
தினையும் வினையும்” — நங்கநல்லூர் J K SIVAN
ஒவ்வொரு நாளும் வாய்க்கு வாய் ”எல்லாம் என் கர்மம், சே சே சே. அது என் கர்மா…” என்று அலுத்துக்
கொள்கிறோமே .அதை பற்றி நமக்கு நன்றாக தெரியுமா? தினை விதைத்தவன் தினை அறுக்கிறான். வினையை விதைத்தவன் அதைத் தானே அறுக்கமுடியும்? என்று வேதாந்தம் வேறு பேசுகிறோம். எல்லாம் இந்த கர்மா பற்றி என்பதால் அதன் கிட்டேயே கொஞ்சம் போய் எட்டிப் பார்க்கலாமா? தொட்டுப் பார்க்க லாமா என்று தோன்றுகிறது.
முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது. நம்முடைய இப்போதைய வாழ்க்கை. அதாவது நம்முடைய தற்போதைய பிறவி. இதற்கு முன்பும் எத்தனையோ பிறவிகள் எடுத்துள்ளோம் என்கிறார்கள். நமக்கு அது பற்றி எந்த நினைவும் இல்லை. ஒவ்வொரு பிறவியிலும் நாம் சொத்தாக சேர்த்து வைத்துக்கொண்டிருந்த நம்முடைய சொல், செயல், எண்ணத்தின் பிரதிபலன் என்பது தான் ”கர்மா” எனப்படும் சேமிப்பு. பணமோ, காசோ, வீடோ, உறவோ, சொந்தமோ, ஒரு பிறவி முடிந்தவுடன் நம்மை விட்டுப் போய்விடுகிறது. பிறவிகள் எடுக்க வேண்டுமாம்? அதிலெல்லாம் எத்தனை அம்மா அப்பாக்கள், வீடுகள், பணம், நகைகள், சொத்துக்கள். நமக்கு இருந்திருக்கும்? அதெல்லாம் யார்? எங்கே போனது?. ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் கடைசியில் நம்மோடு சேர்ந்து வருவது மேலே சொன்ன ”கர்மா” என்ற சேமிப்பு மட்டுமே.
முதலிய பிறவிகள் என்ன? அதில் நாம் யார்? நம் சொத்து என்ன?? கர்மா என்கிறேனே அது என்ன? எத்தனை ஜன்மாக்களில் எத்தனை கர்மாக்கள், நல்லவை எத்தனை கெட்டவை எத்தனை?? நிச்சயம் கெட்டவை தான் அதிகமாக இருக்கும் என்று நானே நம்புகிறேன். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அமெரிக்காவில் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தான் விஞ்ஞானத்தை ஒரு எல்லைக்குள் நிறுத்தி வித்த்திருக்கும் ஞானம். நமது ரிஷிகளுக்கு அனைத்தும் தெரியும். அவர்கள் கர்மாவை நன்றாக அலசி நமக்கு உணர்த்தி, உலர்த்தி இருக்கிறார்கள்… இந்த வாழ்க்கையில் நம்முடைய சந்தோஷம் , துக்கம் சகலமும் மேலே சொன்ன கர்மாவினால் தான் விளைகிறது. அது தான் ‘தினை, வினை’ சமாச்சாரம். ரிஷிகள் நமக்கு சொல்லிக் கொடுத்தது:
கர்மாக்கள் மூன்று வகைப்படும். சஞ்சிதம். ப்ராரப்தம், க்ரியமாணம்
1.சஞ்சிதம். நமது bankbalance . இத்தனை ஜென்மங் களில் சேந்த நல்ல,கெட்ட கர்மாக்களின் மொத்தம்.
2. பிராரப்த கர்மம். மொத்தத்தையும் ஒரே பிறவியில் நம்மால் அனுபவிக்க முடியாது. ஆகவே மேலே சொன்ன மொத்தத்தில் இருந்து ஏதோ ஒரு சின்ன ‘விள்ளல்’ இந்த பிறவிக்கு நம்மோடு சேர்ந்து அனுப்ப படுகிறது. அது தான் ப்ராரப்த கர்மா. (Prarabdha Karma) – இந்த பிறவியில் இதை அனுபவித்தே ஆகவேண்டும். நாம் எங்கே பிறக்கிறோம், நமது உடல் என்ன? ஆணா , பெண்ணா, விலங்கா , பறவையா, …….எத்தனை வருஷம் இதில் (ஆயுள்) இருக்க வேண்டும். இதெல்லாம் ப்ராரப்தம் சம்பந்தமானது.
