PESUM DEIVAM

” நீ சாக வேண்டாம்”  –   நங்கநல்லுர் ஜே .கே. சிவன் 

காஞ்சி மஹா  பெரியவாவை நான்  பேசும் தெய்வம் என்று தான் அழைப்பேன். அந்த பெயரில் நிறைய  பக்தர்கள் அனுபவங்களை படித்து சேகரித்து  என் வழியில் எழுதி இருக்கிறேன்.  ஆயிரத்துக்கு மேல்  அவை இருக்கும்.  இதோ ஒரு அற்புத பக்தானுபவம்.
இதை  ஸ்ரீ பெரியவா மஹிமை என்ற  பக்தி தொகுப்பில் இருந்து கிடைத்த  ஒரு பக்தர் அனுபவம்.

இந்த  சம்பவத்தில் வரும் ஏழை சாதாரண மனிதர்   ஒரு நிலையற்ற  வாழ்வை வாழாத  நாடோடி  என்று சொல்லலாம்.  சாமி பக்தி ஜாஸ்தி.  அவர் செய்த   பூர்வ ஜென்ம கர்மாவினால்  துக்கத்தை அதிகம் அனுபவி த்தவர்.  பாவம் அவருக்கு வாழ்க்கையில் ரெண்டு மனைவிகள்.. அவர்கள் தங்களுக்குள்  சண்டை போடுவதை விட இருவரும்  இந்த மனிதரை வாட்டி வதைத்தது தான் அதிகம் போல் இருக்கிறது.  அந்த ரெண்டு மனைவிகளுடனும் அந்த பக்தருக்கு மனக்கசப்பு. எடுத்ததற்கெல்லாம் சண்டை சச்சரவு.  அந்த மனிதர்  சாது,  விநோதமானவர்.  அதிகம் பக்தி புத்தகங்கள் படங்கள் பார்த்திருந்தால் மஹா பெரியவாளை தெரிந்திருக்கும். ஏனோ அவருக்கு தெரியாது.
இந்த ரெண்டு பேரின் தொந்தரவிலிருந்து விடுபட  மூன்றாவது மனைவியாக ஒரு பெண்ணைக்  கல்யா ணம் செய் து கொண்டுவிட்டார்.  அப்படியாவது  அவர் கொஞ்சம் நிம்மதி அடைந்தாரா  என்றால், அது தான் இல்லை.  அடுப்பின் மேல் இருக்கும்  கெட்டிலில்  இருந்து நெருப்பில் விழுந்த கதை. எங்கே நிம்மதி?? என்று பாடினாரா அழுதாரா என்று தெரியவில்லை.

ஒருநாள் அந்த மூன்றாம் மனைவி அவருக்கு  சாப்பா ட்டில் விஷம் கலந்ததை  அவர் பார்த்துவிட்டார் . அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.   இனியும்  இந்த வாழ்க்கை அவசியமா? உயிர் தேவையா? என்று எண்ணிவிட்டார். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். 
அப்போது தான் ஒரு ஆச்சர்யம் நடந்தது.  ஒரு இரவில் அவர் கனவில் யாரோ ஒரு சந்நியாசியை பார்க்கிறார்.  யார் இந்த சந்நியாசி, என் மனதை அப்படியே காந்தம் போல்  இழுக்கிறாரே!  என்று அவரை  மனதில் அடையா ளம் வைத்துக் கொண்டு தேடினார். யார் அந்த மஹான், எங்கே இருக்கிறார், எந்த மடம்? என்ன பெயர்  எந்த ஊர்?ஒரு விவரமும் அந்த பக்தருக்கு தெரியவில்லை. 
அவர் விரலில் இருந்த ஒரு தங்க மோதிரம்  கண்ணை உறுத்தியது.  அதை உடனே  ஒரு மார்வாடியிடம் விற்று பணமாக்கிக் கொண்டார்.  ஒவ்வொரு ஊராக சென்று எங்கெல்லாம் சாமியார்கள் இருக்கிறார்க ளோ  அவர் களை எல்லாம் சென்று பார்த்தார். 

 கனவில் தோன்றி, “நீ எதற்காக சாக வேண்டும் ,என்னை வந்து பார்!” என்று கனவில்  கூறிய அந்தக் கருணை வடிவத்தை மட்டும் அவரால் அடையாளம் காண முடியவில்லை.  நாட்கள் ஓடின, தேடல் ஓயவில்லை.
வேலூருக்கு அருகே  அந்த பக்தர் வந்தபோது   ஏகாம்பர குப்பம் என்கிற ஊரில் காஞ்சி மஹா பெரியவா முகாமிட்டிருக்கும் சேதி காற்று வாக்கில் அவர் செவியில் விழுந்தது. அந்த மனிதர்  அங்கே சென்றார். மஹா பெரியவா தரிசனம் கிட்டியது  பரமானந்தம், ஆச்சர்யம், 

“ஆஹா , இதே சாமியார் தான் நான்  தேடியது  என்று  குதித்தார்….  இதே சாமிதான்! அருகே சென்றார் 
”சாமி, என்னை நீங்கள்தானே வரச் சொன்னீர்கள்! வந்துவிட்டேன்”  பைத்தியம் பிடித்தவர் போல் உரக்க  கத்திக்கொண்டே இருந்தார் அந்த பக்தர்.

