
வைத்யநாத உபசாரம் – நங்கநல்லூர் J K SIVAN
ஓடி ஆடி பிறருக்கு உழைத்த தங்கள் வாழ்க்கையின் இறுதி பகுதியை அமைதியாக, ஆரவாரமில்லாமல், கழிக்க, முதியோர்கள் விரும்புவது அதிசயமல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிக்கல், இடையூறுகள், தடங்கல்கள், அவை எல்லாவற்றையும் அவரவர் மட்டுமே சந்தித்து முன்னேறவேண்டும். இது தான் விதி. நியதி. ஆகவே ஒருவாறு எதிர் நீச்சல் போட்ட ஆற்றின் அக்கரை கண்ணில் படும்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறோம். மெதுவாக சௌகர்யமாக நம்பிக்கையோடு நீந்தி ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல விரும்புகிறோம். அதற்கென்று சில அற்புத ஸ்தலங்கள் உள்ளன. முதியோர் இல்லம் என்பது இருப்பது போதாது என்று மேலும் மேலும் கஷ்டம் தரும் இடமாக அமையக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சில நல்லிதயங்கள் அமைத்த வயோதிகர் இல்லங்கள் சில கோயம்பத்தூரில் உள்ளன. அவரவர் வசதிக்கேற்ப அவற்றை பயன்படுத்தலாம்.
என் அருமை நண்பர் மிலிட்டரி மீசைக்காரர் வைத்தியநாதன் தம்பதியர் அப்படி ஒரு சுகமான ஸ்தலத்தை வாழ்கிறார்கள். தியானபிரஸ்தா என்று அதற்கு பெயர். அவர்களோடு மூன்று நாள் அங்கே தங்கி சுகமாக இளைப்பாறினேன். பெண்கள் வடக்கே பம்பாயில் குடும்பத்தோடு வாழ்வதால் அவ்வப்போது பம்பாய் செல்கிறார்கள் . மற்ற காலத்தில் த்யான பிரஸ்தா தியானம் பண்ண உதவுகிறது. அறுபது எழுபது குடும்பங்கள் தனித்தனி இல்லங்களில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உதவ நிர்வாகம் சகல சேவைகளையும் செயகிறது. காலையில் ஆறுமணிக்கு பஜனை கோஷ்டி வீடுகளுக்கு இடையே அமைந்துள்ள அமைதியான தெருக்களில் ஊர்வலம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கமகமக்கும் புஷ்பா செடிகள், மஞ்சள் வெள்ளை, சிவப்பு, நீலம் என்று பலவித மலர்கள். சாலையின் இரு மருங்கிலும் பச்சை பசேலென்று மரங்கள். காலை நடை அழகும் முதியோர்கள், சிலர் தம்பதிகள். பிரார்த்தனை ஹால், கிருஷ்ணன் படம், சாயிபாபா, தயானந்த சரஸ்வதி படங்கள். யாருக்காவது உடல் நலம் குறைந்தால் அனைவரும் கூட்டு பிரார்த்தனை. விட்டு நைவேத்தியமாக உணவு. ஒவ்வொரு நாளும் வெளியே ஹோட்டல்களில் கிடைக்காத அபூர்வ உணவு வகைகள். வாழைத்தண்டு கூட்டு, வெந்தய வற்றல்குழம்பு, பிடி கொழுக்கட்டை, அவல் உப்மா, மோர்க்களி , ஊத்தப்பம், குழி ஆப்பம், தினமும் கொஞ்சம் தயிர் சாதம், பெரிய லோட்டா நிறைய மோர்,இதெல்லாம் கொஞ்சம் உதாரணங்கள். தட்டு உபயோகித்தால் ஒவ்வொரு முறையும் கழுவி வைக்கவேண்டிய சிரமம் இல்லாமல் எப்போதும் வாழை இலையில் உணவு. குடிக்கும் டம்ளர் களை அவரவர்களே கழுவி பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில் போடுகிறார்கள்.
