DEAR ELDERS…. J K SIVAN

அன்பு நண்பர்களே…. நங்கநல்லூர் J K SIVAN

நமக்கு வயது ஆகி விட்டது என்பதால் உலகம் நம்மை மறுக்காது. எப்போதும் போல் எல்லோரையும் போல் தான் பாரபக்ஷமின்றி நம்மையும் ஏற்றுக்கொள்கிறது. நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் வித்யாசம் தான் முதுமை. 70, 75, 80, 85 எல்லாமே ஏதோ ஒரு காகிதத்தில் எழுதி அளிக்கப்பட ஒரு எண் மட்டுமே. . பிறந்த நாள் என்று ஒரு தேதி. அதிலிருந்து எண்ணிக்கொண்டே நம் வயதை, காலத்தை அளக் கிறோம். வயதாகி விட்டது என்பதற்காக நமது வழக்கத்தை பழக்கத்தை எத்தனை பேர் மாற்றிக் கொள்கிறோம்? ”அது என்னிக்கும் முசுடு தான். வயசு ஏற ஏற இன்னும் அதிகமாக துள்ளுகிறது ” என்ற பட்டம் பெறுகிறோம். எப்போதும் போல் தூங்குகிறோம், சாப்பிடுகிறோம், அதிகமாக இயக்கம் வேண்டாம் என்று நம்மை ஒதுக்கி,ஒதுங்கிக் கொள்கிறோம். நமது எண்ணம் எப்போதும் போல் இருந்தாலும் ஏனோ நாமே அதில் ஒரு தனிப் பகுதியாக முதுமை என்ற கட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்கிறோம். சில மாறுதல்களை நமக்கு என்று விதித்துக் கொள்கிறோம்.

பிறந்த நாள் தேதி, date of birth என்பது ஒரு அடையாள சீட்டு. சில காரியங்களுக்கு பயன் படுவதற்காக உருவாக்கப்பட்டது. நம்மைக் கட்டுப்படுத்தி ஆள்வதற்கு அல்ல.

உடல் தளர்ச்சி என்பது ஒவ்வொருவரின் தேக ஆரோக்யத்தை பொறுத்தது. ஆரோக்யம் நம் உடலுக்கு நாமே தேடித் தருவது. உடலுக்கும் மனதுக்கும் வேலை கொடுத்துக் கொண்டே வந்தால் நன்றாக இயங்குகிறது.என் என் அனுபவத்தை அல்லவா சொல்கிறேன்.
தன்னம்பிக்கை வேண்டும். மரண பயம் வேண்டாம். மரணம் ஒருநாள் எல்லோருக்கும் சம்பவிப்பதை எவரும் தவிர்க்க முடியாது. அதை நினைத்து இப்போதே அருமையான நேரத்தை பாழாக்கவேண்டாம். வந்தபோது, வரும்போது தானாக அது வரட்டுமே.

எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் தரவேண்டாம். ஆக்க பூர்வமாகவே சிந்திப்போம் செயல்படுவோம். Be positive always.
அன்பும் பண்பும் நட்புச் செல்வத்தைதருகிறது. மற்றவருக்கு சுமை என்ற எண்ணம் அறவே கூடாது.
ஆயுள் காப்பு வசதிகளை பயன்படுத்துவோம். life/medical insurance.
வயதானவர்கள் பணத்துக்கு தங்கள் அத்யாவசிய செலவுக்கு மற்றவர்கள் கையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம். கொஞ்சம் பணம் நம்முடையகைவசம் பாதுகாப்பில் இருக்கட்டும்.
தன்னுடைய சக்திக்கு மீறி பிறர்க்கு உதவுவது விவேகம் இல்லை.
ஒய்வு உற்சாக பொழுது போக்கு ஒவ்வொருவருக்கும் அவசியம்.
பக்தி மனதுக்கு தெம்பு தருவது.
தூக்கம் வந்தால் அதை நிறுத்தாமல் உடனே தூங்கிவிட வேண்டும். உடலுக்கு, இயற்கைக்கு தெரியும் எப்போது நம் உடலுக்கு தூக்கம் தேவை என்று. அது கொட்டாவி, கண் செருகுவது,தலை தொங்குவது போன்ற ஆடையாளங்களை காட்டும்போது உதாசீனமாக அதை அவமதிக்கக்கூடாது. உடனே தூங்க ஆரம்பிக்கவேண்டும்.
என் போன்றே உங்களில் சிலருக்கு பாட்டு கேட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் இருக்கிறதா? ரொம்ப சுகமான அனுபவம் அது.
நண்பர்களோடு சிரித்துப் பேசவேண்டும். நகைச்சுவை ஆரோக்யம் தரும். உடலுக்கு உள்ளத்துக்கு புஷ்டி அது.
காலம் ரொம்ப அருமையான ஒரு செல்வம். அதை ஒரு நொடியும் வீணாக்காமல் பயனுள்ளதாக அனுபவிப்போம்.
ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளிக்கும் போனஸ். இதை நன்றாக புரிந்து கொண்டு செயல்படு வோம்.
நம் காலத்துக்கும் இப்போதைய நிலைமைக்கும் கடலளவு வித்யாசம். புதிது புதிதாக எத்தனையோ மாற்றங்கள். நாம் நம்மை அதற்கேற்றவாறு மாற்றிக்கொள்ளவேண்டும் முடிந்ததை கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றம் என்பது ஒன்று தான் மாறாத உண்மை.

சிலர் நமக்குச் செய்த தவறுகளை தப்புகளை மறப்போம்,மன்னிப்போம்.நாமும் நம் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கமோ அவமானமோ ஒன்றுமில்லை.

ஒரு உண்மை. நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் கொடுக்கப் பட்டுள்ளது. நல்லதே செய்வோம். வெற்றியை மட்டுமே எதிர்பார்க்காமல் தோல்வி வந்தாலும் சந்தோஷத் தோடு அதைத் தழுவும் மனப்பான்மை வளரட்டும்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;