

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண க்ஷேத்ர யாத்ரா 31.8.25. நங்கநல்லூர் J K SIVAN
பாலூர் பதங்கீஸ்வரர்
ஆகஸ்ட் 31, 2025 அன்று யாத்ரையில் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் புலிப்பாக்கத்தில் வயிறார பிரசாத போஜனம், முடித்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டபின் ”கௌசிக்” எங்களை ஏற்றிக்கொண்டு செங்கல் பட்டு தாலுக்காவில் பாலூருக்கு பறந்தது. கிட்டத்தட்ட பதினைந்து கி.மீ. தெருக்கள் கொஞ்சம் ‘ஆடாது அசங்காது வா கண்ணா” வுக்கு ஆட்டி வைக்க முக்கால் மணி நேரத்தில் பதங்கீஸ்வரர் ஆலயம் சென்றோம் .எதிர்பார்த்தபடி ஆலயம் திறக்கப்படவில்லை. அருகே இருந்த சிவாச்சாரியார் வீடு தேடிச் சென்று அவரை அழைத்து வந்தோம். 27வது தலைமுறை அர்ச்சகர் வருத்தத் தோடு சொன்னது 300 ஏக்கருக்கு மேல் இருந்த ஆலய சொத்து இப்போது 10-13 ஏக்கராக சுருங்கி விட்டது. பக்தர்கள் அதிகம் தேடி வருவதில்லை. ஆயிரமாயிரம் வருஷ அநேக ஆலயங்களின் நிலை இது தான்.
பதங்கீஸ்வரர் ஆலயம் அமைதியாக ஏராளமாக நிசப்தமாக எவரும் இல்லாமல் எங்கள் 26 பக்தர்களை வரவேற்றது. ஆலயத்துக்கு எண்ணெய் திரி, வத்திப்பெட்டி ஆகியவற்றை அளித்தோம். சிவனுக்கு பல பெயர்கள்: பதங்கீஸ் வ ரர் / திருப்பத்தங்க முடையார் / திருப்படங்காடுடைய மகாதேவர் / பால பதங்கீஸ்வரர்அம்பாள்; ப்ரம்மராம்பிகை / வண்டார் குழலி
பல்லவர் காலத்து அற்புதமான பெரிய கோவில். பின்னர் குலோத்துங்க சோழனால் கருங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. சுமார் 18 கல்வெட்டுகள் உள்ளன. பழமையான கல்வெட்டுகள் கருவறையின் மேற்கு மற்றும் தெற்கு சுவர்களில் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சோழப் பேரரசர் முதலாம் குலோத்துங்க சோழனின் 31 மற்றும் 38 வது ஆட்சி ஆண்டுகளில் தேதியிட்டவை.
முதல் கல்வெட்டு அவரது மெய்கீர்த்தியுடன் தொடங்கி, ஜெயங்கொண்டசோழ மண்டலத்தில் உள்ள ஊற்றுக்காட்டு கோட்டத்தின் உட்பிரிவான பழையூர் நாட்டில் உள்ள பழையூர் (இராஜேந்திர சோழ நல்லூர்) ஊரவர், களத்தூர் கோட்டத்தின் மையூர் நாட்டிலுள்ள ராஜேந்திர சோழபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவருக்கு வரியில்லா நிலத்தை விற்றதைப் பதிவு செய்கிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, பிராமணர்களுக்கும் துறவிகளுக்கும் உணவளிப்பதற்காக அவர்களால் நிறுவப்பட்ட வால்மறவன் மடத்தின் பராமரிப்புக்காகவும் ஆகும்.
இரண்டாம் கல்வெட்டு, மெய்கீர்த்தியில் தொடங்கி, களத்தூர் கோட்டத்தின் உட்பிரிவான மையூர் நாட்டிலுள்ள ராஜேந்திர சோழபுரத்து நகரத்தார்களால் செய்யப்பட்ட பழையூர் நாட்டிலுள்ள இராஜேந்திர சோழ நல்லூர் திருப்பத்தங்காடுடைய மகாதேவர் கோயிலில் வற்றாத தீபத்திற்கு எண்ணெய் கொடையாகப் பதிவு செய்ததை சொல்கிறது. .
