

பஞ்ச கோசம் – நங்கநல்லூர் ஜே. கே.சிவன்
உயிருள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் மனது, உடல் ஆத்மா என்று மூன்றும் உள்ளது. உடம்பு மூன்று வகை. ஸ்தூல சரீரம், (இப்போது நம்முடைய தேகம்), சூக்ஷ்ம சரீரம், கண்ணுக்கு தெரியாத உடம்பு, உடலை எரித்தவுடன் அது தான் இருக்கிறது, காரண சரீரம். ஸ்தூல சரீரம் மூலம் உலகத்தில் வாழ்கிறோம். இந்த உடம்புக்கு தான் பிறப்பு வளர்ச்சி, இறப்பு ஆகியவை உள்ளது. சூக்ஷ்ம சரீரம் மனது, பிராண சக்தி சம்பந்தப்பட்டது. பஞ்ச பூதங்களோடும், இந்திரியங்களோடும் சம்பந்தப்பட்டது. கர்மேந்திரியங்களான கண்,காது, மூக்கு, வாய் தோல், வெளியேற்றும் உறுப்புகளோடு சம்பந்தப்பட்டது. ஸ்வாசம், ஜீரணம், தூக்கம் சம்பந்தப்பட்டது. மரணத்தோடு ஸ்தூல சரீரம் முடிகிறது. சூக்ஷ்ம சரீரம் அடுத்த பிறவிக்கு, இன்னொரு உடலுக்குள் செல்கிறது. பழைய ஞாபக சக்தியும் அதற்கு உண்டு. காரண சரீரம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்வது. மோக்ஷம் செல்லும் வரை தொடர்கிறது.
பஞ்சகோசம், ஐந்து திரைகள் என்றால் என்ன? மாயையால் ஆத்மாவை மறைப்பவை.ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக ஆதம்மாவை போர்த்தி இருக்கும் திரைகள். ஒன்றைக்கடந்து தான் இன்னொன்றுக்குள் போகமுடியும். அவற்றின் பெயர், அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்,
அன்னமய கோசத்தை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். மற்றவை சக்தி மயம், உருவமற்றவை. உயிருள்ள
வரை நம் உணர்வுகளுக்கேற்ப நம்மை வழி நடத்துபவை. நம்முடைய சில்க் ஜிப்பா, ஜரிகை வேஷ்டி, பட்டு புடவை கட்டிக்கொண்டிருக்கும் உடம்பு தான் அன்னமய கோசம். புரிகிறதா? இதை மட்டும் தான் நாம் காண்கிறோம். இதற்கு தோல், எலும்பு, சதை, தசை, ரத்தம், உறுப்புகள் உண்டு. சோறு தான் அதற்கு முக்கியம்.
ஆகாரத்தால் அதன் குணம் மாறும்.
அடுத்தது பிராணமய கோசம். மூச்சு காற்று. உயிர். உடலில் உள்ள உயிர் சத்துக்களை உடல் முழுதும் பரப்பி சக்தி அளித்து உடலை இயங்கச் செய்வது. சுவாசம் அதன் முக்கிய செயல். இது தான் சூக்ஷ்ம சரீரத்தின் ஜீவநாடி. ஐந்து விதமான வாயு, காற்றுகளை, தன்னுள் கொண்டது.
பிராணவாயு. உள்ளே புகும், வெளியே செல்லும் மூச்சு காற்று. அபான வாயு, அசுத்தத்தை கீழ்நோக்கி அனுப்பி வெளியேற்றும் சக்தி, வாயு, காற்று. சமான வாயு, ஜீரண சக்தி அளிப்பது, உடல் முச்சூடும் சரி சமமாக உயிர் சக்தி, பரவ உதவும் வாயு. உதான வாயு, கீழே இருந்து மேலே உந்தித்தள்ளி பிராணனை உடலின் மேல் பாகங்களுக்கு செலுத்தும் வாயு. பேச்சு உணர்ச்சிகள் இதனால் தான்.
