
சுய மதிப்பு, கௌரவம் – நங்கநல்லூர் J K SIVAN
எல்லோர் மனத்திலும் உள்ளே இருக்கும் ஒரு ஆசை ”தன்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டு\ம் . தன்னோடு அன்பு உறவு கொண்டாட வேண்டும்” என்பதே. அதற்கு ஒவ்வொரும் தகுதி பெறவேண்டும் அது தனது கையில் தான் இருக்கிறது என்பது ஏனோ மறந்து போகிறது. நாம் முதலில் எல்லோரிடமும் நேசமாக,பாசமாக இருக்க பழகிக் கொள்ளவேண்டும். முன் கை நீண்டால் தான் முழங்கை நீளும். ஒருத்தரை ஒருவேளை எப்போதும் ஒருவருக்கு பிடிக்கும் என்பதற்கே காரண்டீ இல்லையே எப்படி எப்போதும், என்றும் மற்றவர்களை பிடிக்கும்?, மற்றவர்களுக்கு தன்னை பிடிக்கும்? நேற்று பிடித்தவரை இன்றைக்கு பிடிக்கவில்லை. ஒருத்தரை மதிக்காமல் உதாசீனம் செய்தால் அவர் மனம் படும் பாடு துன்பகரமானது. வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நாம் இருக்கும்போதே நம்மை லக்ஷியம் செய்யாத உலகம் நாம் மறைந்த பிறகு துளியாவது நம்மை நினைக்கவா போகிறது? நம்மை புதைத்தால் என்ன,எரித்தால் என்ன? அதுவே நமக்கு தெரியப்போவதில்லை. பின்னால் என்ன நடக்கப்போவது என்பது முக்கியமில்லை, ஒவ்வொரு கணமும் நிகழும்போது நாம் எப்படி இருக்கிறோம், சந்தோஷமாக இருக்கவேண்டாமா? அது தான் முக்கியம்.
ஒரு முதியவர் கதை சொல்கிறேன்.
வாசுதேவ சர்மா 81வயதானவர். மாமி போய் 27 வருஷம் ஆகிறது. மூன்று பிழைகள் ஏதோ ஒரு வெளிநாட்டில். கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள். அப்பாவை வெளிநாட்டுக்கு அழைத்துப் போனார்கள் தவிர அவரோடு பேசக்கூட அவர்களுக்கு நேரமில்லை. அவர் நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டு, தானே தனக்கு முடிந்தவரை, தெரிந்தவரை, இருப்பதை வைத்துக்கொண்டு சமையல் செய்து சாப்பிடுவார். காலார கிராமத்தில் குளத்தங்கரையில் கண்மாய் ஓரம் மண் பாதையில் நடப்பது, க்ராமத்தார்களோடு கையாட்டி பேசுவது, கொய்யாக்காய் வாங்கி தின்பது, பனஞ்சாறு சட்டியி விற்பதை கொஞ்சம் வாங்கி குடிப்பது, நுங்கு வெட்டிக் கொடுக்கச் சொல்லி தின்பது. ஒரு ரூபாய்க்கு ஜெம் பிஸ்கட்கள் வாங்கி தெரு நாய்களுக்கு போட்டு அவை வாலாட்டுவதை ரசிப்பது ஒன்றும் இங்கே நாலு சுவருக்குள் இல்லை. பெருமாள் கோயில் பொங்கல் பிரசாதம் சுடச்சுட கையில் மந்தாரை இலை யில் விழுமே இப்போது எங்கே அது கிடைக்கும்?.
சர்மா வேதம் படித்தவர். ராமாயண மஹாபாரத பிரசங்கம் செய்வார். இருபது வருஷமாகிவிட்டது இங்கே வந்து இன்னும் பெர்மனெண்ட், நிரந்தரமாக விசா கிடைக்க வில்லை. பிள்ளைகளுக்கே ஏழு எட்டு வருஷங்களுக்கு பிறகு தான் அந்த வெளிநாட்டில் நிரந்தரமாக தங்க விசா கிடைத்தது. பிள்ளைகள் அப்பாவை லட்சியமே பண்ணாமல் அவர்கள் காரியங்களிலேயே பிஸியாக இருந்தார்கள். மனிதாபிமானம் என்பது லவலேசமும் இல்லையே.
ஒரே வழி. யாரும் நம்மிடம் பாசமும் நேசமும் அன்பும் காட்டவில்லையே என்று வருந்தவே வேண்டாம். நம்மை நாமே முதலில் நேசிக்க கற்றுக் கொள்வோம். கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சித்தால் ஆனந்தம். கொஞ்சம் கொஞ்சமாக பிறரை மதிக்க, அவர்களிடம் அன்பு காட்ட முயற்சிப்போம்.
சர்மா வீட்டுக்கு எதிரே ஒரு நெடுஞ்சாலை. வேகமாக வண்டிகள் எதிரும் புதிருமாக ஓடும். குறுக்கே சாலையை பாதாசரிகள் கடக்க வெள்ளை கோடு . பாதசாரிகள் குறுக்கே நடக்க பச்சை விளக்கு எரியும் போது இரு பக்கமும் நிற்கும்.அந்த சமயம் பார்த்து சர்மா குறுக்கே ஓடுவார். அப்புறம் மறுபடியும் வெள்ளைக்கோட்டை கடக்க பச்சை விளக்கு எரியும்போது மீண்டும் திரும்பி ஓடுவார். இப்படி அவர் அடிக்கடி பண்ணுவதைப் பார்த்த ஒரு போலீஸ்காரன் அவரை பைத்தியம் என கருதி அதிகாரிகளிடம் அழைத்துக் கொண்டு போனான். அதிகாரி ஏன் இப்படி தினமும் செய்கிறாய் என்று சர்மாவை ஆங்கிலத்தில் கேட்டபோது சர்மா வின் பதில்:
”நானும் ஒரு உயிருள்ள மனிதன் என மதித்து இருப்பக்கமும் எத்தனையோ மனிதர்கள் வண்டிகளில் வேகமாக எங்கோ செல்பவர்கள் எனக்காக பொறுமையுடன் காத்திருப்பதைக் காணும்போது என் மனதுக்குள் சந்தோஷம் உண்டாகிறது. எனக்கு பெருமையாக இருக்கிறது. மன ஆறுதல் கிடைக்கிறது”
அந்த அதிகாரி கண்களில் நீருடன் அன்று முதல் தினமும் சர்மாவை தனது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் அவர் குழந்தைகளுடன் விளையாட வைத்தார்..சர்மாவின் மூன்று பிள்ளைகளை கூப்பிட்டு அந்த அதிகாரி அவர்கள் கடமையை உணர்த்தியது இன்னொரு முக்ய விஷயம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


