

.
வாழ்க பாரதம். நங்கநல்லூர் J K SIVAN
1947ம் வருஷம் ஆகஸ்ட் 15ம் தேதி ரெண்டு கைகள் வெட்டப்பட்டது போல் பஞ்சாப் , வங்காளம் ரெண்டு பெரிய மாநிலங்களும் பாதியாக துண்டிக்கப்பட்ட பாரத தேசம் வெள்ளைக்காரர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தது.எண்ணற்ற சோதனைகள் வேதனைகள் தொடர இன்றோடு 78 வருஷங்கள் ஓடிவிட்டது. நமது கனவுகள் மெய்ப்பட வில்லை. வெள்ளையர்கள் போனாலும் சில கொள்ளையர்கள் தொந்தரவு இருந்து கொண்டு தான் இருக்கிறது
தேச சேவை என்பதில் நாம் ஒன்றும் புதிதாக இந்த அற்புத புண்ய தேசத்துக்கு எதுவும் செய்ய வேண்டியதேயில்லை. இயற்கை அன்னை வாரி வழங்கிக் கொண்டு தான் இருக்கிறாள். தேசத்தை பிரித்து, எனது உனது என்று பல பிரிவுகளாக அவரவர் ஆங்காங்கே ஆட்சி பீடத்தில் அமர்ந்து நாட்டு மக்கள் நலனை மனதில் கொள்ளாமல் இருக்க விட்டது நமது தவறு. நாட்டின் செல்வம் அனைத்தும் அனைவருக்கும் சொந்தம். எல்லோரும் சமம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதின்றி வேறொன்றறியேன் பராபரமே.
மக்கள் பயம் அற்று, தைரியமாக தங்கள் உரிமையை நேர்மையோடு நிலை நாட்டிக்கொள்ள வேண்டும்.
தேச சேவை என்பது தேசத்தில் வாழும் அனைத்து உயிர்களின் நலனுக்காக இருக்க வேண்டும்; இந்த எண்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, சுயநலம் இல்லாமல் நமக்கு ஆங்காங்கே உண்மையான மக்கள் நலம் கருதும் பிரதிநிதிகள் கிடைத்தால் நம்மைப் போல் பாக்கியசாலிகள் யாரும் இல்லை. பாரதமாதாவும் ”என் அருமைக் குழந்தைகளா” என்று அவர்களை சீராட்டிப் பாராட்டுவாள்.
மக்கள் சேவையில் எங்கும் எதிலும் லஞ்சமோ, காலதாமதமோ அல்லாமல் நேர்மை நீதி நெறியோடு ஈடுபட வேண்டும். . ஜாதி மத பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் திறமை தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் நிறைய இருக்க வேண்டும். ஆதரவளிக்க வேண்டும். கல்வி ஒழுக்கம் இரண்டும் இரு கண்களாக சிறந்தோங்க வேண்டும்.
விலை வாசி ஏறுவதற்கு காரணம் விளைநிலங்கள் வேறு விதத்தில் பயன்படுத்தப்படாமல் விவசாயம் சிறப்பாக நடைபெறவேண்டும். ஆங்காங்கே நடுவில் தரகர்கள் சுயலாபம் கருதி, கலப்படம் செய்து, பொய்யான வறட்சியை ஏற்படுத்தி தட்டுப்பாடுகள் உண்டாக்குவதோ கண்டிக்கப்பட்டு விலைகள் நிர்ணயிக்கப்படவேண்டும். சமூக விரோத நடவடிக்கைகள் அடியோடு களையப்படவேண்டும். தவறு செய்தவர்கள் யாரானாலும் தக்க தண்டனை பெற வேண்டும்
மேலே சொன்னதை தவிர இன்னும் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. இங்கே வரிசைப்படுத்த முடியாது. வருஷம் போதாது. அனைத்தும் சகலரும் அறிந்ததே. ஆள்பவர்களுக்கும் தெரியும். ஆகவே ஆட்சியில் அமர்ந்திருப்போர் புரிவோர் இதெல்லாம் கருத்தில் கொள்பவர்களாக அமையவேண்டும். நல்லவர்கள் ஆண்டால் நல்லதே தான் நடக்கும்.அல்லவா?. நமது நாட்டில் திறமும் நேர்மையும், தேச சேவை இரத்தத்தில் ஊறியவர்கள் இன்னும் காணாமல் போகவில்லை. நிறையவே இருப்பார்கள்.
யார் உண்மையில் மக்களுக்கு உழைக்கிறார்களோ அவர்களே நம்மை ஆளவேண்டும். இப்படி ஒரு கனவு கண்டேன் என் வாழ்நாளில் நிறைவேறுமா? சந்தேகம் தான் என்று சொல்லமாட்டேன். இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்யும்போது நாடும் சீராக நிறைய நல்லவர்கள் தோன்ற மாட்டார்களா? நம்மிடம் சரக்கு இல்லையா என்ன? எண்ணற்றோர் தயாராக இருக்கிறார்கள், வாய்ப்பு கிடைக்க வேண்டும். இறைவன் அருள் இதற்கு உதவட்டும்.
தாய்ப்பாசம் எப்படியோ அதைவிட கொஞ்சம் உயர்ந்தது தாய்நாட்டு பாசம் என்று சொன்னால் பொருத்தம் என்று தான் தோன்றுகிறது. இப்படி எல்லோரும் நினைத்தால் பாரத தேசம் ஸ்வர்க பூமி தான். வாழ்க பாரதம், வாழ்க சுதந்திர பாரத மக்கள் அனைவரும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


