
விக்னேஸ்வரி – நங்கநல்லூர் J K SIVAN
இன்று 27/8/2025 பிள்ளையார் சதுர்த்தி. எங்கு நோக்கினும் பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது, பாட்டு ஸ்லோகம், கோவில் பூஜா மணி, மந்திர சப்தம் தான் காதில் விழுகிறது.
நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம். நல்லதை நினைக்கிற போது கெட்டதை நினைக்க மனதில் இடம் இருக்காது. பிள்ளையார் நினைப்பு கெட்டதை மனதிலிருந்து விலக்கும். பிள்ளையாரை நினைத்தால் மனது குதூகலம் அடைகிறது. களி மண்ணை பிசைந்தால் எந்த உருவமும் நாம் நினைக் கிறபடி அளிக்கும். பிள்ளையார் அதனால் தான் நாம் நினைத்ததை அளிக்கிறார். களிமண்ணால் உருவம் பெற்று நம் வீட்டுக்கு இன்று வருகிறார்.
மனித ஸ்வபாவம் வேடிக்கையானது. எதிர்மறையாக சில நேரங்களில் மனது யோசிக்கும். மனசுக்கு எப்போதும் மாறுதல் ரொம்ப பிடிக்கும். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் கற்பனை செய்து, சிங்காரித்து, பெயர் வைத்து மகிழ்வது. பெண்ணை பிள்ளையாக ”டா” போட்டு அழைப்பது பேசுவது இன்னும் சில வீடுகளில் பழக்கம். என் ஆறு வயது பேத்தி மாயா எனக்கு ”டா” தான். எத்தனையோ வீடுகளில் பிள்ளையை பெண்ணாக சிங்காரித்து அழகு பார்ப்பதும் உண்டு. எத்தனையோ வீடுகளில் ஆண் குழந்தைகள் தலையில் பின்னலோடு, கவுன் போட்டுக் கொண்டு, கண்ணில் மை இட்டுக்கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டு 7-10 வயது வரை கூட பார்த்து இருக்கிறேன். என் ரெண்டு அண்ணாக்கள் பெண் வேடத்தில் இருக்கும் பழைய புகைப்படம் வெகுநாள் என்னிடம் இருந்தது. தேடினால் இப்போது காணோம். எங்கே தொலைத்தேனோ தெரியவில்லை.
பெண்ணாக கிருஷ்ணனையே பாவித்து நிறைய பாரதியார் பாடி இருக்கிறார். அத்தனையும் அற்புதங்கள். என்னுடைய ” எந்தையே நந்தலாலா” புத்தகத்தில் நிறைய தேடி பிடித்து எழுதி இருக்கிறேனே.
ஆழ்வார்களும் பக்தி பரவசத்தில் பராங்குச நாயகி, பரகால நாயகி என்று பெயரோடு விளங்கி இருக்கி றார் கள். நடாதூர் அம்மாள் என்று ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர் ஒருவருக்கு பெயர். நாயன் மார்களில் இப்படி படி சிலர் உண்டு. திருவானைக் கா கோவிலில் நடுப்பகலில் சிவாச்சாரியார் புடவை தரித்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் வழிபாடு நடத்துவது அங்கே சென்று தரிசித்தவர்களுக்கு தெரியும். இது தினமும் நடைபெறுவது.
கடவுளையும் பெண்ணாக சேர்த்தே வழிபடுவதும் நமக்கு வழக்கம். சிவன் அர்த்தநாரி. விஷ்ணு மோஹினி.ஆனால் விக்னேஸ்வரரை விக்னேஸ்வரி யாக பார்த்த போது ரொம்ப ஆச்சர்யம். அதிசயம். எந்தெந்த உருவில் எல்லாம் பார்த்தாலும் அலுக்காதவர் விக்னேஸ்வரர். விநாயகர் பெண்ணாக பல கோவில் களில் இருக்கிறார். வினாயகி, கணேசனி, கணேஸ்வரி, கஜானனி என்று பெயர்கள் .பிள்ளை யாரை சக்தியாக யோகினி தேவதையாக கொண்டா டும் பக்தர்கள் அநேகர்.
கணேசர் பிரம்மச்சாரி. ஒண்டிக்கட்டை. எங்காவது சாதுவாக மரத்தடியில், நாற்சந்தியில், தெருவில், குளத்தங்கரை, ஆற்றங்கரை, அரசமரத்தடியில் பார்த்திருக்கிறோம். சித்தி புத்தி என்று இருவரோடும் பார்த்த துண்டு. மதுரையில் வியாக்ரபாத கணபதி யாக அவருக்கு புலிப் பாதங்கள். யானைத் தலை. மனித உரு. ஆனால் பெண் உடம்பு. வினாயகி!! சுசீந்திரத்தில் கணேசனி தாணுமாலய ஆலயத்தில் இருக்கிறாள். வடக்கே நிறைய இடங்களில் கஜானனி இருக்கிறாள். புராணங்கள் அவளைப் பற்றி சொல்கிறது.
ராஜஸ்தானில் சிகார் என்று ஒரு ஊரில் விக்னேஸ்வரி யை ஒரு பழைய சிவன் கோவிலில் வழிபடுகிறார்கள். வேதங்களில் கூட வித்யா கணபதியை பெண்ணுருவில் தான் காட்டியிருக்கிறது. வல்லப கணேசனி என்றும் பெயர்.
ஜபல் பூரில் பேரகாட் என்ற ஊரில் 64 யோகிநிகளுக்கு ஒரு கோவில். அதில் முதல் யோகினி கணேசனி. இவளை மற்ற சௌசதா யோகினி கோவில்களில் ரிகியன், ஹிரபூர், ராணிப்பூர், ஜாரியல் ஆகிய ஊர்களில் பார்க்கலாம். வடக்கே நிறையவே இருக்கிறாள். பண்டைய காலத்தில் பல தேசங்களில் இவளை வழிபட்டார்கள். திபெத்தில் கூட கஜானனி தெய்வமாக நிற்கிறாள்.
தென்னகத்தில் விக்னேஸ்வரர் அதிகமாக பெண் தெய்வ மாக வணங்கப் படவில்லை. அதிக வழிபாடு களும் பரவலாக இல்லை. வேதங்கள், புராணங்களும் கொஞ்சம் சைலென்ட் தான். வினாயகி ஒரு புத்த மத பெண் தெய்வமாக கணபதி ஹ்ரிதயா என்ற பேரில் தாந்த்ரிக வண்ண ஓவியங்களில் நேபாளத்தில் காணலாம். பாலித் தீவிலும் கணேந்த்ரி திக் தேவதை யாக உள்ளாள் . வாயுவின் திசையில் அமர்ந்திருக் கிறாள்.
புத்த மதம் இவளைத் தத்து எடுத்திருக்கிறது. ஜைனர்க ளிடம் இருக்கிறாள். ஜங்கிணி என்று பீடத்தில் ஜம்மென் று அமர்ந்திருக்கிறாள். முதலாவது நூற்றாண்டு ராஜஸ் தான் இவளை தந்தம் இல்லாமல் பெண்ணாக வணங்கியது.
கணேசா நீ எப்படியெல்லாம் உருவெடுத்தாலும் உள்ளம் கொள்ளை போகுதே. வீட்டிலேயே ஐந்து நிமிஷத்தில் விநாயகர் தயாராகிவிடுவார். மற்றவை இணைப்பில் தெரிந்துகொள்ளலாம். https://youtu.be/0SU4zgdkVbM
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


