
சிறு மாற்றத்தோடு மறு பதிவு. – நங்கநல்லூர் J K SIVAN
அவனுக்குத் தெரியும்
என் மனதில் பட்டது சரி என்று தெரிந்து கொண்டேன். முதன் முதலாக ஒரு கட்டுரையில் வெறுமே சமஸ்க் ரிதம், ஆங்கிலத்தில் மட்டும் ஒரு ஸ்லோகம் எழுதிய போது தமிழில் அதை எழுதாமல் விட்டு விட்டேன். ”அடேடே மறந்து விட்டோமே” என்று ஒரு ஓரமாக மனதில் எண்ணம் ஏற்பட்டபோது மற்றொரு பெரிய அலை ”ஆமாம், உன் எழுத்தைப் படிக்க யார் அப்படி காத்திருக்கிறார்கள்? போய் வேலையைப் பார்..” என்று என்னை தடுத்துவிட்டதால் தமிழில் எழுதாமல் அதை பதிவிட்டேன்.
அநேக நண்பர்கள் ”என்னய்யா இது, எங்கே தமிழில் வரிகள்?” என்று கேட்டபோது தான் என் தவறை உணர்ந் தேன். மீண்டும் அதை தமிழ் வரிகளோடு பதிவிடுகி றேன்… சிரமத்துக்கு மன்னிக்கவும்.
सुवर्णमणयो हेमं मेरुः स्वर्णमयो महान् । कुबेरस्य च वित्तानि सर्वं तव जनार्दन ॥ कल्पवृक्षश्च कामधेनुश्च चन्द्रः शीतांशुशेखरः ।
नास्ति मे तव दानेन तुल्यं वस्तु जनार्दन ॥ अतः मनः समर्पयामि तव चरणयोः जनार्दन ॥
Suvarṇa‑maṇayo hemaṁ meruḥ svarṇamayo mahān,Kuberasya ca vittāni sarvaṁ tava Janārdana, Kalpavṛkṣaś ca kāmadhenuś ca candraḥ śītāṁśuśekharaḥ, Nāsti me tava dānena tulyaṁ vastu Janārdana, Ataḥ manaḥ samarpayāmi tava caraṇayoḥ Janārdana
ஸ்வர்ணமணயோ ஹேமம் மேரு; ஸ்வர்ண மயோ மஹான். குபேரஸ்ய ச வித்தானி ஸர்வம் தவ ஜனார் த்தன; கல்ப விருக்ஷஸ்ச காமதேனுஸ்ச சந்திர; ஸீதாம்ஸு சேகர; நாஸ்தி மே தவ தானேன துல்யம் வஸ்து ஜனார்த்தன; அத; மன ; ஸமர்ப்பயாமி தவ சரணயோ: ஜனார்த்தன;
இது ஆதி சங்கரர் ஸ்லோகம் என்றும் இல்லை வேறு யாரோ இயற்றியது என்றும் பராபரியாக காதில் விஷயம் விழுந்தாலும் நமக்கு அதன் அருமையான அர்த்தம் ரொம்ப பிடிக்கிறது. இது பரந்தாமன், விஷ்ணு, கிருஷ்ணனை, ஜனார்தனா என்று பக்தியோடு பிரார்த்தனை செய்யப்பட்ட ஒரு சின்ன ஸ்லோகம்.
பூமியைத் தோண்டி தங்க சுரங்கத்தில் பாளம் பாளமாக தங்கப்பாறைகளை பார்க்கிறோம். அழகிய தங்க மணிகள், தூய தங்கம் பிஸ்கட் பிஸ்கட்டாக அடுக்கி வைத்து பாதுகாக்கிறார்கள். எவ்வளவு பெரிய தங்கமலையாக இருந்தாலும் ஜனார்தனா, எல்லாமே உன்னுடைய செல்வம் தானே அப்பா! குபேரன் என்று ஒருவனை உருவாக்கி அவனிடம் சகல ஐஸ்வர்யங்கள் இருந்தாலும் காரண கர்த்தா நீ தானே அப்பா! ஜனார் தனா, உன்னைவிட ஒளிவீசும் துல்யமான வஸ்து வேறு உண்டா? உன்னையே சரணடைந்தேன்.
நம்மாழ்வார் இதை நன்றாக உணர்ந்து தானே “செல்வத்துக் கெல்லாம் செல்வம் திருமாலே தெய்வத்துக் கெல்லாம் தெய்வம் தேவா” என்று மனமுருகி பாடினார்.
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றும் கற்பக விருட் சம் என்று ஒன்று இருந்தால் எனக்கு அது நீ தான் கண்ணா.
பால் நிலவாக இரவில் சுகமாக மகிழ குளிர்ந்த ஒளியை வழங்கும் சந்திரனும் உன்னுடைய அம்சம் தானே .அதை விட நீ அளிக்கும் கருணை, அன்பு மேலும் மேலும் சகல உயிர்களையும் குளிர்விக்கிறதே.
எனக்கு என்ன வரம் கேட்பது என்று கூட தெரியவில்லை. ஆனால் எனக்கு வேண்டியது என்ன என்று நீயாகவே எனக்கு வரமளிப்பவன். வள்ளலார் அதனால் தான் உன்னை ‘வரமளிக்கும் வரமே’ என்று பாடினார். இறைவன் தரும் அருள் உலகியலான எல்லா வரங்களையும் விட உயர்ந்தது.
தைப்பூசம் அன்று வள்ளலாரை நினைத்து இந்த பாட்டை பாடினேன். மூன்றாம் கிளாசில் மரத்தடியில் காலைஇல் கடவுள் வாழ்த்து என்று பிரேயர் நேரத்தில் எல்லோரும் சொன்ன மனம் கவர்ந்த பாடல்; ஹெட் மாஸ்டர் சுப்ரமணிய ஐயர் முதல் மணி அடிக்கும் அப்பாதுரை வரை சேர்ந்து நாங்கள் எல்லோரும் உரக்க சொன்ன பாடல்;
”கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே. திருவருட்பா ஆறாம் திருமுறை #4128
அவனைச் சரணடைந்தால் தாய் சேயைப் பாதுகாப்பது போல் நம்மை ரக்ஷிப்பான் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். அது போதும்.
பின் குறிப்பு:
நேற்று கீழக்கட்டளையில் உள்ள ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம் சென்றிருந்தேன். அழகாக புன்னகை யுடன் பளபள வென்று ஆடை தரித்து வேலுடன் குமரன் நின்று ஆசிர்வதித்தான். அவன் முன் நின்று மனமுருகி பாடினேன். அர்ச்சகர் அவன் மேலிருந்து ஒரு மாலையை எடுத்து எனக்கு சாற்றி, கையில் அவனது அழகிய படம் ஒன்றை திணித்தார். அப்போது உலகிலேயே மிகப் பெரிய பணக்காரன் நான் தான் என்று பூரிப்பு மனதில் தோன்றியது.
தைப்பூச நன்னாள், பெருநாள் கூட்டம் மறுநாள் காலையில் இல்லை. புத்தகங்கள் இலவச விநியோ கத்துக்கு அளித்தேன். கோவில் கோஷ்டங்களில் அழகியசிறிய நர்த்தன விநாயகர் கண்ணைப் பறித்தார். இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. அவர் படமும் இணைத்திருக்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

