KOLLUR MOOKAMBIKA J K SIVAN

கொல்லூர் மூகாம்பிகை.- நங்கநல்லூர் J K SIVAN

இன்று கடைசி ஆடி வெள்ளி. அம்பாளுக்கு உகந்த நாள். பாரத தேசம் சுதந்திரம் பெற்று 79வருஷ ஆரம்பம். என் தந்தையாரின் ச்ராத்தம். இந்த மூன்றையும் நான் இன்று பொறுப்பாக பங்கேற்று என் கடமையை புரிந்தேன்.
பாரத தாய்க்கு மனதார என் நமஸ்காரங்களை செலுத்தி அவளுக்கு நாம் சத் புத்ரர்களாக செய்ய வேண்டியதை ஒரு கட்டுரையாக வெளியிட்டேன்.
என் தந்தைக்கு பக்தி சிரத்தையாக ஸ்ராத்தம் செய்தேன்.
கடைசி ஆடி வெள்ளி ஆகிய இன்று தாய் மூகாம்பிகை பற்றி சில விஷயங்களை இதோ பகிர்கிறேன்.
மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள் மூகாம்பிகையை தரிசிக்காத ஹிந்துக்கள் இல்லை எனும் ஆளாளுக்கு எண்ணற்றோர் கர்நாடகாவில் உள்ள கொல்லூர் க்ஷேத்ரம் சென்று அவளை தரிசிக்கிறார்கள். சிவனிடம் வரம்பெற்ற கௌமாசுரன் எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் துன்பம் தவிர்க்க அசுரகுரு சுக்ராச் சாரியார் அவன் ஒரு பெண்ணால் கொல்லப்படுவான் என்று கூறுகிறார். பார்வதி தேவியே பெண்ணாக இதற்கென தோன்றுவாள் என்று சொல்கிறார். அசுரன் மிகவும் கடினமாக தவமிருந்து வரம் பெறும் நிலையில் அம்பாளுக்கு தெரிகிறது ”ஆஹா இந்த அசுரன் வரம் கேட்டு பெற்றால் உலகத்துக்கு நாசம்” என்று. எனவே தவப்பயனாக சிவன் தோன்றி வரமளிக்கும் சமயம் அம்பாள் கௌமாசுரனை பேச்சற்ற ஊமையாக்கு கிறாள்.
மூகம் என்பது பேசாமை. ஊமை. அம்பாள் சக்தியால் கௌமாசுரன் மூகாசுரன் ஆகிவிட்டான். கொல்லூரில் அம்பாள் அவனை கொல்கிறாள் மூகாம்பிகை என்று எல்லோராலும் வணங்கப்படுகிறாள். அந்த இடத்திற்கு ”மரண கட்டே” என்று கன்னடத்தில் பெயர். அம்பி கைக்கு இங்கே சங்கு சக்கரம் கைகளில் உண்டு. பத்மாசனத்தில் அமர்ந்த கோலம்.
கொல்லூர் சிவன் ஸ்வயம்பு லிங்கம். சிவனோடு சேர்ந்த சக்தி என்பதால் கொல்லூர் தேவி அபார சக்தி படைத் தவள். இன்னொரு விசேஷம் இங்கே என்ன தெரியுமா? அம்பாளுடன் ப்ரம்ம விஷ்ணு சிவன், லட்சுமி சரஸ்வதி பார்வதி சக்தியும் சேர்ந்துள்ளது. ஆதி சங்கரர் ஸ்தாபித் த சக்தி பஞ்சலோக அம்பாள் இங்கே உள்ளாள். ஆதி சங்கரர் சௌபர்ணிகா நதியின் கரையில் யந்த்ரம் பிரதிஷ்டை செய்து ஸ்தாபித்து அம்பாளின் சர்வ சக்தி அங்கே வியாபித்து இருக்கிறது என்று நம்பிக்கை.
1200 வருஷ கோவில் இது. ராணி சென்னம்மா கட்டினது . ஆலயத்தில் அம்பாள் சந்நிதி தவிர லக்ஷ்மி மண்டபம் நான்கு ஸ்தம்பங்கள் (135 அடி ) கொண்ட நீளமான மண்டபம். தூண்களில் சிற்பங்கள் ஏராளம். ஆமை முதுகில் நிற்பது போல் ஒரு உயர தீபஸ்தம்பம். 21 வட்டங்கள் கொண்டது.
