

[⚠️ Suspicious Content] அப்பா கணேசா.. – நங்கநல்லூர் J K SIVAN
நாளை விநாயக சதுர்த்தி. விசேஷ நாள். பிள்ளையாரைப் பற்றி மனம் நினைக்கிறது. நமக்கு ஒரு பெருமை. எந்த கிராமத்திலும் பட்டணத்தில் தெருவிலும் கூட பிள்ளையார் கோவில் கொண்டு இருப்பார். ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரத்தடி, முச்சந்தி எங்குமே பிள்ளையார் அமர்ந்திருப்பர். சிவபெருமானுக்கு மூத்த பிள்ளை நமக்கு மரியாதை கலந்த பெயராக ”பிள்ளை” யார். குழந்தை சுவாமி. பிள்ளையாரைப் பார்க்கும்போது அவரது வளைந்த தும்பிக்கை ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை ஸ்வரூபமாக காட்டும். கஷ்டங்களை, விக்னங்களை, குறைகளை தீர்க்கும் விக்னேஸ்வரர். எந்த விசேஷமாக இருந்தாலும் பூஜையாக இருந்தாலும் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே. சிவகணங்களுக்கு அதிபதி, கணேசன், கணபதி, கணநாதன். ஒரு சொடக்கு போடும் நேரத்தில் ஒளவைப்பாட்டியை கைலாசத்துக்கு தும்பிக்கையால் தூக்கி அனுப்பி வைத்தவரல்லவா?. பக்தர்கள் நம்மையும் கை தூக்கி விடுபவர்.பாரத தேசமெங்கும் விநாயக சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி என்று கொண்டாடப்பட்டாலும் மராட்டியர்களுக்கு இது ரொம்ப ரொம்ப விசேஷ பண்டிகை. ”கணபதி பப்பா மோரியா” சப்தம் கேட்காத இடமே இல்லை. சாதாரண எருக்கம்பூ கூட முழம் நூறு ரூபாய்க்கு விற்கும் .எல்லாகோவில்களிலும் சிறப்பு அர்ச்சனை அபிஷேகம் பூஜைகள். கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி, அப்பம் நைவேத்தியம் செய்வார்கள். லாண்டிரிக்கு துணி போட்டாலும், அன்றாட காய்கறி வாங்க லிஸ்ட் எழுதும்போதும் பிள்ளையார் சுழி இல்லாமல் எதையும் எழுதும் பழக்கம் இல்லை. பிள்ளையார் சுழி , ‘உ” ‘ தான். இந்துக்களிடையே அதிகமாக வழிபடப்படும் ஒரு தெய்வம் விநாயகர் எனலாம்.
எல்லோரும் அறிந்த ஒரு பிள்ளையார் மந்திரம் ஸ்லோகம் ;शुक्लांबरधरं * विष्णुं * शशिवर्णं * चतुर्भुजं * | प्रसन्नवदनं * ध्यायेत् सर्वविघ्नोपशान्तये ||SuklAMbaradharaM * viShNuM * SaSivarNaM * chaturbhujam *। prasanna vadanaM* dhyAyet sarvavighnopaSAntaye ॥சுக்லாம்பரதரம் * விஷ்ணும் * சஸி வர்ணம் * சதுர்புஜம் * ப்ரசன்னவதனம் * த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே ||
மேலே சொன்ன த்யான ஸ்லோகத்தில் பிள்ளையார் பெயரே இல்லை. அவரை வர்ணனை செய்யும் ஸ்லோகம்.
”வெள்ளை வஸ்த்ரம் உடுத்தியவர். ஸரஸ்வதியும் ஈச்வரனும் கூட வெள்ளை வஸ்திர தாரிகள் தான். ” மஞ்சள், சிவப்பு கட்டிக்கொள்கிற விஷ்ணு அம்பாளை பீதாம்பரதாரி, ரக்தாம்பரதாரி என்கிறோம். ‘சுக்லாம்பரதரர்’ என்பது பிள்ளையாரை மாத்திரம் குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது அற்புதம். “விஷ்ணு” பேர் இதில் வருகிறதே. விஷ்ணு என்றால் எல்லா இடத்திலும் வியாபித்திருப்பவர், ஸர்வ வியாபி என்று அர்த்தம். பிள்ளையார் எங்கேயும் கண்ணில் படுபவர், ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருவில், சந்து முனையில், எதிர் குத்து, முட்டு, திருப்பங்களில, அரச மரத்தடியில், எங்கும் இருப்பவர். “சசிவர்ண” என்றால் பூரண ச ந்திரன் பால் நிலா மாதிரி என்று அர்த்தம். ஈச்வரனும், ஸரஸ்வதியும் கூட அப்படித்தானே இருப்பவர்கள். “சதுர்புஜ”: நாலு கரங்கள் உடையவர். நிறைய கடவுளுக்கு, ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நாலு, எட்டு பதினாறு கைகள் இருக்கிறது. பிள்ளையாருக்கும் சதுர்புஜம். தும்பிக்கையை சேர்ந்து அவர் ஐங்கரன். ப்ரஸந்ந வதந”: மலர்ந்த முகம் உடையவர். யானையை எத்தனை நேரம் அருகில் நின்று பார்த்தாலும் அலுப்பு தட்டுவதில்லை. குழந்தைகளை எளிதில் கவரும் உருவம். உடம்பை ஆட்டிக்கொண்டு காதை விசிறிமாதிரி அசைக்கும் அழகு, தும்பிக்கை விஷமம் பார்க்க அலுக்காது. குழந்தைகள் யானையைக் காண்டல் குதூகலத்தோடு மணிக்கணக்காக ரசிப்பவர்கள்.
எது எழுதினாலும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதுபவர்கள் இன்னும் நம்மிடையே லக்ஷக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
எங்கள் 3ம் வகுப்பு வாத்யார் சுப்ரமணிய அய்யர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். பிள்ளையார் சுழி போடாமால் எழுதினால் கையில் முட்டியில் ஸ்கேலால் SCALE அடிப்பவர். ஓரிரு முறை அடி வாங்கியவன் நான்.
எதை வேண்டுமானாலும் கேட்கலாம். வேண்டிக்கொள்ளும்போது தலையில் ரெண்டு பக்கமும் நெற்றி பக்கம் குட்டிக் கொள்கிறோம். சிரஸில் உச்சியில் உள்ள, அம்ருதம் உடம்பில் உள்ள எல்லா நாடிகளுக்கும் பரவ தான் குட்டிக் கொள்வது.தோர்ப்பிகரணம் (காதுகளை பிடித்துக்கொள்வது) இரு கைகளாலும் மாற்றி காது மடல்களை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுவது தான் தோப்புக்கரணம். சிறந்த உடற்பயிற்சி. பழைய காலத்தில் பள்ளிக்கூடத்தில் தோப்பு கரணம் போடுவது தான் தண்டனை. ‘த்யாயேத்’ என்றால் தியானம் செய்வது.
பிள்ளையாரை எதற்கு தியானிக்கிறோம் என்றால் “ஸர்வ விக்ந உப சாந்தயே”- எல்லா குறைகளையும், குறைவுகளையும், நீக்க, தடைகள் நீங்க, இடையூறுகள் விலக .
சின்னதாக கொஞ்சம் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து ஆவாஹனம் பண்ணி பூஜை பண்ணிவிட்டு தன எந்த சுப காரியங்களையும் வீடுகளிலும், விழாக்களிலும் ஆலயங்களிலும் ஆரம்பிக்கிறோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

