
everyonefollowme அரசும் வேம்பும் – நங்கநல்லுர் J K SIVAN
நம் எல்லோருக்கும் அரசமரமும் வேப்ப மரமும் தெரியும். அநேக கோவில்களில் அரசமரமும் வேப்ப மரமும் ஒன்றோடொன்று பிணைந்து ஒன்றாக இருக்
கும். அதை எல்லோரும் சுற்றி வந்து நமஸ்கரிப்பதை
பார்த்திருக்கிறீர்களா? ஆனால் ஏன், எதற்கு என்று எப்போவாவது, கொஞ்சமாவது நினைத்ததுண்டா?
வெள்ளைக்காரர்களின் ஏசோப் நீதிக் கதைகளில் கூட அரசமரம், வேப்பமரம் சமாசாரமொன்று ஸ்வாரஸ்ய மாக இருப்பதை அறிவீர்களா.? அதிலிருந்தே ஆரம்பிக் கிறேன்.
ஒரு பெரிய திடகாத்திரமான ஆலமரம், அதைத்தான் வெள்ளைக்காரன் அரசமரம் என்று சொல்லியிருக் கிறான்.அதன் பக்கத்தில் ஒரு வேப்ப மரம். ரெண்டும் பேசுகிறது;
ஆலமரம்; ” ஏய், சோனி வேம்பு, உன்னைப் பார்த்தாலே சிரிப்புவருகிறது. என் பக்கம் நிற்கிறாய். என் ஆகிருதி, அகன்ற கிளைகள், விழுதுகள். என் உயரத்தைப் பார்த் தாயா. வானத்தையே தொடுகிறேனே. உன்னைப் பார், குச்சி குச்சியாக சின்ன கொம்புகள் தான் உன் கிளைக ளா? என் அந்தஸ்து அதிகாரம் உனக்கு எப்போதாவது கிடைக்குமா சொல்?
வேப்ப மரம்; “அண்ணா, நிமிர்ந்து நிற்பது நல்லது. ஒன்று புரிந்து கொள் . நீ உயரமாக இருக்கலாம். ஆனால் பேய் காற்றில் உன் உறுதி பிரயோஜனம் இல்லை. வளைந்து கொடுக்கும் தன்மை வேண்டும். இல்லையென்றால் உன் கதி அதோகதி தான்.”
அடுத்த பெரும் புயலின் போது அரசமரம் காற்றில் பேயாட்டம் ஆடியது. அது வளைந்து கொடுக்காமல் காற்றை எதிர்த்துநின்றது. வேரோடு சாய்ந்து விழுந்தது. வேப்பமரம் பழையபடியே நின்றது.
பணிவு தாழ்மை, நெகிழ்ச்சி தான் வாழ்க்கையில் நமக்கு அவசியம் என்பதை உணர்த்தும் கதையே தவிர இதற்கும் அரசமரத்துக்கும் ஸ்நானப்ராப்தி கூட கிடையாது.
நாம் ஹிந்துக்கள். அரசும் வேம்பும் நமக்கு ரொம்ப ரொம்ப புனித மானவை. ஆற்றங்கரை, கோவில் அருகே , கோவிலுக் குள்ளே கூட இவை ஒன்று சேர்ந்து இணைந்து பிணைந்து உள்ளவை. வணங்கப்படுபவை. அரசமரம்; விஷ்ணு. கீதையில் அஸ்வத விருக்ஷம் என்று ஸ்லோகத்தில் வரும். கிருஷ்ணன் ‘நான் மரங்க ளில் அரசமரம்’ “அஸ்வத்த:ஸ்மி ”சர்வ வ்ருக்ஷா ணாம்” (अश्वत्थः सर्ववृक्षाणाम्) கீதை 10.26. அரசமரத்தின் விஷ்ணு, கிருஷ்ணன், ப்ரம்மா வாஸம் பண்ணுகிறார்கள். அரசமரத்தடியில் பிள்ளையார் அவசியம் இருப்பார்.
அரச மரத்தை அநேகமாக பௌர்ணமி, மற்றும் சனிக் கிழமை 108 தடவை ப்ரதக்ஷிணம் பண்ணுவார்கள்.