வெளிப்பிரகாரத்தில் முருகன், சரஸ்வதி, ப்ராண லிங்கேஸ்வரர், ப்ராணதார்த்தீஸ்வரர் , வீரபத்திரன் ஆகியோருக்கு சந்நிதிகள் .
உடுப்பியிலிருந்து 73 கி.மீ. முருதேஸ்வரிலிருந்து 60 கி.மீ. மங்களூரிலிருந்து 133 கி.மீ. குடஜாத்ரி மலைச் சிகர கோவில் . பரசுராமர் ஸ்தாபித்த 7 முக்தி ஸ்தலங்களில் இது ஒன்று.
நிறைய பேரை நான் கர்நாடக பக்தி புனிதப் பயணத் தில் அழைத்து சென்றிருக்கிறேன். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜீ ஆர். மூகாம்பிகை பக்தர். ஒரு சமயம் ஒரு தங்க வாள் அம்பாளுக்கு சாற்றி இருக்கிறார்.
கோவிலுக்கு அருகே செல்லலும் சௌபர்ணிகா நதியின் ஜலம் பல மொழிகளின் சக்தி கொண்டது. சர்வ வியாதி நிவாரண குணம் உடையது. அதில் ஸ்னானம் பண்ணி வியாதி குணமானவர்கள் அநேகம்.
எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்துபவள் கொல்லூர் அம்பாள் மூகாம்பிகை; ஒரு சிலவற்றை கோடிட்டு காட்டுகிறேன்;
ஒரு பக்தர், மிகவும் ஆபத்தான நோயால் பாதிக்கப் பட்டிருந்தார். மருத்துவர்கள் “இனி எதுவும் செய்ய முடியாது” என்று கைவிட்டுவிட்டார். குடும்பம் கொல்லூர் ஓடியது. மூகாம்பிகை அம்மன் முன் தீபம் ஏற்றி, “உயிரை காப்பாற்றுங்கள்” என வியாதியஸ்தர் பிரார்த்திக்க, அன்று இரவே அம்பாள் கனவில் தோன்றி, ”சௌபர்ணிகா நதியில் குளித்து, கோவிலில் கிடைக்கும் கஷாய ப்ரசாதம் குடி ” என்றாள். மறுநாளே அம்பாள் சொல்படி செய்ய சில நாட்களில் நோயாளி முற்றிலும் குணமடைந்தார்.
மஹா லக்ஷ்மி என்ற பெண்ணுக்கு பல வருஷங்களாக பிள்ளைப்பேறு பாக்யம் இல்லை. கணவருடன் கோல்லூர் வந்து, 41 நாட்கள் “மஹாத்ரிபுரசுந்தரி மந்திரம்” ஜபம் செய்து, தினமும் அம்மனுக்கு மலர் அர்ச்சனை செய்தார். அம்பாள் கனவில் தோன்றி, “உன் கர்ப்பம் விரைவில் நிறைவேறும்” என்று அருளுரை கூறினாள். அந்த பெண் அந்த முடிவுக்குள்ளேயே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அப்புறம் வருஷா வருஷம் குழந்தையோடு அம்பாளை தரிசித்தார்.
ஒரு சிறுவன் பிறவி ஊமையாக இருந்து மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்கவில்லை. மூகாம்பிகையிடம் வந்தார்கள் . அம்மா கை விடுவாளா ? அம்பாளுக்க்கு அர்ச்சனை முடிந்தது. கோவில் பிரசாதம் பையனுக்கு கொடுத்து குடி என்கிறார் அர்ச்சகர். அந்த பையன் முதல் வார்த்தை பேசினான். “அம்மா” . அவன் அம்மா வையும் அம்பாளையும் அல்லவா கூப்பிட்டிருக்கிறான்.
குண்டபுரம் அருகே உள்ள சில மீனவர்கள், கட்டுமரத் தில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது பெரிய புயல் அடித்தது. படகுகள் மூழ்கும் நிலையில் இருந்தது. அவர்களில் ஒருவன் மனதில் “மூகாம்பிகை தாயே, எங்களை காப்பாற்று” என்று பிரார்த்தித்தான். அதிசயமாக, புயல் திடீரென அமைதியாகி, அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு வந்தனர். இன்றும் அந்த கிராமத்தார்கள் கொல்லூர் மூகாம்பிகைக்கு விசேஷ பூஜை செயகிறார்கள்.
கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பது எவ்வளவு நூற்றுக்கு ஆயிரம் மடங்கு சத்தியமான வாக்கு.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;