kamakoti family j k sivan

காமகோடி பாரம்பரியம் –   நங்கநல்லூர்  J K  SIVAN
வெகு காலமாக  சொல்லவேண்டும் என்று  மனதில்  இருந்த எண்ணம்  இன்று தான்  செயலானது.  ஆம். அற்புதமான காஞ்சி க்ஷேத்ர சரித்திரம் விஷயம் தான் அது.  பல நூல்களில் படித்த சாரம்.
நமது தென்னாட்டில் ஜில்லாக்கள் என்ற நிலப்பகுதிகள்  பெரிதாகவும் சிறிதாகவும்  எத்தனையோ மண்டலங்கள் என்று ஒரு காலத்தில்  அடையாளம் காணப்பட்டன.  காஞ்சி மண்டலம் எனும்  தொண்டை மண்டலம்  அவற்றில் பெருமை வாய்ந்த  ஒன்று.  முக்கியமானது.    காஞ்சி  மண்டலம் அநேக  புராதன  கோவில்கள் கொண்டது  காஞ்சிபுரத்தை தவிர  விரிஞ்சிபுரம், மஹாபலிபுரம், தேவிகாபுரம் போன்ற ஊர்கள் கொண்டது. தக்ஷிண பிநாகினி, (தென் பெண்ணை) பயஸ்வினி (பாலாறு) , கம்பா நதிகள் ஓடிய பிரதேசம்..
முக்தி தரும் ஏழு க்ஷேத்ரங்களில் காஞ்சி பிரதானமானது. அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்தி துவாரகா என்ற க்ஷேத்ரங்கள் பெயர்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்தவை தானே.

காஞ்சியில் உள்ள காமாக்ஷி அம்பாள் , ஏகாம்பரரேஸ்வர்  வரதராஜ பெருமாள் ஆலயங்கள் உலக பிரசித்தி பெற்றவை. காஞ்சிக்கு மத்தியில் காஞ்சி காமகோடி பீடம் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த ஆலயங்கள் அம்பாளின் ஸ்ரீ சக்ர அமைப்பில் பீஜாக்ஷரங்கள்  அம்சமாக, ஆவரணங்களாக , எங்கும் நிறைந்துள்ளன.
”நகரேஷு காஞ்சி”  நகரங்களில் சிறந்தது என்ற ஸ்ரேஷ்டமான புகழ் கொண்டது காஞ்சி. எண்ணற்ற யோகிகள், அவதார புருஷர்கள், சித்தர்கள், ஞானிகள் வந்து தங்கி  தவம் செய்த க்ஷேத்ரம்.  ஆதி சங்கர பகவத் பாதர்  வந்து இங்கே சிலகாலம் தவம் செய்திருக்கிறார்.  அவர் நிர்வகித்து  ஆரம்பித்த குருபீடம் தான் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம்.

காஞ்சியில்  காமாக்ஷி தேவி பிரத்யக்ஷமாக  இருப்பதை அறிந்து இங்கே  ஸ்ரீ வித்யா உபாசனை பரவ வேண்டும் என்று ஆதி சங்கரர் தீர்மானித்தார்.  அத்வைத சாரத்தை உபதேசித்தார். பிரபஞ்ச சாரம், சௌந்தர்ய லஹரி, த்ரிசதி பாஷ்யம்.  நூல்களை அம்பாள் பெருமை பாடி எழுதினார்.   காமாக்ஷி தேவி ஸ்ரீ  வித்யா ஸ்வரூபிணி.  அவளை வழிபட ஒரு குறிப்பிட்ட  நெறிமுறை அவசியம்.  அதை சரியாக உணர்ந்தவர் அந்த பகுதியில் இல்லை என்பதால்  சங்கரர்  வடக்கே நர்மதை நதிக்கரையில் வசித்த சில ஸ்ரீ வித்யா உபாசகர்களில் முப்பது குடும்பங்களை தேர்ந்தெடுத்து காஞ்சிக்கு வரவழைத்தார்.  க்ரியா யோகம்  அப்யசிப்பவர்கள் அவர்கள்.  காமகோடி பீடத்தின் ஆதரவில் அந்த முப்பது குடும்ப ஸ்ரீவித்யா உபாசகர்கள் அம்பாள் காமாக்ஷி தேவிக்கு  நித்ய அனுஷ்டான பூஜை  விதிமுறைகளை அனுசரித்து பிரபலமாக்கினார்கள். 