அரசமரத்தடியில் உட்கார்ந்து தியானம் பண்ணும் போது மனம் அமைதி பெருகிறது . பல கோவில்களில் இந்த அனுபவம் எனக்குண்டு.
அரசமர வேர், இலை, மரத்தின் பால் பல நோய்களுக்கு ஒளஷதம். மருந்து, வியாதி நிவாரணி. வேப்ப மரம் அம்பாள், சக்தி, அம்மன், அம்மன் கோவில்களில் கண்டிப்பாக இருப்பது. வேப்பமரத்தடியில் நாகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
சித்திரை புது வருஷம் அன்று வேப்பம்பூ பச்சடி ஒரு முக்யமான ஐட்டம். வேப்பமரத்துளிர் தினமும் வெறும் வயிற்றில் கடித்து விழுங்கினால் ரொம்ப கசக்காது. நூறு வயது நிச்சயம் என்பார்கள்.
வேப்பமர குச்சி தான் நமது முன்னோர்களுக்கு டூத் ப்ரஷ். ஆற்றங்கரையில் பல் தேய்த்துவிட்டு குளத்தில் ஆற்றில் குதித்து ஸ்னானம் பண்ணிவிட்டு நெற்றியில் பட்டையாக விபூதியோடு மரத்தடி பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவோம். வேப்பம்பூ கமகம என மணக்கும். ரசம் பண்ணினால் தேங்காய் துவைய லோடு தேவாம்ருதம். வேப்பம்பழம் சுவையாக இருக் கும். வீட்டுக்குள் வேப்பிலை கொத்து வைப்பது ஒரு ரக்ஷை. வியாதி நிவாரணி.
பழைய கால அம்மன் கோவில்களில் வேப்பமரத் தடி யில் பெரிய புற்று இருக்கும். நாகத்துக்கு சுப்ர மணி யம் என்று பெயர் உண்டு. குழந்தைகளுக்கு வேப்பி லை யால் மந்திரித்து வியாதி, தோஷம் எல்லாம் அகலும். இந்த வழக்கம் இன்றும் உள்ளது. வேப்பமரத்தடி புற்றுக்கு பால் வார்க்கும் வழக்கம் இன்றும் உள்ளது.
அரசும் வேம்பும் ஸ்த்ரீ புருஷ தெய்வங்கள். சிவ சக்தி. ரெண்டுக்கும் கல்யாணம் உற்சவம் பண்ணுவார்கள். அரச மரத்துக்கு வேஷ்டி, வேம்புக்கு புடவை சாற்று வார்கள். ரெண்டு மரமும் தானாகவே ஒன்றாக வளர் வது அதிசயம். யாரும் நடுவதில்லை.
அரச ப்ரதக்ஷிண பலன்
;ஞாயிறு : காலையில் அரசமரத்தை ப்ரதக்ஷிணம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் கஷ்டங்கள் நீங்கும்.
திங்கள் : சிவபெருமானுக்கு புஷ்ப பூஜை பண்ணி
அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்
யங்களும் கிட்டும்.
செவ்வாய் : அம்பாள் உமாவை பூஜித்து அரசமரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு.
புதன் : தேவகணங்களை நமஸ்கரித்து அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு கேட்டது நிறைவேறும். .
வியாழன் : தக்ஷிணாமூர்த்தியை வணங்கி அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ,ஞானம், கீர்த்தி பெறலாம்.
வெள்ளி : லக்ஷ்மியை நமஸ்கரித்து அரசமரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.
சனி : மகாவிஷ்ணுவை பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரசமரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.
அரசமரத்தை வலம் வரும்போது வேக வேகமாக நடக் காமல் மெதுவாக நடக்கவேண்டும். கைகளை ஆட்டா மல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. அதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப் பாடலை பாடி வர வேண்டும். குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றி வரலாம்.சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை.
அரச மரத்தை சுற்றி வந்து அடிவயிற்றை பார்த்தல் இது தான்.
ஒரு சாதாரண விஷயம் என்று நாம் நினைப்பதற்கு பின்னால் எவ்வளவு ஆச்சர்யமான சமாசாரங்கள் இருக்கிறது பார்த்தீர்களா?
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