கருவறைக்கு எதிரே உள்ள அர்த்த மண்டபத்தில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 29ஆம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்த மற்றொரு கல்வெட்டு உள்ளது. மதுரை, கருவூர் மற்றும் இலங்கையில் அவர் செய்த சுரண்டல்களை இது பதிவு செய்கிறது. திருப்பத்தங்காடு உடையார் கோயிலுக்குச் சொந்தமான சில தேவதான நிலங்களுக்கு வழிபாடு மற்றும் பழுது பார்ப்ப தற்காக சில வரிகளை செலுத்தி, ஒரு நயீடரையர் நிகழ்வில் பிறப்பிக்கப்பட்ட அரச ஆணைகளை இது பதிவு செய்கிறது. இந்த ஆவணத்தில் அரச செயலாளர் உட்பட ஒன்பது அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
அர்த்த மண்டபத்தில் விக்ரம சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் இராஜராஜ சோழன், கடவத் தலைவர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பல கல்வெட்டுகள் உள்ளன. விக்ரம சோழனின் ஐந்தாம் ஆட்சியாண்டு கால கல்வெட்டு, பாண்டிகுலசனி வளநாட்டில் உள்ள குறிச்சியில் வசிப்பவர் மூலம் அமாவாசை நாட்களில் அச்சரசிலன் மாதா என்ற மடத்தில் பிராமணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்ததை பதிவு செய்கிறது. விஜயநகரப் பதிவேடு ஒன்று, கோயிலைப் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிடுகிறது, மேலும் கோயிலின் நடனக் கலைஞர்கள் மற்றும் மேளம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆகியவை அடங்கும்.
பதங்கம் என்றால் சூரியன். .க்ரஹ தோஷம் போக்க சூரியன் இங்கே சிவனை வழி பட்டதால் மூலவருக்கு பதங்கீஸ்வரர் எனப் பெயர். ஊர் பெயர் திருப்பத்தங்காடு. 1500 வருஷ கிழக்கு பார்த்த கோவில். நுழைவு வளைவில் ரிஷபாரூடராக சிவன் பார்வதி சிற்பம் உள்ளது. அழகான நந்தி முகம் பக்கவாட்டில் திரும்பியவாறு கண்ணைப்பறிக்கிறது. நந்தி க்கு நான்கு தூண்கள் கொண்ட மண்டபம். தூண்கலில் சிங்க உருவ சிற்பங்கள். ராஜகோபுரம் ஒற்றை அடுக்கு தான். கருவறை சன்னதி, அந்தராளம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முக மண்டபம் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது. கருவறையின் நுழைவாயிலில் துவாரபாலகர்கள் கம்பீரமாக காண்கிறார்கள். விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் விஷ்ணு துர்க்கை ஆகியோர் கோஷ்டத்தில் சந்நிதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.
வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி நின்ற கோல அம்பாள் சந்நிதி. சதுர்புஜங்கள். ருத்ராட்ச மாலையையும் கமண்ட லத்தையும் பிடித்திருக்கும் மேல் கைகள் கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்கள். உள் பிரஹாரத்தில் ஆறடி உயர வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன் மயில் மீது.
எப்போதுமே யாகங்கள், ஹோமங்கள் சாஸ்த்ரோக்தமாக செய்யப்பட்டால் அங்கே வருண பகவான் க்ருபை கட்டாயம் இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களில் நான் இதை கண்கூடாக அனுபவித்திருக்கிறேன். புலிப்பாக்கம் பவித்ரோத்சவம் முடியும் சமயம் வானம் இருட்டி மழை பொழியும் போல் இருந்ததை99 கவனித்தேன். காற்றில் சில்லென்று குளிர் தெரிந்தது. புலிப்பாக்கத்திலிருந்து கிளம்பி பாலூர் வந்தபோது மழை சுமார் அரைமணி நேரம் கொட்டி தீர்த்தது. கோவில் வாசலில் மண்டபத் திண்ணையில் வாசல் நோக்கி அமர்ந்திருந்தோம். பிறகு மழை விட்டபிறகு பழைய சீவரம் நோக்கி புறப்பட்டோம். சூரிய அஸ்தமன சமயம்… அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