வியான வாயு. வெளியே செல்லும் காற்றை பிரித்து வெளியேற்றுவது. க்ரமமாக , தேவைக்கேற்ப சக்தியை பிரித்து வெளியேறவேண்டியவற்றை வெளியேற்றுவது. உடலின் ஒவ்வொரு பாகத்துக்கு சீராக சக்தி செல்ல வெளியேற உதவுவது. ஏதாவது ஒரு வாயு சரியாக செயல்படவில்லை யென்றாலும் முழுதுக்குமே மோசம். நமது உடல் திணறும். உயிரை இழக்கும்.
ப்ராணமய கோசத்துக்கு சுத்தமான காற்று, சூரிய ஒளி, தியானம், முத்திரைகள், சடங்குகள், உடலில் இயங்கும் சக்ர செயல்பாடுகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
மனோமய கோசம். – நமது உணர்ச்சிகள் , எண்ணங்கள், நரம்பு இயக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது.
நமது ஐம்புலன்களை இயக்குவது. நமது எண்ணங்கள், கற்பனைகள், பகல் கனவுகள், எல்லாம் இதன் மூலம் தான் உருவாகிறது. வெளி உலகத்தை நம்மோடு இணைப்பது.
இதை சரியாக செயல்பட வைக்க நமக்கு தேவையானவை; தியானம், நாம சங்கீர்த்தனம், சத்சங்கம்,
விஞ்ஞான மயகோசம்; – இது தான் அறிவு, ஞானம் சம்பந்தப்பட்டது. மனோமய கோசத்திலிருந்து வெளிப்பாடு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவக்கூடியது. நமது அனுபவத்துக்கேற்ப நமது எண்ணங்களை சரியாக சீரமைப்பது. நாம் நல்வழியில் செல்ல உதவுவது. இதற்கு சக்தி அளிப்பது எவை தெரியுமா? ஆறு சக்ரங்கள் உடலில் உள்ளதே அவற்றின் செயல்பாடுகள், தியானம், யந்த்ர வழிபாடு, பிறர்க்கு செய்யும் சேவை, பரோபகாரம்,
ஆனந்த மய கோசம்;– இது தான் ஐயா, கடைசியான தெய்வீக அம்சம். தெய்வத்தை உணர்வது. சத், சித்த, ஆனந்தத்தை உணர்ந்து அனுபவிக்க உதவுவது. இந்த திரை விலகி மனதுக்குள்ளே செல்பவன் யோகி, பயம், ஆத்திரம், பொறாமை போன்ற உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது. ஆன்மாவை பரிபூர்ணமாக உணர்ந்து சுகானுபவம் பெறுவது. பகவானும் பக்தனும் வேறல்ல என்று உணர்த்துவது. ஆகாசத்தை , பரவெளியை, ஆனந்தமய கோசமாக உணர்கிறோம். விஞ்ஞான மய கோசம் காற்று. மனோமய கோசம், நீராவி. பிராணமய கோசம் நீர், அன்னமய கோசம் பனிக்கட்டி என உதாரணம் காட்டலாம்.
பனிக்கட்டி எந்த பாத்திரத்தில் நீர் வைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த உருவத்தை கெட்டியாக காட்டுகிறது.
இந்த பஞ்ச கோசங்களை ஆன்மாவை மறைக்கும் திரைகளை புரிந்து கொண்டால் வாழ்வின் ரஹஸ்யங்
களை புரிந்து கொண்டால், அதற்கு உதவும் வழிமுறைகளை பின்பற்றினால், நமது ஜீவிதம் இந்த உலகில் காலம் ஆனந்தமாக முன்னேறும்.
கொஞ்சம் கஷ்டமான விஷயத்தைத் தொட்டு கொஞ்சமாவது புரியும்படி எடுத்துரைக்க முயற்சித்துள்ளேன். உங்களுக்கு புரிந்தால் எனக்கு பாஸ் மார்க்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



