
ஆழ்வார்களின் பாசுரங்களில் தெய்வீக இன்பம்நங்கநல்லூர் J K SIVAN
எதை நாம் இன்பம் என்று கருதுகிறோம்?. உடலுக்கு சுகம் தரும் வஸ்துக் களையா? உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தன்னை மறக்கச்செய்யும் ஆத்மானுபவத்தையா?
முதல் ரகமாக இருந்தால் தெய்வத்திடம் போகவே மாட்டோம். நம்மாலேயே நம் இன்பத்தை தேடி அடைய முடியும் என்ற நம்பிக்கையில், நம் முயற்சிகள் நம்மை செயல் படுத்தும். அதனால் விளைவது ரோஜா மலரோடு இருக்கும் முள், பூவைத் தொடும்போது நம்மை துன்புறுத்துவது போல் புலன்களால் நமக்கு நேரும் கோபம், பொறாமை, துயரம்,ஏமாற்றம், ஆசை, பேராசை போன்ற துன்பங்கள். இப்படி நாம் தேடி அலைந்து துய்க்கும் இன்பங்கள் சாஸ்வதமில்லை, அழியக்கூடியவை, நம்மை அழிக்கக் கூடியவை.
இதற்கு நேர் மாறானது தெய்வீக இன்பம். அது உடல் சம்பந்தமில்லாதது,புலன்களோடு உறவில்லாதது. உள்ளத்தை இனிக்க வைப்பது. உலக ஈர்ப்புகள் அற்றது.
இப்படி இன்பம் துய்த்தவர்கள் பல மஹான்கள், யோகி கள், ரிஷிகள், ஞானிகள். அவர்களில் பன்னிருவர் ஆழ்வார்கள் என நாம் அறியும் விஷ்ணுவைப் பணிந்து போற்றும் வைணவ செம்மல்கள். பக்தியை பரிமளிக் கும் தேனினு மினிக்கும் தெள்ளிய தமிழில் அவர்கள் வழங்கியவை பாசுரங்கள். பக்தியோடு தமிழை வளர்த் தவர்கள். அவர்கள் கண்டு, கேட்டு, ரசித்து, துய்த்த பேரின்பம் தான் அவரகளுடைய பாசுரங்களில் நாம் காணும் தெய்வீக இன்பம்.
பனிரெண்டு ஆழ்வார்கள் இவ்வாறு அற்புதமாக நமக்கு பரிசளித்த பாசுரங்கள் நாலாயிரமாக திவ்யமாக
ப்ரபந்த மாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. நாலாயிரமும் அற்புதம்தான். எதைச் சொல்வது எதை விடுவது. பன்னிரண்டு ஆழ்வார்களின் பாசுரங்களில் ஒவ் வொன்று மட்டுமே படித்து ஆராய்ந்து சிந்தித்தால் நாள் கணக்கில் நேரம் தேவைப்படும். சுருக்கமாக ஒவ்வொன் றாக அனுபவிப்போம்.
முதல் மூன்று ஆழ்வார்கள் திருக்கோவலூரில் ஒரு இரவில் கொட்டும் மழையில் கும்மிருட்டில் ஒரு வீட்டு திண்ணையில் மழைக்கு ஓடுகிறார்கள்.சின்ன திண்ணை,ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் அவ்வளவு சின்னது. முதலில் பொய்கை ஆழ்வார் கண்ணில் அந்த திண்ணை பட்டதால் அதில் காலை நீட்டி சாய்ந்தார். பெருமாளை மனதில் நினைத்து ஆனந்தமாக அனுபவித்த வேளை யில் இன்னொருவர் அங்கே ஓடிவந்து மழைக்கு ஒதுங்கி னதால் அவருக்கு இடம் கொடுக்க பொய்கை எழுந்தார் உட்கார்ந்தார்.
வந்தவர் பூதத்தாழ்வார். இருட்டில் இப்படி இருவர் அங்கே இருக்க மூன்றாவதாக ஒருவரும் வந்து ஒண்டி னார். அவர் பேயாழ்வார். ஓவுரவரை ஒருவர் அறிய வில்லை. மழையோ கொட்டுகிறது, இருளில் ஒருவர் முகம் இன்னொருவர் அறிய வழியில்லை.மூவர் உட்கார இட மில்லை எனவே அந்த ஒட்டுத் திண்ணையில் மூவரும் மழை நிற்கும் வரை தாங்களும் நிற்க முடிவெ டுத்தனர்.
