KOOVAAGAM FESTIVAL J K SIVAN

கூவாகம் விழா. –  நங்கநல்லூர்  J K SIVAN

இன்று படித்தேன்.  படங்கள் பார்த்தேன் பழைய நினைவு வந்தது. 

அர்ஜுனனின் மகன் அரவான்  வீர இளைஞன்.  மஹா பாரத யுத்தத்தில்  கௌரவர்களை பாண்டவர்கள் வெற்றி கொள்ள முதலில்  அரச குல தெய்வம்  காளி அம்மனுக்கு நரபலி, கள பலி  சடங்காக அளிக்க வேண்டும்.  அப்படி தன்னுயிரை களப்பலியாக பாண்டவர் பெற்றிபெற கொடுக்க முன்வந்தவன் அரவான்.   யுத்தத்தில்  பாண்டவர்களுக்கு  உதவியாக  போரிட  ஆசைப்பட்டவன்.   இதுவும் ஒருவிதத்த்தில் போரில் பங்கேற்பது தானே என  களபலிக்கு தயாராகும் முன்  கிருஷ்ணனிடமிருந்து  பெற்ற  மூன்று  வரங்களில் ஒன்று:
1.”களபலியில் என் உயிர் போனாலும், நான் என்  கண்களால் நடக்கப்போகும் மஹா பாரத யுத்தத்தை  முழுதும் பார்க்க  வேண்டும்”2. ” நான் திருமணம் செய்து கொண்டு அப்புறம் இறக்கவேண்டும்”3. நான் எல்லோர் நினைவிலும் இருக்க வேண்டும்.
அரவான்  விரும்பியபடியே  கள பலியில்  வெட்டப்பட்ட  அவன் தலை  ஒரு உயரமான இடத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கவிடப் பட்டது. அங்கிருந்து  பார்த்தால் குருக்ஷேத்திர போர்க்களம் முழுவதும்  தெரியும்படியான ஒரு இடம் அது. 18 நாள் யுத்தமும் பார்த்த ஒரே வீரன் அவன் தான். போர் முடிந்து விட்டது. கௌரவர்- பாண்டவர்  இரு பக்கமும் அநேகர் மாண்டு விட்டார்கள் . பாண்டவர்கள் ஐவர் மற்றும் ஒரு சிலரே  உயிர்  பிழைத்தவர்கள்.  பாண்டவர்கள் வெற்றிச் செருக்கில்  தங்களது தனிப்பட்ட வீரத்தால் வெற்றி எளிதில் கிட்டியது  என்ற எண்ணத்தில்  திளைத்துக் கொண்டிருந்தனர். அர்ஜுனன்  தனது  சாகசத்தால்  ஜெயம் கிட்டியதாகவும்  பீமன்  தனது  கதாயுதத்தால்  துரியோதனன் முதலாக  அவர்கள்  100 பேரின் உயிரை குடித்ததால் தான்  வெற்றி  என்றும்  பெருமிதம்.

