மார்கழி விருந்து – அக்கார வடிசல் 1  –   நங்கநல்லூர்  J K  SIVAN                               

பாரத தேசம் ஒரு புண்ய பூமி. இதில் எவருக்கேனும் துக்குணியூண்டேனும்  சந்தேகம்  இருக்குமானால்    கொஞ்ச நாள்  பாகிஸ்தானிலோ ஆபிகானிஸ்தானிலோ வேறு எங்கோ ஒரு  நாட்டில்  ஒரு சில வருஷங்கள்  இருந்து விட்டு  மீண்டும் இங்கே வரவும்.   யாரும் சொல்லாமலே  தானாகவே தெரியவரும்.    இந்த புண்ய தேசம் இவ்வாறு  பரிமளிக்க யார்  காரணம்?, எது  காரணம்?  வாழ்ந்த நம் மூதாதையரும்,  வணங்கிய  நம்  தெய்வங்களும்,  நலமோடு வாழ வாழ்ந்து  வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும் தான்.  இயற்கை அன்று போல்  இன்றும்  இருக்கிறதே தவிர  அதை வெறுத்து வருத்தி  சின்னா பின்னமாக்கி  நாகரிகம் என்ற போர்வையில்  நாமே உண்டாக்கிக்கொண்ட குளிரில்  வாடுகிறோம். மாற்றமே நம் மனதில் தான். 

சுடச்சுட  இந்த  விருந்தை  ருசிக்க சற்று பின்னோக்கி செல்வோம். பண்பையும்  பக்தியையும்  ருசிப்போம். குளிர்  என்று  சொன்னவுடனே   இன்றைய   மார்கழி காலை  பல் கட கட வென நடுங்குவதும், உடல்  போர்வை கேட்பதிலும் தெரிகிறது.  ஆண்டாள் எனும்  கோதை  கெட்டிக்காரி இதைத் தெரிந்தே   ”மார்கழித்  திங்கள் என்ற பாடல் அளித்து,  அது மட்டும்  போதும்,  மடி நிறைய  பொங்கல்   வேண்டாம்.   ஒரு தொன்னையே  போதும் என  நினைக்க வைக்கிறாள்.  பிரசாதம்  உணவல்ல. இறை  அருள்   பெற,  விழைய, ஒரு  தூண்டு கோல்.குளிரில் அதையும் சுடச்சுட  தர வைக்கிறாள்.
மார்கழியை  மணம் பெற வைத்த  மா  மனிதை  ஆண்டாள் எனும் கோதை.  பன்னிரு  ஆழ்வார்களில்   ஒரே பெண். எட்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்தாலும் எட்டிய தூரத்தில் என்றும் நம்  கண் முன்னே  நின்று, மனத்தை  ஆக்ரமிக்கும்  பெண்  தெய்வம். பெருமாள்  இருக்கும்  இடமெல்லாம்  ஒரு  சந்நிதியில் தானும் நமக்காக  அருள  நிற்பவள். அவள்  மூன்றாயிரம்   ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்தாள்  என்று   சொல்கிறவர்களும் உண்டு.  கண்ணன் இருந்த காலத்தில்  5000 வருஷங்களுக்கு  முன்பு துவாபர யுகத்தில் தானும்   வாழ்ந்ததாக மனதில்   ஒரு  காட்சி அமைத்து அதிலேயே  வாழ்ந்து நம்  மனத்தில் என்றும்  இடம் பிடித்தவள் இந்த  ஆண்டாள்.  வில்லிப்புத்தூரில்  ஆடிப்பூரத்தில் துளசியோடு  துளசியாக  பெரியாழ்வார் கண்டெடுத்த,  அவதரித்த, கோதை எனும்  பெயர் பெற்றவள்.

அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு பூச்சூட  ஒரு பெரும் நந்தவனமே  வளர்த்த பெரியாழ்வார்  தனது வழியிலே யே சுடர்க்கொடியை  வளர்த்தார். தமிழ்  கலந்த  பக்தியை வளர்ப்பு மகளுக்கு  ஊட்டினார். தேனிலே  ஊரினவள் தேனான பாசுரங்களை  இயற்ற வழிகாட்டினார்.  தனக்குத்  தெரிந்த சாஸ்திரம், வேதம்,பக்தி  மார்க்கம், அனைத்தும் தீஞ்சுவைத் தமிழில் கலந்து ஊட்டி அவளைப் பக்குவப் படுத்தினார்.   திருப்பாவை  பிறந்தது.