மஹா பெரியவா அப்போது தனது அருகே இருந்த
  ராஜம்மாள் என்ற பக்தையை கைவிரல் சொடுக்கு
ப் போட்டு அழைத்தார்..

“அதோ வாசல் பக்கம் கூட்டத்தில் ஒருவன் சத்தம் போடுகிறான் பார், நீ போய் அந்த ஆளை விசாரி. அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு. நான் நாளைக்கு அவனைப் பார்க்கிறேன் என்று சொல் ” 

ராஜம்மாள் அந்த நாடோடி பக்தரிடம்  சென்று உணவு கொடுத்துவிட்டு, மறுநாள் மகா பெரியவாள் அவரைப் பார்ப்பதாகச் சொன்னார்.

அப்போது அந்த பெண்ணிடம் அந்த பக்தர்  தன்னுடைய துயரக் கதையை கண்ணீர் மல்கக் கூறினார்.

“தாயி! எனக்கு இரண்டு மனைவிகள். இருவருடனும் சண்டை. மூன்றாவதாக ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டேன். அவளும் எனக்குச் சாப்பாட்டில் விஷம் கலந்ததைப் பார்த்துவிட்டேன்.என் மனம் உடைந்து போய்விட்டது. இனிமேல் வாழ வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.அப்போதுதான் இந்தச் சாமியார் என் கனவில் வந்து என்னைக் காப்பாற்றினார். என்னை வந்து பார்க்கும்படி சொன்னார்!”

இதைக் கேட்ட ராஜம்மாளுக்கும்  ஆச்சர்யம்…

தாம் இதுவரை அறிந்திராத, தம்மைத் தேடி வருவார் என்று எதிர்பார்க்காத ஒரு எளிய மனிதரின் துயரத் தையும் மகா பெரியவாள் அறிந்து அவருக்குக் கனவில் அருளியிருக்கிறாரே என்று எண்ணி நெகிழ்ந்தார்.

மறுநாள் காலை.  அந்த மனிதர்  விடிகாலையிலேயே  குளித்துவிட்டு  காத்திருந்தார். வெகுநேரம் காத்திருந்த பிறகு  மஹா பெரியவா அருகில் செல்ல முடிந்தது. கையை உயர்த்தி ஆசிர்வதித்து தரிசனம்..

மஹா  பெரியவாளைப்  பார்த்ததும் அந்த மனிதரால் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிய வில்லை.  ஹோ வென்று கண்ணீர் உகுத்தார். 

“சாமி! உங்களைப் பார்த்தால் என் அம்மாவைப் 
பார்ப்பது போல இருக்கிறது. நான் உங்களுடனேயே இருந்துவிடுகிறேன். நீங்கள் எங்கே சென்றாலும் அங்கேயெல்லாம் தரை பெருக்கிக் கூட்டிப் பணிவிடை செய்கிறேன்!”
கண்ணீர் மல்க கெஞ்சினார். 

“அதெல்லாம் வேண்டாம்  பா.  நீ கவலைப்படாமல் உன் ஊருக்குப் போ. இனிமேல் எல்லோரும் உன்னிடம் நல்ல படியாக நடந்துகொள்வார்கள். உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள். எல்லாம் சரியாகிவிடும்!”

மஹா பெரியவா அவரை  ஆசிர்வதித்து  பழங்களைப்  பிரசாதமாக  கொடுத்தார். அங்கிருந்தவர்களிடம் பணம் வசூலித்து அந்த ஏழை மனிதருக்குக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.

அவருடைய மனக்கவலையைப் போக்கியதோடு, வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் உதவி செய்தார்.

மஹா பெரியவா யாருடைய  அந்தஸ்து, செல்வம், குடும்பம், பதவி, பணம் எதையும் லக்ஷியம் பண்ணுவ தில்லை. அவருக்கு தெரியும்  யாருக்கு தன்னுடைய உதவி தேவை என்று.  ஆன்மிகக் கருணை என்பது ஆறுதல் வார்த்தைகளுடன் முடிந்துவிடுவதில்லை. அவருக்கு உணவு, பழம், பணம் கொடுத்து வாழ்க்கையைத் தொடரவும் உதவினார்.  இந்த  சம்பவம்  வெளியான விபரம்  Sri Periyava Mahimai Newsletter – 4 July 2009. இதன் உள்ளே போய்  ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். மஹா பெரியவாளுக்கு தன்னுடைய மஹிமையை வெளிப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. அனுபவம் பெற்ற பக்தர்கள் தான் அதை வெளியே கசிய விடுகிறார்கள். தெய்வத்துக்கு அட்வெர்டைஸ்மென்ட் எதற்கு?

முடிக்கும் முன்பு ரொம்ப முக்யமான ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.  அந்த பக்தருக்கு  ”என்ன கஷ்டம் வந்தாலும் என்னை நினைச்சுக்கோ” என்று மஹா பெரியவா சொன்ன வார்த்தை நமக்கும் தான். நாம் கஷ்டம் வந்தால் மட்டும் அவரை நினைக்க வேண்டாம். எப்போதும், ஏன், ரொம்ப சந்தோஷமாக இருக்கும்
போது  கூட, தெய்வமே , உன்னால் அல்லவோ நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நன்றியோடும் நினைப்போம்

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2578

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;