ராவண தேச விஜயம்  –

ராவண தேச விஜயம்  –  நங்கநல்லுர்   ஜே . கே. சிவன்

பழைய  புதிய கதிரேசன் ஆலயங்கள்.

இலங்கை ஒரு சின்ன தீவு. முழுக்க முழுக்க வெள்ளையர் கள் ஆதிக்கத்தில் இருந்த  குட்டி தேசம். சிங்களவர்கள் ரொம்ப அமைதியானவர்கள். அநேகர்  பௌத்த பிக்ஷுக்கள். தமிழ் நன்றாக பேசும் மக்கள் நிரம்பிய பகுதி. முருகன் பிரதான தெய்வம். இந்த புது கதிரேசன் கோவில் கடல் தெரு, (Sea Street), பெட்டா, பகுதியில் கொழும்புவில் இருக்கிறது.  14.11.26  காலை குளித்து விட்டு நான் தங்கி இருந்த சின்னமோன் ஹோட்டலிலி ருந்து கிளம்பி   சுமார்  5 கிமீ. தூரத்தில் உள்ள இந்த ஆலயம் சென்றேன். வழியில் நெரிசல் இல்லை. கோவில் உள்ள இடம் பம்பலபிட்டியா . பம்பல என்ற பம்பளிமாஸ் என்ற பழம். பீடியா என்றால் இடம். ஒருகாலத்தில் இந்த பகுதியில் நிறைய பம்பளிமாஸ் மரங்கள் இருந்ததால் இந்த பெயர்

ஹோட்டலை விட்டு கிளம்பும்போது வழக்கமாக  வாசல்  கதவை திறந்து விடும்  கோட்டு  சூட்டு டை  ஆசாமி  வழக்கம்போல்  ”ஆயுபோவன்” என்று வணங்கினார். இலங்கையில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதுஇதைச் சொல்வார்கள். ” நீண்டநாள் வாழ்க ”என்று அர்த்தம்.  மதுரா, பிரிந்தவன், கோகுலத்தில்  ”ராதே ராதே”  மாதிரி.  நமது  தீர்க்காயுஷ்மான் பவ; க்கு நெருக்கமான அதே   அர்த்தம் கொண்ட  சிங்கள வார்த்தை.

கொழும்பு மாநகரின் புகழ்பெற்ற இந்து ஆலயங்களுள் புதிய கதிரேசன் கோவில் முக்கியமான onமுருகன் திருத்தலமாகும். இக்கோவில் இலங்கையின் சைவ சமய வரலாறு, தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் குடி பெயர்ந்த நகரத்தார் சமூகத்தின் சமயத் தொண்டு, முருக வழிபாடு, ஆடிவேல் திருவிழா, காவடி மரபு, தேரோட்டம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது.

கொழும்புவில் பெட்டாவில் உள்ள புதிய கதிரேசன் கோவிலையும், கொழும்பு 4 – பம்பலப்பிட்டியாவில் உள்ள புதிய கதிரேசன் கோவிழும்  ஒரே  பெயர்  கொண்டவை.
புதிய கதிரேசன் கோவில் (New Kathiresan Kovil).
மூலவர்: அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி – முருகப்பெருமான்.

இங்கு முக்யத் திருவிழா: ஆடிவேல் திருவிழா (Aadi Vel Festival).இக்கோவில் முருகப்பெருமானின் வேலாயுதத் திருக்கோலத்தையும், அவர் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரியும் திருவுருவ மரபையும் மையமாகக் கொண்டுள்ளது.
கதிரேசன் என்ற பெயர் கதிர் + ஈசன் எனப் பொருள் படும்.  ஒளி, ஞானம், அருள் ஆகியவற்றை வழங்கும் முருக கடவுள், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத் தைச் சேர்ந்த வணிகர்கள் கொழும்புவில் இங்கே  குடியே றினர்.  அநேகர்  நாட்டுக்கோட்டை நகரத் தார், நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள்.வணிகர்கள், வியாபாரிகள். பெரிய அளவில் நிதி கடன் கொடுப்பவர்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களில் சிவன், விநாயகர், முருகன் கோவில்களை நிறுவினர். அன்னதானம், தர்மசாலைகள், யாத்ரிகர் களுக்கான தங்குமிடங்கள் , சத்திரங்கள், அன்ன தானம் போன்ற அறப்பணிகளில்  ஈடுபட்டவர்கள். .தங்கள் செட்டிநாட்டில் கடைப்பிடித்த வழிபாட்டு முறைகளை இலங்கையிலும் கடைபிடித்தவர்கள்.  கொழும்பின் கடல் தெரு அக்காலத்தில் பிரபல வணிகஸ்தலம்.
பழைய கதிரேசன் கோவிலும் புதிய கதிரேசன் கோவில்  ரெண்டுக்கும்  சென்றேன். இரண்டு கோவில்களின் வரலாறும் ஒன்றோடொன்று தொடர்புடையது. 1809ல் பழைய பழைய கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிறுவப்பட்டது. 1839  புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் நிறுவப்பட்டது.