“அர்ஜுனா,  உன் வில்  வித்தை  பீமனின் கதாயுதத்தின் சாகசத்துக்கு இளைத்ததில்லை.  உங்கள்  இருவரின்  பலத்தால் கிடைத்த பரிசு தான்  இந்த  யுத்தத்தில்  வெற்றி  என்று கருதுகிறீர்கள். இதை நீங்கள் சொன்னால் போதாது. மஹா பாரத  யுத்தத்தை முழுமையாக பார்த்து  நன்றாக  அலசி இரு பக்க  சாகசங்களையும்  நன்றாக   உணர்ந்தவர்களே இந்த  யுத்தத்தின்   வெற்றிக்கு  யார்  காரணம் என்று  கருத்து கூற முடியும்” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, அப்படி யார்  இருக்கிறார்கள் பார்த்து சொல்வதற்கு. எல்லோருமே  போயாச்சே”  என்றான்  பீமன்.
“பீஷ்மர்  இருந்தால்,  துரோணர் இருந்தால்,  விதுரன்  பார்த்திருந்தால்  சரியான  கருத்து  கூறக் கூடியவர்கள்.  அவர்களை எங்கே போய்  தேடுவது” என்று ஏளனமாக  சிரித்தான் அர்ஜுனன்
 சிறிது  நேரம்  மௌனத்திற்கு பின் கிருஷ்ணன் அவர்களுக்கு சொன்னான்; .
“அடேடே!, நாம்  எல்லாம் மறந்துவிட்டோமே  இந்த  யுத்தத்தை ஆரம்ப  முதல் கடைசி வரை பார்த்துக் கொண்டே  இருக்கிறவன்,  இன்னும்  அங்கே  இருக்கிறானே  அவனை  நீங்கள் யாருமே நினைத்து பார்க்கவே இல்லையே”
“கிருஷ்ணா,  நீ  யாரை  சொல்கிறாய்  என்றான்  பீமன்”
அர்ஜுனனுக்கு  புரிந்து விட்டது.
”ஆமாம்,  கிருஷ்ணா  அரவான்  இன்னும்  பார்த்துக்கொண்டே இருக்கிறானே. உடனே போய் அவனை  விடுவிக்க  வேண்டும்.”
அரவான்  தலை  இன்னும்  மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது .
அரசனிடம் மூவரும் சென்றார்கள்.
“அரவான், உனது  விருப்பம் நிறைவேறி விட்டதல்லவா?  என்று  கேட்ட  கிருஷ்ணனிடம்
“ஆம். பிரபு, பாரத  யுத்தம் பதினெட்டு நாளும்  நடந்ததை எல்லாம்  கண்ணார கண்டேன். பாண்டவர் வெற்றியில்  மிக்க  மகிழ்ச்சியடைந்தேன்.”
“எல்லாம்  உன்னால் அஸ்திவாரம் போடப்பட்டதால் தானே அரவான்”  என்றான் கிருஷ்ணன்

“கிருஷ்ண ப்ரபோ,  துரியோதனனுக்கு   என்னை  களபலிக்கு  கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்தும்  தக்க சமயத்தில்  களபலி  நாளை  மாற்றி என்னை  பாண்டவர்  வெற்றிக்காக  களபலி  கொடுக்க வைத்தது  உங்கள்  கிருபையால் தானே “

“அதெல்லாம்  சரி  அரவான்.  நாங்கள்  இப்போது  உன்னை  ஒன்று கேட்கப்போகிறோம்.  நீ தான்   சரியாக தீர்மானித்துச்  சொல்லக் கூடியவன்.

“பீமா,  இதோ அரவான்  தான்  சரியானவன்.  முழு  யுத்தத்தையும் இருபக்க சாகசங்களையும் போரில் பங்கேற்காது சம நோக்குடன்  பார்த்தவன்.  அவனைக்  கேள்  உங்கள்  இருவரில்  யார் திறமையால் பாண்டவர்களுக்கு  வெற்றி  கிடைத்தது  என்று ?”என  கிருஷ்ணன் சொன்னான்.

