
மார்கழிச் செல்வி 5 – நங்கநல்லூர் J K SIVAN
வேதத்தின் வித்து
தனது உடல் பொருள் ஆவி மூன்றையுமே அரங்கனுக்கு அர்ப்பணித்த கோதை எனும் ஆண்டாளை ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டுமென்றால் ”கோ(விந்)தா என்று சொன்னால் போதும். கோவிந்தனோடு ஐக்கியமாகி கொண்டு விட்டாள் கோதா. “கோதா” என்ற பெயரே “கோ(விந்) தா ” என்ற அந்த மாயாவியின் பெயருக்குள் அடங்கிவிட்டதே. அவனை வணங்கும் நாம் அவளையும் சேர்த்தே தான் வணங்குகிறோம். இந்த 30 பாடல்களையும் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகளாக ஆண்டாள் இந்த திருப்பாவையை எழுதவில்லை. தன்னை கிருஷ்ணன் காலத்திற்கு கொண்டு சென்று அப்போது அங்கு வாழ்ந்த கோபர்கள் கோபியர்கள் எனப்படும் பசு கன்று மேய்க்கும் ஆயர் குலத்தில் ஒரு பெண்ணாக பாவித்து மற்ற சிறுமிகளுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்றும் கிருஷ்ணனின் அருளைப் பெற்ற சிறுமியாகவே இந்த திருப்பாவை பாசுரங்கள் அமைந்தன. மார்கழி 30வது பாசுரத்தில் தான் ஸ்ரீ ஆண் டாள் இந்த பாசுரங்களை எவர் தப்பின்றி உண்மையான பக்தியோடு இறைவன் மேல் பாசத்தோடு மார்கழி மாதம் பூரா இசைக்கி றார்களோ அவர்கள் அந்த மாதவன் கேசவன் என்றெல்லாம் ஆயிர நாமங்கள் கொண்ட கோவிந்தனின் அருளை, சதுர்புஜ நாராயணின் ஆசியைப் பெறுவர். குறையொன்றும் இல்லாத கோவிந்தன் தாள் சேர்வர் இது நிச்சயம், உறுதி, நம்பலாம் என்றுமுடிக்கிறாள். திருப்பாற்கடலில் விளைந்த திரு அல்லவா அவள் — ஆண்டாளாக அவதரித்து திருப்பாவை தந்தவள்!!
எப்போது விஷ்ணு சித்தர் என்கிற பெரியாழ்வார் கோதையை எடுத்து பெண்ணாக வளர்த்தாரோ அவள் விஷ்ணுசித்தரின் குலத்தை சேர்ந்தவள் தானே!. அவள் யார்? வேண்டியதை உடனே வழங்கும் கற்பக தரு, அரங்கன் அடியாரை ரட்சிக்கும் அரங்கனை அணைந்து கொண்டு படரும் கொடி தான் கோதை. அவள் பூமி தேவியா, லக்ஷ்மி தேவியா, யாராகத்தான் இருந்தால் எனக்கென்ன? நிர்கதியான எனக்கு கோதை ஒருவளே கதி. அவளையே நான் சரணாகதி பண்ணுகிறேன்.” என்று பவ்யமாக பாடுகிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகர் எனும் சுவாமி தேசிகன். .
நாம் எதை நினைக்கிறோமோ, எதை விழைகிறோமோ, மனம் பூரா நிரப்பிக்கொள்கிறோமோ நாம் அதுவே ஆகிறோம், என்பது தெரிந்தது தானே. கிருஷ்ணன் அதைத்தானே கீதையில் தெளிவாக சொல்கிறான்.
திருப்பாவை தந்த கோதை நாச்சியார் காட்டிய வழியிலே, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கும் நாம் அதைக் கடைத்தேற்ற முயற்சிக்க வேண்டும். திருப்பாவை 30 பாசுரங்களையும் ஆண்டாள் எழுதியபோது தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத்தில் அந்த ஊர் சிறுமிகளில் ஒருவளாக உருவகபடுத்தி பாவை நோன்பு நோற்றபோது அவள் கிருஷ்ணனின் பெருமையை உணர்த்தியது அல்லவா?.
சொட்டு சொட்டென்று மழை. குளிர்ந்த அமைதி. எங்குமே எவரின் நடமாட்டமும் இல்லை. அந்தகாலத்தில் ஒரு வேலையும் செய்ய முடியாத இத்தகைய மாதம் இறைவனுக்கென்றே, இறை சிந்தனைக்கென்றே ஒதுக்கப்பட்டது. மார்கழியில் சுப லௌகீக நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டன. காரணம் மார்கழி மோசமான மாதம் என்பதால் அல்ல. மோக்ஷம் தரும் மாதம் என்பதால் காரியங்கள் மாத முழுதும் நாராயணன் நினைவுக்காகவே அவன் அருளைப் பெற பிரத்யேகமான சிறந்த மாதமாக மார்கழி ஏற்றுக்கொள்ளப்பட்டது ”மாஸானாம் மார்கசீர்ஷாம்” ; மாதங்களில் மாதவன் மார்கழியானதால் தான்.
