GANDHA MAADHANA PARVATH J K SIVAN

கந்தமாதன பர்வதம் – நங்கநல்லூர் J K SIVAN

அடிக்கடி பழைய தெய்வீக விஷயங்களை படிக்கும்போது நம் கண்ணில் படும் ஒரு பெயர் கந்தமாதான பர்வதம். ஞாபகம் இருக்கிறதா? ஆன்மீக, புராண சம்பந்தமான ஒரு குன்று.​ வில், கதாயுதம், வேலொடு சம்பந்தப்பட்ட உயிர் காக்கும் அற்புத ஸ்தலம்.

“கந்தம்” என்றால் வாசனை , நறுமணம். “மாதன” என்றால் மயக்கும்,பரவச் செய்யும், வியாபிக்கும் என்று அர்த்தம். அதாவது அந்த மலை தெய்வீக நறுமணம் கொண்டது. தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் வாசம் செய்யும் ஸ்தலம்.

ராமாயணத்தில் கந்தமாதன பர்வதம் எங்கே வருகிறது?, ராம ராவண யுத்தத்தில் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தபோது ஜாம்பவான் சொல்லி ஹனுமார் பறந்து சென்று இந்த மலையிலிருந்து தான் சஞ்சீவி மூலிகை கொண்டுவந்தார். மலையையே தூக்கிக் கொண்டு பறந்து வந்தார்.ஆரோக்யம், அமரத்துவம் தெய்வீகம் நிறைந்த மலை .

हिमवन्तं समासाद्य गन्धमादनपर्वतम् । नानौषधीनां निकरं यत्र संजीवनी स्मृता ॥
himavantaṁ samāsādya gandhamādana-parvatam | nānauṣadhīnāṁ nikaraṁ yatra sañjīvinī smṛtā ||
“ஹிமவந்தம் சமாஸாத்ய கந்தமாதன பர்வதம் நாநௌஷதீனாம் நிகரம் யத்ர ஸஞ்ஜீவினீ ஸ்ம்ருதா”

கந்தமாதன பர்வதம் இமய மலை சாரலில் உள்ள ஒரு குன்று. பல அரிய மூலிகைகள் நிறைந்தது.அங்கேதான் சஞ்சீவி மூலிகை உள்ளது என்று அடையாளம் காட்டும் வால்மீகி ராமாயண யுத்த காண்ட ஸ்லோகம் இது தான்.

न जानामि यत्र सा ओषधिः तस्मात् क्षिप्रं नयाम्यहम् । गन्धमादनशैलेन्द्रं ओषधीसह वानर ॥
na jānāmi yatra sā oṣadhiḥ tasmāt kṣipraṁ nayāmyaham | gandhamādana-śailendraṁoṣadhī-saha vānara ||
“ந ஜானாமி யத்ர ஸா ஓஷதி தஸ்மாத் க்ஷிப்ரம் நயாம்யஹம் கந்தமாதன ஶைலேந்திரம் ஓஷதீஸஹ வானர”

இது தான் கந்தமாதன பர்வமா என்று மலைத்து நிற்கிறார் ஆஞ்சநேயர். கண்ணுக்கெட்டிய வரை பச்சைப் பசேலென மூலிகை செடிகள், இதில் எது சஞ்சீவினி மூலிகை? எனக்கு தெரியவில்லையே? உடனே நான் லக்ஷ்மணனிடம் சென்றாக வேண்டுமே. என்ன செய்வது. வேறு வழியில்லை, இந்த மலையையே அப்படியே ஒரே தூக்கலாக கொண்டு செல்ல வேண்டியது தான்…. என்று ஹனுமான் முடிவெடுத்த ஸ்லோகம்.

மஹா பாரதத்தில் எந்த இடத்தில் கந்தமாதன பர்வதம் வருகிறது? பாண்டவர்களின் வனவாசத்தின் பொது ஒருநாள் திரௌபதி எங்கிருந்தோ காற்றில் வந்து விழுந்த ஒரு சுகந்த நறுமண மலர் ஒன்றை காண்கிறாள். அதை நிறைய பறித்து வா என்று பீமனிடம் கேட்கிறாள். பீமன் அதைத் தேடிக் கொண்டு கந்தமாதன பர்வதம் அடைகிறான். வழியில் ஹனுமனை சந்திக்கிறான். ஆசி பெறுகிறான்.