“அரவான், சாட்சியாக இருக்கும்   நீயே  சொல்.  எங்கள்  இருவரில்  யாருடைய  சாகசத்தால்  அதி  தீரத்தால்  கௌரவ சேனை  அழிந்தது?  துரியோதனாதிகளை  பூண்டோடு  ஒழித்தது எது? என் கதாயுதமா? அர்ஜுனனின்  காண்டீபமா?
அரவான்  சிரித்தான்.”இதில் சிரிக்க  என்ன இருக்கிறது?’
“பெரியப்பா,  காண்டீவத்தையோ  உங்கள் கதா யுதத்தையோ இந்த  யுத்தத்தில் நான் ஒரு போதும்  பார்க்கவில்லையே. உங்கள் ஒவ்வொருவரின்  ஆயுதத்திலும் பள பள வென்று  மின்னும் சுதர்சன  சக்ரமே என் கன்னுக்குத் தெரிந்தது.   அதை  எதிர்க்க முடியாமல்  கௌ ரவர்கள்  மடிவதை  தான் பார்த்தேன்.  பாஞ்சஜன்யம்  என்ற சங்காயுதம் கௌரவ சேனையின்  ரத்தத்தை எல்லாம் தன்னுள் சேகரித்துக் கொள்வதை மட்டுமே  பார்த்தேன். போரில் பங்கேற்காத கிருஷ்ணன் பங்கு தான் பாரதப்  போர் வெற்றியில் அதிகம்”
உலகமே புகழும் தனது  சக்தியை பற்றி  ஒன்றுமே  சொல்லாத அரவானின்  மேல்  பீமனுக்கு அசாத்ய  கோபம்  வந்தது. தனது   பலத்தையோ வீரத்தை  குறித்தோ  யார்  சொன்னாலும்  விட மாட்டானே பீமன். உடனே  உடைவாளை  உருவி  அரவானின் தலையை  சிதைக்க  கிளம்பினான்.  கிருஷ்ணன் அவனைத்   தடுத்தான். அரவானின்  தலை  மரத்திலிருந்து  விடுவிக்கப்பட்டு  கிருஷ்ணன் சொன்னபடியே  அருகிலிருந்த  சரபரிகா  என்ற  நதியில் விடப்பட்டது.
அந்த நதியின் ஒரு கரையில்  சந்திரகிரி  என்ற  ஊர். அதன் அரசன்  ஒருநாள்  காலை  “குவா குவா” என்று  ஒரு குழந்தை  நதியில்  கத்திக்கொண்டு  மிதந்து வருவதைக் கண்டு  அதை  எடுத்து வளர்த்தான்.
“குவா குவா”  என்று கத்திக்கொண்டு  குழந்தை  சரபரிகா  நதியிலிருந்து  மீட்கப்பட்ட  இடமே   ”கூவாகம்”  என்ற  கிராமம்.  சரபரிகா  நதியில் கண்டெடுக்கப்பட்டதால்  அரவானின்  அடுத்த பிறவியில்  அவன் பெயர்  சரபாலன். சந்திரகிரி அரசனின்  வீட்டில்  வளர்ப்பு மகனாக  வளர்ந்து  பின்னால்  சந்திரகிரி அரசனைக்   கொன்ற கூத்தாசுரன்  என்ற  ராக்ஷசனை  பழி வாங்கி  வென்றதால்  கூத்தாண்டவன்  என்ற பேரும்  அரவானுக்கு  கிடைத்தது. என்பார்கள்.

