KRISHNAN MY FRIEND. J K SIVAN

நண்பர் கிருஷ்ணன் . – நங்கநல்லூர் J K SIVAN
எனக்கு ரெண்டு கிருஷ்ணர்களைப் பிடிக்கும்.
ஒருவர் புல்லாங்குழல் வாசிப்பவர்.
மற்றவர் புஸ்தகங்கள் வாசிப்பவர்.
முதல் கிருஷ்ணன் ஐந்தாயிரம் வயசானவர் என்றாலும், பிரிந்தாவனத்தில் வடமதுரையில் இருந்தவர் என்றா
லும் என் மனதில் எப்போதும் இருப்பவர். ரெண்டாவது கிருஷ்ணன் 80+ ஆனவர் கோயம்பத் தூரில் வடவள்ளியில் இப்போதும் வசிப்பவர்.
ரெண்டு பேரையும் இதுவரை நேரில் பார்க்கும் பாக்யம் இல்லாமல் இருந்தாலும், சமீபத்தில் நான் கோயம்பத்தூர், கோவைப்புதூர் சென்ற போது ரெண் டாவது கிருஷ்ணனை அவர் இல்லத்தில் வடவள்ளிக்குச் சென்று தரிசித்தேன். கிருஷ்ணன் வீட்டை அடைவதோ, அடைந்தால் திரும்பிவருவதோ ரொம்ப சிரமம். வடவள் ளியில் விமல நகருக்கு வளைந்து வளைந்து போக வேண்டும். சர்ப்பநகர் என்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம்.
VSK அற்புதமான மனிதர். நிறைய படித்தவர், எழுது பவர், முருக பக்தர். திருப்புகழ் பாடிக்காட்டுபவர். பாலக்காட்டு தமிழ் பேச்சில் தேனாக வழியும் . என் 87வது ஆரம்ப நாள் சமயத்தில் அவரை சந்தித்தது பெரும் பாக்யம்.
VSK கல்கத்தாவில் வெகு காலம் பிரபலமான தனியார் நிறுவனம் RASTHRIYA CHEMICAL FACTORY அலுவலகத்தில் உயர்ந்த பதவி வகுத்தவர். ஆங்கிலத் திலும் தமிழிலும் சரளமாக பேச எழுத முடித்தவர் . அவரது தெளிந்த நீரோடை போன்ற காந்த சக்தி கொண்ட ஆங்கில எழுத்துக்கு நான் என்றும் அடிமை. என் புத்தகங்களை அவருக்கு அனுப்பி இருக்கிறேன்.
என் சில புத்தகங்களுக்கு அவர் விமர்சனம், அணிந் துரை எழுதி மகிழ்வித்தவர். எழுத்தும், இறைவன் பால் அன்பும் தான் எங்களை நண்பர்களாக்கி பதின்மூன்று வருஷங்களாகியும் போனில் தான் பேசி இருக்கிறோம், பாடி இருக்கிறோம். எழுத்து பரிமாறிக் கொள்வோம், ஆனால் நேரில் சந்தித்ததில்லை. அந்த குறையும் இப்போது தீர்ந்து விட்டது.
எனது நண்பர்கள் வட்டம் அற்புதமானது. ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு சிறப்பான தனித்தன்மை கொண்ட பகவான் அவதாரம் என்று தான் சொல்வேன்.
கிருஷ்ணன் வீட்டில் கிருஷ்ணன் மேல் பாடினேன். பக்கவாத்தியம் எப்போதும் இருக்கும் இருமல் தான்
VSK வை மறுபடியும் சந்திக்க ஆவல்.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

One comment

  1. ஒருவர் கிழக்கு திசையில் இருப்பார், மற்றொருவர் மேற்கு திசையில் இருப்பார். ஆனால் ஒரே கருத்தும் குணவும் கொண்டதால், அல்லது பூர்வ ஜன்ம புண்ணியம் கொண்டதால் அவர்களை ஏதோ ஒரு சக்தி எப்படியோ இணைத்து விடுகிறது. அது போல நிகழ்ந்தது எங்கள் நட்பு. கடவுள் நம்பிக்கை,எழுதுவதில் ஒரு ஆர்வம், 80 ஐ தாண்டிய வயது இவை எல்லாம் எங்களை மேலும் ஒன்று சேர்த்தன. இவருடைய படைப்புகள் ஏராளம். அவர் எழுதாத விஷயங்களே இல்லை, ஆனால் மாயாஜால கிருஷ்ணனை பற்றி எழுதும்போதுதான் இவருடைய முழு ஆற்றலை நாம் உணர்கிறோம். எனது வீடு தேடி வந்து எங்களை ஆசீர்வதித்த திரு சிவா சார் அவர்களுக்கு ஆனந்தகோடி நமஸ்காரம். அவருடைய சிறந்த கிருஷ்ணார்ப்பண பணி தொடரட்டும். அவரும் அவர் குடும்பத்தாரும் நல்ல ஆரோக்கியத் துடன் சீரும் சிறப்புமாக வாழ என் இஷ்ட தெய்வம் முருகனிடம் வேண்டுகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;