அப்போது தான் அங்கே மூவர் மட்டுமில்லை இன்னொரு ஆசாமியும் அவர்களை இடித்துக்கொண்டு நிற்பதை உணர்ந்தார்கள்? யார் அவர்?எப்போது வந்தார்? முதலில் வந்த பொய்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடினார். இருட்டில் விளக்கு வேண்டுமே? இந்த உலகமே அகல், அதில் சமுத்திரங்கள் தான் நெய்யாக தீபம் சூரியனின் ஒளியால் ஏற்றி பெருமாளே உன் திருவடிக்கு ஆரத்தி எடுக்கிறேன் என்று பாடினார்.
”வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று”
வெளிச்சம் போதவில்லை. மங்கலாக இருந்தது. முகங்கள் தெரியவில்லை. ஆகவே பூதத்தாழ்வார் சும்மா இருப்பாரா ? முதலில் பாடிய வைணவரைப்
போலவே தானும் ஒரு பாசுர தீபம் ஏற்ற முனைந்தார்
முதலில் பாடிய வைணவர் பாசுரத்தை சற்று மாற்றி இன்னும் பெரிய தீபமாக்கி இருட்டில் நாலாவது ஆள் யார் என்று பார்க்கலாமே?
”அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக,
இன்புறு சிந்தை இது திரியாக
நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கே
ஞானத் தமிழ் புரிந்த நான்”
உலகை விட பெரிய உலகளந்த பெருமாளே உன் மேல் பக்தனுக்கு உள்ள அன்பு பெரியது, அதுவே அகல். உன்னைப் பாடும், போற்றும்,அன்பவிக்கும் ஆர்வமே நெய் , என் மனதும் அதில் தோன்றும் எண்ணங்களும் தான் தீபம் எரிய திரி. அந்த தீபத்தை உனக்கு ஆரத்திக்காக ஏற்றினேன்.
வெளிச்சம் பளிச்சிட்டது.அதில் நான்காவது ஆசாமியி ன் முகம் தெரிந்தது. இதை முதலில் பார்த்தவர் மூன்றாமவர் பேயாழ்வார். ஆச்சர்யம் தாங்க முடியவில்லை அவருக்கு. ஆனந்தமாக ஒரு பாசுரம் அவர் நாவிலிருந்து புறப்பட்டது.
”திருக்கண்டேன் திருமேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று”
” அடாடா, நாலாவதாக எங்களோடு நிற்பது நீயா? தெய்வமே உன் தரிசனம் கண்டேன். உன் திருமேனி யைக் கண் குளிரக் கண்டேன். நீலமேக சியாமள வண்ணனைக் கண்டேன். பொன்னையும் பழிக்கும் திவ்ய ஒளி படைத்த உன் திரு முகம் கண்டேன். பளபளக்கும் உன் சுதர்சன சக்ரம் கண்ணுக்குத் தெரிகிறதே. மற்றொரு கரத்தை அலங்கரிக்கும் பால் நிற பாஞ்சஜன்ய சங்காயுதம் தரிசித்தேன். இன்று என் வாழ்நாள் மகத்வமானது. புனிதமடைந்தேன். என்னைப் பறிகொடுத்தேன் புண்ணியா உன்னடி என் என் மனத்தே வைத்து” என்று பரவசமானார். மற்ற இரு ஆழ்வார்களும் அவனை தரிசித்தார்கள். ஒரு ஆழ்வா ரைக் கண்டாலே விடமாட்டான் நாராயணன், இதோ இங்கே மூன்று ஆழ்வார்கள் ஒன்றாக கூடி ஒரு ஒட்டுத் திண்ணையிலே நிற்கும்போது உலகளந்த பெருமாள் ஒருகால் விண்ணைத் தொட தானும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு அவர்கள் பாசுரங்களில் தன்னைப் பறிகொடுத்தான்.அவனது தரிசனத்தில் அவர்கள் பரவசமானார்கள் என சொல்ல வேண்டியது அவசியமா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