3. இந்த பிறவி எடுத்ததும் பொம்மை மாதிரி பேசாம லா இருக்கிறோம். கொடுத்ததை மட்டும் அனுபவிக் கிறோமா? இல்லையே ஸார்? இந்த பிறவியிலும் சில நல்லதுகள் அநேக கெட்டதுகளை செயகிறோமே. அது தான் க்ரியமாண கர்மம் , ஆகாமி என்றும் பெயர். இப்போது இந்த பிறவியில் உருவாகும் கர்மம். பின்னல் சஞ்சிதத்தில் அசலுக்கு வட்டி போல் ஒட்டிக் கொள்ளப் போவது.
வில்லு அம்பு உதாரணம் சொன்னால் புரியும் :
சஞ்சிதம் = பெட்டியில் குவியலாக இருக்கும் அம்புகள்
ப்ராரப்தம் = பெட்டியில் இருந்து எடுத்து விடப்பட்ட அம்பு (திரும்ப பெற முடியாது)
க்ரியமாணம் = புது அம்புகள் இப்போது சம்பாதிப்பது
நமக்கு கர்மத்தை பற்றிய ஞானம் புரிந்தால், தெரிந் தால், அறிந்தால் அது சஞ்சித கர்மத்தை எரித்து பொசுக்கும். புதிதாக க்ரியமாணம் உருவாகாது. ஒவ்வொரு பிறவிக்கும் அதற்குண்டான ப்ராரப்தம் மட்டும் தொடர்ந்து மொத்தம் காலியாகும் வரை தொடரும். அவ்வளவு பிறவிகள் என்னென்னவாகவோ எடுத்து அனுபவிக்க வேண்டும்.
சஞ்சிதம்:
சஞ்சித கர்மா என்கிற மூட்டை, நாம் நல்ல ஆசாமி களோடு அல்லது கெட்ட பேர்வழிகளோடோ சேர்வ தால் விளையும், எண்ணங்கள், பழக்கம், செயல்பாடு களின் தாக்கம் (சம்ஸ்காரம் என்பது இந்த தாக்கம் தான் ) நமது மண்டைக்குள் புகுந்து ஆழமாக பதிந்து, புதைந்து விடுகிறது. பல ஜன்ம ஜன்மாந்தரங்களாக நாம் இப்படி சேர்த்துக் கொண்டவை, சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எதாவது ஒரு ஜன்மத்தில், ஏன் இந்த ஜென்மத்திலேயே கூட கொஞ்சம் பழைய சகவாச சந்தர்ப்பம் கிடைத்தவுடனேயே தலையைத் தூக்கும். நிறைய சேர்த்து வைத்துக்கொண்டிருந்த அந்த விளைவுகள் (நல்லதாக இருந்தால் நல்ல விளை வு, கெட்டதாக இருந்தால் கேட்கவே வேண்டாம்) நம்மை ஆட்படுத்தி மூழ்கவைத்து, நன்மையையோ, தீமையையோ தகுந்தபடி பரிசளிக்கும். பழைய
வாசனை கிடைத்த சந்தர்ப்பத்தில் புகுந்து கொண்டு ”பழக்கம்” வழக்கமாகிவிடும். புரிகிறதா? ஆகவே தான் நாம் அவர் ஒரு மஹான் சார். எப்படி அருமையான மனிதனாக இருக்கிறார் பார்த்தீர்களா என்கிற பேரோ, சரியான கேப்மாரி என்கிற பேரோ சம்பாதிக்கிறோம். பெரிய குடும்பம், நல்ல படிப்பு என்பது இதற்கு சம்பந்தப் பட்டதில்லை என்கிறது தெரிகிறதா? சகவாசம் எவ்வளவு முக்கியம் என்பது நிதர்சனமாகிறதா?
வேகமாக ஓடும் ரேஸ் குதிரைகள் இடையே ஒரு சப்பாணி குதிரை இருந்தால் அதுவும் ஜோராக ஓடுவது இதனால் தான். சொத்தை விதையாக இருந்தாலும் நல்ல மண்ணில், நிறைய நீரோட்டம் உள்ள பூமியில் விதைக்கப்படும்போது கொஞ்சமாவ து துளிர்க்கும். சத் சங்கம் அவசியம் என்று புரிகிறதா?
அதற்காக தான் நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்க முயல வேண்டும். நல்ல எண்ண ங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே புதைந் துள்ள தீய என்னங்களைக்கூட (சம்ஸ்காரங் களை) மாற்றிவிடும் சக்தி உள்ளவை. நாம் மாற முடியுமே.