வாசலில் கூடி அமர்ந்து பேச ஹால், நாற்காலிகள். வடவள்ளியில் நான் தங்கியிருந்த மூன்று நாளும் காலையில் ஆறுமணிக்கே பஜனை, வாக்கிங் போய்விட்டு வந்து கதவை தட்டுவார். சூடாக பிளாஸ்கில் காப்பி கொண்டு வந்து தந்தார். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டார். அன்பு இதயம் கொண்ட தம்பதியர். மூன்று நாளும் நான் வெளியில் சென்ற இடங்களில் உணவருந்தாமல் திரும்பி தியான பிரஸ்தாவிற்கு வந்தால் மாலை காப்பி இரவு உணவு காத்திருக்கும். காலை உணவு, பகல் உணவு, இரவு உணவு என்று எனக்கு.என் மனைவிக்கு, என் மூத்த மகனுக்கு என்று நாங்கள் வடவள்ளியில் இருந்த ரெண்டு மூன்று நாடுகளில் பல மணி நேரங்கள் அற்புத உபச்சாரம். காசு கொடுக்கிறேன் என்றால் துப்பாக்கியால் சுட்டு விடுவார். நாங்கள் தங்க வசதியான இடம் ஏற்பாடு செய்தது சௌகர்யமாக இருந்தது.
என் 87வது ஆரம்ப நாள் அன்று மருதமலை முருகன் தரிசனம் பெற காரில் சென்றோம். வைத்தா எங்களோடு வந்தார். அன்று சாயங்காலம் நாங்கள் பேரூர் பட்டீஸ்வரரரை தரிசித்ததை பற்றி ஏற்கனவே எழுதினேனே.
வைத்யநாதன் வடக்கே வெகுகாலம் இருந்ததால் சரளமாக ஹிந்தி பேச எழுத படிக்க தெரிந்தவர். தல\த் மஹ்மூத் பாடல்களை இனிமையாக பாடினார். மலையாளம் தமிழ் மொழிகளில் பக்தி பாடல்கள் ராகத்தோடு பாடுகிறார்.
எனக்கு பிடித்த ஹந்தி கஜல் பாடகர் தலத் மஹ்மூத் (சில்க் குரலோன்) திலீப் குமாருக்கு பாடிய ஹிந்தி சினிமா பாடல்களை வைத்தியநாதன் அற்புதமாக பாடியதை கேட்டு இன்புற்றேன். ஹிந்தி தெரியாவிட்டாலும் குரல் இனிமை, ராகம், பிடிக்குமே. தரையில் கால்களை மடக்கி சப்பணம் போட்டுக்கொண்டு பலகையில் அமர்ந்து எதிரே குருவாயூர் கிருஷ்ணன் படத்துக்கு விளக்கேற்றி புஷ்பம் சார்த்தி, ஸம்ப்ரதாயமாக கையில் ஜலராவோடு பாடுவார். முடிவில் கற்பூர ஆர்த்தி, தெரிந்த பாடல்கள் பாடும்போது நானும் சேர்ந்து கொண்டேன். நாங்கள் கிருஷ்ண பக்தர்களாயிற்றே. .மாமி ஒருகாலத்தில் வீணை வித்வான். தியானப் ரஸ்தா கட்டிட வாசலில் வயதான காவல் காரர் ஒவ்வொருமுறையும் சலிக்காமல் கதவை திறக்கும் முன்பு எங்கள் கார் நம்பர், பெயர் கேட்டு நோட்டில் எழுதி விட்டு அப்புறம் தான் மெதுவாக வந்து கதவை திறப்பார். எனக்கும் இப்படி சில நாள் வாழவேண்டும் என்று உள்ளூர ஆசை. தியானபிரஸ்தாவைப் போல் வானப்ரஸ்தா, நானா நானி , பிரமிட் என்று பல இடங்கள் அவரவர் வசதிக்கேற்ப உள்ளது. எல்லாமே வடவள்ளியில் அமைதியான சூழ்நிலையில் தான். வடவள்ளி செல்வதற்குள் சாலையில் எண்ணற்ற வளைவுகள். map இல்லாமல் செல்வது கடினம். வடவள்ளியில் நான் சந்தித்த இன்னொரு அருமை நண்பர் VSK . அடுத்த பதிவில் சொல்கிறேன். எனக்கு செல்வமே உலகெங்கும் உள்ள என் நண்பர்கள் தான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




