
”நானும் உதவட்டுமா?” – நங்கநல்லூர் J K SIVAN
திருப்பதி வேங்கடேசன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம். பக்தர்களுக்கு வேண்டியதை வாரி வழங்கும் வள்ளல். திருப்பதி, திருவேங்கடவன் பற்றியுள்ள ரஹஸ்யங்கள் ஆச்சர்யமானவை. இன்று மறந்து போன விஷயங்களில் கொஞ்சம் சொல்கிறேன்.
திருமலையில் ஸ்ரீ வேங்கடேசன் சங்கு சக்ரதாரியாக நிற்பதற்கு காரணமானவர் ராமானுஜர். மூன்று முறை திருப்பதிக்கு நடந்து சென்று மலையேறியவர். அதுவும் தள்ளாத வயதில் தொண்டு கிழவராக 91 வயதுக்கு மேல்.
11 ம் நூற்றாண்டில் நடந்த ஒரு ஆச்சர்யமான சம்பவம்.
ஸ்ரீ வைஷ்ணவ வளர்ச்சிக்கு தூண்களாக 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்த போது ஒருநாள் பல சீடர்கள் அவரை சுற்றி இருந்த நேரத்தில் ராமானுஜர் அவர்களை நோக்கி ” திருப்பதி திருமலையில் இருக்கும் வெங்கடேச பெருமாளுக்கு தினமும் நிறைய புஷ்ப கைங்கர்யம் செய்யவேண்டும். உங்களில் யார் மனதில் உறுதியோடு, திருமலைக்கு சென்று அங்கே காட்டுப்பகுதியில் வாழ்ந்து, வெங்கடேசனுக்கு ஒரு நந்தவனம் அமைக்கத் தயார்?” என்று கேட்டார்.
அடர்ந்த காடு, மிருகங்கள், காட்டு வாசிகள் வாழும் அந்த மலைப்பகுதிக்கு சென்று வாழ பலர் தயங்கி ,மௌனமாக இருக்க ஒரே ஒருவர் தைரியமாக எழுந்து மார் தட்டி நின்றார்.
‘குருநாதா, உங்கள் ஆசியோடு நான் அங்கே செல்கிறேன். நீங்கள் சொல்லும் பெருமாள் கைங்கர்யத்தை நான் ஏற்று செய்கிறேன்”
”வயதானவராக உள்ள உம்மால் இதைச் செய்யமுடியுமா?”
”பேஷாக, இறைவனுக்கு கைங்கர்யம் புரிய, இந்த முதிய வயதிலாவது எனக்கு கிடைத்த பாக்யத்தை விட எனக்கு மனமில்லை சுவாமி ”
‘உமது பெயர் என்ன?
”அனந்தன்”
“அனந்தாச்சார்யாரே, நீர் தான் உண்மையிலே ”ஆண் பிள்ளை ”
அன்று முதல் அவரை உலகம் இன்றுவரை ”அனந்தாண்பிள்ளை'(அனந்தாம்பிள்ளை ) என்று தான் அறிகிறது. அவரும் அவர் மனைவியுமாக காட்டை திருத்தி ஒரு நந்தவனம் அமைத்தார்கள். நீர் வசதி இல்லாததால் அங்கே ஒரு ஏரி வெட்டி அதற்கு ராமானுஜர் பெயரை வைத்தார். நீர்ப்பாசனம் நந்தவனம் வளர உதவ, நிறைய புஷ்ப செடிகள் கிடுகிடுவென்று வளர்ந்து மரமாகியது. தினமும் வெங்கடேசனுக்கு வித வித புஷ்பங்களால் அலங்கரித்து அனந்தாம்பிள்ளை பூஜை செய்வார். அனந்தாழ்வான் தோட்டம் இன்றும் உள்ளது.