எப்படி நல்ல சம்ஸ்காரங்களை சம்பாதிப்பது?
நிறைய புண்ய ஸ்தலங்களுக்கு போகலாம். நல்ல விஷயங்களை சேகரித்து படிக்கலாம். சிந்திக்கலாம். நல்ல நண்பர்களோடு உறவாடலாம். டிவி சீரியல் வேண்டாம்…அரசியல் வேண்டாம். சத் சங்கத்தில் ஈடு படு. ரொம்ப பேசாதே. தனிமையில் இரு. சிந்தனை செய். உன்னைப்பற்றி யோசி. தனித்திரு, விழித்திரு, பசித்திரு. (உனக்கோசரம் தானே சிவன் வள்ளலார் பெரியவா, மகான்களை பற்றி எல்லாம் எழுதறான்!!)
ப்ராரப்தம்
இதை ரொம்ப சிம்பிளாக விளக்கலாம். இந்த உனக்கு இன்றைய தினத்துக்கு பாக்கெட் செலவுக்கு என்று கொடுக்கப்பட்ட துட்டு.
அதிலிருந்து தான் புதுசாக சில நல்ல/கெட்ட காரியங் களை செய்கிறோம். நம் ஒவ்வொருக் குளேயும் அடக்க முடியாத, கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள், உணர்ச்சிகள் தோன்றும். காம, க்ரோத, மோக, மத மாற்சர்யங்கள் நம்மை ஆட்டிவைக்கிறது. அப்போது நமது விவேகம் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி எங்கோ போய் விடுகிறதே.? மேற்பட்ட எண்ணங்களால், செயல்களால் பிராரப்த கர்மா குறையலாம், கூடலாம். தெரிந்து, நாமாக செய்யும், சொல்லும், எண்ணும் சம்ச்காரங்களின் விளைவு. இது இந்த ஜென்மத்திலேயே விளைகிறது. கோபத்தில் வெட்டுவது, திட்டுவது, , கொள்ளை, இன்னும் என்னென்னவோ செய்கிறோம். பிறகு யோசித்து என்ன பயன் ? விளைவை அனுபவித்து துடிக்கிறோம் . ஆகவே எண்ணுபவை, சொல்பவை, செய்பவை எல்லாமே நல்ல சம்ஸ்காரங்களாக இருக்கட்டும். ப்ராரப்தம் விளைவு, புதிதாக ஆகாமி இதனால் குறையும். ஏற்கனவே உள்ள சஞ்சிதம் மூட்டையிலும் வட்டி குறையும்.
தெரிந்துகொண்டாயா? சஞ்சிதம் சமயம் பார்த்து உன்னை அமுக்கும் அல்லது மேலே தூக்கிவிடும். பிராரப்தம் இப்பவோ எப்பவோ உன்னை தொடர்ந்து பலனை கொடுக்கும். நல்லதோ கெட்டதோ அததற்கேற்ப. ஞாபகம் இருக்கிறதா தினை விதைத்தவன், வினை விதைத்தவன் பழமொழி. அதே அதே….
க்ரியமாண கர்மா
அப்போதைக்கப்போது பலன் தரும் சமாசாரம் இது. கையிலே காசு வாயிலே தோசை. இப்போது மது குடிக்கிறாயா, உடனே மதி மயங்குகிறது. அதன் பலனாக சில காரியங்கள் செய்கிறாய். விஷம் குடிக்கிறாயா. நாலு பேர் ரெடி. நெருப்பைத் தொட் டாயா சுட்டுக் கொள்வாய். பர்னால் தேடு. பஞ்ச இந்த்ரியங்களும் கட்டுப்பாடின்றி இயற்கையை மீறி. மனசாக்ஷியை மீறி, செயல்பட்டால் அதற்குண்டான பலன் கைமேலேயே. செய்யும் காரியத்தின் நல்ல பலன் உடனே தெரியும், ப்ராரப்தமும் கொஞ்சம் குறையும், கெட்ட கர்மாவாக இருந்தால் உள்ளே இருக் கும் சஞ்சித மூட்டை இன்னும் பெரிதாகும்… உணவு, பேச்சு, தூக்கம் போன்ற இயற்கை விதி முறைகளை மீறினால் தண்டனை கிடைக்கிறதே அது தான் க்ரியமாண கர்மா. செய்ததற்கு கூலி. நல்ல வேலை செய்தால் அதற்கேற்ற புகழ் . தவறு செய்தால் தண்டனை.
