
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN
மாணிக்க வாசகர்
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN
மார்கழி 3
மாதங்களில் சிறந்தது மார்கழி, பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் இந்த புனித மாதத் தில் நடராஜ தரிசனம் காணக் கண் கோடி வேண்டும்.!
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடப் போகிறது. அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வந்துவிட்டான். அவன் கடமை அன்று செல்லவேண்டிய உயிர்களை எடுத்துச் செல்வது.
தன் பிரிவால், தந்தை துக்கப் படக் கூடாதே என்பதற்காக, மார்க்கண்டேயன் ஓடிச்சென்று திருக்கடையூரில் சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண் டேயன் தப்பித்தார்.
திருக்கடையூரில் சிவன் கால ஸம்ஹார மூர்த்தியாக பெரிய உருவத்தோடு அருள் பாலிப்பதை காண்பதை எவ்வளவு நேரமும் கண் கொட்டாமல் பார்க்கலாம். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.
திருவண்ணாமலை ஒரு திவ்ய க்ஷேத்ரம். முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி.
அங்கே மார்கழி 3ம் நாள் அதிகாலையில் வழக்கம் போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி.
மார்கழி குளிருக்கும் பனிக்கும், மகேசனின் பனிமலை வாசத்துக்கும் எவ்வளவு நெருக்கம் பார்த்தீர்களா. பனி குளிர்ச் சியானது. திருவெம்பாவை மனதை குளிர வைக்கிறது. குளிருக்கு எது தேவை? உஷ்ணம். உஷ்ணம் எதிலிருந்து வரும்? அக்னியிலிருந்து. அக்னி ஸ்தலம் எது ? திருவண்ணாமலை. பனிமலையிலிருந்து அண்ணாமலைக்கு வந்து விட்டோமே. எல்லாம் அந்த ஆடலரசன் திட்டம்`
ஒரு சின்ன வேண்டுகோள் விடுக்கட்டுமா? நீங்கள் தேவார திருவாசக புராண புத்தகங்களை எடுத்து புரட்டி படிக்கப் போவதில்லை. கேட்டால் ”அதற்கெல்லாம் நேரம் இல்லை” என்பது பதிளாக வரும். அதற்கென்ன அர்த்தம்? இப்போது இல்லை என்றாவது ஒருநாள் உட்கார்ந்து படிக்க நேரம் வரும். அப்போது பார்க்கலாம்.என்பது தானே. ஆனால் அந்த நேரம் எப்போதும் வரப்போவது இல்லை. நான் ரிடையர் ஆனப்பறம் நிறைய இதெல்லாம் படிக்கப் போறேன் என்று சொன்னவர்கள் அநேகரை நான் அறிவேன். ஒன்று அவர்களது உடல் நலம் இடம் கொடுக்கவில்லை, அல்லது குடும்ப பந்தம் நேரம் ஒதுக்க விடவில்லை. அல்லது இன்னும் கூட பக்குவம் வரவில்லை. சம்பாதிக்க புத்தி போய்விட்டது. அதற்குள் பலரை மரணம் அழைத்துக் கொண்டு போய் விட்டது.
கோவிலுக்கு செல்லும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். நீங்கள் போனால் தான் அவர்கள் வருவார்கள். முக்கியமாக தாத்தா பாட்டிகள், அத்தைகள் மாமிகளுக்கு இந்த வார்த்தை. பல கோவில்களில் அற்புதமான ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவாரம், திருப்புகழ், பிரபந்தங்கள், திருவாசகம், திரு அருட்பா எல்லாம் கொட்டை எழுத்தில் படிக்க வசதியாக சுவற்றில் எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு ஐந்து நிமிஷம் குழந்தைகளோடு நீங்களும் அதெல்லாம் படியுங்கள். அத்தனையும் வேண்டாம் ஒரு சுவர் அல்லது பாதி சுவர் என்று ஒவ்வொரு தடவையும் படித்தால் கூட மனப்பாடம் ஆகிவிடும். அப்புறம் பின்னால் அர்த்தம் அசை போட்டு புரிந்து கொள்ளலாம். உள்ளே ஜீரணமாகும். எங்கள் காலத்தில் பள்ளிக்கூடத்தில் மனப்பாடம் என்று ஒரு வசதி இதற்காகத்தான் கட்டாயமாக இருந்தது.
”குனித்த புருவன் கொவ்வைச் செவ்வாயன் ” என கேட்கும்போது செவியில் தேன் பாய எழுதியதால் தான் மருணீக்கியார் எனும் சிவ பக்தர் நாவுக்கே அரசரா னார், திரு நாவுக்கரசர். நமக்கு அப்பரானார் .சைவ சமயக் குரவர்கள் பக்தி ரசம் பொங்க எழுதிய தேவார பதிகங்கள் கண் முன்னே சிவனை நரத்தனமாடச் செய்யும் எழுத்து வலிமை கொண்டவை. அண்ட சராசரமும் அசைந்து, அசைந்து ஆட மனதில் பிரபஞ்ச சுழற்சியைப் பிரதிபலிக்கும் சொல் வன்மை கொண்டவை.
திருப்பாவையோடு திருவெம்பாவையும் கலந்து தர வேண்டும் என்பது என் மனதில் இருந்த ஆசையின் வெளிப்பாடு ”சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார், சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ‘ – எவ்வளவு அர்த்த புஷ்டி நிறைந்த பாட்டு இது. என் அம்மா பாடி நிறைய கேட்டிருக்கிறேன்.