அரவானுக்கு  உடல் இல்லை,  கதைக்கு  காலும் இல்லை  கையும்  இல்லை . எனவே  இது நடந்ததா  என்று ஆராய வேண்டாம்.  கதையை,   கதையாகவே  பார்த்து   அதில் தெரிந்து கொள்ள வேண்டியதை மட்டும் அறிந்து கொள்வது தான் விவேகம்.
++
(ஐந்தாம் வேதம் என்று  முழு மஹா பாரத  லக்ஷக்கணக்கான ஸ்லோகங்களை கதையாக சுருக்கி தமிழில் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோருக்காகவும்  வண்ணப்படங்களோடு,  வழவழ  ஆர்ட் பேப்பர்  கிட்டத்தட்ட  3-4   கிலோ எடையுடன்கூடிய  ரெண்டு பாகங்களாக  1000 பக்கங்கள்  கொண்ட புத்தங்களை  தயாரிக்க  ரூபாய்  11 லக்ஷம்  ஆனது.  விலையில்லாமல்  இந்தப்புத்தகத்தை  ஆயிரம் ரூபாய் நன்கொடை  ஸ்ரீ கிருஷ்ணார்ப் பணம் சேவா ட்ர்ஸ்ட்க்கு  அனுப்புபவர்களுக்கு  புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  சில பிரதிகள் மட்டுமே   கைவசம் உள்ளது.  வேண்டுவோர்  அணுகவும்:  ஜே கே சிவன் 9840279080 வாட்ஸாப். உங்கள் விலாசத்தோடு தொடர்பு கொண்டால் அனுப்புகிறேன்.)  ++கூவாகம் எனும்  ஊர்  விழுப்புரத்தில் உள்ளது. அங்குள்ள  கூத்தாண்டவர்  ஆலயம் (அரவான் கோவில்) இந்த திருவிழாவின் மையம்.  இங்கே  ஆண்டு தோறும் ஒரு திருநங்கை (Transgender / Aravani)  திருவிழா சித்திரை மாதம் நடைபெறுகிறது.  நேற்று  28.4.2026 ,மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. ++
அரவானின்  கடைசி ஆசைப்படி, கிருஷ்ணனே மோஹினியாக மாறி அரவானை மணந்து மறுநாள் அவன் களபலியில் உயிர் துறக்கிறான்.  மோஹினி  விதவையாகி துக்கப்படுகிறாள். இது தான் அரவாணிகளின் விழா அடிப்படை தத்வம்.  கூவாகத்தில்  உலகமெங்கும் உள்ள  அரவாணிகள் ஒன்று சேர்கிறார்கள்.  அரவான் கடவுளை மணக்கிறார்கள்,   கோவில்  பூசாரி  அனைவருக்கும்  தாலி கட்டுவார். , மேக்-அப், திருமண உடை எல்லாம் உண்டு.  மறுநாள்  பூசாரி அனைவரின் தாலிகளையும்  அகற்றுவார்,. அரவாணிகள் விதவைக்கோலம் பூண்டு கதறுவார்கள்.  வளையல்கள் உடைக்கப்படுகிறது.  அழுகை  கூக்குரல் எங்கும் எதிரொலிக்கும்.
இங்கு  அழகுப் போட்டி  நடந்து  மிஸ்  கூவாகம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஏதோ வெளிநோக்கில் இது ஒரு  “அசாதாரணம்” போல தோன்றலாம்: ஒரே இரவில் திருமணம் செய்து மறுநாள் விதவை ஆகுதல்வளையல் உடைக்கும் துக்கம்  ஆண்கள் பெண் வேடம் (திருநங்கை அடையாளம் வெளிப்பாடு) சற்று வினோதமானது. மனதைத் தொடுவது.  கூவாகம் விழா சுமார்  15 நாட்கள் நடக்கும். நல்ல கூட்டம். 1–5 ஆம் நாள்: கொடி ஏற்றம் & ஆரம்ப பூஜைகள் தினமும்  கூத்தாண்டவருக்கு அர்ச்சனை, அபிஷேகம், ஆரத்தி.அலங்காரம்.11–13 ஆம் நாள்: முக்கிய சடங்குகள்  ஆரம்பிக்கும். பெரிய பூஜைகள், அரவானுக்கு மலர் மாலைகளோடு வுளுக்கு விசேஷ அலங்காரம். ஊர்வலம். திருநங்கைகளின்  மணக்கோல அலங்காரம். சேலைகள், ஆபரணங்கள், வளையல்கள், விமரிசையாக எங்கும் கண்ணில் படும்14 ஆம் நாள்: திருமண நாள்.திருநங்கைகள் -அரவான் (கூத்தாண்டவர்  திருமண வைபவம். அர்ச்சகர்  அனைவருக்கும் தாலி கட்டுவார்.ர்அனைத்து  திருநங்கைகளும்  திருமண மங்கைகளாக ஜொலிப்பார்கள். மகிழ்ச்சி, உற்சாகம் நிறைந்த இரவு அன்று மட்டுமே.
15 ஆம் நாள்: அரவான் பலி  சடங்கு நடைபெற்ற பின்  எல்லா திருநங்கைகளின் தாலிகளும்  அகற்றப்படும்.  கலீர் கலீர் என்று  கண்ணாடி வளையல்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்கும். திருநங்கைகள் அழுகுரல் எங்கும் எதிரொலிக்கும்.  பார்க்க  நெஞ்சு உடையும்.  கிருஷ்ண  மோகினி அனுபவித்த துக்கம்  ப்ரதிபலிக்கும்.16–18 ஆம் நாள் விழா நிறைவாக   ஊர்வலம். இறுதி பூஜைகள். திருநங்கைகள், பக்தர்கள். வீடு, ஊர் திரும்புவார்கள்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;