कर्णात् कर्णप्रदेशेन संप्राप्तम् अवनीतलम्।    Karnāt karṇa-pradeśena samprāptam avanītalam  அதாவது   செவி வழியாக,   கர்ண பரம்பரையாக,   குருவின்  மூலம்  சிஷ்யர்  காதில் விழுந்து அவர் மனனம் செய்து அவர் மூலம் மற்றவர் காதுகளுக்கு பரவி  ஞானம் பலரை இப்படி தான் அச்சு  வருவதற்கு முன் வேத சாஸ்திரங்கள், மறை நூல்கள்  பலரை  ஞானம் பெற செய்தது.  அப்புறம்  தான் ஓலைச்சுவடி. அச்சடித்த  புஸ்தகங்கள்.
இப்படி  ஸ்ரீ வித்யா உபாசனை மந்திர விதிகளை  கர்ணபரம்பரையாக அறிந்த அந்த குடும்பத்தார் ‘காமகோடி’  குடும்பம் என்று அடையாளம் காணப்பட்டனர். வேதங்களில் நிபுணர்கள்.  மஹா திரிபுரசுந்தரி காமாக்ஷி அம்பாளை  பிரதான இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள்.  அனைவரும் ஸ்ரீ வித்யா சித்தி அடைந்தவர்கள்.
மேலே சொன்ன முப்பது காமகோடி குடும்பங்களில் 10 குடும்பம்   பௌரகுத்ஸா  கோத்ரம், 10 குடும்பம்  கௌண்டின்ய கோத்ரம்,  மீதி பத்து கௌசிக கோத்ரத்தை சேர்ந்தவை.  பாதி  (15) குடும்பங்கள் அஷ்ட சஹஸ்ரம் வகுப்பை சேர்ந்தவை. (நான் அந்த வகுப்பு என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாமே தவிர  நான்   ஒன்றுமே  சாதிக்கவில்லையே என்பது  எனக்கு பெருங்குறை)  மற்றவர்கள் வடமர்கள்.
காலம் செல்ல செல்ல  13வது  நூற்றாண்டில் இந்த குடும்பங்களை சேர்ந்தவர்களின் எண்னிக்கை குறைந்து போய்விட்டது.  கலியுகம் அல்லவா?  ரெண்டே ரெண்டு   பௌரகுத்ஸ  கோத்ரம்,  கௌண்டின்ய கோத்ர குடும்பத்தினர் மட்டுமே மேலே சொன்ன லக்ஷியத்தோடு  வாழ்ந்தவர்கள்.  இந்த கோத்ரக்காரர்கள் விடாப்பிடியாக  காஞ்சி காமகோடி பீட  ஆதரவில் காமாக்ஷி அம்பாள் ஸ்ரீ வித்யா உபாஸனையை தொடர்ந்தவர்கள்.
அக்கால  மண்டலாதிபதிகளான , ராஜாக்கள், ராயர் வம்சம்.  நாயக்கர் வம்சம்,  மராத்தி வம்சத்தவர் களாக இருந்தார்கள்.  விஜயநகரம், ஆர்க்காடு, தஞ்சாவூர் பகுதிகளில்  ஆண்டனர். தர்மம், சாஸ்திரம், வேதம், சங்கீதம், நாட்யம், சித்திரம், பக்தி,  போன்ற கலை , ஞானத்தை  ஆதரித்தவர்கள்.  ஜோஸ்யம்,  வான சாஸ்திரம் அறிந்தவர்கள்.
 பிரபல  வான சாஸ்த்ர நிபுணர்கள் சில  பெயர்கள் சொல்கிறேன்.  ஜோஸ்யம் சுப்பாராயர், தேவராஜ ஜோசியர், சேஷாத்ரி ஜோஸ்யர், வெங்கட்ரமண  சாஸ்திரி, காமகோடி சாஸ்திரி.