1932புதிய கதிரேசன் கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது.  1809ஆம் ஆண்டு பழைய கோவில் 239, Chetty Street என்ற முகவரியில் இயங்கியது. , 1839ஆம் ஆண்டு புதிய கோவில் 251, கடல் தெரு, Sea Street என்ற இடத்தில் ஏழு பேர் கொண்ட குழுவினரால் தோன்றியது.  பி.எல்.ஏ. வெள்ளையன் செட்டியார் குழு தலைவர். கோவில் கோபுரமும் அதன் மேல் புதுமைகளும், கோவிலில் தூண்கள், சிற்பங்கள் எல்லாம் தமிழ் நாட்டு கோவில்களை நினைவூட்டுகிறது சந்நிதிகள் அழகான விக்ரஹங்களுடன், அலங்காரத்துடன், தீபங்களுடம்  தெய்வீகமாக இருக்கிறது.  நான் சென்ற சமயம் கந்த ஷஷ்டி வைபவம் அடுத்தநாள்  என்பதால் விசேஷ முருகன் பூஜைகள் நடந்து கொண்டிருந்தது.இக்கோவிலின் மிகப்பெரிய புகழுக்குக் காரணம் அதன் ஆடிவேல் திருவிழாவா கும்.இலங்கையில் முருகப்பெருமானின் முக்கியமான யாத்திரைத் தலமாகக் கதிர்காமம் விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கதிர்காமத் திரு விழாவுக்காக இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகச் செல்வது வழக்கம்.

1874ஆம் ஆண்டில் கொழும்புப் பகுதியில் காலரா நோய் பரவியதால், அன்றைய பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையைத் தடை செய்ததால்  எல்லா  பக்தர்களும் கொழும்பு முருகன் கோவில்களுக்கு வந்து கதிர்காமத் திருவி ழாவை நடத்தி அது  தொடர்கிறது.  ஆடிவேல் திருவிழா அப்போது முதல் இங்கே பிரசித்தம்

மேலே சொன்ன  பம்பலப்பிட்டியிலும் பழைய கதிரேசன் கோயில், புதிய கதிரேசன் கோயில் என்ற பெயர்களில் மேலும் இரண்டு ஆலயங்கள் உள்ளன.  ஆடிவேல் திருவிழா காலத்தில், செட்டியார் தெருவிலிருந்து முருகப் பெருமானின் வேல் மற்றும் உற்சவ விக்ரஹம்  தேரில்  ஊர்வலம் வரும்.பம்பலப்பிட்டி ஆலயத்திற்குத் தெய்வம் எழுந்தருளும்.  வீதிகள் பூரா  பக்தர்களி ன்  பூரணகும்பம், தேங்காய், மலர் மாலை ஆர்த்தி அர்ச்சனை விடாமல் நடக்கும். நாதஸ்வரம், தவில், காவடி, பக்திப் பாடல்கள் சப்தம் விண்ணைப் பிளக்கும். பால  தண்டாயுதபாணியை விட  வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வழிபாடு இக்கோயில்களின் உற்சவ மரபில் முக்கியம்.

ஆடி வேல் விழா  மஹேஸ்வர பூஜையோடு தொடங்கி,  சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, கொடியேற்றுவார்கள். காவடி ஊர்வலங்கள் நிறைய ஆடிக்கொண்டே செல்லும். பால்குடம் சுமப்பார்கள். முருகன் பக்தி பாடல்கள் ஒலிக்கும்.  நேர்த்திக் கடன்கள் செலுத்தப்படும்.  வேல் ஊர்வலம், வெள்ளித் தேறிரில்  நடைபெறும். வழியெங்கும்  தரையில் நீரால் அலம்பி, கோலங்கள் போட்டு, தீபங்கள் ஏற்றி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர்.பால் காவடி, பன்னீர் காவடி,புஷ்பக் காவடி, மயில் காவடி, அலங்காரக் காவடி.அலகு காவடி  என்று ஆணும் பெண்ணுமாக  பங்கேற்பார்கள்.  நாக்கு, கன்னம், உடல் போன்ற இடங்களில் வேல் குத்திக்கொண்டு ஊர்வலத்தில் பங்கேற்பதும் வழக்கம்.

எல்லாமே  பக்தர்கள் முருகப்பெருமானிடம்  கொண்டுள்ள நம்பிக்கை, விரதம், நேர்த்திக்கடன் ஆகியவற்றின் வெளிப்பாடுகள்.வேலுண்டு  வினையில்லை, மயிலுண்டு  குறையில்லை.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2578

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;