ஒருநாள் அனந்தாம்பிள்ளை வேறு எங்கோ வேலையாக இருந்த சமயம் ஒரு வாலிபன் அங்கே வந்தான். தனியாக நிலத்தை ஒரு கர்ப்பிணி பெண் தோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அனந்தாழ்ந்தவன் மனைவி அது. அவளை அணுகினான் வணங்கினான்.”அம்மா நானும் உங்களுக்கு ஒத்தாசையாக உதவட்டுமா ?” ” வேண்டாம் அப்பா”அப்போது அங்கே வந்த அனந்தாம்பிள்ளை அவனைக் கேட்டார்;
‘ யாரப்பா நீ எதற்கு இங்கே வந்தாய்?”
”ஐயா நானும் உங்களோடு இங்கே வேலை செய்கிறேன்”
”தேவையில்லை, இது பகவானுக்காக பிரத்யேகமாக நாங்கள் திருப்தியாக செய்யும் கைங்கர்யம். உன் உதவி தேவையில்லை. நான் பெருமாளுக்கு சேவை செய்வது நான் மட்டுமே செய்ய வேண்டும்”
”இல்லை ஐயா, வயதானவராக இருக்கிறீர், வாலிபன் நானும் உதவலாமே ” என்று பிடிவாதமாக அவன் அவருடைய கோடாலியை எடுத்து நிலத்தை தோண்டியதில் அவருக்கு கோபம் அந்த இரும்பு கோடாலியை அவனிடமிருந்து பிடுங்கி ஓங்கினார். அந்த வேகத்தில் குனிந்து கொண்டிருந்த அவன் முகத்தில் காயம் உண்டாக்கியது.”
அவன் அங்கிருந்து சென்று காணாமல் மறைந்து போனான். அவருக்கு ஆச்சர்யம்.
அன்று பெருமாளுக்கு நிறைய புஷ்பங்கள் எடுத்துக்கொண்டு போய் பூஜை செய்ய நெருங்கியபோது வெங்கடேசன் தாடை வெட்டுப்பட்டு அதில் இருந்து ரத்தம் வடிவதை கண்டார். திடுக்கிட்டு ஓடினார். அன்று நந்தவனத்தில் உதவ வந்தவன் வெங்கடேசன் தான் என்று புரிந்தது. நடுங்கினார். ஓடிச்சென்று பச்சை கற்பூரம் நிறைய கண்ணில் பட அதை எடுத்து வெங்கேசன் தாடையில் அப்பினார். ”பகவானே நான் மூடன் உன்னை அறியவில்லை. தெரியாமல் செய்த பிழைக்கு என்னை மன்னித்து விடு” என்று கதறினார்.
இந்த சம்பவம் ஒரு கட்டுக்கதை இல்லை. நிஜம். இன்றும் அந்த கோடாரி/கடப்பாரை, திருப்பதி வெங்கடே சன் ஆலயத்தில் நாம் வாசலில் நுழைந்தவுடன் வலது பக்க சுவரில் மேலே கண்ணில் படும்படி மாட்டப்பட்டுள்ளது.
இன்றும் திருமலை வெங்கடேசனுக்கு தாடையில் பச்சை கற்பூரம் வைக்கப்படுகிறது. வடு முகத்தில் உள்ளது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரம்பரையில் ராமானுஜருக்கு அடுத்ததாக அனந்தாழ்வான் பெயரும் உள்ளது.
வெங்கடேசன் புகழ் பாடியவர்களில் பிரபலமானவர்கள் அன்னமாச்சார்யார், புரந்தர தாசர், முத்து சுவாமி தீக்ஷிதர், தியாகராஜ ஸ்வாமிகள், அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள் அர்த்த புஷ்டியானவை. அவரை ஸ்ரீமன் நாராயணனின் வாளான நந்தகத்த்தின் அம்சம் என்பார்கள். 32000 பாடல்கள் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலுமாக இயற்றியவர். ஆனால் வழக்கம்போல நமது அசிரத்தையால் நமக்கு எஞ்சியது 12000 பாடல்கள் தான். செப்பேடுகளில் இருந்ததால் தப்பியவை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