கடவுள் நமக்கு மனசாக்ஷி என்ற ஒரு காவல்காரனை சம்பளமில்லாமல் நியமித்து கொடுத்திருக்கிறார். பாவம். நல்லா வேலை செய்பவன். பாவம், யார் அவனை லக்ஷியம் செய்கிறார்கள். அவன் அவ்வப் போது எடுத்து சொல்வதைக் கேட்டாலே நிறைய கர்மாக்களில் நல்ல சம்ஸ்காரம் கிடைக்குமே. ப்ராரப்தம் குறையும்.
சம்ஸ்காரங்களை தொலைப்பதற் காகவே தொடர்ந்து பிறவிகள். புழுவாக, தேளாக, பாம்பாக, நண்டாக, பசுவாக, மனிதனாக, தேவனாக எந்த பிறவி கர்மாவுக் கு ஏற்றவாறு கிடைக்கிறது. நல்ல சம்ஸ்காரம் நம்மை நன்றாக வைக்குமே அதை அடைய வேண்டாமா? துன்பம் ஏன் அடைகிறோம். ”கனியிருப்ப, எதற்கு காய் காய் கவர வேண்டும்?” என்றோ எங்கோ எதற்கோ எவருக்கோ துன்பம் தந்ததால் தானே. இப்போது சிக்கலில் மாட்டிக்கொண்டோம். இனியாவது தவிர்ப்போம்..
ஒன்று நிச்சயம். அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும் . ”நின்று” தான் சஞ்சித/ப்ராரப்த கர்ம பலன். மண வாழ்க்கை கூட சிலருக்கு மரண அனுபவமாவது கூட இதாலேயே. நிமிஷத்துக்கு நிமிஷம் படு வேதனை, யாருக்கோ எங்கோ எப்பவோ செய்ததின் எதிரொலி என்று எடுத்துக்கொள்ள வேண் டும். அடி மேல் அடியாக இடி போன்று துன்பச்சுமை சிலருக்கு நேர்வதே இந்த ஸம்ஸ்கார காரணமாகத் தான். விதி என்கிறோம் இதை. விதி எப்போது நேர்கிறது தெரியுமா? மோசமான ஸம்ஸ்காரம் நிறைய சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அது காய் நிலையிலிருந்து பழுத்து கீழே விழுகிற சமயம் நாம் எந்த ஜன்மத்தில் இருக்கிறோமே அப்போது வந்துப்ரராப்தமாக வாய்க்கும்.
எனக்கு தெரிந்து நான் ஒரு தப்பும், குற்றமும் செய்ய வில்லையே, எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை, தண்டனை?
கடவுளைப் போய் திட்டுகிறோம். நான் நிறைய நல்லது செய்கிறேனே, எனக்கு எதற்கு இந்த தண்ட னை? உனக்கு கண்ணில்லையா? தப்பு கண்ணுக்கு தெரிந்து செய்பவன் எல்லாம் சுகமாக காரில் பறக்கி றானே? ஒரு பாவமும் அறியாத எனக்கு எதற்கு இந்த துன்பம்? — ஆஹா. நீ இப்போது செய்த கடுகளவு நல்ல சம்ஸ்காரம் எத்தனை ஜன்ம ஜன்மாந்திரங் களாக நீ சேர்த்து வைத்த மலையளவு தீய சம்ஸ்கா ரங்களை போக்கிவிடுமாடா? . கான்சர் நோய்க்கு மிளகு ரசம் மருந்தா? சிலந்தி தான் கட்டிய வலையில் தானே அழியவில்லையா. அதைப் பார்த்து புரிந்து கொள்.
இனியாவது மனதை இறைவன் பால் வை. நல்ல விஷயங்களை தேடு. நல்லவர்களை நாடு. நல்லதே செய். பலன் எதிர்பாராதே. பலன் உனக்குள்ளேயே இருக்கிறது. அதை நீ உணரும் காலம் வருமே.
கடைசியாக ஒரு வார்த்தை. மேலே நான் சொன்னது நல்ல விஷயம். நமக்கு கண்ணைத்திறக்கும் என்றால், உடனே, என்றால், உன் நண்பனுக்கு, உறவினனுக்கு, தெரிந்தவனுக்கு எல்லாம் இதை அனுப்பு. சொல்லு . இது ஒருவனை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினால் எழுந்தவனுக்கு மட்டுமல்ல எழுதியவன் எனக்கும் பலன் (நல்ல சம்ஸ்காரம் !!! என் ப்ராரப்தமும், சஞ்சித மும் கொஞ்சம் குறையட் டுமே !) கிடைத்ததாகும் இல்லையா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