ராஜாக்கள், ஸமஸ்தான  ஆதரவில் வருஷா வருஷம்  வரதராஜ பெருமாள் கோவிலில் பஞ்சாங்கம் கணித்து வாசிப்பார்கள்.  அவர்களுக்கு நிலம், மான்யம்,வீடுகள், ஆபரணங்கள்,  வாகனங்கள், வேலையாட்கள் , மிராசு, தானம் போன்ற  வசதிகள் வழங்கப்பட்டது. பலர் வைஷ்ணவ சம்பிரதாயத்தை ஏற்றுக்கொண்டனர் என்பதால்  அவர்களுடைய அத்வத கோட்பாடுகள், சாக்தம், ஸ்ரீ வித்யா உபாசனை துளியும்  க்ஷீணம் அடையவில்லை.  பின்னர்  சைவ வைணவ வேறுபாடுகள் வித்யாசங்கள் வளர ஆரம்பித்தது.  காமகோடி குடும்பங்களில் சிலர்  வைணவ ஸம்ப்ரதாயத்தை பின்பற்றினர்.
 நாமம்,  பௌண்ட்ரம், ஸ்ரீ சூர்ணம்  போன்ற குறிகளை  தரிக்காததால்  வரதராஜ பெருமாள் கோவில்  வைணவர்கள் அவர்களை எதிர்த்து  சந்நிதியில்  கைங்கர்யம் செய்ய அனுமதிக்கவில்லை.  மேலும் அவர்கள் மானிய நிலம், மிராசு, போன்ற வசதிகளையும் இழக்க நேரிட்டது.  சிவ காஞ்சியிலும், விஷ்ணு காஞ்சியிலும் ரெண்டு புராதன வீடுகள் மட்டுமே அவர்களுக்கு எஞ்சியது.  எதை இழந்தாலும் மனதில் அம்பாள் பக்தியை இந்த காமகோடி குடும்பங்கள் இழக்கவில்லை.
வடக்கே  மதவெறி பிடித்த  முஸ்லீம்கள்  ஆக்கிரமிப்பு, கலகங்கள் அதிகமாகிக்கொண்டே  வந்தது.  தெற்கே  பக்தி குறைவதை தவிர்க்க  தார்மீக ஒழுக்கத்தை பரப்ப,  சிறந்த ஞானி கள் , சாஸ்த்ர நிபுணர்கள்  தேவைப்பட்டார்கள் . சனாதன தர்மத்தின்  க்ஷீண நிலையிலிருந்து அதை புதுப்பித்து பலம் சேர்ப்பவர்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டார்கள்.
 அம்பாள் அனுக்ரஹத்தால்   காமகோடி குடும்பத்தில் 1790ல் ஒரு ஞானி  பிறந்தார்.  அவர் பெயர்  காமகோடி சாஸ்திரிகள்.  சிறுவயதிலேயே ஸ்ரீ வித்யா  சித்தி பெற்றவர். வேதம், வேதாகமம், தர்க்கம் சாஸ்திரம், வாதம், புராணம், ஸ்ம்ரிதி,வியாகரணம், மீமாம்சம் சகலத்திலும் தேர்ச்சி பெற்றவர்.  காமகோடி சாஸ்திரிகள் ஒரு ரிஷி யாக கௌரவிக்கப்பட்டார்.  நித்ய  அக்னி ஹோத்ரம்  ஹோமம் செய்யும்   ஆஹிதாக்னி என அறியப் பட்டவர்.  தினமும் ஸஹஸ்ர காயத்ரி ஜபம். சகல ஜெப ஹோமங்களும் நித்யம் செய்பவர். அவருக்கு நூற்றுக்கணக்கான சிஷ்யர்கள் சேர்ந்ததில் என்ன ஆச்சர்யம்? தென்னகத்தில் காமகோடி சாஸ்திரியாரின் சீடர்களால் சனாதன தர்மம் எல்லா இடத்திலும் பரவி கடைப்பிடிக்கப் பட்டது.
மேலும் சொல்கிறேன். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2560

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;