

கிருஷ்ண கதாம்ருதம்.- நங்கநல்லூர் ஜே. கே. சிவன்
ஐந்தாயிரம் வருஷத்துக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதனா கிருஷ்ணன் என்றால், அவர் எண்ணங்கள், செயல்கள் அப்படி இல்லை அவை அமானுஷ்யமானது என்று தெரிகிறது. அவர் ஒரு அவதாரம் என்பது புரிகிறது.
கிருஷ்ண -அர்ஜுன சம்வாதங்கள், கீதையின் மூலம் கிருஷ்ணன் ஒரு அசாதாரணன் என்பதை நிலை நாட்டுகிறது. கிருஷ்ணனின் நினைவாற்றலும் அறிவும், செயல்பாடுகள் காலம் , இடம் ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக காண்கிறது.
கிருஷ்ணன் கதை என்று சொன்னால் அது ரெண்டு விதம். ஒன்று கிருஷ்ணன் சொன்ன விஷயங்கள். இன்னொன்று கிருஷ்ணனைப் பற்றி மற்றவர்கள் சொன்னது. நாம் அதிகமாக ரெண்டாவது விஷயத்தை தான் அடிக்கடி சொல்கிறோம் பேசுகிறோம், எழுதுகி றோம். கிருஷ்ணன் சொன்னவை கதையாக இருக்காது, உயர்ந்த தத்துவமாக அல்லவோ இருக்கும், உதாரணம் அருஜுனனுக்கு சொன்ன கீதை, இன்னொன்று உத்தவனுக்கு சொன்ன கீதை. சாதாரண குப்புசாமி ராமசாமி கதையா அது எளிதில் புரிந்து கொள்ள?கிருஷ்ணன் கதையை சுகப்பிரம்ம ரிஷியிடமிரு ந்து கேட்ட புண்யவான் பரீக்ஷித் மஹாராஜா.
”பரீக்ஷித், உன் தந்தை, தாத்தாக்கள் போரில் ஜெயிக்க காரணமாக இருந்தவர் கிருஷ்ணன். அவர்கள் உயிரைக் காப்பாற்றியதும், உன்னை நீ கருவாக உன் தாய் உத்தரையில் வயிற்றில் இருந்தபோது அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரத்தை எய்து உன்னைக் கொல்ல முயன்ற போது உன்னைக் காப்பாற்றியதும் கிருஷ்ணன் தான்” என்கிறார் சுக ப்ரம்ம ரிஷி.
விஷ்ணுவால் இவ்வாறு பரீக்ஷித் காப்பாற்றப் பட்ட தால் அவனுக்கு விஷ்ணுராதன் என்ற பெயர் ஒன்று உள்ளது.
பரீக்ஷித் ஏழுநாள் தான் அப்புறம் உயிரோடு இருந்தான். நாம் அவனை விட பல மடங்கு உயர்ந்தவர்கள். பல வருஷங்கள் உயிர்வாழ முடிகிறது. நமக்கு எத்தனை யோ பேர் கிருஷ்ணன் கதையை சொல்ல இருக்கி றார்கள். கேட்டுப்பயன் பெற வழி இருந்தும் அதை இழந்தால் நஷ்டம் நமக்கு தான். ஒரே ஒரு விஷயம் மனதில் கொள்ள வேண்டும்.
பரிக்ஷித்துக்கு தனது பூலோக வாழ்க்கை இன்னும் ஏழே ஏழு நாள் என்று தெரிந்து அதை நன்றாக பயன் படுத்திக் கொள்ள ஏழு நாட்களும் ஸ்ரீ கிருஷ்ணனின் சரித்தி
ரத்தை ரிஷி சுகர் மூலம் கேட்டு புண்ணியம் பெற்றான்.
நமக்கு எத்தனை நாள், மாதம் வருஷம் என்று தெரியா விட்டாலும் ஒவ்வொரு நாளும் போனஸ் என்ற நினைப் போடு வாழ்வதும், அந்த குறுகிய வாழ்வில் ஒரு கணத்
தையும் வீணாக்காமல் பகவானை நினைத்து அவன் சரித்திரம் அறிந்து மகிழவும் வாய்ப்பு இருக்கிறதே
என்று பெருமிதப்பட வேண்டும்.எனவே, மரணம் நம்மை அணுகுவதற்கு முன்பே நாம் முழுமையான கிருஷ்ண உணர்வைப் பெற்றிடவேண்டும்.
கிருஷ்ணன் மனிதனாக அவதரித்தாலும் இறப்பு பிறப்பு அற்ற பரம்பொருள் என்றும் எங்கும் நிறைந்தவன். .
கீதையில் ”அர்ஜுனா, இதற்கு முன் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு விவஸ்வான் என்ற சூரியதேவனுக்கு பகவத் கீதையின் உபதேசங்களை நான் வழங்கினேன் ” என்பது ஒரு உதாரணம்.
தாய் மாமன் கம்சனின் சிறைச்சாலையில், தனது தந்தையும் தாயும் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, கிருஷ்ணன் தாயின் கர்ப்பத்திலிருந்து நான்கு கைகளைக் கொண்ட விஷ்ணு நாராயணராகத் தோன்றி தாய் தேவகியின் வேண்டுகோளுக்குஇணங்கி ஒரு சாதாரண குழந்தையாக மாறி தந்தை வசுதேவ ரிடம் ”என்னை கோகுலத்தில் நந்தகோப மகாராஜாவும் அவருடைய மனைவி யசோதையும் வாழ்ந்த வீட்டிற்கு உடனேகொண்டு செல் என்று கட்டளையிட்டு, அதற் கேற்ப சூழ்நிலைகளை சாதகமாக மாற்றி அமைத்த
தும் ஒரு உதாரணம்.
சிறு குழந்தையாக, பூதனா என்ற மிகப்பெரிய அரக்கி தன்னைக் கொல்ல முயன்ற போது கிருஷ்ணன்
அவளுடைய மார்பகத்திலிருந்து பாலோடு அவள் உயிரையும் உறிஞ்சியது இன்னொரு உதாரணம். இது தவிர குழந்தையாக, சிறுவனாக, கோகுலத்தில் பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் வாழ்ந்த காலத்தில் அவரைக் கொல்ல வந்த பல ராக்ஷஸர்களை கிருஷ்ணன், நிராயுதபாணியாக. தனியொருவனாக கொன்றது குறிப்பிடத்தக்கது. ஒரு சாதாரண சிறுவனால் செய்ய முடிந்த காரியங்களா இவை?
பூமியின் பாவச் சுமையை குறைக்க பகவான் தோன்றியதில் பிரதானமான ஒன்று தான் கிருஷ்ணாவதாரம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