திருப்பாவை 30 பாசுரங்களையும்  கோதை  நாச்சியார் எழுதியபோது  தன்னைக்   கண்ணன் ஆயர்பாடியில்  இருந்த காலத்தில்  அந்த  ஊர்  சிறுமிகளில் ஒருவளாக  உருவகப் படுத்திகொண்டு அந்த இடைச்சிறுமி களோடு பாவை நோன்பு நோற்றபோது அவள்  கிருஷ்ணனின் பெருமையை  உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.
மார்கழி மாத முழுதும் ஒரு நாளைக்கு  ஒன்றாக  அந்த பாசுரங்களை தொடர் நிகழ்ச்சியாக தொகுத்து அந்தச்சிறுமியர்களின்  பேச்சு வாயிலாக  திருப்பாவை பாசுரங்கள் தீட்டப்பட்டவை.
நான் இதை  என்னுடைய  ”பாவையும் பரமனும்” புத்தகத்தில்  கையாண்ட விதத்தை பற்றி  சொல்லும்போது ஆண்டாள்   என்பவள் ஆயர்பாடி  இடைச்சிறுமிகளில்  ஒருவளாகவும் அதே நேரம் வில்லிப்புத்தூரில் சிறந்த விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள்  கோதையாகவும்  ஒரே  சமயத்தில் இருவராக, வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்களாக, வெகு தூரத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் வாழ்ந்த இளம் பெண்களாக  ஒவ்வொரு பாசுர கதையிலும் அறிமுகமாக்கியுள்ளேன். அதுவும் கிருஷ்ணன் என் மனதில் தோன்றி இயக்கியதுதானே!

மார்கழி 1ம்   நாள் ”  (வில்லிபுத்தூரில்)
”ஏம்மா   குழந்தை வழக்கத்தை விட  சீக்கிரமே   எழுந்துட்டே.?  உன்னுடைய  திவ்ய  குரல்லே  நீ பாசுரங்கள்  பாடும்போது   என்னை ஸ்ரீ  வைகுண்டத்துக்கே   கொண்டு  சேர்க்கிறதம்மா”.  விஷ்ணுசித்தர்  என்கிற பெரியாழ்வார் குரல்  தழுதழுத்தது.

”அப்பா. எல்லாம்  நீங்க  கத்துக் கொடுத்தது தானே.   எனக்கு  நீங்க இல்லாட்டா இதெல்லாம்  வருமா அப்பா.  எனக்கு  அரங்கனை அறிமுகப் படுத்தியதே  நீங்கதானேப்பா. என்  ரங்கனை பற்றி  நான்  பாட வைத்ததே தே நீங்க தானேப்பா?

”ஆமாம்  தாயே,   நான்   செஞ்ச பூர்வ ஜென்ம  பாக்கியம்  உன்னை அடைந்தது.  உன் மூலமா  அந்த  ரங்கனை   நினைக்கிறது,  அவனைப் பத்தி பேசறது,   பாடறது எல்லாம்.   இப்படியே  என்  வாழ்நாள் பூரா   போகணும்னு  தோணறது அம்மா.  இப்பல்லாம்   நீயே எழுத்தாணி  பிடிச்சு   ஓலைச்சுவட்டிலே நிறைய  எழுத  ஆரம்பிச் சுட்டே.  ரொம்ப  சந்தோஷம் தாங்கலை  எனக்கு.”

” ஆமாம் அப்பா. நிறைய  எழுத  மனது துடிக்கிறது. ஏதோ ஒண்ணை  நினைச்சு   எழுதறத்துக் குள்ளே அதைக்காட்டிலும்  அருமையா வேறே  ஒண்ணு மனசுக்குள்ளே ஒடரதாலே  முதல்லே  நானே  அதை பாடிப் பார்த்து  அனுபவிச்சுக்கிறேன். அப்புறம்  ஓலைலே வடிக்கிறேன்”