குபேரனின் கந்தமாதன நந்தவனத்தில் தான் சுகந்த புஷ்பத்தை பார்க்கிறான். அதைக் காக்கும் யக்ஷர்களோடு மோதி வெல்கிறான். அந்த புஷ்பத்துக்கு வேறு பெயர்கள் விஸல்லகரணி, சௌகந்திகா
சந்தானகரணி, எல்லாமே உயிர்காக்கும் அமர மூலிகைத்தன்மை கொண்டவை.

இன்னொரு சமீப கால விஷயம். நான் ராமேஸ்வரம் சென்றபோது வழியில் இது தான் ராமர் பாதம் பட்ட இடம், என்று ஒரு சிறு குன்றை தரிசித்தேன். அதற்கு அங்கிருந்தவர்கள் இட்ட பெயர் ‘கந்தமாதன பர்வதம்’. அங்கிருந்து தான் ராமர் இலங்கையை பார்க்கிறார். எதிரே தோன்றிய கடலை கவனித்தார். சேது பாலம் கட்ட முடிவாகிறது. அங்கே ராமர் பாதம், சீதை பாதம், ராமர் வில் சின்னம் அடையாளம் காட்டினார்கள்.

गन्धमादनशैलस्य रम्येषु वनराजिषु । देवैः सहितो भीमो विचचार यथा सुखम् ॥
gandhamādana-śailasya ramyeṣu vanarājiṣu | devaiḥ sahito bhīmo vicacāra yathā sukham ||
“கந்தமாதன ஶைலஸ்ய ரம்யேஷு வனராஜிஷு தேவேஷு ஸஹிதோ பீமோ விசசார யதா சுகம்”

பீமன் கண்ணெதிரே குபேரனின் நந்தவனத்தை பார்க்கிறான். பெரிய அழகிய வனம். கந்தமாதன பர்வதத்தோடு சேர்ந்து காண்கிறது. தேவர்களுடன் அங்கே பீமன் சுகமாக நறுமணம் அனுபவிக்கிறான். அங்கே தான் திரௌபதி விரும்பிய சௌகந்தி புஷ்பம் நிறைய இருக்கிறது…

सौगन्धिकानि दिव्यानि गन्धमादनसम्भवम् । द्रौपद्यर्थे महाबाहु भीमस्तत्र जगाम ह ॥
saugandhikāni divyāni gandhamādana-sambhavam | draupadyarthe mahābāhu bhīmas tatra jagāma ha ||
சௌகந்திகானி திவ்யானி கந்தமாதான சம்பவம், திரௌபதியர்த்தே மஹாபாஹு பீமஸ் தத்ர ஜகாம ஹ; ;

देवगन्धर्वसेवितं तपसा भावितं महत् । गन्धमादनमित्युक्तं दिव्यगन्धसमन्वितम् ॥
devagandharva-sevitaṁ tapasā bhāvitaṁ mahat | gandhamādanam ityuktaṁ divya-gandha-samanvitam ||
“தேவகந்தர்வ ஸேவிதம் தபஸா பாவிதம் மஹத் கந்தமாதன மித்யுக்தம் திவ்யகந்த ஸமந்விதம்”

கந்தமாதான பர்வதத்தின் அற்புத சூழலில் எண்ணற்ற தேவர்கள், கந்தர்வர்கள், தவம் செயது கொண்டு இருப்பதை பீமன் கண்டான். ”

கடைசியாக ஒரு சுவாரஸ்ய விஷயம் சொல்கிறேன். முருகன், சுப்ரமணியன், கார்த்திகேயன், ஸ்கந்தன் சம்பந்தப்பட்டதும் ​ இந்த கந்தமாதன பர்வதம். முருகன் பர்வத வாசி, கிரிவாசன்.

கந்தமாதன பர்வதம் வடக்கே பழனி திருச்செந்தூர், திருத்தணிக்கு சமமான ஒரு​ ஷண்முக ஸ்தலம். முருகன் விளையாடி வாழ்ந்த பிரதேசம்.​ ஸ்காந்தத்தில் ஒரு ஸ்லோகம்;

गन्धमादनशैलेन्द्रे​ देवगन्धर्वसेविते ।​ वसते भगवान् स्कन्दः​ शक्तिहस्तः सनातनः ॥
gandhamādana-śailendre​ deva-gandharva-sevite |​ vasate bhagavān skandaḥ​ śakti-hastaḥ sanātanaḥ ||​ இங்கு தான் கூர் வேலோடு கந்தன் தேவர்களை தேவசேனாபதியாக காத்தவன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;