LORD GANESA J K SIVAN

அப்பா கணேசா… நங்கநல்லூர் J K SIVAN
உலகில் எல்லோருக்கும் பிடித்தது யானை. யானை முகனாக ஒரு தெய்வத்தை பார்ப்பது நமது பாரத தேசத்தில் தான். ஆம். ஹிந்துக்களுக்கு விக்னேஸ்வரன், கணேசன், விநாயகன், பிள்ளையார் என்று பல பெயர்களில் ஆனந்தம் தருபவர் அவர் ஒருவரே. நாற் சந்திகளில், ஆற்றங்கரையில், குளக்கரையில், அரசமரத்தடியில், மாடங்களில், எங்கும் வணங்கப்படுபவர் அவர் தான். நாம் இரு காது மடல்களையும் பிடித்துக்கொண்டும் , தலையில் இரு பக்கங்களிலும் குட்டிக்கொண்டும் தோப்புக்கரணம் போடும் ஒரே தெய்வம் பிள்ளையார் மட்டும் தான். நம் தலையிலே நாமே குட்டிக்கொள்ளச் செய்யும் ஒரே கடவுள்.
​பிள்ளையார் ஸ்லோகம்.
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजम् । प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ॥
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் । பிரசன்னவதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே ॥
Shuklāmbaradharam Vishnum Shashivarnam Chaturbhujam Prasanna Vadanam Dhyāyet Sarva Vighnopaśāntaye
வெள்ளை நிற வஸ்திரம் தரித்து, அழகிய நிலவைப் போல் ப்ரகாச ஒளி உள்ளவராக, நான்கு கரங்கள் கொண்ட, இனிய சிரித்த முகத்தோடு, எங்கும் எவருக்கும் ஆனந்தம் தரும் விநாயகனை தொழுதால் சகல தடைகளும் நீங்கும்.
கைலாசத்தில் சகல பூத சிவ கணங்களுக்கு நாயகன், நாதன், ஈசன் என்பதால், கணேசன், கணபதி, கணநாதன், என்றெல்லாம் பெயர் கொண்டவன்.
பதினாறு, ஒரு தெய்வீக எண்.அமாவாசையிலிருந்து ஆரம்பித்து பௌர்ணமி முடிய சந்திரனுக்கு 16 கலைகள். பூஜை செய்யும்போது பதினாறு வித உபசாரங்களை ஷோடசோபசாரம். அம்பாளுக்கு ஷோடஸி , ஷோடஸ மாத்ருகா என்று ஒரு நாமம். ஒருவரை வாழ்த்தும்போது நாமும் ‘நீ பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ” என்கிறோம். இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் விநாயகனுக்கு பதினாறு நாமங்கள் அற்புதமாக உள்ளவை. அதை கொஞ்சம் சொல்கிறேன்;
​
सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।​ म्बोदरश्च विकटो विघ्नराजो विनायकः ॥​ धूम्रकेतुर्गणाध्यक्षो भालचन्द्रो गजाननः ।​ वक्रतुण्डः शूर्पकर्णो हेरम्बः स्कन्दपूर्वजः ॥
Sumukhaścha​, Ekadantaścha​, Kapilo​, Gajakarnakaḥ​,Lambodaraścha ​,Vikato​, Vighnarājo ​,Vināyakaḥ​,Dhoomraketur​, Gaṇādhyakṣo​, Bhālacandro​, Gajānanaḥ​,Vakratundaḥ ​,Shoorpakarṇo​, Herambaḥ​, Skandapūrvajaḥ
சுமுகஷ்ச​, ஏகதந்தஷ்ச கபிலோ கஜகர்ணக:​ லம்போதரஷ்ச விகடோ விநாயகோ விநாயக:​ தூம்ரகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்திரோ கஜானன:​ வக்ரதுண்ட: சூர்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:
​சுமுகன்: பார்த்துக்கொண்டே இருக்கும்படியான கவர்ச்சியான முகம் கொண்டவன்,
​ஏகதந்தன்; ஒற்றைக் கொம்பன். நமக்கு பல் ஏதாவது உடைந்து போனால் முகத்தை பார்க்கவே சகிக்காது. ஆனால் ஒரு தந்தம் பாதி உடைந்தாலும் அவன் அழகே தனி அழகு.
​கபிலன்; அவன் கறுப்புமில்லை, வெளுப்புமில்லாத சாம்பல் நிற அழகுடையவன். யானையின் நிறமே தனி அழகு வாய்ந்தது.
​கஜகர்ணன்; விநாயகனின் காது அசையும் அழகு கண்ணைக் கவரும். பெரிய காது ஒரு தனி அழகு. எல்லோர் குறையும் கேட்கவேண்டும், அதை நிவர்த்தி செய்யவேண்டும். பெரிய காது வேண்டாமா?
​லம்போதரன்; பெருவயிறன் . தொப்பையும் தொந்தியும் என்று சொன்னாலே பிள்ளையார் உருவம் தானே முதலில் கண் முன் நிற்கிறது. ஆஹா மதுரையில் மீனாக்ஷி கோவிலில் முக்குறுணி விநாயகன் விகிரஹத்தின் முன்னாலிருந்து நகரவே மனம் வராது.
​விகடன்; விநோதன். நினைத்துப் பார்க்க கூட முடியாத உருவம் கொண்டவன் .
​விக்ன ராஜன். நமது தடைகளை, இடையூறுகளை அகற்றுவதில், நீக்குவதில், அவனல்லவோ ராஜா.மஹா ராஜா.
விநாயகன்; வினையகற்றுபவன். அச்சிறுப்பாக்கத்தில் அப்பாவுக்கு தேர் முடிந்ததும் அதை நேராக்க உதவியதும் அவன் தானே.
தூம்ரகேது. புகை மண்டலமாக பரா சக்தி கொண்டவன்.
கணாத்யக்ஷகன் : சிவகணங்களின் பூதகணங்கள் தலைவன். முதல்வன்.
​பாலச்சந்திரன்; அப்பாவைப் போலவே தானும் இளம்பிறை சூடி.
​கஜானனன். யானை முகத்தோன்.
​வக்ர துண்டன். அழகாக வளைந்த தும்பிக்கையான்.
​சூர்ப்பகர்ணன் : யானையின் காது நாம் தானியங்களை புடைக்கும் முறம் போல இருக்கிறது என்று ஞாபகப்படுத்தும்.
​ஹேரம்பன்; தீனர்களின் துயர் துடைப்பவன்.
​ஸ்கந்தபூர்வஜன்; ஆறுமுகனுக்கு மூத்தவன். ‘
​கண்ணை மூடிக்கொண்டு இந்த நாமங்களை ஒரு தரம் சொல்லி பாருங்கள் உங்கள் முன்னால் விநாயகர் தோன்றுவார். அவர் ப்ரத்யக்ஷ ஸ்வரூபம் நம் முன் நிற்பார்.
​எதை ஆரம்பிப்பதாக இருந்தாலும் கணேசனை கும்பிட்டு ஒரு சுழி உ மாதிரி போட்டு ஆரம்பித்தால் நமது தலைச் சுழியை ஜோராக இருக்கும்படி செய்கிறவன்.
​இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே பேசாமல் அவனை மனதிலேயே நிறுத்தி வைத்துக் கொண்டால் கூப்பிட வேண்டிய அவசியமில்லாமல் போகுமே என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;