 ‘ அப்பா  என்னை, ஏன் சீக்கிரம் எழுந்துட்டே ”  ன்னு  கேட்டேளே. வாசலைப் போய்  பாருங்கோ,  பெருக்கி, சாணம்  தெளிச்சு,மெழுகி,  பூ செருகி   பெரிய   கோலம் போட்டிருக்கேன், ” ரங்கா வா” என்றும்  எழுதி இருக்கேன்”

 ”மார்கழி மாசம்.  பிரம்ம  முகூர்த்தத்திலே  சகல தெய்வங்களும்   பூமிக்கு வரா  அம்மா.  நீ  வான்னு எழுதி  கூப்பிடறத்துக்கு முன்னாலே  உன் குரல் கேட்டே  ஓடி  வருவான்,  அந்த  ரங்கன்,   எனக்கு தெரியாதா?  நீ இன்னிக்கு  என்ன  புதுசா  பாடினே?”

 ”அப்பா,  மார்கழியிலே  விடியறதுக்கு  முன்னே  எழுந்து  நீராடி  விரதமிருந்து மாசம்  முழுக்கவும்  அந்த நாராயணனையே  நினைத்து நோன்பு  நோற்றால்  அந்த  ரங்கன்  வேண்டியதைத்   தருவான் என்கிறதாலே  எனக்கு  அவனே  வேண்டுமென்றே   இந்த  முப்பது நாளும்  நோன்பு நோக்கறேன். அந்த  மாய கிருஷ்ணன்  இருந்த  ஆயர்பாடியிலேயே நான்  இருக்கிறதா   மனசாலே அனுமானம் பண்ணிக்கொண்டு, அங்கே போய்  மீதி  பெண்களோடு சேர்ந்து  கொண்டு அவர்களில் நானும்  ஒருத்தியா  அங்கே  ”ஆண்டாள்” ஆகிட்டேன் பா.  நான்  உடம்பாலே  இங்க  இருந்தாலும்  மனத்திலே  கிருஷ்ணன் வீட்டையே    சுத்தி  சுத்தி  வரது  தான்   ரொம்ப  சந்தோஷமாக  இருக்கு  அப்பா. ”

‘இன்னிக்கு  மார்கழி முதல் நாள் என்ன  எழுதினே? படியேன் கேக்கறேன்.  கண்ணு  சரியா தெரியலை.  ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.”
++++
இப்போது உங்களை  வடக்கே  ஐந்தாயிரம் வருஷம் முன்பு   ஆயர்பாடி  கிராமத்துக்கு  போவோம்.

மேலே  கண்ட  வில்லிப்புத்தூர்  கோதை இப்போது  வடக்கே  யமுனை நதிக்கரை ஆயர்பாடி கிராம  இடைச்சிறுமி  ஆண்டாள் ஆகிவிட்டாள், அங்கும்  மார்கழி மாதம்  குளிர்.  யமுனை உறங்குவது போல் அமைதியாக  இருக்கிறது.அதை  எழுப்புகிறாள்   ஆண்டாள். முதலில்  தூக்கம்கலைந்து  எழுந்தவள் தனது குடிலை விட்டு  வெளியே  வந்தாள். பாடுகிறாள்:
‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
     நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
     கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
     கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
     பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’
+++
வில்லிப்புத்தூரில்  கோதை,   ஆண்டாளாக  ஆயர்பாடியில் தன்னை  உருவகப்  படுத்திக்கொண்டு பாடிய முதல் மார்கழி பாசுரம் தான் மேலே காண்பது.    கணீரென்று  கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது.  விஷ்ணு சித்தர்  கண்களில்  நீர் மாலை.  ஆண்டாள் பாடி  முடித்தாள்.  விஷ்ணுசித்தர் கண்களில் காவேரி.
”அசாத்யம்,  ஸ்ரீயப்பதே,  ரங்கநாதா,  எல்லாம்  உன்  கிருபை.  என்ன  அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ஸ்ரத்தை.  என்  தாயே, கோதை,  நீ   லக்ஷ்மி அம்சம்  என்பதில்  சந்தேகமே  இல்லையம்மா . என்ன  திவ்யமாக  எழுதியிருக்கிறாய். இவ்வளவு  காலம்  நான் எழுதினத்துக் கெல்லாம் சிகரமாக  உன்  எழுத்தில்  பக்தி பாவம் மிளிர்கிறதே. எல்லாம்  அந்த  ரங்கன் செயல்.  நாளைக்கு  நீ   எழுதப்போவதையும்  ஆவலாக கேட்க காத்திருக்கேன்.

