
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN
17.4.26 – 22.4.26.
ஏட்டுமானூரப்பன் தரிசனம்.
19/4/26 அன்று விடிகாலை மூன்றரை மணிக்கு நாங்கள் பெரும்பாவூரில் தங்கியிருந்த S M ஹோம்ஸ் விடுதியிலிருந்து காரில் கிளம்பியபோது ஐந்து கோவில்களை பார்க்க விரும்பினோம். கேரள ஆலயங்கள் விடிகாலை 4 மணிக்கே திறந்து விடுகிறார்கள். தெருவில் கூட்டம் இல்லை இடையூறுகள் எதுவுமில்லை. தெருக்களும் நன்றாக விசாலமாக, போக்குவரத்து ஜனநடமாட்டம் எதுவும் இன்றி இருந்ததால் இதுவரை நான்கு ஆலயங்கள் தரிசித்தாகிவிட்டது. நான்காவது ஆலய பகவான் கடுத்துருத்தி மஹாதேவர் எங்களை எட்டுமானூருக்கு அனுப்பும்போது காலை மணி பத்து ஆகிவிட்டது. சென்னை வெய்யில் கேரளாவில் தெரியவில்லை.
கடுத்துருத்தியிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் எட்டுமானூர் மஹாதேவர் ஆலயம். கோட்டயத்திலிருந்து 11 கி.மீ. பன்னிரண்டு மணிக்கு நடை சாத்துவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று அவசரம். இவ்வளவு தூரம் மலையாளம் தெரியாமல் சென்னையிலிருந்து 87 வயதில் ஆர்வமாக வந்தவனை ”என்னைப் பார்க்காதே திரும்பி போ” என்று கதவைத் தாளிடுவானா என் சிவன்? என் பெயரும் அவன் பெயர் தானே.
எட்டுமானூரப்பன் மஹாதேவன் ஆலயமும் பரசுராமர் ஸ்தாபித்த சிவாலயம் தான். அவர் சிஷ்யன் கர ப்ரகாசன் தவமிருந்து தொழுத ஆலயம். ஆயிரமாயிரம் வருஷம் பழமையான கோவில். வழக்கம்போல இங்கேயும் நீண்ட ஓடு/செப்பு கூம்பு விதானம் தான். நுழையும் வாசல் குறைந்த உயரம். கிழக்கே நுழைவு வாயில். சுற்றிலும் மரங்கள். இங்கே சிவனின் கழுத்தைச் சுற்றி வாசுகி நெக்லஸ் மாதிரி ஆபரணமாக இருந்ததாக ஐதீகம். ஐந்து தலைகள் தான் ஏட்டுமானூரப்பன் தலைமேல் குடை,.
ராஜசேகர வர்மன் என்று ஒரு மலையாள ராஜா. மஹாதேவ பக்தன் அவன். ”அடேய் சேரா, நான் இங்கே எட்டு விதமான உருவங்களில் இந்த மானூரில் உள்ளேன்” என்றுஒருநாள் அவன் கனவில் மஹாதேவன் சொன்னார். எட்டு மானூர் என்றால் ;எட்டு மனஸ், அஷ்ட க்ரஹம் , என்று எட்டு நம்பூத்ரி குடும்பங்களை குறிப்பதாக ஒரு தகவல். சிவன் கையில் மானை ஏற்றுக்கொண்டதால் ஏற்று மானூர் என்ற பெயர் என்றும் சொல்கிறார்கள்.
கரமஹர்ஷி, கர பிரசாத முனி, கர ப்ரம்ம ரிஷி என்றெல்லாம் பெயர் கொண்ட ஸ்தாபித்த க்ஷேத்ரம் இது. அவர் சாபத்தால் ராக்ஷசனானார்.
மகாதேவனை சரணடைந்து சாப விமோசனம் தேடினார். சிவனருளால் மீண்டும் முனிவரானார்.சிவன் அவரை இங்கே அனுப்பினார். முனிவர் ஆலயத்தை ஸ்தாபித்தார்.
பொன்னிற த்வஜ ஸ்தம்பம், ரிஷப வாஹனம் எல்லாம் இங்கே கண்குளிர காட்சி தருகிறது. ஸ்ரீ மூலம் திருநாள் மஹாராஜா நிறுவிய புதிய த்வஜ ஸ்தம்பம் இது. கோவிலில் நிறைய பழையகால வண்ண ஓவியங்கள் உள்ளன.
”ஏழர பொன்னான’ என்பது ஏழு பெரிய தங்கநிற யானை, ஒரு குட்டி , விக்ரஹங்களை குறிக்கும். பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து வருஷம் ஒருமுறை வெளியே வந்து காட்சி தரும். இந்த யானைகள் திருவாங்கூர் ராஜ்ய ஸ்தாபகர் அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பரிசளித்தது. முதலில் இவை வைக்கதிகப்பன் ஆலயத்துக்கு எதுத்து செல்லப்பட்டது. வழியில் வீரர்கள் ஓய்வெடுத்தது மறுநாள் கிளம்பும்போது பொன்னானைகளில் கொடிய நாகங்கள் அவர்களை அண்டவிடவில்லை. ஆஸ்தான ஜோசியர் பரிசீலித்து இவை எட்டுமானூரப்பனுக்கு விருப்பமானவை. அவனிடம் இருக்கவேண்டியவை என்பதால் வைக்கம் எடுத்து செல்ல முடியாது என்று சொல்லிவிட்டார். பலா மரத்தில் செய்யப்பtட யானைகள், மேலே தங்க கவசம் பூண்டவை.
நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீபம் அணையாமல் இங்கே எரிகிறது என்பது ஒரு அதிசயம். மஹாதேவன் உக்ர ஸ்வரூபம்.
இன்று 19/4/26 கோவில் தரிசனம் இவ்வளவு தான். ஆகவே SM ஹோம்ஸ் விருத்திக்கு செல்ல பெரும்பாவூர் பயணமானோம். மதியம் 2.00 மணிக்கு பெரும்பாவூர் சென்றோம்.
மறுநாள் 20.4.26 என் நண்பர் ஸ்ரீ சந்திரசேகரன் பேரனுக்கு உபநயனம். அதற்காகத்தான் பெரும்பாவூர் வந்துள்ளேன் என்பதால் அன்று அவர் வீட்டில் உபநயனத்துக்கு முதல் நாள் நாந்தி ஹோமம் நடைபெறும் சாயம், பெரியவர்கள் அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் செய்யும் நேரத்தில் கோவில்கள் ப்ரசாதத்தோடு அவர் வீட்டுக்கு சென்றேன்.’
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