கிருஷ்ணன், ராமர், போன்றோர் கூட அவதாரம் எடுக்கும்போது ஒரு மானிட பெண்ணின் கர்ப்ப வாசம் அவசியமானது. தாயாருக்கோ நினைத்த மாத்திரத்தில் மானிட ஜென்மம் சாபல்யமாயிற்று. சீதை அவ்வாறு தான் ஜனகனால் கண்டெடுக் கப் பட்டாள். பூமா தேவியோ கோதையாக அவதரிக்கையில் துளசிவனத்தில் தான் பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப் பட்டாள்.
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை மார்கழி முழுதுக்குமானது. முழுக்க முழுக்க கிருஷ்ணன் நினைவிலேயே ஈடுபட்டது. ஈடுபட வைப்பது. எனவே சிறந்த கிருஷ்ணானுபவம் பெற திருப்பாவை உசிதமானது.
ஆண்டாள் என்று நினைக்கும்போது இப்படியும் ஒரு அசாத்திய பெண்ணா என்று ஆச்சர்ய படவைப்பவள். ஒரே பெண் ஆழ்வார். முப்பது திருப்பாவையும் 143 பாசுரங்கள் அடங்கிய நாச்சியார் திருமொழியும் எழுதி நாலாயிர திவ்ய பிரபந்தத்திலும் நமது மனத்திலும் நீங்காத இடம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் தங்களை பெண்ணாக பாவித்து பரகால நாச்சியார், பராங்குச நாச்சியார் என்றெல்லாம் நாயக நாயகி ரூபத்தில் பக்தியை கண்ணனிடம் காட்டினாலும் அவன் மனைவியாகவே தன்னை பாவித்து அவனைத் தன் மணாளனாக ஏற்றுக்கொண்டு பாடி அவனில் கலந்த ஆழ்வார் கோதை எனும் ஆண்டாள் ஒருவளே. தன்னை கண்ணன் வாழ்ந்த ஆயர்பாடி கோபியரில் ஒருவளாக உருவகித்து அவனை நேரில் கண்டு அவனிடம் அருள் பெற்றவள் அவனை ஆண்டு நம்மையும் ஆண்டருளும் அந்த ஆண்டாள் என்ற கோதை ஒருத்தியே.
நாச்சியார் திருமொழி ஒரு மகத்தான காவியம் எனலாம். கிருஷ்ணனை அடைய கோதை விழைவதை எளிய தமிழில் தரும் மனதை கவரும் பாசுரங்கள். ஒரு சிறப்பான விஷயம். முதலில் திருப்பாவை ”மார்கழி” என்று தொடங்குகிறது. முதல் பாசுரம் ”மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் ” என்று ஆண்டாள் தொடங்கியவள் அடுத்த தனது படைப்பான நாச்சியார் திருமொழியில் முதல் அடியாகவே ” தை ஒரு திங்கள் ”என்று கல்யாண மாசத்தில் ஆரம்பிக்கிறாள். மார்கழியில் காத்யாயனி விரதம் இருந்து நோன்பு நோற்றவள் விரத பலன் கை கூடி அந்த அரங்கனையே மணாளனாக அடைந்து விமரிசையாக திருமணம் நடப்பதாக கனா காண்கிறாள். வாரண மாயிரம் என்ற அருமையான வர்ணனை மிக்க பாசுர தொகுப்பு படிக்க படிக்க கண் முன்னே ஆண்டாள் திருக் கல்யாண கோலம் காட்சியை சுவையாக தருகிறது.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆண்டாளை பொறுமையின் பூஷணமான பூமி தேவியாகவும், கருணை பொழியும் ஸ்ரீ லக்ஷ்மி தேவியாகவும் போற்றுகிறார். ” சாக்ஷாத் க்ஷமம் காருண்ய கமலம் இவண்யம்” என்கிறார் கோதாஸ்துதியில். யாராவது பகவானுக்கு என்று பிரத்யேகமாக சாற்றுவதற்கு வைக்கப்பட்ட மாலையை தொட முடியுமா, அணிய முடியுமா?” ஆனால் அவள் அணிந்த மாலை தான் வேண்டும் என்று அந்த அரங்கனே விரும்பிக்கேட்ட பெருமையும் புகழும் கோதைக்கன்றி வேறு யாருக்காவது உண்டா? உரிமையோடு கிருஷ்ணனை ”கருப்பா” என்று கூப்பிட்டவள் அவள் ஒருவள் தான். ஏனெனில் அவனும் மகிழ்ந்து அதை ஏற்றுக்கொண்டவன் தானே. ஆண்டாளின் தமிழ் என்ன சாமான்யமானதா?. அதன் புகழ் என்ன மறந்து விட்டதா ? ”வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்” என்ற பெயர் பெற்றதல்லவா அவள் எழுத்து..
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