இனி திருவெம்பாவையின் 3வது பாடல்:
வெற்றிலை பாக்கு புகையிலை அதிகம் உபயோகிப் பவர்களைத் தவிர மற்றவர்களின் பற்கள் காவி நிறத்திலோ, கறுப்பாகவோ பழுப்பாகவோ இருக்க வாய்ப்பில்லை. பற்கள் என்றால் வெண்மை நிறமே கவனத்துக்கு வரும். அதுவும் அழகிய பெண்களின் பற்களை முத்து கோர்த்தது போல் இருக்கிறது என்கி றார் மணி வாசகர். அவர் பாண்டிய நாட்டுக்காரர். முத்துக் குளித்து வாரி வழங்கிய நாடு. அப்படிப்பட்ட பற்களை உடைய ஒரு பெண் விடிகாலை எல்லோருக் கும் முன்பாக எழுந்து சிவ பிரானை மனதில் இருத்தி வாய் மணக்க நெஞ்சினிக்க ”என் அப்பனே, என் ஆனந்தமே, என் அமிர்தமே, என் இனிப்பே” என்று அவனைப் பலவாறாக புகழ்ந்து பாடினால் எப்படி இருக்கும்? அவளது வார்த்தைகள் இனிமையை அல்லவோ எங்கும் காற்றில் பரவச் செய்யும். பரவசமாக்கும்?,.
3. முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.”
”அழகிய பெண்ணே, எல்லோருக்கும் முன்பாக நீ எழுந்திருந்து, உன் முத்துப்போன்ற வெண்மையான பற்கள் ஒளிவீச, வாய் திறந்து பேசுபவள். உனது இனியகுரலில் நீ பேசுவது எப்போதும் என் மனத்தை கொள்ளை கொள்கிறதடி. என் முன்னே, நீ எல்லார்க்கும் எதிராக, வந்து, ஆஹா அந்த பரமேஸ்வரனைப் பற்றி எவ்வளவு அழகாய் போற்றுபவளாச்சே. நானும் நீ சொல்வதை கொஞ்சம் திருப்பிச் சொல்கிறேன்:
“என் அத்தன், ஆனந்தன், அமுதன், ”என் அப்பன், என் தந்தை, ஆனந்த ஸ்வரூபன்” – நினைத்தாலே அமிர்த மாக இனிப் பவன்,உமாமகேஸ்வரன்”. ஆஹா, இதை விட இனிய சொல்லொன்று வாயினின்று வெளிவர முடியுமா? ” என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுபவளே, இன்னும் ஏன் இன்று கதவைத் திறக்காமல் உறங்குகிறாய்? ஏன் இன்னும் உறக்கம் உனக்கு? வாசலில் நாங்கள் வந்து நிற்பது தெரியவில்லையா, எழுந்திரு. கதவைத் திற. இந்த பெண்கள் எல்லோருமே ஈசனோடு இணை பிரியாதவர்கள். அர்த்த நாரியின் அடிமைகள். குண சீலர்கள். ஒழுக்கம் தவறாதவர்கள். சிவ பக்தர்கள்”
தூங்கியவள் எழுந்து பதிலளிக்கிறாள்.’ஆஹா, நீங்கள் என்ன புதியவர்களா? இல்லையே, அந்த பழமனாதி யின் பக்தைகள் அல்லவோ. நான் சிறிது காலமாகத் தான் உங்களை அறிந்தவள். இருந்தாலும் நானும் உங்களில் ஒருவள் அல்லவா? தயவு செய் து என்னை ஆராயாதீர்கள். நிறைய குற்றம் தென்படும். பேசாமல் என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள். அதனால் என் குறைகள் நீங்கி, என் கீழ்மை குணம் என்னை விட்டு நீங்கும். .நான் செய்த பாக்யம், நீங்களே வந்து என் கதவை த்தட்டி அந்த சிவனைப் போலவே என்னையும் தடுத்தாட்கொள்ள வந்துள்ளீர்கள்”
இதனால் ஏதாவது கெடுதல் விளையுமா என்ற ஐயம் துளியும் வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. இ தற்குப் பெயர் தான் ”சத் சங்கம்”.ரொம்ப விவரமான பெண்ணாக இருக்கிறாளே!
”அப்படி இல்லை அம்மா, உன் மனம் நாங்கள் அறியாதவர்களா. சித்தத்தை சிவன் பால் வைத்துள்ள உன் தூய அன்பு எங்களுக்குத் தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட்டுள்ளவர்கள் மகாதேவனை மனமாரப் பாடாமலா இருப்பார்கள்?.
ஆஹா நீ அழகி மட்டுமல்ல, பெண்ணே, நீ அருமை யானவளும் கூட, உன் அன்பு அந்த சிவனின் பேரன்பை நினைவூட்டு கிறதம்மா. மனத்தூய்மை கொண்டவர்களால் அல்லவோ இப்படி சித்தத்தைச் சிவன் பால் வைத்து நா மணக்க பாடமுடியும். வா பெண்ணே, நீ தான் சரியான ஜோடி எங்களுக்கு. வெளியே வா எங்களுடன் சேர்ந்து கொள். நாம் அனைவருமே ஆதி சிவன் நாமங்களை இந்த மார்கழி நன்னாளில் சேர்ந்தே பாடுவோம்.” என்கிறார்கள் தோழிகள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