”மார்கழி முழுதும் நான் ஓவ்வொரு நாளும்  பாசுரம் எழுதப்போறேன்.  நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த  நாராயணன் அவதாரமான  கிருஷ்ணன் இருந்த  ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனை யில்  நீராடி நல்ல  கணவன் கிடைக்க  காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
 +++
 வில்லிப்புத்தூரில் விஷ்ணு சித்தரையும்  கோதையையும் விட்டுவிட்டு நாம்  இப்போது ஆயர்பாடியில்  என்ன நடக்கிறது என்று எட்டிப்பார்க்கிறோம். \சில  பெண்கள்  விடியற்காலையில்  கூடியிருக்கிறார்கள்.  மற்றும்  சிலரை எழுப்பச் செல்கிறாள்  ஆண்டாள் என்கிற சிறுமி. ‘
”மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா.  நாம் எல்லாருமாக  யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ  கிருஷ்ணனைப் பணிவோம்.  அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள. தோழியர்களே  எழுந்திருங்கள்.”
”என்னடி ஆண்டாள் , இந்த  மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம்”  என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்? என்றனர்  அந்த  ஆயர்பாடி சிறுமியர்
ஆண்டாள்  அவர்களிடம் சொல்கிறாள்;
”நான் சொல்றேன் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு விஷயம்  தான் சொல்வேன். அப்போ  தான்உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியும். ஒரே அடியா  ஒரு மாச விஷயத்தை  ஒரே நாளில்  சொல்லித்  திணிக்கக்  கூடாது.
இன்னிக்கு மார்கழி 1ம்  நாள்.  இந்த  மார்கழி  என்கிற  மாசம் ரொம்ப  ஒசத்தியானது.எனக்கென்னமோ  இந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது. தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த  ஊர் என் உயிர். ஏன் என்றால் இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆண்அழகன், கருநீல வண்ணன், செவ்விதழ், கன்னம், செந்தாமரை  போன்ற கண்கள் கொண்டவன் வாழ்கிறான். அவன் இருக்கும் நம்முடைய இந்த  ஆயர்பாடி,  ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேகமடி உங்களுக்கு!!. அவன் சாதாரணமானவனா யிருந்தால்  இந்த பேச்சுக்கே  இடமிலையே! எதிர்த்தவர்களின் உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையைத் தவிர வேறு யார்?  அவன் தாய் பற்றி  சொல்லவில்லையே, இந்த    சிங்கக்குட்டியைப்  பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை அவள் பேர்.”  போதுமா?

 ”நேரமாச்சே  சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து  அவனைப் பாடுவோம்,
”ஆண்டாள்,   கொஞ்சம் விவரமாத்தான்  சொல்லேன்  அப்படி என்ன  இதுக்கு முக்கியம்?”
”எதற்காக இந்த   மார்கழி மாதம் நோன்பு என்று தெரியணும்  என்றால்  இந்த  மாசம்தான்  அந்த கிருஷ்ண னுக்கு, அதாவது  நாராயணனுக்கு  பிடித்த  மாதம். மாதங்களில் அவன்  மார்கழியாகவே இருக்கானாம்.  நாமெல்லோரும், ஏன்  இந்த உலகில் எவருமே,  ஸ்வர்கமடைய நாம் செய்யும்  இந்த பாவை நோன்பு  தவிர  குறுக்கு வழி வேறே இல்லை.
பெண்கள்  ஸ்நானம்  முடித்து  கூட்டமாகச்  சேர்ந்து   நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத்தொடங்கினர். பிறகு  தத்தம்  வீடு திரும்பினர்.

மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர்  சென்று ஆண்டாளை  தரிசனம் செய்ய இயலுமா? நடுங்கும் குளிரில்  யமுனையில் போய் ஸ்நானம் செய்ய முடியுமா?  சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான் நமக்கு   ப்ரத்யக்ஷ வில்லிப்புத்தூர். அங்கு மார்கழி முழுதும் கோலாகலமாக விமரிசையாக ஆண்டாள் அபிஷேகம், பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம  முகூர்த்தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;