். தினமும் தனது அன்றாட வேலை முடிந்தபிறகு மண்ணால் தாமரை மொட்டுகள் மலர் மாலை பண்ணி எனக்கு சாத்துபவன். அவன் வீட்டிலேயே என்னுடைய உருவ விக்ரஹம் களிமண்ணால் பண்ணி அதற்கு அன்றாடம் களிமண் தாமரை மலர் மாலை சாத்து
பவன். அவன் பக்தியையும் உனக்கு உணர்த்தவே இங்கே அந்த மாலையை அணிந்து இங்கே உனக்கு காண்பித்தேன்” என்றார்.
வைணவ ஆச்சார்யர்கள் அந்த குயவரை ‘குறும்பறுத்த நம்பி” என பாடுகிறார்கள். குறும்பு என்றால் இங்கே அஹங்காரம். தொண்டைமானின் கர்வ பங்கம் நிகழ்த்தியதால்.
அந்த பக்தருக்கு ‘குரவை நம்பி என்றும் பெயருண்டு.
தொண்டமான் குரவை கிராமத்துக்கு ஓடினான். பகவான் ஏழு மலையான் மனம் கவர்ந்த அந்த பக்தர் குரவை நம்பியை கண்டுபிடித்து அவர் காலில் விழுந்து ஏழுமலையான் தன்னை அனுப்பியதை அறிவித்து அவர் பக்தியை பெருமாளே மெச்சியதையும் உணர்த்தி னான்.
” மஹாராஜா, நீங்கள் அற்புதமாக செய்த தங்க தாமரை மலர் ஹா ரத்தை பெருமாள் அணிந்த அழகை ஒருநாள் கண் குளிர பார்த்து மகிழ்ந்து என்னால் இயன்ற வரை எனக்கு முடிந்த களிமண் தாமரை மலர் ஆயிரம் கொண்ட மண் மாலையை அணிவிக்க வேண் டும் என்ற ஆசை உண்டாகியது. ஆகவே தான் தினமும் களிமண் தாமரை மலர் ஹாரம் செய் து அணிவித்து மகிழ்ந்தேன். அது பெருமாளுக்கும் பிடித்திருந்தது என்று அறிந்து நீங்கள் சொன்னதை கேட்டதும் நான் ரொம்ப பாக்ய சாலி என்று ஆனந்தம் பெறுகிறேன். பகவானுக்கு பிடித்ததை முடிந்த அளவுக்கு நான் அளித்து மகிழ்ந்த பிறகு எனக்கு இனி இந்த பிறவியில் ஆகவேண்டியது எதுவுமில்லை ”
குரவை நம்பி அன்றே தனது மானிட ஸ்தூல சரீரத்தை விட்டு மோக்ஷம் எய்தினார்.
அர்ச்சாவதார மூர்த்தியை வணங்குவது நம் போன்ற பாமரர்களுக்கு எவ்வளவு பெரிய புண்யம் பாக்யம் என்று புரிகிறதா?. கோவில்களுக்கு அடிக்கடி போக வேண்டும். அதற்கு தான் லக்ஷோப லக்ஷம் பக்தர் களுக்கு தினமும் வெங்கடேசன் டீ திருப்பதி திருமலையில் காட்சி தருகிறான்.
கிருஷ்ணன் கீதையில் சொன்ன 9.26 ஸ்லோகத்தை இப்போது படித்தால் ஜம்மென்று அர்த்தம் புரியும்;
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: || 26||
patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhatitadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ
’பக்தியோடு எவன் எனக்கு ஏதோ ஒரு இலை , சிறிய பழம், துளியூண்டு ஜலம் ”அவனால் முடிந்த அளவுக்கு மனதார அளிக்கிறானோ, அவனது பக்தியில் நான் சந்தோஷமடைகிறேன். எனக்கு அதுவே எதேஷ்டம்..” என்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

